Thursday, August 14, 2014

• கவிஞர் குட்டி ரேவதியுடன் ஒரு சந்திப்பு

இன்று (26.07.2014) மாலை 5 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் கவிஞர் குட்டி ரேவதியுடன் சந்திப்பு “தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்” சார்பில் இடம் பெற்றது. “பெண்கவிதையும் சமூக மாற்றமும்” என்னும் தலைப்பில் சந்திப்பு நடைபெற்றது.

திரைப்பட விமர்சகர் யமுனா ராஜேந்திரன் அவர்கள் குட்டி ரேவதி குறித்த சுருக்கமான அறிமுகவுரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் மாதுமை தலைமை உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் குட்டி ரேவதி உரையாற்றினார். பின்னர் கலந்துரையாடலில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இறுதியாக தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் பௌசர் நன்றி கூறினார்.

லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச கவிதை திருவிழாவில் பங்குபெற வந்திருக்கும் குட்டி ரேவதி இன்றைய இச் சந்திப்பில் கலந்து கொண்டு தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சில அவதானிப்புகள்!

(1)”தமிழ்நாட்டை அதிகம் எதிர்பார்க்காதீர்கள். நம்பாதீர்கள்” என குட்டி ரேவதி பல தடவை குறிப்பிட்டார். இது தமிழ்நாட்டு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் குறித்த அவரது பார்வையாக இருக்கும் என நம்புகிறேன். மாறாக, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவும் உதவியும் இன்றி ஈழத்தமிழர்கள் எப்படி தமது போராட்டத்தில் வெல்ல முடியும்?

(2)கலையை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற அவரது கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் அந்த கலையை வழி நடத்தக்கூடிய அரசியல் குறித்து அவர் விரிவாக கூறாதது ஏமாற்றமே. மேலும் அவர் கட்சி அரசியலை மறுதலிக்கின்றாரோ என்ற சந்தேகத்தையும் அவரது உரை கொடுக்கிறது.

(3) குட்டி ரேவதி தனது உரையில் பல தடவை அம்பேத்கார் பெரியார் புத்தர் போன்றவர்களின் மேற்கோள்களை சுட்டிக்காட்டினார். அவர்கள் மாபெரும் அசான்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதிக வாசிப்பு கொண்ட குட்டி ரேவதி தனது உரையில் ஒரு தடவைகூட மாக்ஸ் பெயரை உச்சரிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இலங்கையில் சாதீயத்திற்கு எதிராக தலைமை கொடுத்து போராடியது கம்யூனிசக் கட்சியே. எனவே ஈழத்து சாதீயத்தை படித்த குட்டி ரேவதி, அம்பேத்கார் போதனைகள் ஏன் ஈழத்தில் செல்வாக்கு பெறவில்லை என்பதை கண்டுகொள்ளாமல் இருந்திருப்பாரா?

Photo: • கவிஞர் குட்டி ரேவதியுடன் ஒரு சந்திப்பு

காவல்துறை அதிகாரி சைலேந்திபாபுவிடம் யாராவது தமிழ் உணர்வாளர் பின்வரும் கேள்விகளை கேட்பாரா?

அமெரிக்காவுக்கு வருகை தரும் காவல்துறை அதிகாரி சைலேந்திபாபுவிடம் யாராவது தமிழ் உணர்வாளர் பின்வரும் கேள்விகளை கேட்பாரா?

எதிர்வரும் 31.07.2014 யன்று காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு அவர்கள் அமெரிக்க தமிழ் சங்கத்தில் உரையாற்ற உள்ளார். அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் உள்ளார் என அறிகிறோம். எனவே யாராவது தமிழ் இன உணர்வாளர்கள் அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும் என விரும்புகிறோம்.

1993ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக சைலேந்திரபாபு இருந்தபோது வேடசந்தூர் என்னும் இடத்தில் நாகராசன் என்னும் தமிழ்நாடுவிடுதலை போராளி ஒருவரை “போலி என்கவுண்டர்”மூலம் கொன்றது ஏன்?

அண்மையில் தர்மபுரியில் 6 இளைஞர்கள் மரீனா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது பொய்யான குற்றச்சாட்டு என்று உண்மை அறியும் குழு, பத்திரிகைகள், மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. வேலூர் காவல்துறை கண்காணிப்hளரும் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசோ அல்லது தமிழ்நாடு காவல்துறையோ இதுவரை இந்த குற்றச்சாட்டை வாபஸ் பெறவில்லை. எனவே இது குறித்து சைலேந்திரபாபு நடவடிக்கை எடுப்பாரா?

தமிழ்நாட்டில் அப்பாவி அகதிகள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். அங்கு காவல்பரியும் காவல்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக செயற்படுவதுடன் அகதிகளை கெட்ட வார்த்தைகளால் ஏசியும் அடித்தும் துன்புறுத்துகின்றனர். இதை சைலேந்திராபாபு கவனத்தில் கொண்டு அந்த அகதிகள் விடுதலைக்கு வழி செய்வாரா?

யாராவது ஒரு தமிழ் இன உணர்வாளர் இந்த கேள்விகளை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபுவிடம் கேட்கவேண்டும். இது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதியை பெறுவதற்கு உதவி புரியும் என நம்புகிறோம்.

Photo: • அமெரிக்காவுக்கு வருகை தரும் காவல்துறை அதிகாரி சைலேந்திபாபுவிடம் யாராவது தமிழ் உணர்வாளர் பின்வரும் கேள்விகளை கேட்பாரா?

தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

• தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

வன்னியர் சங்கம் அமைத்து வன்னியர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தோழர் தமிழரசன் ஒரு வன்னியராக இருந்தும்கூட அவர் பெயரை ஒரு முறைகூட உச்சரித்தது இல்லை.

மாவீரன் அலெக்சாண்டர், சீசர் என்று வெளிநாட்டவர் பெயரை எல்லாம் குறிப்பிட்டு பேசும் புரட்சிப்புயல் வைகோ அவர்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களுக்காகப் போராடி மடிந்த தோழர் தமிழரசன் பெயரை ஒருபோதும் குறிப்பிடுவதில்லை.

தமிழர்களுக்காகப் போராடி மடிந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைத்த அய்யா நெடுமாறன் அவர்கள், அதில் தோழர் தமிழரசன் பெயரை பொறிக்கவில்லை. இத்தனைக்கும் தோழர் தமிழரசன் இறக்கும்வரை அவருடன் தொடர்பில் இருந்து அவருக்கு முழு ஆதரவு கொடுத்தவர் அய்யா நெடுமாறன் அவர்கள்.

தமிழ் தேசியத்திற்காக களமாடுவதாக குறிப்பிடும் “நாம் தமிழர்” தலைவர் சீமான் கூட தமிழ் தேசியத்திற்காய் போராடி உயிர் நீத்த தோழர் தமிழரசன் அவர்களை இதுவரை நினைவு கூரவில்லை. அறிஞர் பெருஞ்சித்திரனாருக்கு நினைவு தினம் கொண்டாடியவர்கள் அந்த பெருஞ்சித்திரனார் போற்றிப் புகழ்ந்த தோழர் தமிழரசனை நினைவு கூர தயங்குகின்றனர்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தோழர் தமிழரசன் அவர்களையும் அவருடைய தலைவர் புலவர் கலியபெருமாள் அவர்களையும் நினைவு கூர்ந்துள்ளார். பெண்ணாடத்தில் நடைபெற்ற புலவர் கலியபெருமாளின் நினைவு கூட்டத்திலேயே திருமாவளவன் தோழர் தமிழரசன் குறித்த பாராட்டுக்குரிய உரையை நிகழ்த்தினார்.

கீழ்வரும் இணைப்பில் அதனைக் கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=q3Q3FR7DazE&feature=youtu.be

திருமாவளவன் அரசியல் குறித்து பல விமர்சனங்கள் இருப்பினும் அவருடைய இந்த தமிழரசன் குறித்த உரை நிச்சயம் பாராட்டுக்குரியது.

Photo: • தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!

மாக்சிய லெனியமாவோயிச சிந்தனையின் வழிகாட்டலில் புதியஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்த தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் நேற்று (29.07.2014) காலமானார். யாழ்ப்பாணம் வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து புரட்சிப் பணியாற்றினார்.

தோழர் சண்முகதாசன் தலைமையின் வழிகாட்டலில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள். அந்த வரலாற்றை சொல்லக்கூடியவர் என தோழர் டானியல் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.

அவர் லண்டனுக்கு வநதபோது அவரை நான் முதன் முதலாக சந்தித்தேன். “தேசம்” சார்பாக தயாரிக்கப்பட்ட தோழர் சண் குறித்த ஆவணப்படத்திற்கு அவருடைய கருத்துகளை இணைப்பதற்காக அவரை நானும் பி.பி.சி தமிழோசை அறிவிப்பாளர் சீவகன் அவர்களும் சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சியுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதுமட்டுமல்ல தோழர் சண் எழுதிய புத்தக வெளியீட்டிலும் பங்கு பற்றி தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தார்.

கீழ்வரும் இணைப்பில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண் அவர்களின் புத்தக வெளியீட்டில் ஆற்றிய உரையை கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc&feature=youtu.be

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும்போதே “துப்பாக்கியின் நிழலில் சாதீயம் உறங்கிறது” என்று உண்மையை தைரியமாக கூறியவர். தனது கருத்துகளை எப்போதும் தயக்கமின்றி கூறுபவர். இறுதிவரை தன் கொள்கைகளில் இருந்து வழுவாமல் உறுதியுடன் வாழ்ந்தவர்.

இலங்கை புரட்சிவரலாற்றில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் பெயரும் பங்களிப்பும் நிச்சயம் இடம்பெறும். அவருடைய நினைவாக புதியஜனநாயகப் புரட்சியை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

Photo: • தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!

இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே இலங்கை அரசு தைரியமாக கிண்டல் செய்கிறது!

 இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே
இலங்கை அரசு தைரியமாக கிண்டல் செய்கிறது!

இலங்கை அரசின் பாதுகாப்பு இணைய தளத்தில் தமிழக முதல்வரை தரக்குறைவாக கிண்டல் செய்யப்பட்ட கட்டுரைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததன் பயனாய் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

கடந்த ஆட்சியில் கலைஞா கருணாநிதி பல முறை கடிதம் எழுதினார். அப்போதைய பிரதமர் அதைக் கண்டு கொள்வதில்லை. அதுபோல் இப்போது ஜெயா அம்மையார் பல கடிதங்களை எழுதுகிறார். இன்றைய பிரதமர் மோடி அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அதனால்தானே இலங்கை அரசு கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டது!

எனவே தமிழக கட்சிகள் முதலில் இலங்கை அரசைக் கண்டிப்பதைவிட்டு மத்திய அரசுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு செவிசாயக்கும் நிலையை உருவாக்கவேண்டும். தமிழ்நாடு அடிமை நிலையில் இருந்து விடுபட்டு சுய அதிகார மிக்க சுதந்திர தேசமாக உருவாக வேண்டும்.

கடந்த ஆட்சியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்ல தமிழக முதல்வர் கலைஞரும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்கு ஆதரவு வழங்கிய தைரியத்திலேயே இலங்கை அரசு இப்படி பயமின்றி திமிர்த்தனமாக நடந்து கொள்ள முனைகிறது.

முன்னர் இராணுவ தளபதியாக இருந்தவர் தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றார். பின்னர் ஜெயா அம்மையாரை தரக்குறைவாக கிண்டல் செய்து கார்ட்டுன் போடப்பட்டது. இதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டப்படாததாலேயே தற்பொது இந்தளவு தைரியமாக இலங்கை அரசு நடந்து கொள்கிறது.

அது மட்டுமல்ல சுப்பிரமணியசுவாமி , சோ, “இந்து” ராம் போன்றவர்கள் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல்வாதிகள் குறித்து அக்கறை காட்டத்தேவையில்லை என்று இலங்கை சென்று கூறுவதும் அரசியல் தரகு வேலைகளுக்கு பரிசுப்பொருட்கள் வெளிப்படையாக பெறுவதும் பற்றி இந்திய அரசு கண்டடுகொள்ளாமல் இருப்பதும் இலங்கை அரசுக்கு தைரியத்தை கொடுக்கின்றன.

இலங்கை கடற்படையால் இதுவரை தமிழக மீனவர்கள் 600 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தனது சொந்த மீனவர்களை கொல்லும் அந்நிய நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கும் ஒரே நாடு இந்தியாதானே! இதன் அர்த்தம் என்ன? இந்திய அரசுக்கு தமிழக மக்களைவிட இலங்கை அரசுதானே முக்கியம்.

தமிழக மக்கள் இந்தியாவில் அடிமையாக இருப்பதால்தான்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதை நிறுத்த முடியவில்லை!

கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமிழக மண்ணிலேயே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை!

• இதை தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் உணர்ந்து அடிமைநிலையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெறும்போது இலங்கை அரசு மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ளும்.

Photo: • இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே

இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

• இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தெருவுக்கு பல கோயில்கள் உண்டு. இந்துக் கோயில்கள் மட்டுமல்ல கிருத்துவ தேவாலயங்கள் பலவும் உண்டு. அங்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் உண்டு. சில புத்த விகாரைகளும் உண்டு. எல்லாவற்றுக்கும்மேலாக சாதிகளுக்கும் தலா ஒரு கடவுள் உண்டு எனலாம்.

ஆனால் இத்தனை கோயில்கள் மற்றும் கடவுள்கள் இருந்தும் அவற்றினால் இலங்கை அரசு நிகழ்த்திய ஒரு படுகொலையைக்கூட தடுத்து நிறுத்த முடியவில்லையே! இது குறித்து இந்த முட்டாள்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

இன்று நல்லூர் முருகனுக்கு இலங்கை ராணுவம் கெலிகொப்டரில் பூ மழை பொழிகிறது. ஆனால் இதே கெலிகப்டர்கள் அன்று தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல பல இந்து ஆலையங்கள் மீதும் கண்டு மழை பொழிந்தபொது இந்த நல்லூர் முருகனால் தடுத்து நிறுத்த முடியவில்லையே!

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆலையம் கட்டுகிறார்கள். கட்டிய ஆலயத்திற்கு திரும்ப திரும்ப பெயின்ட் அடிக்கிறார்கள். பல இலட்சம் செலவு செய்து திருவிழா கொண்டாடுகிhர்கள். ஆனால் வன்னியில் இன்னொரு மூலையில் மக்கள் வீடு கட்டி தரும்படி இந்திய அரசிடம் பிச்சை எடுக்கிறார்கள். ரயிலுக்கு தண்டவாளம் போட்டு தரும்படி சீனா அரசிடம் கெஞ்சுகிறார்கள். ஊருக்கு ரோடு போட்டு தரும்படி மகிந்தவிடம் கேட்கிறார்கள். பாடசாலைக்கு கூரை போட்டு தரும்படி சிங்கள அமைச்சரிடம் மன்றாடுகிறார்கள். ஏன் இந்த அவல நிலை?

ஒரு புறத்தில் ஆலயத்தில் வீணாக தேங்காய் உடைக்கிறார்கள். இன்னொரு புறத்தில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தனது குழந்தைகளை தாய் கிணற்றில் வீசிக் கொல்கிறாள். அதைவிடக் கொடுமை பரீட்சைக்கு காசு கட்டுவதற்காக வசதியின்றி இரண்டு சிறுவர்கள் திருடிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது கொடுமையாக இந்த பக்தகோடிகளுக்கு ஏன் தெரியவில்லை?

நாட்டில்தான் இந்தகைய முட்டாள்தனங்கள் நடக்கிறது என்றால் புலம்பெயர்ந்த நாடுகளில் இதைவிட அதிகமான முட்டாள்தனங்கள் நடக்கின்றன. இவை ஏதோ படிக்காத மக்களின் முட்டாள் தனங்கள் அல்ல. பல பெரிய படிப்புகள் படித்த கனவான்களே இவ்வாறு செய்வது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொது ஒரு பெரியார் மட்டுமல்ல ஓராயிரம் பெரியார் வந்தாலும் இந்த முட்டாள்தனங்களை இப்போதைக்கு நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

Photo: • இந்த முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா?

நடிகர் விஜய் அவர்களின் (நடிப்பு) பேச்சு!

செய்தி:- முதல்வரை இழிவுபடுத்தியதை என் தாயை தப்பாக பேசியமாதிரி நினைக்கிறேன். – விஜய் பேச்சு

அடுத்த சுப்பர்ஸ்டாராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் நடிகர் விஜய் அவர்களுக்கு திடீரென தமிழக முதல்வர் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொங்கியெழுந்து உணர்ச்சியைக் கொட்டி பேசியிருக்கிறார். ஆனால் ஜெயா அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் இதுபோல் பல நடிப்புகளை பார்த்தவர் என்பதையும் நடிகர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் ஏற்கனவே பல தடவை ஜெயா அம்மையார் இழிவு படுத்தப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் வராத உணர்வு இப்போது மட்டும் நடிகர் விஜய் அவர்களுக்கு என் வந்திருக்கிறது? அப்போதெல்லாம் அது தன் தாயை இழிவு படுத்தியதாக அவர் கருதவில்லையா?

பல கோடி ரூபா செலவில் எடுக்கும் அவருடைய “கத்தி” திரைப்படம் எந்தவித சிக்கலுக்கும் ஆளாகாமல் திரையிடப்பட வேண்டும் என்றால் அதற்கு தமிழக முதல்வர் ஜெயா அம்iயாரின் ஆதரவு வேண்டும் என்பதால் இந்த உணர்வு எற்பட்டதா?

நடிகர் விஜய் அவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத உணர்வு,
தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் துன்பப்படுகையில் வராத உணர்வு,
தமிழக சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளுக்காக வராத உணர்வு,
இப்போது வருகிறது என்றால் அது நிச்சயம் “கத்தி” திரைப்படத்திற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே விஜய் அவர்களே!
உங்கள் நடிப்பு திறமையை திரைப்படத்தில் மட்டும் காட்டுங்கள்.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு காட்ட வேண்டாம்!

Photo: • நடிகர் விஜய் அவர்களின் (நடிப்பு) பேச்சு!