Friday, July 31, 2020
இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு!
•இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு!
இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்தே தமிழின படுகொலைகளை நிகழ்த்தின என்று நாம் கூறியபோது சிலர் அதை நம்ப மறுத்தனர்.
பின்னர் மகிந்த ராஜபக்சா, கோத்தபாய ராஜபக்சே ஆகியோரும்கூட இந்திய அரசின் உதவியுடனே யுத்தத்தை வென்றோம் என்று கூறிய பின்னரும்கூட அந்த சிலர் நம்ப மறுத்தனர்.
இப்போது இந்த உண்மையை ஈழத் தமிழர்களின் தலைவர் எனப்படும் சம்பந்தர் ஐயாவே ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார்.
இலங்கை அரசு சார்பாக ஒரு குழுவும் இந்திய அரசு சார்பாக இன்னொரு குழுவும் அமைக்கப்பட்டு இந்த இரண்டு குழுக்களும் சேர்ந்து போரில் புலிகளை தோற்கடித்ததாக சம்பந்தர் ஐயா கூறியுள்ளார்.
இலங்கை குழு சார்பாக கோத்தபாய ராஜபக்சா, பசில் ராஜபக்சா போன்றவர்களும் இந்தியக் குழு சார்பாக நாராயணன், சிவசங்கர்மேனன் போன்றவர்கள் இடம்பெற்றதாக சம்பந்தர் ஐயா தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, யுத்தம் முடிந்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படும் என இந்த இரண்டு குழுக்களும் சேர்ந்து தமக்கு உறுதி வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் வாக்குறுதி வழங்கியபடி தீர்வு தராமல் இலங்கை அரசு ஏமாற்றி விட்டது என்றும் எனவே வாக்குறுதி வழங்கியபடி இந்தியா தீர்வைப் பெற்று தரவேண்டும் என்று சம்பந்தர் ஐயா கேட்டுள்ளார்.
இப்போது எமது கேள்வி என்னவென்றால் இனியாவது இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை அந்த சிலர் ஏற்றுக்கொள்வார்களா என்பதே.
ஆனால் நாளைக்கு சோனியா காந்தியே வந்து “ஆம். நாமும் சேர்ந்தே தமிழர்களை அழித்தோம்” என்று கூறினால்கூட இந்த சிலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எமக்கு தெரியும்.
சரி இப்போது விடயத்திற்கு வருவோம். இந்த இந்திய குழு கொழும்பு சென்று திரும்பும்போதெல்லாம் சென்னையில் தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்து சகல விபரங்களையும் பரிமாறியுள்ளது.
எனவே இதில் இருந்து தமிழக முதலமைச்சர் கலைஞருக்கும் தெரிந்தே அவருடைய சம்மதத்துடனேயே தமிழின படுகொலை நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது..
ஆனால் இந்த உண்மையை புரியாமல் இப்பவும் சிலர் “ஒரு முதலமைச்சர் நினைத்தால் யத்தத்தை நிறுத்த முடியுமா? ஏன் இந்தியாவே நினைத்தால்கூட யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியுமா?” என்றெல்லாம் கேட்கின்றனர்.
அவர்களுக்கு நாம் கூறவிரும்புவது “ ஈழத் தமிழராகிய நாம் இனப்படுகொலையாளிகளை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”.
Image may contain: 2 people
Image may contain: 1 person
Image may contain: 1 person, close-up
Image may contain: 1 person, beard and close-up
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment