Thursday, August 14, 2014

மோடி அரசு தமிழர்களுக்கு நன்மை செய்யும் என்றவர்கள் இனி என்ன சொல்வார்கள்?

மோடி அரசு,

(1)மகிந்த ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பும் விருந்தும் அளித்தார்கள்.

(2)கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்கள்.

(3)ஜ.நா விசாரணைக் கமிசனுக்கு இந்திய விசா வழங்க மறுத்துள்ளார்கள்.

(4)தமிழக மீனவர்களை சுடும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்குகிறார்கள்.

(5) காங்கிரஸ் அரசு போட்ட புலிகள் மீதான தடையை தொடர்கிறார்கள்.

(6) சிறப்பு முகாமை மூட மறுக்கிறார்கள். அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.

(7) தமிழகத்தில் இருக்கும் அகதிகளை நன்கு பராமரிப்பதில்லை. அவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு தப்பி செல்லவும் அனுமதிப்பதில்லை.

(8)இலங்கை அரசு நடத்தும் ராணுவ மாநாட்டில் சுப்பிரமணிய சுவாமி கலந்து கொள்கிறார். அவரும் பி.ஜே.பி கட்சியில்தானே இருக்கிறார்.

(9) தமிழக அரசை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் இந்திய அரசு முன்னெப்போதையும்விட அதிக அளவில் உதவி செய்யும் என்றும் சுப்பிரமணிய சுவாமி இலங்கை அரசுக்கு கூறுகிறார்.

(10)இறுதியாக ராஜீவ் வழக்கு கைதிகள் மூவரையும் தூக்கில் இடுவதற்கும் இந்த மோடி அரசு முனைகிறது.

மோடி பிரதமரானால் தமிழர்களுக்கு நிச்சயம் உதவி செய்வார் என்றார்கள். ஆனால் அவருடைய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு விரோதமாகவே செயற்படுகிறது.

• இந்த மோடி அரசு இனியும் இலங்கை தமிழர்களுக்கு உதவும் என்று நம்பலாமா?

• மோடி அரசை ஆதரிக்கும் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த என்ன கூறப்போகிறார்கள்?

• இனியும் மோடி அரசுக்கு தங்கள் ஆதரவைத் தொடரப் போகிறார்களா?

Photo: • மோடி அரசு தமிழர்களுக்கு நன்மை செய்யும் என்றவர்கள் இனி என்ன சொல்வார்கள்?

சுப்பிரமணியசுவாமிக்கு கறுப்பு கொடி காட்டிய 70 பேர் கைது!

• சுப்பிரமணியசுவாமிக்கு கறுப்பு கொடி காட்டிய 70 பேர் கைது!

இவர்கள் வெறும் அறிக்கை போராளிகள் அல்லர்
இவர்கள் தேர்தலுக்காக பேராடுபவர்கள் அல்லர்
இவர்களுக்கு 2016 முதலமைச்சர் கனவு இல்லை
இவர்கள் இன்று வெறும் 70 பேராக இருக்கலாம்- ஆனால்
இவர்கள் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

கொழும்பு சென்று தமிழ் இனத்திற்கு எதிராக துரோகம் செய்யும்
சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை இந்த மானமுள்ள இளைஞர்கள் வெளிக்காட்டியுள்ளனர்.

இந்த இளைஞர்களின் போராட்டம்
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராக
துரோகம் செய்யும் சோ மற்றும் ராம் கூட்டங்களுக்கு
தகுந்த பாடத்தை பகட்டும் என்று நம்புவோம்

இவர்கள் கத்தி படம் குறித்து பேசி காலம் கடத்தவில்லை
இவர்கள் மற்றவர்களை தமிழரா என ஆராய்ச்சி செய்யவில்லை.
இவர்களுக்கு தெரிந்து எல்லாம் தமிழ் மக்களுக்காக போராடுவது மட்டுமே!

இந்த இளைஞர்களின் உணர்வுகளை மதிப்போம்!
இவர்களின் போராட்டத்தை பாராட்டுவோம்!

Photo: • சுப்பிரமணியசுவாமிக்கு கறுப்பு கொடி காட்டிய 70 பேர் கைது!

கவிஞர் தேவஅபிராவுடனான சந்திப்பு

கவிஞர் தேவஅபிராவுடனான சந்திப்பு

நேற்று (09.08.2014) லண்டன் ஈஸ்ட்காம் நகரில் கவிஞர் தேவஅபிராவுடனான சந்திப்பு இடம்பெற்றது. அவருடைய “இருள் தின்ற ஈழம்” கவிதை தொகுப்பு அறிமுகமும் கலந்துரையாடலும் “சரிநிகர்” ஆசிரியர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

“சரிநிகர்” சிவகுமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க முள்ளிவாயக்கால் மற்றும் பாலஸ்தீனத்தில் உயிர் இழந்தவர்கள் குறித்து ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் ஆரம்பமானது. ஆதனைத் தொடர்ந்து சிவகுமார் தனது அறிமுக உரையில் தேவஅபிரா கவிதையையும் பாலஸ்தீன கவிதை ஒன்றுடன் ஒப்பிட்டு இரு சமூகங்களுக்கிடையில் நிலவிய சூழலையும் ஒப்பிட்டு பேசினார்.

அதன் பின்னர் கோகுலரூபன் அவர்கள் தேவஅபிராவின் கவிதைத் தொகுப்பு பற்றிய தனது கருத்துரையை வழங்கினார். சுருக்கமான அதேவேளையில் காத்திரமான உரையை அவர் நிகழ்த்தினார். இந்த கவிதை தொகுப்பு பற்றிய தனது விமர்சனத்தை எழுத்து வடிவில் விரிவாக விரைவில் முன்வைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

இறுதியாக கவிஞர் தேவஅபிரா அவர்கள் தன் அனுபவங்களையும் பார்வையாளர்களின் கருத்துகளுக்கு தனது விளக்கங்களையும் வழங்கினார். மிகவும் பொறுமையாக தன்னிலை விளக்கத்தை அவர் அளித்தமை பாராட்டப்படவேண்டியது.

பார்வையாளராக வந்திருந்த திரைப்பட விமர்சகர் யமுனாராஜேந்திரன் அவர்கள் நீண்டதொரு விமர்சனத்தை முன்வைத்தார். அவர் தேவஅபிரா மீது மட்டுமன்றி ஈழத்து கவிஞர்கள் பலர் மீதும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பார்வையாளராக வந்திருந்த நடராஜா குருபரன் அவர்கள் தேவஅபிரா எந்தளவு நெருக்கடிகளுக்கூடாக பயணித்து கவிதை வடித்திருக்கிறார் என்பதை சில சம்பவங்களை சுட்டிக்காட்டி விளக்கினார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் காத்திரமான இலக்கிய பங்களிப்புகள் இல்லையே என்ற சிலருடைய ஆதங்கத்தை போக்கும் வண்ணம் இந்த கூட்டம் இடம்பெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. அந்தளவில் கவிஞர் தேவஅபிராவும் மற்றும் இவ் நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே!

Photo: • கவிஞர் தேவஅபிராவுடனான சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவிப்பு

அப்பாவி மக்களுக்கு உலகத்தின் எந்த முலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அமெரிக்கா தலையிடும் - அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவிப்பு

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் இறந்த தமிழர்கள் அப்பாவிகள் இல்லையா?

பாலஸ்தீனத்தில் குண்டுவீச்சில் பலியான குழந்தைகள் அப்பாவிகள் இல்லையா?

ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்ட்டவர்கள் அப்பாவிகள் இல்லையா?

ஈராக்கில் இலட்சக்கணக்கில் பலியானவர்கள் அப்பாவிகள் இல்லையா?

காஸ்மீரில் தினமும் கொல்லப்படுவபவர்கள் அப்பாவிகள் இல்லையா?

ஓபாமா அவர்களே!

அப்பாவிகள் என்பதற்கு அமெரிக்க வரைவிலக்ணம்தான் என்ன?

Photo: • அப்பாவி மக்களுக்கு உலகத்தின் எந்த முலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அமெரிக்கா தலையிடும் -  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவிப்பு

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் இறந்த தமிழர்கள் அப்பாவிகள் இல்லையா?

பாலஸ்தீனத்தில் குண்டுவீச்சில் பலியான குழந்தைகள் அப்பாவிகள் இல்லையா?

ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்ட்டவர்கள் அப்பாவிகள் இல்லையா?

ஈராக்கில் இலட்சக்கணக்கில் பலியானவர்கள் அப்பாவிகள் இல்லையா?

காஸ்மீரில் தினமும் கொல்லப்படுவபவர்கள் அப்பாவிகள் இல்லையா?

ஓபாமா அவர்களே!

அப்பாவிகள் என்பதற்கு அமெரிக்க வரைவிலக்ணம்தான் என்ன?

தைரியம் பெறும் தாய்க்குலம் பற்றிய செய்திகள்

சபாஷ்! பாராட்டுகள்!

தைரியம் பெறும் தாய்க்குலம் பற்றிய செய்திகள்,

• கற்பழிக்க முனைந்த சாமியாரின் ஆண் உறுப்பை வெட்டிய பெண்
• சேட்டை விட்ட வாலிபரை முட்டி போடவைத்து உதைத்த பெண்

அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி கூட கற்பழிக்க வரும் காமுகர்களை பெண்கள் தங்கள் கை நகங்களிலாவது கீறிக் காயப்படுத்துங்கள் என்றார்.

ஆனால் பெண்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது என “துக்ளக”; சோ போன்ற பன்றிக் கூட்டங்கள் போதிக்க வரிசையாக வரும்.

சட்டம் தன் கடமையை செய்திருந்தால் இன்றும் சாமியார்கள் எப்படி பெண்களுடன் சேட்டைவிட துணிகிறார்கள்?

மாறாக ஆட்சியாளர்களின் துணையுடன் அவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தப்பி விடுகின்றனரே!

காஞ்சி ஜெயந்திரருக்கு வெட்டியிருந்தால்
பிரேமானந்தாவுக்கு தைரியம் வந்திருக்குமா?

பிரேமானந்தாவுக்கு வெட்டியிருந்தால்
நித்தியானந்தாவுக்கு தைரியம் வந்திருக்குமா?

நித்தியானந்தாவுக்கு வெட்டியிருந்தால்
சாய்ராம் சாமிக்கு தைரியம் வந்திருக்குமா?

• புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் பெண்கள் தனியாக நள்ளிரவிலும் தைரியமாக உலாவினார்கள். அப்போது பெண்களிடம் சேட்டை விடுவதற்கு யாரும் முனையவில்லை. ஏனெனில் அவ்வாறு சேட்டை விடும் வாலிபர்கள் பெண் போராளிகளினால் பச்சை மட்டை அடி கொடுக்கப்பட்டார்கள்.

Photo: சபாஷ்! பாராட்டுகள்!

Saturday, July 19, 2014

• நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!

• நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!

கடந்த காலங்களில் எல்லா தரப்பினராலும் பல தவறுகள் விடப்பட்டிருக்கின்றன. அவற்றை இன்று சுட்டிக்காட்டி பட்டியல் இட்டு தொடர்ந்தும் குரோதங்களை வளர்ப்பதால் யாருக்கு இலாபம்?

வேற்றுமைகளை பெரிதுபடுத்தி எதிரிக்கு உதவுவதை விடுத்து ஒற்றுமைகளை வளர்த்து எதிரியை விரட்டுவதே புத்திசாலித்தனமாகும்.

அண்மைய முஸ்லிம் மக்கள் மீதான இனவாத தாக்குதல்கள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுடான ஒற்றுமைக்கும் வழிகோலியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா 'பொதுபல சேனாவை' தடைசெய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

மங்கள சமரவீர 'இது அரசின் உளவு நிறுவனங்களாலும் கோத்தபாயாவின் பின்னனியிலும் நடைபெற்ற தாக்குதல்கள்' என கூறியதோடு அதற்குரிய ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.

'சம உரிமை இயக்கம்' யானது தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களையும் ஒன்று திரட்டி கொழும்பு மாநகரில் 'இன்னொரு 1983 கலவரம் இடம்பெற அனுமதிக்மாட்டோம்'என்று அறிவித்துள்ளார்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் 'முஸ்லிம் மக்களுக்காக போராட தயார்' என அறிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் முதல் முறையாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டுளன. வரவேற்கப்பட வேண்டிய திருப்பு முனை இது.

• கலைஞர் கருணாநிதி முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

• விடுதலை சிறுத்தை திருமாவளவன் இலங்கை தூரகத்தை முற்றுகை செய்துள்ளார்.

• வைகோ அவர்களும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

• 'நாம் தமிழர்' சீமான் போராட்டம் அறிவித்துள்ளார்

இவற்றை விட புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக லண்டனில் மூவின மக்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மிகப் பெரிய மாற்றம் ஆரம்பித்துள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களிடையே மட்டுமல்ல சிங்கள மக்களுடனும் ஜக்கியத்திற்கான வழி திறந்துள்ளது.

இனவாத அரசின் சூழ்சிகளுக்கு இரையாகாமல் மக்கள் தொடர்ந்தும் ஜக்கியமாக செயற்பட்டு இந்த இனவெறி மக்கள் விரோத அரசை தூக்கியெறிய வேண்டும்.

Photo: • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி

முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா

• 'முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா

முன்னர் மலையக தமிழரை வந்தேறிகள் என்றும் அவர்களை இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார்கள்.

இப்போது முஸ்லிம்களை வந்தேறிகள் என்றும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று பொதுபல சேனா கூறுகிறது.

சரி, ஒரு பேச்சுக்கு இதை ஒத்துக்கொள்வதாயின் இலங்கையின் பூர்வ குடிகள் மகியங்கனைக் காட்டில் இருக்கும் வேடுவர்கள் என கூறுகிறார்கள். அப்படியாயின் அந்த வேடுவர்கள்

• சிங்களவர்கள் எல்லாம் வந்தேறிகள் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அதை பொது பலசேனா ஏற்றுக் கொள்ளுமா?

Photo: • 'முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா