Friday, July 31, 2020
சுமந்திரன் கவனத்திற்கு!
•சுமந்திரன் கவனத்திற்கு!
தமிழ் காங்கிரஸ் ஜம்பதுக்கு ஜம்பது கேட்டது. அதில் இருந்து பிரிந்த தமிழரசுக்கட்சி சமஸ்டி கேட்டது.
இலங்கையில் சமஸ்டியைவிட ஜம்பதுக்கு ஜம்பது அதிகளவு உரிமை கொண்ட கோரிக்கை.
ஆனால் இந்த தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக்கட்சியும் சேர்ந்தே தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கினார்கள்.
இந்த தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியே தமிழீழம் என்ற தீர்வை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெற்றார்கள்.
எப்போது இவர்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்களோ அப்போதே சமஸ்டியையும் ஜம்பதுக்கு ஜம்பது என்ற கோரிக்கையையும் கைவிட்:டுவிட்டார்கள் என்றே அர்த்தம்.
பின்பு தமிழ்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோதும் தமிழீழ தீர்;வே முன்வைக்கப்பட்டது. அப்போதும் உங்கள் தமிழரசுக்கட்சி சம்ஸ்டியை முன்வைக்க வில்லை.
அதுமட்டுமல்ல புலிகளே தமிழ் மக்களின் எக பிரதிநிதிகள் என்று கூறியவரும் உங்களின் தலைவர் சம்பந்தர் ஐயாதான்.
இன்று தமிழீழத்தை முன்வைக்க யாருக்காவது தைரியம் இருக்கா என்று சவால் விடுகிறீர்கள். உண்மையில் இதனை நீங்கள் உங்கள் தலைவர் சம்பந்தர் ஐயாவிடமே முதலில் கேட்க வேண்டும்.
ஏனெனில் தமிழீழத்தை முன்வைத்த சம்பந்தர் ஐயா தமிழீழத்தை கைவிட்டுள்ளார். அவர்தான் ஏன் முன்வைக்கப்பட்டது? ஏன் கைவிடப்பட்டது? என்பதை விளக்க வேண்டும்.
அப்புறம் சமஸ்டிக் கோரிக்கைக்காகவே தமிழரசுக்கட்சியை முன்னெடுப்பதாக பெருமையாக கூறுகிறீர்கள்.
ஆனால் அனந்தசங்கரி உதயசூரியன் சின்னத்தை தர மறுத்ததால் வேறு சின்னம் உருவாக்க கால அவகாசம் இல்லாதபடியால் வேறு வழியின்றியே தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னம் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
உண்மை வரலாறு இப்படி இருக்க , இது தெரிந்த பலர் இன்னும் உயிரோடு இருக்க, எதற்காக வரலாற்றை திரித்து பொய் கூறுகிறீர்கள்.
உங்களை அறிவாளி என்று உங்கள் முட்டாள் தம்பிகள் வேண்டுமானால் கூறலாம். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் உங்கள் மீது காறி உமிழ்வார்கள்.
Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment