Saturday, January 30, 2021
நான் - என்ன நாயோடு போயிட்டிருக்கே?
நான் - என்ன நாயோடு போயிட்டிருக்கே?
அமைச்சர் தொண்டைமான் - நல்லாய் பாரு தம்பி. நான் மாட்டோடு போயிட்டுக்கேன்.
நான் - இல்லை. நான் மாட்டுக்கிட்டே கேட்டேன்
அமைச்சர் தொண்டைமான் - ??????
குறிப்பு – அமைச்சர் தொண்டைமானை நாய் என்று கேவலப்படுத்திவிட்டதாக யாரும் கோபிக்க வேண்டாம். இது வெறும் பகிடி மட்டுமே.
சரி. இனி சீரியஸ்யாய் விடயத்திற்கு வருவோம்.
நேற்று தமிழ்நாட்டில் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் தொண்டைமானின் 5 காளை மாடுகள் கலந்துகொண்டதாக அறிய வருகிறது.
இங்கு அவரின் மாடுகள் கலந்துகொண்டது ஆச்சரியம் இல்லை. மாறாக அவை குளிரூட்டப்பட்ட (ஏசி) கரவன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமன்றி தன் மாடுகளை அடக்குபவர்களுக்கு விலையுயர்ந்த மோட்டார் சயிக்கிள் ஒன்றும் பரிசாக அறிவித்திருக்கிறார்.
பாவம். அமைச்சருக்கு வோட்டுப் போட்ட மக்களோ தங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று தருவார் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பள உயர்வு பெற்று தராவிட்டாலும் பரவாயில்லை, குளவிக்கடியில் வருடா வருடம் அந்த மக்கள் இறக்கிறார்கள். அதற்காவது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறார்கள்.
ஆனால் மாட்டுக்கு இரக்கப்பட்டு ஏசி வாகனம் கொடுத்திருக்கும் அமைச்சர் தனக்கு வோட்டுப் போட்ட மக்கள் மீது இரங்க மறுக்கிறார்.
என்னே கொடுமை இது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment