Saturday, August 31, 2024

தமிழா!

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது உனது ரயில்வேயில் உனக்கு வேலை இல்லை. 90% வேலை வட மாநிலத்தவருக்கு. காஸ்மீர் எல்லையில் காவலுக்கு சென்று நீ சாக வேண்டும். ஆனால் கடலில் உன் மீனவனைக் காக்க யாரும் வருவதில்லை. வருடம் 85 ஆயிரம் கோடி ரூபா வரி நீ கட்ட வேண்டும். ஆனால் காசு கேட்டு நீ கையேந்தினாலும் உதவி கிடைப்பதில்லை. தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் நீ அதை ஆள முடியாது! உன் கைக்கு எட்டும் தூரத்தில் 2 லட்சம் தமிழர் உன் கண்முன் கொல்லப்படும்போதும் உன்னால் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நீ அடிமையாக இருக்கிறாய் தமிழா! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் கிடக்கப் போகிறாய் தமிழா! மூவாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு உனக்கு உண்டு. ஆனால் அதை உணராமல் கைபர் கணவாய் வழியே ஆடு மாடு மேய்த்து வந்தவனிடம் அடிமையாகக் கிடக்கிறாயே. நீ எட்டுக் கோடி தமிழா. ஆனால் இரண்டு கோடி சிங்களவன் எப்படி உன் தொப்புள் கொடி உறவுகளை தைரியமாக கொல்ல முடிந்தது? ஏனெனில் அவன் இரண்டு கோடியாக இருந்தாலும் அவனுக்கு தனி நாடு இருக்கிறது. அவனுக்கு ஒரு அரசும் இருக்கிறது. உனக்கும் ஒரு நாடும் அதில் உன் அரசும் இருந்தால் நீயும் தலை நிமிர்ந்து வாழ முடியும் அல்லவா? உன்னைவிட வரலாறும் சனத் தொகையும் குறைந்த பிரான்ஸ் இன்று வல்லரசு. பிரிட்டன் இன்று வல்லரசு. ஆனால் நீ மட்டும் இதை உணராமல் அடிமையாகக் கிடக்கிறாயே? நீ அடிமையாக கிடப்பது கேவலம் அல்ல. மாறாக நீ அடிமையாக கிடக்கிறாய் என்பதை உணராமல் இருக்கிறாயே அதுதான் கேவலம். உன் அடிமைத்தனத்தை உணர்ந்துகொள் உன் பலத்தை அறிந்துகொள் அதன் பின்னர் கிழக்காசியாவில் ஒரு அதிசயம் நிகழ்வதை நீ காண்பாய்.

1 comment:

  1. தமிழன் எப்போதுமே எங்குமே எதற்குமே எதிலுமே அடிமை, தான் அடிமை என்பது அவனுக்கு கனவில் வந்தாலும் உடனே எழுந்துவிடுவான். கடைசிவரை தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா (இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிரணுமுடா)

    ReplyDelete