Saturday, January 30, 2021
4ம் திகதி முதல் மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!
•24ம் திகதி முதல் மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!
சிங்கள கடற்படையினால் நாலு மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறுகோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 600 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து இந்திய அரசு மட்டுமன்றி தமிழக அரசுகூட அக்கறை இன்றி இருக்கிறது.
ஏனெனில் தமிழக மீனவர்கள் வெற்றியை தீர்மானிக்கும் தேர்தல் தொகுதிகள் குறைவாக இருப்பதும் அதனால் அவர்கள் அரசியல் பலம் இன்றி இருப்பதுமே காரணமாகும்.
இப்போதுகூட வெறும் நாலு கிராம மக்களே போராட்டம் நடத்துகின்றனர். இதுவே நாலு பார்ப்பணர் கொல்லப்ட்டிருந்தால் பிரதமர் மோடியின் நெஞ்சு 56 இஞ்ச் விரிந்திருக்கும் நாலு வன்னியரோ அல்லது தேவரோ கொல்லப்பட்டிருந்தால் தமிழ்நாடே பற்றி எரிந்திருக்கும்.
(1) மீனவர்கள் எல்லை தாண்டி வருவதால்தானே சிங்களபடை கொல்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். எல்லை தாண்டி வருபவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் மீனவர்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. எனவே அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டுமேயொழிய கொலை செய்யக்கூடாது.
(2) போதைப் பொருள் கடத்தகிறார்கள். எனவே அவர்களை கொல்வது என்ன தவறு என்று சிலர் கேட்கிறார்கள். போதைப் பொருள் கடத்தி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைக்கூட சாகடிக்கக்கூடாது என்று தற்போது இலங்கை நீதிமன்த்தில் அரசு வாதாடுகிறது. அப்படியிருக்கும்போது எந்த விசாரணையும் இன்றி மீனவனை போதைப்பொருள் கடத்தியதாக கொல்வது எப்படி நியாயமாகும்?
(3) ஈழத் தமிழ் மீனவர்களின் நலனுக்காகத்தானே சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை சுடுகிறது என்று சில ஈழத் தமிழர்கள் கூறுகிறர்ககள். முல்லத்தீவு திருகோணமலை போன்ற ஈழத் தமிழர் இடங்களில் சிங்கள மீனவர்கள் வந்து சிங்கள ராணுவத்தின் உதவியுடன் மீன் பிடிக்கிறார்கள். முதலில் இந்த சிங்கள மீனவர்களை சிங்கள கடற்படை விரட்டிவிட்டு அப்புறம் தமிழக மீனவர்களை விரட்டினால் நம்பலாம்.
(4) அப்படியென்றால் இதற்கு என்ன தீர்வு?
தமிழக மீனவர்களும் ஈழத் தமிழ் மீனவர்களும் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலமே இப் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு மட்டுமன்றி டி.ஆர்.பாலு போன்ற பெரும் படகு முதலாகளும் தடையாக இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment