Saturday, January 30, 2021
1983ல் நடைபெற்றது,
•1983ல் நடைபெற்றது,
இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையா? அல்லது,
புலிகளின் தாக்குதலால் ஏற்பட்ட இனக்கலவரமா?
புலிகள் 13 ராணுவத்தினரை கொன்றமையினால்தான் 1983ல் இனக்கலவரம் ஏற்பட்டதாக நம்மில் சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இனக்கலவரம் ஏற்பட்டு அதன்மூலம் சிறையில் குட்டிமணி கொல்லப்பட வேண்டும் என்பதற்காக பிரபாகரன் நடத்திய தாக்குதல் என்றும்கூட கூறிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நடந்தது இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை என 1983லேயே தோழர் சண்முகதாசன் கூறியிருக்கிறார்.
தோழர் சண்முகதாசன் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் மட்டுமன்றி தமிழ் சிங்கள முஸ்லிம் என மூவின மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவர்.
அதுமட்டுமன்றி அவர் ஒரு மதிப்பு மிக்க சர்வதே கம்யுனிஸ்ட் தலைவரும்கூட.
அவர் எழுதிய கருத்துகளை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். ( தமிழ் மொழிபெயர்ப்பு – டாக்டர் தம்பிராசா)
http://tholarbalan.blogspot.com/2021/01/blog-post_18.html
ஒரு பாதிக்கப்பட்ட சாட்சியின் நேரடி அனுபவங்களாக தோழர் சண் அவர்களின் கருத்துக்கள் இருக்கின்றன.
நான் அறிந்தவரையில் வேறு எந்தவொரு தலைவரும் இந்தளவு நேர்த்தியாக இதுவரை 1983 இனப்படுகொலையை எழுதவில்லை.
சுமந்திரன் சுரேன் ராகவன் போன்றவர்கள் தாமும் 1983ல் பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றனர்.
இவர்கள் தமது அனுபவங்களை எழுதி சாட்சியாக முன்வைத்திருக்கலாம். ஆனால் இவர்கள் எழுதாதது மட்டுமன்றி இனப்படுகொலைக்கு ஆதாரமில்லை என்றும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பு – இலங்கை இந்திய அரசு விசுவாசிகளுக்கு ஒரு தயவான வேண்டுகோள்!
இதைப் படித்துவிட்டு பழக்கதோஷத்தில் தோழர் சண்முகதாசன் புலிவால் பிடிக்கிறார் என்றோ அல்லது புலிகளின் பெருந்தொகையான பணம் அவரிடம் இருக்கிறது, அதனால்தான் இப்படி கூறுகின்றார் என்றோ எழுதிவிடாதீர்கள். ஏனெனில் அவர் 1992லேயே இறந்துவிட்டார்.
கீழ்வரும் இணைப்பில் தோழர் சண் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய பதிவை வாசிக்கலாம்.
http://tholarbalan.blogspot.com/.../black-july-1983...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment