Thursday, November 30, 2023
கேள்வி – புலம்பெயர்ந்த இளையவரின் பேச்சை
கேள்வி – புலம்பெயர்ந்த இளையவரின் பேச்சை பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அதை இகழ்வது ஏன்?
பதில் - எல்லோரிடமும் பேசிப் புரிய வைக்க முயலாதீர்கள். ஏனெனில் சிலவேளை முன்னால் இருப்பது எருமையாககூட இருக்கலாம்.
குறிப்பு - இவர்களை எருமையுடன் ஒப்பிட்டமைக்கு எருமையிடம் மன்னிப்பு கோருகிறேன். ஏனெனில் முட்டாள் மனிதனை “எருமை” என்று திட்ட முடியும். ஆனால் முட்டாள் எருமையை “மனிதன்” என்று திட்ட முடியாது அல்லவா? 😂
சரி. விடயத்திற்கு வருகிறேன்.
அன்று உலகம் பூராவும் இடம்பெயர்ந்த யூதர்கள் தமக்கான தாயகத்தை கோரியபோது எந்தவொரு யூதனும் இஸ்ரவேலில் வந்து நின்று குரல் கொடுக்கும்படி கூறவில்லை.
இன்று கனடாவில் இருந்து சீக்கியர் தமது தாயக விடுதலைக்காக குரல் கொடுக்கும்போது பஞ்சாபில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த சீக்கியனும் கூறுவதில்லை.
ஆனால் புலம்பெயர்ந்த தமிழர் தாயகத்திற்காக குரல் கொடுக்கும்போது இலங்கையில் வந்து நின்று குரல் கொடுக்கும்படி நக்கலாக கூறுகின்றனர்.
புலத்தில் குரல் கொடுப்பவர்களை நசுக்க முடியாத காரணத்தால் அவர்களை நசுக்குவதற்காக கோத்தபாயா ராஜபக்சா இலங்கைக்கு வருமாறு அழைத்தார்.
அவருடைய அழைப்பிற்கும் இவர்களுடைய அழைப்பிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
ஈழத் தமிழரில் சுமார் ஏழு லட்சம் பேர் புலத்தில் இருக்கின்றனர். அதாவது மூன்றில் ஒன்று பங்கினர் இருக்கின்றனர்.
அவர்கள் தாயத்திற்காக குரல் கொடுக்க தாயகத்திற்கு வர வேண்டும் எனக் கோருவது அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்.
எனவே தமிழன் எங்கிருந்து குரல் கொடுக்கிறான் என்று பார்க்காதீர்கள். அவன் தமிழின விடுதலைக்காக குரல் கொடுக்கிறானா என்பதை மட்டும் பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment