Friday, November 17, 2023
நான்கு தமிழர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டு
நான்கு தமிழர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது.
இதை ஆங்கில பத்திரிகை ஒன்று நினைவூட்டியுள்ளது.
எமது தமிழ் பத்திரிகைகள் மட்டுமல்ல எமது தமிழ் தலைவர்களும் இந்த நான்கு பேரையும் மறந்துவிட்டனர்.
எந்த தமிழக அரசும் செய்யாததை உச்ச நீதிமன்றம் முன்வந்து இந்த நான்கு பேரையும் விடுதலை செய்தது.
உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தும் இவர்கள் ஈழத் தமிழர் என்பதால் சிறப்புமுகாமில் அடைத்தது தமிழக அரசு.
இவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அப்போது தமிழக முதல்வர் உறுதியளித்தார்.
அதன்படி தான் நாடு திரும்ப விரும்புவதாக சாந்தன் கூறினார். ஆனால் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
இதனால் பிரதமர் மோடிக்கு மனு அனுப்பினார் சாந்தன். ஆனால் பிரதமரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் வேறு வழியின்றி சாந்தன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கடந்த ஒக்டோபர் 18ம் திகதி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று நவம்பர் 12ம் திகதியாகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment