Tuesday, May 25, 2021
மே தின வாழ்த்துகள்.
•மே தின வாழ்த்துகள்.
உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர ஓய்வு
எட்டு மணி நேர உறக்கம்
இதற்காகப் போராடி
சிக்காக்கோ வீதிகளில்
இரத்தம் சிந்தியவர்களின் நினைவே "மே தினம்"
எமக்காகப் போராடிய அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்ததே
எம் கரங்களில் தவளும் "செங்கொடி".
வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன்
இன்று உழைப்பதற்காக வாழ்கிறான்.
மாற்றுவோம் இந்த அவல நிலையை.
உலகின் பாதி சொத்து வெறும் 62 முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது.
இந்த 62 முதலாளிகளின் சொத்து மதிப்பு 119 லட்சம் கோடி ரூபா
இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது.
பணக்காரர்களின் சொத்து மதிப்பு 44 சத விகிதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஒன்பது பேரில் ஒருவர் இரவு உணவு இன்றி பட்டினியாக உறங்க செல்கிறார்.
ஏன் இந்த நிலை?
உலகில் செல்வம் சமமாக பங்கிடாமல் இருப்பதே காரணம்.
ஆறு மனி நேர வேலை கேட்போம்
எட்டு மணி நேர உறக்கம் கேட்போம்
பத்து மணி நேர ஓய்வு கேட்போம்.
போராடுவோம் எமக்காக மட்டுமல்ல
எமது அடுத்த சந்ததிக்காகவும்!
•முதலாளி, தொழிலாளி சுரண்டலை ஒழிப்போம்
•உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் இடைவெளியை நீக்குவோம்.
•நகரத்திற்கும் கிராமத்திற்கும் வேறுபாட்டை இல்லாது செய்வோம்
வாருங்கள் தோழர்களே! ஒன்றாய் அணிதிரள்வோம்!
Thursday, April 29, 2021
ஏப்ரல் -1
• ஏப்ரல் -1
இது முட்டாள் தின செய்தி – ஆனால்
முட்டாள் தனமான செய்தி அல்ல.
ஏப்பிரல் -1 யன்று ஒரு பக்தன் பாப்பரசரிடம் “இயேசு மீண்டும் வந்து விட்டார் “ என்று கூறினான். அதற்கு பாப்பரசர் சிரித்து கொண்டே “ இன்று ஏப்ரல் -1 . என்னை முட்டாள் ஆக்க முடியாது” என்றாராம்.
ஆம். பாப்பரசருக்கு இயேசு மீண்டும் வரமாட்டார் என்பது நன்கு தெரியும். எனவே தான் அவர் முட்டாள் தினத்திற்காகக் கூட அதை நம்ப தயாராக இல்லை.
எனினும் அவர் ஒவ்வொரு நாள் பூசையின் போதும் “இயேசு சீக்கிரம் வருகிறார்” என பக்தர்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார்.
“இயேசு இறந்தாராம். அவர் மீண்டும் 3 நாளில் உயிர்த்தாராம். பின் மீண்டும் அவர் சீக்கிரம் வருவாராம்” என்று பாப்பரசர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இரண்டாயிரம் வருடம் ஆகியும் இன்னும் அவர் வரவில்லை. ஒருவேளை சீக்கிரம் என்றால் அவர்கள் அகராதியில் இருபதினாயிரம் வருடமாக இருக்குமோ?
இவர்கள் கூறும் இயேசு உண்மையா? அவர் திரும்பி வருவார் என்பது உண்மையா? என்பது ஒருபுறம் இருக்க அப்படி அவர் பிறந்து வந்தால் தயவு செய்து ஈழத்தமிழனாக பிறக்க வேண்டாம்.
அப்படி பிறந்தாலும் தப்பி தவறியும் தமிழ்நாட்டிற்கு அகதியாக வரவேண்டாம் .
ஏனெனில் அவ்வாறு வந்தால் என்ன நடக்கும் என்பதை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதி ஒருவர் எழுதிய கவிதை வரிகளை படியுங்கள். தெரிந்து கொள்ளலாம்.
ஓ இயேசுவே!
நீ மீண்டும் பிறந்து வருவதானால்
ஈழத்தமிழனாக மட்டும் பிறந்துவிடாதே!
அப்படி பிறந்தாலும்
அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்துவிடாதே
ஏனெனில்
இம்முறை சிலுவையை விடக் கொடிய
சிறப்பு முகாமில் அடைக்கப்படுவாய்!
நண்பர்களே! சிறப்பு முகாம் கொடுமையை விளக்க இதைவிட சிறப்பான என்ன வரி வேண்டும்?
எனவே இதனை உணர்ந்து இந்த கொடிய சிறப்பு முகாமை மூடுவதற்கு குரல் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் பாதை திருடர் பாதை!
• தேர்தல் பாதை திருடர் பாதை!
தேர்தல் பாதை திருடர் பாதை என்றால் யாருக்கு கோபம் வருகிறதோ இல்லையோ இந்த (போலி)கம்யுனிஸ்ட்டுகளுக்கு பயங்கர கோபம் வந்துவிடும்.
உடனே ஓடி வந்து “ தோழர் லெனின் இந்த புத்தகத்தில் இத்தனையாம் பக்கத்தில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் சொல்லியிருக்கிறார்” என்பார்கள்.
ஆனால் பாருங்கள் இந்த கம்யுனிஸ்டுகளுக்கு வந்த நிலையை,
கடந்த பாhராளுமன்ற தேர்தலின்போது, கேரளாவில் காங்கிரஸ் ராகுலை தோற்கடிப்போம் என்றார்கள்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ராகுலை பிரதமர் ஆக்குவோம் என்றார்கள்.
இப்போது சட்டமன்ற தேர்தலின்போது, பாஜக பாசிசம் வந்திடும் என்றுகூறி தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றார்கள்.
ஆனால் கேரளாவில் அதே காங்கிரஸ் பாஜகவுடன் இரகசிய கூட்டு என்று குற்றம் சுமத்துகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க இவர்கள் பாஜக வுடன் இரகசிய கூட்டு என்கிறார்கள்.
இந்த பித்தலாட்டத்தை “திருடர் பாதை” என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்க முடியும்?
ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் வைத்து கோத்தபாயா ராஜபக்சா கூறினார்.
12000 புலிக் கைதிகளை விடுதலை செய்த எனக்கு 70 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதா? என்னை நம்புங்கள். நாம் பதவிக்கு வந்ததும் சகலரையும் விடுதலை செய்வோம் என்றார் மகிந்த ராஜபக்சா
தமிழ் அரசியல் கைதி ஒருவரின் குடும்பத்திற்கு என் சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். நாம் ஆட்சிக்கு வந்ததும் சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்ய நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று நாமல் ராஜபக்சா கூறினார்.
கோத்தபாயா ஜனாதிபதியானதும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. காரணம் கேட்டபோது பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்கள்.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்பும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
மாறாக தமிழ் மக்களை கொன்ற சிங்கள ராணுவ வுPரர் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இப்போது இவர்களின் நீதி அமைச்சர் கூறுகிறார் தமிழ் அரசியல் கைதிகள் ஒருபோதும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று.
மகிந்த ராஜபக்சா கும்பல் பதவிக்கு வர ஆதரவு அளித்த தமிழ் தரப்பினர் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்?
இனியாவது சிங்கள அரசை இவர்கள் புரிந்து கொள்வார்களா?
ஆழ்ந்த இரங்கல்கள்!
ஆழ்ந்த இரங்கல்கள்!
மன்னார் பேராயராக இருந்த ராயப்பு ஜோசப் அவர்கள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோரினார்.
அப்போது கொழும்பு பேராயராக இருந்த மால்கம் பெர்ணாந்து அவர்கள் அதனைக் கண்டித்தார்.
இப்போது அதே கொழும்பு பேராயர் ஈஸ்டர் படுகொலைகளுக்;கு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோருகிறார்.
தமிழினப் படுகொலைக்கு இலங்கை அரசிடம் இருந்து நீதி கிடைக்காது என்ற ஆண்டகை ராயப்பு ஜோசப் அவர்களின் கருத்து சரியானது என்பதை காலம் நிரூபித்துள்ளது.
அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு உண்மையில் பேரிழப்பாகும்.
இது ஒரு அரசியல் விருது!
•இது ஒரு அரசியல் விருது!
தமிழக தேர்தல் நடைபெறும் இந் நேரத்தில் நடிகர் ரஜனிக்கு “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்பட்டுள்ளது.
இது அவரின் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்கான அரசியல் நோக்கம் கொண்டது என்பதால் வன்மையான கண்டனங்கள்.
இன்று மியான்மர்
•இன்று மியான்மர்
நாளை சிறீலங்கா ??
மியான்மரில் சிறுபான்மை இனமான ரோஹிங்கியாக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து அமைதி காத்தனர்.
ஆனால் இப்போது அந்த பெரும்பான்மை இனத்தவரையே ராணுவம் வேட்டையாடுகிறது. ஒரே நாளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் சுட்டு வீதியோரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று சிறீலங்காவிலும் தமிழ் மக்களை ராணுவம் படுகொலை செய்தபோது பெரும்பான்மை இனமான சிங்கள இனம் தமக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்தது.
ஆனால் பர்மாவில் நடைபெற்றதுபோன்று சிறீலங்காவிலும் விரைவில் ராணுவத்தின் துப்பாக்கிகள் சிங்கள மக்களை நோக்கி திரும்பும்.
பாசிச அரசுகள் இப்படித்தான் செய்யும்.
குறிப்பு - 1971 மற்றும 1989 களில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்;டார்கள்.
Subscribe to:
Posts (Atom)