Sunday, December 20, 2020
செய்தி - இந்தியாவின் பங்களிப்பில் முழு நம்பிக்கை.
செய்தி - இந்தியாவின் பங்களிப்பில் முழு நம்பிக்கை. அஜித் டோவலுடனான சந்திப்பின் பின்னர் சம்பந்தர் ஐயா தெரிவிப்பு
தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் வழங்குவதற்கு இலங்கை அரசு ஒருபோதும் தயார் இல்லை.
ஆனால் ஜனாதிபதி கோத்தா இதை தைரியமாக இந்தியாவில் வைத்தே கூறினார்.
பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் இன்னொரு நாட்டு தலைவர் அந்த நாட்டுக்கு தர்ம சங்கடம் வரும் கருத்துகளை கூறுவதில்லை. இதுதான் உலக நடைமுறை.
ஆனால் கோத்தாவோ இந்த நடைமுறைபற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழருக்கு வழங்கும் தீர்வு பற்றி கூறியிருக்கிறார்.
தமிழருக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக இந்திய அரசு கூறுகிறது.
ஆனால் கோத்தாவோ “ தமிழருக்கு தீர்வு வழங்குவதை பெருன்பான்மை சிங்கள மக்கள் விரும்பவில்லை. எனவே சிங்கள மக்களை மீறி தீர்வு எதையும் நான் வழங்கப் போவதில்லை” என்று கூறினார்.
தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று இந்தியாவில் வைத்தே தைரியமாக கோத்தா கூறினார். அவருக்கு 7000 கோடி ரூபா உதவியை இந்திய அரசு வழங்கியது.
இதுதான் தமிழருக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் இந்திய அரசின் அக்கறை ஆகும்.
தமிழருக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இந்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்றுதானே அர்த்தம்.
ஆனால் சம்பந்தர் ஐயாவோ “இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும்” என்று இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்.
2009க்கு பின்னர் இதுவரை சுமார் நூறு தடவைக்கு மேல் இந்திய பிரதிநிதிகளை சம்பந்தர் ஐயா சந்தித்திருக்கிறார்.
சந்தித்த அத்தனை தடவையும் இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும் என்றே நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
தண்ணீர்கூட மூன்றுமுறைதான் பொறுக்கும். ஆனால் சம்பந்தர் ஐயாவோ தண்ணியைவிட அதிகமாக பொறுமை காக்கிறார்.
சம்பந்தர் ஐயா தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார். அதனால் “இந்த கிழடு செத்து தொலையுமட்டும் தமிழருக்கு ஒரு மயிரும் கிடைக்காது” என்று மக்களே தூற்றும் காலம் விரைவில் வரப் போகிறது.
குறிப்பு- கடந்த வருடம் இந்தியாவினால் திறந்த பலாலி விமானநிலையத்தை சத்தம் போடாமல் மூடி வருகிறது இலங்கை அரசு. அதைக்கூட ஏன் என்று யாழ் இந்திய தூதரால் கேட்க முடியவில்லை. ஆனால் அவரோ வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்தி சிலையை நிறுவ துடிக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment