Friday, November 17, 2023
1989ல் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீரா
1989ல் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு சிங்கள அரசு கொன்றது.
ரோகண விஜயவீரா "பயங்கரவாதி" எனவே அவரது பிள்ளைகளும் "பயங்கரவாதிகள்" என கூறி அவரது பிள்ளைகளை சிஙகள அரசு கொல்லவில்லை.
மாறாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பாதுகாத்து படிக்கவும் வைத்தது சிங்கள அரசு.
அது மட்டுமன்றி ரோகண விஜேயவீராவுக்கு சிலை வைக்கவும் வருடந்தோறும் நினைவு அஞசலி செய்யவும்கூட அனுமதிக்கிறது.
(சிங்கள) ரோகண விஜேயவீராவுக்கு ஒரு நியாயம். (தமிழ்) பிரபாகரனுக்கு இன்னொரு நியாயம். இதுதான் சிங்கள அரசின் நியாயமா என நாம் கேட்கப் போவதில்லை
ஏனெனில் சிஙகள அரசு இப்படித்தான் நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்தான்.
ஆனால் இங்கு எமக்கு எழும் டவுட் என்னவெனில,
சிஙகள புத்திஜீவிகள் யாராவது ஜேவிபியை “பாசிசவாதிகள்” என கூறியுள்ளனரா? அல்லது,
புலிகளை “பாசிசவாதிகள்” என்று கூறும் நம் தமிழ் புத்திஜீவிகள் யாராவது ஜேவிபியை “பாசிசவாதிகள்” என்று கூறியுள்ளனரா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment