Thursday, December 31, 2020
ஆழ்ந்த அஞ்சலிகள்!
•ஆழ்ந்த அஞ்சலிகள்!
சிலர் அவர் மார்க்சிய வழியில் திறனாய்வு செய்தவர் என்கிறார்கள்.
இன்னும் சிலர் அவர் பெரியாரியத்தை ஆதரித்தவர் என்கிறார்கள
இவ்வாறு இவர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.
அவர் சிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல சிறந்த தமிழ் இன உணர்வாளரும்கூட
அதனால்தான் ஈழத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டபோது அவருக்கு வலித்தது.
ஈழப் படுகொலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதான எனது ஆத்திரம் உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்று கூறினார்.
உறக்கமில்லாமல் கழிந்த அந்த இரவுகள் திரும்ப திரும்ப நினைவுக்கு வருகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றதும் எமக்கு வலிக்கின்றது.
எமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட உணர்வைத் தருகின்றது.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment