Saturday, January 30, 2021
இதுதான் சிங்கள அரசின் நீதி!
•இதுதான் சிங்கள அரசின் நீதி!
நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்காதவர்களை பிடிவிறாந்து போட்டு சிறையில் அடைப்பது வழக்கமான நடவடிக்கைதான் என்று சிலர் கூறுகிறார்கள்.
அவர்களுக்கு தெரியாமல் முன்கூட்டியே சமூகம் அளிக்கும் திகதியை மாற்றிவிட்டு அப்புறம் சமூகம் அளிக்கவில்லை என காரணம்காட்டி கைது செய்வது எப்படி வழக்கமான நடவடிக்கை ஆகும்?
அதுவும் இந்த கொரோனோ காலத்தில் எதற்காக அவர்களுக்கு பிணை வழங்காமல் சிறையில் அடைக்க வேண்டும்?
சரி. இதுதான் நீதிமன்ற நடைமுறை என்றால் லலித் குகன் என்ற இருவர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கோத்தபாயாவுக்கு யாழ் நீதிமன்றம் பல தடவை சம்மன் அனுப்பியும் அவர் ஒரு தடவைகூட ஆஜர் ஆகவில்லையே.
கடந்த ஆட்சிக்காலத்தில் கோத்தபாயா எந்தப் பதவியும் வகிக்கவில்லை. அவர் ஒரு சாதாரண பிரஜையே. ஆனாலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை.
நீதிமன்ற நடைமுறைப்படி அவருக்கு பிடிவிறாந்து போட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
இலங்கை ஜனநாயகநாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் என்றால் கைகது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிங்கள கோத்தபாயா என்றால் கண்டுக்காமல் விடுகிறார்கள்.
ஏனெனில் இதுதான் சிங்கள அரசின் நீதி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment