Thursday, October 27, 2022
ஐயா! தீபாவளிக்கு தீர்வு வரும்
ஐயா!
தீபாவளிக்கு தீர்வு வரும் என்று தமிழ் மக்களை ஏமாற்றி வருவது சிங்கள அரசா? அல்லது நீங்களா?
அமெரிக்காவில் நெருக்கடி ஏற்பட்டபோது
அமெரிக்காவில் நெருக்கடி ஏற்பட்டபோது எப்படி கறுப்பு இனத்தவரான ஓபாமாவை அமெரிக்க முதலாளித்துவம் தெரிவு செய்ததோ அதேபோன்று இன்றைய நெருக்கடியில் பிரித்தானிய முதலாளித்துவம் ரிஷியை தேர்வு செய்கிறது.
ஒபாமாவால் எப்படி அமெரிக்க கறுப்பு இன மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லையோ அதேபோல் ரிஷியால் பிரித்தானிய கறுப்பு நிற மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.
கோழியின் மூன்றாவது கால் எங்கே?
•கோழியின் மூன்றாவது கால் எங்கே?
கோழிக்கு இரண்டு கால் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையே ரணில் கூறினால் நாம் மூன்றாவது காலை தேட வேண்டும்.
ஏனெனில் ரணில் மட்டுமல்ல அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் எப்போதும் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.
மூக்கனாங்கயிறை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதுபோல் கோத்தாவுக்கு பதிலாக ரணிலை மாற்றியதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்.
எனவேதான் மக்களை ஏமாற்ற ஒரு வருடத்திற்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்கிறார் ரணில்.
கனடா சென்ற ஈழத் தமிழர்கள்
கனடா சென்ற ஈழத் தமிழர்கள் அங்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடிகிறது.
ஆனால் இந்தியா சென்ற ஈழத் தமிழர்கள் குடியுரிமைகூட பெற முடியாமல் இப்பவும் அகதிகளாகவே இருக்கின்றனர்.
ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியும்கூட இந்திய அரசு வழங்க மறுக்கிறது.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடத்தி
ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடத்தி பல தமிழர்களை கொன்ற சகரானுக்கு இந்தியாவில் இருந்து ஆர் டி எக்ஸ் வெடி மருந்து வழங்கியது யார் என்பதை கண்டு பிடித்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா?
Subscribe to:
Posts (Atom)