தமிழ்நாட்டு தலைவர்கள் “கோமாளிகளா” அல்லது அவர்களை நம்பும் மக்கள் “ஏமாளிகளா”?
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் “கோமாளிகள்” என்று முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருந்தார். ஒரு ராணுவ தளபதி அரசியல் தலைவர்களை அதுவும் எமது தலைவர்களை எப்படி கோமாளிகள் என்று கூறலாம் என நானும் அப்போது ஆத்திரப்பட்டேன். அனால் இன்று எமது தலைவர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது அவர் சரியாகத்தான் கூறியிருக்கிறார் என நினைக்கத் தோன்றுகிறது.
காங்கிரஸ் தலைவர் சல்மான் குருஸ்டி படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரன் படங்கள் உண்மையானவை அல்ல என சந்தேகம் தெரிவிக்கிறார். அத்துடன் இலங்கை அரசு தமது நல்ல உற்ற நண்பன் என்கிறார். ஆனால் அந்த காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகிக்கும் கலைஞர் தனது நெஞ்சு வெடிக்கிறது என்றும் மகிந்தவை போர்க் குற்றவாளி என்றும் அறிக்கை விடுகிறார்.
படுகொலைகளுக்கு ஆயுதம் வழங்கி முழு உதவி செய்தது இந்திய அரசு. இன்றும் மகிந்தவை பாதுகாத்து வருவது இந்திய அரசே. ஆனால் அதே அரசிடம் மகிந்தவை தண்டிக்கும்படி கோரும் தலைவர்களை “கோமாளிகள்” என்பதா அல்லது அத் தலைவர்களை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களை “ஏமாளிகள்” என்பதா?

யுத்தத்தின் இறுதி நேரங்களில் புலிகளின் தளபதிகளின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் தொலைபேசியை சுவிட்ச் ஓவ் செய்துவிட்டு மௌனமாக இருந்தவர்கள் இப்போது பொங்கியெழுந்து அறிக்கை விடுவதை என்னவென்று அழைப்பது?
ReplyDeleteதமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய வக்கற்ற ஜெயா அம்மையார் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுகிறார். கேட்பவன் கேனையன் என்றால் எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களே அது இதுதானா?
ReplyDelete1983ல் ஒரு அகதி சிறுவனை கலைஞர் தத்தெடுத்து வளர்ப்பதாக பத்திரிகையில் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது அந்த சிறுவன் பற்றிய செய்தி எதுவும் அறிய முடியவில்லை. அந்த சிறுவனுக்கு கலைஞர் தன் சொத்தில் எத்தனை கோடி ரூபா எழுதிவைத்திருக்கிறார் என்று யாராவது அறிந்தவர்கள் கூறுங்கப்பா! பிரபாகரன் மகனுக்காக கண் கலங்குபவர் நிச்சயம் தனது அகதி வளப்பு மகனுக்கு ஆயிரம் கோடி ரூபாவாவது கொடுத்திருப்பார் என நம்பகிறேன்.
ReplyDeleteதேர்தல் வருகிறது. ஈழத் தமிழர்கள் சிந்திய குருதியில் குளிர்காய அரசியல்வாதிகள் புறப்பட்டு விட்டார்கள். இனி அவர்களின் சங்கநாதம் காதைக் கிழிக்கும். நம்பி ஏமாற மக்களே தயாராகுங்கள்.
ReplyDelete