Friday, November 17, 2023
இந்திராகாந்தி இருந்திருந்தால்
•இந்திராகாந்தி இருந்திருந்தால்
தமிழீழம் கிடைத்திருக்குமா?
இந்திராகாந்தி அம்மையாரின் நினைவு தினமான நேற்று (31.10.23) அவர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என வழக்கம்போல் சிலர் எழுதியுள்ளனர்.
ஆனால் இந்திராகாந்தி அம்மையார் உயிரோடு இருந்திருந்தாலும் ராஜீவ் காந்தி செய்ததையே செய்திருப்பார் என்பதே உண்மையாகும்.
(1)பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்த இந்திராகாந்தி அம்மையார் தமிழீழ விடுதலையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை
(2)பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் அரபாத்திற்கு செங்கள வரவேற்பளித்த இந்திராகாந்தி அம்மையார் ஈழவிடுதலை இயக்கங்களை ஒருபோதும் சந்தித்ததில்லை.
(3) பாலஸ்தீன விடுதலை இயக்கம் வெளிப்படையாக இந்தியாவில் அலுவலகம் அமைத்து இயங்க அனுமதித்த இந்திராகாந்தி அம்மையார் ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டில் வெளிப்படையாக இயங்க அனுமதிக்கவில்லை.
(4) இலங்கையில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர் இருவரைக் கடத்தி சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் இயக்கம் கோரியபோது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு சம்மதித்தார். ஆனால் இந்திராகாந்தி அம்மையார் ஈபிஆர்எல்எவ்; தலைவர்களை பிடித்து அடித்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார்.
(5)இந்திராகாந்தி அம்மையார் நினைத்திருந்தால் ஈழ விடுதலை இயக்கங்களை ஒன்றினைத்து பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கியிருக்க முடியும்.
(6) ஆனால் அவரோ மொத்தம் 36 இயக்கங்களில் 5 இயக்கங்களுக்கு மட்டுமே அதுவும் தனித் தனியாகவே பயிற்சி கொடுத்தார்.
(7) இந்தியாவிடம் பயிற்சி பெற்ற மொத்த போராளிகளின் எண்ணிக்கை ஜந்நூறை தாண்டாது. அதுபோல் பயிற்சி பெற்ற 10 போராளிகளுக்கு தலா ஒரு ஆயுதம் என்ற அளவிலேயே ஆயுதமும் வழங்கப்பட்டது.
(😎 ஆயுதம் போதாது என்று இயக்கங்கள் கூறியபோது “ தரப்படும் ஆயுதம் தற்பாதுகாப்பிற்கேயொழிய தாக்குதலுக்கு அல்ல” என்று இந்தியா பதில் கூறியது.
(9)அதேவேளை இயக்கங்கள் தாங்களாக உலக சந்தைகளில் ஆயுதம் வாங்குவதையும் இந்தியா தடுத்தது. புளட் இயக்கம் இறக்குமதி செய்த 150 ரைபிள் துப்பாக்கிகளை இந்திய அரசு பறிமுதல் செய்தது.
(10) முழு இலங்கையையும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்திராகாந்தி அம்மையார் இயக்கங்களுக்கு சிறிதளவு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கினார்.
(11) பாகிஸ்தானை பிரித்து பலவீனப்படுத்தவே வங்க தேச விடுதலையை இந்திராகாந்தி அம்மையார் ஆதரித்தார். ஆனால் முழு இலங்கையையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் இருந்தமையினால் தமிழீழ விடுதலையை அவர் ஆதரிக்கவில்லை.
(12) எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழம் விடுதலை அடைந்தால் அது தமிழ்நாடு விடுதலைக்கு உத்வேகம் கொடுக்கும் என்ற அச்சம் இந்திராகாந்தி அம்மையார் உட்பட அனைத்து இந்திய தலைவர்களுக்கும் உண்டு.
(13) ஏனெனில் தமிழ்நாடு தனி நாடானால் இந்தியா சுக்கு நூறாக உடையும். எனவே இந்தியா உடைவதற்கு வழி வகுக்கும் தமிழீழ விடுதலைக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது.
எனவே இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைத்திருக்காது என்பதே உண்மையாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment