Wednesday, April 29, 2020
து மோடியின் தோல்வி இல்லை
இது மோடியின் தோல்வி இல்லை
இது முதலாளித்துவத்தின் தோல்வி!
இனி பாகிஸ்தான் படை எடுத்து வந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது என்று முழங்கினார்.
அருணாச்சல பிரதேசத்தில் இனி சீனா வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம் என தன் 52 இன்ஞ் நெஞ்சை நிமிர்த்தி வீரம் காட்டினார்.
ஆனால் கொரோனா நோய் வந்ததும் “மக்களே கை தட்டுங்கள்” என்கிறார். அப்புறம் இப்போது “விளக்கு ஏற்றுங்கள்” என்கிறார்.
எந்தவித திட்டமும் இன்றி திடீரென நீண்டகால ஊரடங்கை அமுல்படுத்தினார்.
இதனால் பல உழைக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகிறார்கள்
ஒரு தமிழர் மகாராஸ்ரா மாநிலத்தில் இருந்து நடந்து வந்தமையினால் இறந்துள்ளார்.
போருக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொட்டி ஆயத்தம் செய்த மோடி அவர்கள் ஒரு நோயை எதிர்கொள்ள எந்த திட்டமும் இல்லாமல் இருதிருக்கிறார் என்பதே உண்மை.
அதுமட்டுமல்ல முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை வழங்கிய பிரதமர் மோடி இப்போது கொரோனா நோய்க்கு கொஞ்சம்கூட வெட்கம் இன்றி மக்களிடம் பணம் கேட்கிறார்.
சீனா நான்காயிரம்பேர் சிகிச்சை பெறக்கூடிய இரண்டு மருத்துவமனைகளைக் இரண்டே வாரத்தில் கட்டியுள்ளது.
ஆனால் மோடியோ 3200 கோடி ரூபாயில் பட்டேலுக்கு சிலை கட்டிவிட்டு இப்போhது நோய் வந்ததும் கை தட்டுங்கள் விளக்கு ஏற்றுங்கள் என்கிறார்.
இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளிலும் காணப்படுகிறது.
எனவே இது மோடியின் தோல்வி இல்லை. மாறாக நவ தாராளவாத முதலாளித்தவத்தின் தோல்வி என்பதே உண்மை.
Image may contain: 1 person, text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment