Friday, July 31, 2020
தேர்தலும் பேஸ்புக்கும்
தேர்தலும் பேஸ்புக்கும்
தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகின்றனர்.
இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் போட்டியிடுபவர்கள் ஆதரவு கேட்பது வழமையான ஒன்றுதானே.
ஆனால் சுமந்திரன் சார்பாக என்னுடன் பேசிய நபர் “ நீங்கள் சுமந்திரனை ஆதரிக்க வேண்டாம். ஆனால் தேர்தல் முடியும்வரை அவருக்கு எதிராக பேஸ்புக்கில் எழுதாமல் இருந்தால் போதும்” என கேட்டுக் கொண்டார்.
அவர் இவ்வாறு கேட்டது எனக்கு வித்தியாசமாகவும் உண்மையில் ஆச்சரியமாகவும் இருந்தது. எனவே நான் அவரிடம் “ ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்” என்று கேட்டேன்.
அதற்கு அவர் “ உங்கள் எழுத்துகள் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறது. சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பொது அலையை அது உருவாக்கிறது” என்றார்.
அவர் என் குறித்து சற்று மிகைப்படுத்தி கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியதில் ஒரு உண்மை இருக்கிறது. அதாவது இம்முறை தேர்தலில் பேஸ்புக் முக்கிய பங்காற்றுகிறது என்பது.
பல நாடுகளில் தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பேஸ்புக் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது கொரோனோ காலமாக இருப்பதால் வழக்கத்தை விட இன்னும் அதிகமாக பேஸ்பக் பங்கு வகிக்கிறது போலும்.
அதுவும் சிங்கள பகுதியைவிட தமிழ் பகுதிகளில்தான் இம்முறை பேஸ்புக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சுமந்திரன் எதிர்ப்பு.
அதனால்தான் ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவேன் என திமிராக பேட்டியளித்த சுமந்திரன் இப்போது 5 நாளில் 79 சந்திப்பகளை நிகழ்த்தியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்புகள் வெளிப்படுகின்றன.
பெருகி வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தன்னந்தனியாக சுமந்திரன் தடுமாறுகிறார். பலத்த எதிர்ப்பு அவரைத் துரத்துகிறது.
துரத்தியடிக்கும் பலத்த எதிர்ப்பு
சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடிக்கும் சுமந்திரன்!
குறிப்பு - சுமந்திரன் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையும் தாண்டி சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால் அது உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.
Image may contain: 1 person, standing
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment