Thursday, March 30, 2023
விஜய் சேதுபதி முத்தையா
விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க தீர்மானித்தபோது அவர் மகளைப்பற்றி அநாகரீகமாக ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
உடனே கலைஞரின் மகள் கனிமொழி அம்மையார் தமிழத்தேசியம் பேசும் எல்லோரும் இப்படித்தான் அநாகரிகமாக எழுதுபவர்கள் எனக் குறிப்பிட்டு காவல்துறையிடம் முறையிட்டார்.
விசாரணையின்போது அந்த நபர் மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவழி தமிழர் என்பதும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் தெரியவந்தது.
இவ்வாறு உண்மை தெரியவந்த பின்பும் தமிழத்தேசியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டிற்கு கனிமொழி அம்மையார் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை.
அத்தோடு அவரின் திராவிட தம்பி ஒருவர் எனக்கு எழுதிய இப் பதிவை அவரின் கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
யார் அநாகரிகமாக எழுதுபவர்கள் என்பதை அவர் இனி முடிவு செய்யட்டும்.
கேள்வி - ஈரோடு இடைத் தேர்தல்
கேள்வி - ஈரோடு இடைத் தேர்தல் பற்றி தமிழக மக்கள் கருத்து என்ன?
பதில் - தங்கள் தொகுதியிலும் இடைத் தேர்தல் வரவேண்டும் என பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டனர்.
குறிப்பு - இத்தனை பொருட்களும் கொடுத்துவிட்டு 2ம் தேதி ஜனநாயகம் வென்றது என திராவிட முதல்வர் அறிக்கை விடப்போறதை நினைத்தால்தான் வேர்க்குது.
ஆழ்ந்த இரங்கல்கள்
•ஆழ்ந்த இரங்கல்கள்
தமிழ்நாட்டில் அகதிமுகாமில் இருந்துகொண்டு தமிழின விடுதலைக்காக செயற்படுவது சிரமம்.
அதுவும் கியூ பிராஞ் உளவுப்படைகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் மார்க்சிச லெனிச மாசேதுங் சிந்தனையில் செயற்படுவது மிகவும் சிரமம்.
அந்த மிகவும் சிரமத்தை இறுதிவரை அனுபவித்த தோழர் கௌரிகாந்தன் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
• ஆழ்ந்த அஞ்சலிகள் !
• ஆழ்ந்த அஞ்சலிகள் !
1983 வெலிக்கடை சிறைப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்
பின்னர் மட்டுநகர் சிறை உடைத்து தப்பியவர்
இறுதிவரை தமிழின விடுதலைக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியவர்
கனடாவில் மரணித்த அருட் தந்தை அன்ரன் சின்னராசா அவர்களுக்கு அஞ்சலிகள்
என் பிணம்கூட காங்கரசுடன் கூட்டணி
“என் பிணம்கூட காங்கரசுடன் கூட்டணி வைக்காது” என்று இவர் பேசியது நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா?
தமிழின படுகொலை செய்யும்
தமிழின படுகொலை செய்யும் அத்தனை சிங்கள பௌத்த ஜனாதிபதிகளும் பாவவிமோசனம் பெற திருப்பதி செல்வது ஏன்?
என்றும் நினைவில் கொள்வோம்!
என்றும் நினைவில் கொள்வோம்!
2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் 16 பேர் தீக்குளித்து மரணமடைந்தனர்.
அதில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்த நாள் இன்று.
இன்று அவரது 14வது நினைவுதினம் ஆகும். அவரை என்றும் நினைவில் கொள்வோம். (02.03.2009)
இத்தனை வருடங்களாக ஓடியும்
இத்தனை வருடங்களாக ஓடியும்
இதுவரை வெற்றிபெறவில்லை என்பதற்காக
நாம் வருத்தமடையத் தேவையில்லை
ஏனெனில், இத்தனைக்கு பிறகும்
நாம் நின்றுவிடாமல் ஓடுகிறோம் என்பதே பெருமைதான்.
எதுவுமே எளிமை இல்லைதான்
ஆனால் அனைத்துமே சாத்தியம்தான்.
தேர்தல் பாதையில் வெற்றி பெற முடியவில்லை என்றால் அடுத்த கட்டமான ஆயுதப் போராட்டபாதைக்கு தமிழ்த்தேசியம் நகருமேயொழிய தனது தமிழ்த்தேசிய விடுதலை என்னும் இலக்கை ஒருபோதும் கைவிடாது.
குத்துச் சண்டையில் ஒருவன்
குத்துச் சண்டையில் ஒருவன் வீழ்ந்தவுடன் வெற்றி அறிவிக்கப்படுவதில்லை.
பத்து எண்ணுவதற்குள் அவன் மீண்டும் எழுந்திருக்காவிடில் மட்டுமே அறிவிக்கப்படும்.
தோல்வி அடைந்தவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றி பெற்றவன் ஒருபோதும் வெற்றியை அனுபவிக்க முடியாது.
பலமான கூட்டணி
பல நூறு கோடி ரூபா பணம்
ஆனாலும் நாம் தமிழர் கட்சியின் ஒரு வோட்டைக்கூட வாங்க முடியவில்லை.
உண்மையில் இந்த தேர்தலில் வென்றவர்கள் நாம் தமிழரே.
மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்
•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.
தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் 04.03.2023 ஆகும்.
புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர்.
தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர்.
அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார்.
வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை.
தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.
புலவர் கலியபெருமாள் பற்றி நான் எழுதிய சில குறிப்பகளை கீழ் வரும் இணைப்பில் படிக்கலாம்.
https://tholarbalan.blogspot.com/2018/05/blog-post_40.html
தேர்தலில் வாக்குறுதியளித்தபடி க
தேர்தலில் வாக்குறுதியளித்தபடி கலைஞர் ஆரம்பித்த சிறப்பு முகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த அப்பாவி அகதிச்சிறுவன் மணி எங்கே என்பதையாவது திராவிட முதல்வர் ஸ்டாலின் கூறுவாரா?
தக்ஸ் (Thugs )
• தக்ஸ் (Thugs )
சுரங்கம் தோண்டி சிறையில் இருந்து தப்பி செல்லும் கதையை படமாக்கியிருக்கிறார்கள்.
இப் படத்தை பார்க்கும்போது 1995ம் ஆண்டு வேலூர் கோட்டையில் இருந்த சிறப்புமுகாமில் இருந்து சுரங்கம் தோண்டி போராளிகள் தப்பிச் சென்றது நினைவுக்கு வருகின்றது.
ஏன் இதனை யாரும் இன்னும் படமாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது?
என்றும் நினைவில் கொள்வோம்!
என்றும் நினைவில் கொள்வோம்!
ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் இன்று. (05.03.2009)
இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் வேறு வழியின்றி 16 பேர் உயிர்த் தியாகம் செய்தனர்.
ஆனாலும் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவில்லை.
இவாகள் தேர்ந்தெடுத்த பாதை பயன்தரவில்லை என்றாலும் இவர்களது அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் மகத்தானது.
இவர்களை என்றும் நினைவில் கொள்வோம்.
இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன்
இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும்.
தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை.
அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும்,
பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும்,
உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும்.
கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ,
ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள்.
இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்.
ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது.
மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.
(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல.
“ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர்.
இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.
தேர்தலில் போட்டியிட
•தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்?
தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர்.
போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்?
ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும்.
இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம்,
salary -54,485 Rs
fuel -30,000 Rs
transport-10,000 Rs
Entertainment- 10,000 Rs
mobile phone -2000 Rs
meeting each -500Rs
Current bill - free
Land line phone - free
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா.
வருடத்திற்கு 1440000 ரூபா.
ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே.
எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா
இந்தளவு சம்பளம் பெறும் உறுப்பினர் பாராளுமன்றில் செய்வது,
குறட்டை விட்டு தூங்குவது
கெட்ட வாhத்தைகளால் திட்டுவது
சண்டை பிடிப்பது,
பேப்பர் ராக்கட் விடுவது
மிளகாய் தூள் வீசுவது
அப்புறம் மதியம் பாராளுமன்ற கண்டீனில் மலிவு விலையில் சாப்பாடு.
கொழும்பில் சொகுசு பங்களா, சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு
சொகுசு வாகன பெர்மிட்டை விற்று 5 கோடி ரூபா சுளையாக எடுக்கலாம்.
உதவியாளர், சாரதி, அலுவலக வாடகை எல்லாம் தம் உறவினர்களுக்கு கொடுத்து அதில் இருந்தும் காசு பார்க்கலாம்.
5 வருடம் பதவி காலம் முடிய பென்சன் பெறலாம்.
இதைவிட செம்புகளிடமிருந்து “போராளி” “வாழும் வீரர்” போன்ற பட்டங்கள் பெறலாம்.
இத்தனைக்குமாகவே இவர்கள் முன்வருகின்றனர்.
இவை இல்லை என்றால் இதில் ஒருவர்கூட முன்வர மாட்டார்கள்.
குறிப்பு - பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் - தோழர் லெனின்
சிங்கள ராணுவத்தால்
•சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்
ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார்.(06.03.2008)
அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார்
இதுவரை அவர் கொலைக்கு நீதியும் வழங்கப்படவில்லை.
மார்ச் -8 சர்வதேச மகிளிர்
மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.
முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது.
ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை.
ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பெண் விடுதலை குறித்து
பெண் விடுதலை குறித்து
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை மட்டுமல்ல இன விடுதலையும்கூட இல்லை.
ஆனாலும் இன விடுதலை குறித்து பேசுபவர்கள் எந்தளவு தூரம் பெண் விடுதலை குறித்து பேசுகிறார்கள்?
ஐனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே எண்ணிக்கையில் அதிகம்.
அப்படியென்றால் ஐனநாயக முறைப்படி பெண்கள் கையில்தானே அதிகாரம் இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லையே? ஆனால் வரலாற்றில் பெண்கள் எப்போதும் இப்படி இருந்தில்லை என்றும் இடையில்தான் இவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் பெண் எப்போது அடிமையானாள்? அவள் ஏன் அடிமையாக்கப்பட்டாள்?
வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூக வடிவமே இருந்திருக்கிறது.
இச் சமூக வடிவத்தில் ஆணைவிடவும் பெண்ணிற்கே கூடுதல் அதிகாரம் இருந்துள்ளது.
பெண்ணே குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான பணியைச் செய்ததன் காரணமாக குடும்பத்தின் தலைமை பெண்ணிடமே இருந்தது.
குழந்தைகள் தாயின் வழியிலேயே அடையாளம் காணப்பட்டனர்.
சமுதாயத்தின் அக் கால கட்டத்தில் திருமணமோ அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ சமூக கட்டுப்பாடாக இருக்கவில்லை.
இதன் பொருள் அவர்கள் பாலியற் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தனர் என்பது அல்ல.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் ஆதிக்கம் பெண்ணிடமே இருந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரும்போது ஆணே(தந்தை) சமூக குழும வீட்டை நீங்கிச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகள் தாயுடனேயே இருந்தன.
சமுதாயத்தின் இக் காலகட்டத்தில் உற்பத்திக் கருவிகளான அம்பு, வில், ஈட்டி போன்றன பொதுவானதாக முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருந்தன.
அதாவது உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருக்கவில்லை.
மந்தைகள், காணிகள் போன்ற உற்பத்தி வசதிகளும் இருக்கவில்லை.
தனியார் உடமையாக எதுவும் இல்லாததால் ஒரு தந்தை தன் குழந்தைக்கு விட்டுச் செல்ல எதுவும் இருக்கவில்லை.
உற்பத்தி சக்திகளின் விருத்தியின் விளைவாக உற்பத்திக் கருவிகளின் உடமை தனியார் கைக்கு மாறியது.
அதன்பின் பணத்தின் திரட்சியும் மூலதனமும் உருவாகின.
இந்த நிலையில் ஆண் தனது தனியுடமை தனது மனைவிக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு போவதை விரும்பினான்.
இதுவே ஒருதார மணம் நடைமுறைக்கு வந்த அடிப்படை.
இந்த ஒருதார மணம் என்பது பெண்ணுக்குரியதாக இருந்ததேயொழிய ஆணுக்கு அல்ல.
பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமாக மாறியது. ஆண் ஆதிக்கத்திற்கு வந்தான்.
இந்த ஆண் ஆதிக்க நிலை முடிவுக்கு வருமா? பெண் விடுதலை பெறுவாரா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
1910 ஆண்டு கிளாரா ஐட்கின்
1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்
இந்த தினமே உலக மகிளிர் தினமாகும்
இந்த அமைப்பில் முதலாளிகளுக்கு இலாபத்தை தருகிற வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது.
இதன்படி பெண்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது.
இதை கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்றார் ரோசா லக்சம்பேர்க்
பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது?
பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும்.
உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும்.
அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம்.
ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும்.
அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர்.
அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.
கிடுகு
• கிடுகு
தாங்கள் சங்கிகள் என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டு திராவிடம், விடுதலை சிறுத்தைகள். தமிழக காவல்துறை கிருத்துவ மதம் எல்லோரையும் அநாகரீகமாக விமர்சித்து படமெடுத்திருக்கிறார்கள்.
புலி அல்லது பிரபாகரன் என்றால் உடனே பாய்ந்துவரும் தமிழக அரசும் அதன் காவல்துறையும் எப்படி இந்த படத்தை அனுமதித்துள்ளது?
ரஸ்சிய ஸ்டாலின் ஹிட்லரை
ரஸ்சிய ஸ்டாலின் ஹிட்லரை தோற்கடித்து ரஸ்சியாவையும் உலகத்தையும் காப்பாற்றியவர்.
அது மட்டுமன்றி தன் ஒரே மகன் யாக்கோவை போர் முனைக்கு அனுப்பி பறி கொடுத்தவர்.
கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது மோடி வந்தால் கருப்பு பலூன் பறக்கவிடுவார்.
அதுவே தான் முதல்வராக இருக்கும்போது மோடி வந்தால் வெள்ளைக்குடையுடன் சென்று வரவேற்பார்.
அது மட்டுமன்றி தன் மகன் உதயநிதிக்கு வாரிசு பதவி வழங்கி மோடியுடன் பேரம் பேசவும் அனுப்பியுள்ளார்.
என்ன இது என்று கேட்டால் கொஞ்சம்கூட வெட்கமின்றி இதுதான் திராவிட மாடல் என்பார்.
அப்படிப்பட்ட கருணாநிதியின் ஸ்டாலினை ரஸ்சிய ஸ்டாலினுடன் ஒப்பிடுகிறார்கள்.
யாருடன் யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தையே இல்லையா?
சீ வெட்கம்!
ஆந்திராவில் தெலுங்கன்
ஆந்திராவில் தெலுங்கன் தன்னை தெலுங்கனாக அடையாளப்படுத்தும்போது
கர்நாடகாவில் கன்னடன் தன்னை கன்னடனாக அடையாளப்படுத்தும்போது
தமிழ்நாட்டில் மட்டும் தமிழன் ஏன் தன்னை திராவிடனாக அடையாளப்படுத்த வேண்டும்?
தமிழனை ஏமாற்றி ஆள்வதற்கா?
ஈழத்து சிவசேனைத்
ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் நிலை என்ன?
தொடர்ந்தும் பாஜக வின் கால்களை நக்கப்போகிறாரா அல்லது நிறுத்தப் போகிறாரா?
யாழ்ப்பாணம் கீரிமலையில்
யாழ்ப்பாணம் கீரிமலையில் புராதன சிவன் கோவில் இடிக்கப்பட்டு சிங்கள ஜனாதிபதிக்கு மாளிகை கட்டப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகள் மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறிய அண்ணாமலை இதற்கு என்ன கூறப்போகிறார்?
இந்துத் தமிழீழம் கேட்டால் இந்தியா உதவும் என்று நம்புபவர்களும் இதற்கு பதில் கூறுவார்களா?
#இந்தியஅரசின் போலி இந்துமுகம்
உபிஸ் ஏன் எப்போதும் புலிகள
(200 ரூபா) உபிஸ் ஏன் எப்போதும் புலிகளை இகழ்வாக விமர்சிக்கின்றனர்?
ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.
உலகம் சர்வதேச மகிளிர் தினம்
உலகம் சர்வதேச மகிளிர் தினம் கொண்டாடுகிறது.
வவுனியாவில் இரண்டு பெண் குழந்தைகள் மலர்வதற்கு முன்னரே கருக்கப்பட்டுள்ளது.
என்னே கொடுமை இது?
தமிழால் வாழ்ந்தவர் பலர்
தமிழால் வாழ்ந்தவர் பலர்
தமிழுக்காக வாழ்ந்தவர் சிலரே
அந்த சிலருள் பாவலேறு பெருஞ்சித்திரனார் ஒருவர்
அவர் இருந்தவேளை அவரின் அருமை தெரியவில்லை
ஆனால் இப்போது அவர் இல்லையே என்று ஏங்க வைக்கிறது.
அதுதான் அவர் சம்பாதித்த சொத்து
தமிழும் தமிழரும் இருக்கும்வரை அவர் பெயரும் உச்சரிக்கப்படும்
பெண்களை கவிதை எழுத வைத்தது திராவிட இயக்கமே என்று வைரமுத்து போல் கூறி பரிசுகளும் பதவிகளும் பெற்றிருக்க முடியும்.
ஆனால் அவரோ ராஜிவ்காந்தி வயிறு வெடித்து சாக வேண்டும் என்று அறம்பாடி சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
ஏன் அவரை திராவிடமும் ஆரியமும் விரும்புவதில்லை என்பது இப்போது புரிகிறதா?
ஒரு அடிமை தனது
“ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்” எனக்கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து அதன் மூலம் ஈழப் போராட்டத்திற்கு உதவியவர் தோழர் தமிழரசன்.
தொடரும் சிறைவாழ்வு
தொடரும் சிறைவாழ்வு
இக் கொடுமைக்கு எப்போதுதான் முடிவு வரும்?
திராவிட முதல்வர் இரக்கம் காட்டுவாரா?
எதிரி உன்னை பாராட்டுகிறான்
எதிரி உன்னை பாராட்டுகிறான் என்றால் நீ அவனுக்கு சோரம் போய் விட்டாய் என்று அர்த்தம்.
எதிரி உன்னை திட்டுகிறான் என்றால் நீ உன் இனத்திற்கு சரியாக இயங்குகிறாய் என்று அர்த்தம்.
சீமான் தன் தமிழ் இனத்திற்கு சரியாக இயங்குகிறார் என்பதை நிரூபித்த எதிரிக்கு நன்றி
பணம் பெற்றுக்கொண்டு அரசியல் புரோக்கர் செய்பவன்கூட தன் பீகாரி இனத்திற்கு விசுவாசமாக இருக்கிறான்.
ஆனால் கடந்த 60 வருடமாக ஆட்சியில் அமர வைத்த தமிழ் இனத்திற்கு விசுவாசமாக திராவிடம் இல்லையே?
தனது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக
தனது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக 1990ல் சிறப்புமுகாமை ஆரம்பித்து அதில் அப்பாவி அகதிகளை அடைத்தவர் கலைஞர்.
ஆனால் ஈழத் தமிழருக்காக ஆட்சியை இழந்தவர் கலைஞர் என்று திராவிடம் உருட்டுகிறது.
கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாம் இன்றும் தொடர்கிறது. அதை மூடுவதற்கு திராவிட முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார்.
இன்று 2215வது நாள்
•இன்று 2215வது நாள் (12.03.2023)
காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடி தாயக தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.
ஆயுதம் தூக்கினால் பயங்கரவாதம் என்றவர்கள் அகிம்சை வழியில் 2215 வது நாளாக போராடும் இந்த தாய்மாருக்கு அளித்த பதில் என்ன?
தொடரும் உண்ணாவிரதம்
தொடரும் உண்ணாவிரதம்
ஒரு அதிகாரிகூட இன்னும் பதில் அளிக்கவில்லை
அகதி என்றால் ஏன் என்று கேட்க யாருமற்ற அனாதையா?
வட மாநிலத்தவர் மீது இரக்கம் காட்டும் திராவிட முதல்வர்
ஈழத் தமிழ் அகதிகள் மீது இரக்கம் காட்ட மறுப்பது ஏன்?
நிருபர்- சார் ! சிறப்புமுகாமை
நிருபர்- சார் ! சிறப்புமுகாமை எப்போது மூடுவீர்கள்?
தமிழக முதல்வர் - அகதிகள் இனி ஏதிலிகள் என்று அழைக்கப்படுவர்
நிருபர் - சார்! சிறப்புமுகாம்அகதிகளை எப்போது விடுதலை செய்வீர்கள்?
தமிழக முதல்வர் - அகதிகள் முகாம் இனி ஏதிலிகள் முகாம் என்று அழைக்கப்படும்.
நிருபர்- யோவ் நீ என்ன லூசா?
தமிழ் இனி மெல்ல
தமிழ் இனி மெல்ல சாகும் என்றார்கள்
ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அந்த வரிகளை பொய்யாக்கி வருகின்றனர்.
தமிழ் வாழும் என்ற நம்பிக்கையை தந்துகொண்டிருக்கின்றனர்.
மாபெரும் ஆசான் தோழர்
• மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள்
மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார்.
கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது.
பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது.
இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது.
இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது.
நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.
இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன.
மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு
உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன
“உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும் - லெனின்
மனிதனால் ஒரு புழுவைக்கூட உருவாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுள்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.
ஒரு பாடசாலையை உருவாக்கினால் அதில் ஆயிரம் ஆயிரம் கல்விமான்கள் உருவாகுவார்கள்.
ஆனால் ஒரு கோயில் கட்டினால் அதன் முன் ஆயிரம் பிச்சைக்காரர்கள்தான் உட்காருவார்கள்.
படம் - ஆனையிறவில் நிறுவப்பட்டுள்ள நடராஜர்
சட்ட விரோதமாக சிறிய
சட்ட விரோதமாக சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடந்து பிரித்தானிய கரைகளில் இறங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல எற்கனவே பத்து லட்சத்திற்கு அதிகமான இந்தியர்கள் பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர்.
பிரித்தானியாவில் மட்டுமல்ல அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் எல்லாம் ஈழத் தமிழரைவிட இந்தியர்களே அதிக அளவில் குடியேறுகின்றனர்.
இந்த விபரம் எதுவும் தெரியாமல் ஈழத் தமிழரை கள்ளத்தோணிகள் என்றும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறும் ஆரியத்தையும் திராவிடத்தையும் என்னவென்று அழைப்பது?
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் வரம் என்பார்கள். அது எனக்கு நிறையவே கிடைத்து வருவது மகிழ்ச்சியே.
ஒரு நாட்டில் போராடும்
ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக இன்னொரு நாட்டில் வாழும் அதே இனம் தீக்குளித்து மரணிப்பது என்பது ஒரு அதிசய வரலாறுதான்.
அந்த அதிசய வரலாற்றை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தாய் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள்.
அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 16 பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர்.
2009ல் இதே நாளில் (17.03.2009) ஈழத் தமிழருக்கு ஆதரவாக யுத்தம் நிறுத்தம் கோரி இருவர் தீக்குளித்து மரணம் அடைந்தார்கள்.
ஒருவர் அரியலூரைச் சேர்ந்த ராசசேகர். இன்னொருவர் கடலூரைச் சேர்ந்த நா. ஆனந்து.
இவர்களுடைய தியாகம் மறக்க முடியாதது. ஈழத் தமிழர்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியது.
ஆனால் இவர்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிர் தியாகம் செய்தும் யுத்தம் நிறுத்தப்படவில்லை.
இவர்களது போராட்டத்திற்கோ அல்லது உயிர் தியாகத்திற்கோ இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை.
8 கோடி தமிழர் அருகில் இருந்தும் வெறும் இரண்டு கோடி பேர் கொண்ட சிங்கள அரசு அஞ்சவில்லை
அதற்கு ஓரே காரணம் அந்த 8 கோடி தமிழரிடம் அதிகாரம் இல்லை.
மாறாக 8 கோடி தமிழரும் அடிமையாக இருப்பதால்தான் இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை.
சரி. அப்படியென்றால் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்.
இதை நான் கூறுவதாக கருத வேண்டாம். தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து போராட்டம் நடத்திய தோழர் தமிழரசன் கூறியிருக்கிறார்.
யாரோ ஒரு எம்எல்.ஏ
யாரோ ஒரு எம்எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி என அறிந்தேன். அப்புறம் அது இவிகேஎஸ்.இளங்கோவன் என அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன் என எழுத விருப்பம். ஆனால் அது தமிழர் மரபு இல்லை என்பதால் தவிர்த்துவிட்டேன்.
ஆயுதம் ஏந்திப் போராடுவதை
ஆயுதம் ஏந்திப் போராடுவதை “பயங்கரவாதம்” என்று கூறிய காந்திதேசம் என்னும் இந்தியாவின் அரசு, அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்திற்கு அளித்த பதில் அல்லது மதிப்பு என்ன?
இலங்கையின் உண்மையான நண்பன்
இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்று சிங்கள அரசின் தூதுவர் கூறுகின்றார்.
இலங்கை அரசை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்று இந்திய அரசின் வெளியுறவு அமைச்சர் கூறுகின்றார்.
ஆனால் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று காசி அனந்தன் கூறுகின்றார்.
என்னே அறிவு?
ஈழத் தமிழருக்காக தமிழ்நாட்டில்
ஈழத் தமிழருக்காக தமிழ்நாட்டில் 2009ல் உயிர் நீத்த 16 உறவுகளையும் நாம் நினைவு கூர்வது திமுக வினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் எரிச்சல் கொடுக்கிறது.
ஏனெனில் அவர்களின் துரோகத்தையும் கூடவே அது நினைவூட்டுகிறது அல்லவா.
15 வருடம் சிறை வாழ்வை
15 வருடம் சிறை வாழ்வை அனுபவித்த தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மீதமுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்?
தேர்தல் குறித்து அக்கறை கொள்ளும் தமிழ் அரசியல் தலைவர்கள் இவர்களின் விடுதலைக்கு அக்கறை காட்டுவார்களா?
சீமானை ஏன் ஈழத் தமிழர்
சீமானை ஏன் ஈழத் தமிழர் ஆதரிக்கின்றனர் என கேட்கும் உபிஸ்களுக்கு
ஈழத் தமிழரை சிறப்புமுகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கும் சீமானை ஆதரிக்காமல் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் திராவிட முதல்வர் ஸ்டாலினைiயா ஆதரிக்க முடியும்?
கோழியை வறுத்து திங்க
கோழியை வறுத்து திங்க ஆசைபட்டவன் மேய்ந்து கொண்டிருக்கும் கோழியை பிடிக்க "பே..பே" என கோழியின் குரலில்தான் குரல் எழுப்புவான்
"ஆஹா! நம் மொழியில் பேசுறானே" என கோழி நினைத்தால் கோழிக்கு எண்ணெய் சட்டிதான் கதி
சீன திட்டங்களில் தமிழ் இருக்கிறது என மயங்கினால் கோழியின் கதிதான் தமிழனுக்கும்
கைபர் கணவாய் வழியாக
கைபர் கணவாய் வழியாக வந்தவன் வாழலாம். ஒங்கோலில் இருந்து வந்தவனும் வாழலாம். ஆனால் ஈழத்தில் இருந்து வந்த தொப்புள்கொடி உறவு வாழமுடியாது .
மஞ்சள் பையுடன் ரயிலில் வந்தவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் தமிழனை சிறையில் அடைக்கிறார்கள்
எப்படித்தான் மறப்பது
எப்படித்தான் மறப்பது
எதை எதைத்தான் மறப்பது
எரிகொண்டு தனலாய் உடல்கள்
எரிந்து சாம்பலானது
ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக
ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக யுத்த நிறுத்தம்கோரி தமிழ்நாட்டில் நெற்குன்றம் விக்ரம் தீக்குளித்து மரணித்த நாள் 21.03.2009ஆகும் .
இந்தியஅரசு அகிம்சைப் போராட்டங்களை மதிக்காது என்பது மட்டுமன்றி தமிழர்களுக்கு உதவாது என்பதற்கும் இவரது மரணம் ஒரு உதாரணமாக வரலாற்றில் இடம்பெறும்.
எங்களைப்போல் தமது
எங்களைப்போல் தமது விடுதலைக்காக போராடும் ஒரு இனம்.
அதுமட்டுமல்ல எமது போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கிவரும் இனம்.
பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தொடரும் அவர்கள் போராட்டம் வெல்லட்டும்.
குர்து இன மக்கள் விடுதலை பெற எமது வாழ்த்துகள்!
அவர்களின் ஆண்டு பிறப்பு 20.03.23
ஈழத்தமிழர்களுக்காக
ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் 14வது நினைவு நாள் 22.03.2023
இவ்வாறு 16 பேர் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உயிர் தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் வாழும்
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்களாகி விட்டனர், அவர்களை தெலுங்கர்கள் என கூறக்கூடாது என்கிறார்கள்.
அப்படியாயின் அந்த தெலுங்கர்களுக்காக ஏன் தெலுங்கு புதுவருடத்திற்கு விடுமுறை விட வேண்டும்?
சரி. ஆந்திராவில் ஏன் தமிழருக்கு புதுவருடத்திற்கு விடுமுறை விடுவதில்லை?
இதைக்கேட்டால் தமிழ் இனவெறி என்கிறார்கள்.
#திராவிட உருட்டு
வெள்ளைக்கார அரசை விரட்ட
வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர்.
நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம்.
நினைவு கூர்வோம்!
நினைவு கூர்வோம்!
தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன், சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் மார்ச் - 23 ஆகும்.
இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும்.
இது உறுதி.
தமிழர்களது தேசம்
தமிழர்களது தேசம் சிங்கள மயமாகிறது என்பதை
இப்போதுதான் அறிகிறாரா என்று எரிச்சல்படுவதா? அல்லது
இப்போதாவது அறிகிறாரே என்று ஆறுதல் படுவதா?
மகிந்த ராஜபக்சாவை தேசிய தலைவர் என்று அழைத்த போதும்
ரணில் உடன் சேர்ந்து சிங்கக்கொடியை தூக்க ஆட்டிய போதும்
தமிழர்களது தேசம் சிங்கள மயமாவது தெரியவில்லையா?
மான உணர்வு உள்ள எவனும் ஒரு இறைச்சித்துண்டிற்காக நாயாக மாற மாட்டான் என்பது வியட்நாம் பழமொழி.
கேவலம் சொகுசு பங்களாவுக்கும் பதவிக்காகவும் இத்தனை நாளும் பேசாமல் இருந்துவிட்டு இப்ப எதற்கு இந்த அறிக்கை?
அவர்களின் வலியை
அவர்களின் வலியை எம்மால் உணர முடிகிறது.
அவர்களுக்கு எமது ஆதரவை தெரிவிப்போம்.
தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா – தோழர் தமிழரசன்
உண்மையில் இந்த செய்தி
உண்மையில் இந்த செய்தி கவலை தருகிறது.
இந்த மனிதர் எப்படி ஒரு சிறுவன் மரணம் தனக்கு மகிழ்வைத் தருகிறது என்று கூறினார்?
நலமாக இருக்கிறார்
நலமாக இருக்கிறார் என்ற மருத்துவமனை செய்தி ஆறுதல் தருகிறது.
ஆனால் இது ஜெயா அம்மையார் இட்லி சாப்பிட்டார் என்ற செய்திபோல் இல்லைதானே?
ஏனெனில் கொரோனோ மாறினாலும் அதனால் ஏற்படும் சளி இதயநேயாளிகளுக்கு மரண ஆபத்தை தரக்கூடியது என்கிறார்கள்.
நாதியற்றவனாக இருக்கிறேன்
"நாதியற்றவனாக இருக்கிறேன்...
புகலிடக் கோரிக்கைகள் எதுவும்
ஏற்றுக் கொள்ளப்படவில்லை!
இதயம் இருக்குமாயின் இடம் கொடுங்கள்
இறப்பதற்கு முன் வாழ்ந்துவிட்டு போகிறேன்.
ஒரு நாளாவது (இந்திய) குடிமகனாக!"
-விக்டர் செ
இந்த ஈழ அகதியின் குரல்
திராவிட முதல்வரின் செவிக்கு எட்டுமா?
இன்னொரு இனத்தின் சுதந்திரத்தை
“ இன்னொரு இனத்தின் சுதந்திரத்தை மறுக்கும் எந்த இனமும் தான் சுதந்திரத்தை ஒருபோதும் அனுபவிக்க முடியாது”.
இலங்கையில் சிங்கள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமெனில் அவர்கள் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தையும் அமைதியையும் வழங்க வேண்டும்
வாழ்த்துக்கள்
•வாழ்த்துக்கள்
ஆஸ்கர் பரிசை வாங்கிவிட முடியும்
ஆனால் இந்த சிரிப்பை ?
ஆஸ்கர் விருதுடன் பொம்மன் மற்றும் பெள்ளி
கலைஞர் சர்க்காரியா ஊழலில்
கலைஞர் சர்க்காரியா ஊழலில் மாட்டுப்பட்டு இருந்தவேளை அவருக்காக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஜி.ஜி.பொன்னம்பலம். அதுவும் ஒரு பைசா பணம் பெறாமல் வாதாடிக் கொடுத்தார். அவர் ஒரு ஈழத் தமிழர் என்பது (200 ரூபா) உடன்பிறப்புகளுக்கு தெரியுமா?
கச்சதீவை சிஙகள அரசுக்கு
கச்சதீவை சிஙகள அரசுக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கியவர்கள் இந்திரா காந்தியும் கருணாநிதியும்.
அந்த கச்சதீவில் ஒப்பந்தத்திற்கு மாறாக புத்தர் சிலையை வைத்து விகாரை கட்ட சிங்கள அரசு முயல்கிறது.
இதை தமிழக முதல்வரும் இந்திய பிரதமரும் கண்டிப்பார்களா? அல்லது வழக்கம்போல் சிங்கள அரசுக்கு உதவிகள் வழங்குவார்களா?
வன்மையான கண்டனங்கள்
•வன்மையான கண்டனங்கள்
சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திராவிட முதல்வர்,
வாக்குறுதி அளித்தபடி விடுதலை செய்யாதது மட்டுமன்றி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி கோரியோர் மீது வழக்கு பதிவு செய்கிறார்.
#திராவிட உருட்டு
ஒருபுறம் வடக்கு கிழக்கு பகுதிகள்
ஒருபுறம் வடக்கு கிழக்கு பகுதிகள் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அண்ணாமலை கூறுகின்றார்.
மறுபுறம் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் உள்ள இந்து கோவிலையும் இந்து சாமி சிiலைகளையும் இடித்து உடைத்துவிட்டு புத்த விகாரை கட்டுகிறது.
உலகில் எந்த மூலையில் இந்து கோவில் தாக்கப்பட்டாலும் கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இதுவரை சிங்கள அரசுக்கு கண்டனம் தெரிவித்ததில்லை.
மாறாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து கடன் வழங்கி உதவி வருகிறது.
அப்படியென்றால் தமிழின அழிப்பை சிங்கள அரசும் இந்திய அரசும் சேர்ந்து மேற்கொள்கின்றன என்றுதானே அர்த்தம்.
இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் போன்றவர்கள் இது பற்றி என்ன கூறப்போகிறார்கள்?
இந்திய அரசு உதவும் என்று நம்புவர்கள் இனியாவது இந்திய அரசை இனங் காணுவார்களா?
இந்த ஈழத்து சிவசேனைத் தலைவர்
இந்த ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்,
கிருத்தவ பால் தினகரன் வந்தால் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்புவார்.
ஆனால் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்பட்டால் கண்டு கொள்ள மாட்டார்.
அதைவிட புத்த பிக்கு உட்கார தன் வெட்டியை உரிந்து கொடுத்துவிட்டு ஜட்டியுடன் உட்கார்ந்து இருப்பார்.
இப்போது புரிகிறதா இந்தியாவில் இருந்த இவரை ஏன் இந்திய உளவுப்படை ஈழத்திற்கு அனுப்பி வைத்தது என்று?
சம்பந்த தேரர்
சம்பந்த தேரர்
மகிந்த ராஜபக்சாவை “தேசிய தலைவர்” என்பார்
ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடியை தூக்கிப் பிடிப்பார்
அதைவிட, இலங்கை பௌத்தநாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எமக்கு போதிப்பார்.
ஆனால் தமிழ் பகுதிகளில் உள்ள கோவில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுவதை கண்டுக்க மாட்டார்.
அவரது சொந்த தொகுதியில் உள்ள கண்ணியா வெந்நீர் ஊற்று சிங்கள மயமாக்கப்படுவதைக்கூட கண்டிக்க மாட்டார்.
அவரது இலட்சியமெல்லாம் சாகும்வரையில் பதவி வேண்டும். சொகுசு பங்களா வேண்டும். சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்.
அவரது இந்த இலட்சியத்தை சிறந்த சாணக்கியம் என்று பாராட்டி அவருக்கு “வாழும் வீரர்” என்று பட்டம் வேறு.
இப்படியிருந்தால் தமிழ் இனம் எப்படி உருப்படும் ?
ஒருவர் ஈழம் சிவபூமி
ஒருவர் ஈழம் சிவபூமி என்று குரைப்பார்
மற்றவர் கோவிலை இடித்துவிட்டு டாய்லெட் கட்ட வேண்டும் என்று குரைப்பார்.
ஆனால் இரண்டுபேருக்கும் பிஸ்கட் போடுபவர் ஒரு எஜமானே.
எனவே எஜமானுக்கு விசுவாசமாக வாலாட்டுவார்கள்.
செய்தி – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர்
செய்தி – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. முதலில் தொல்பொருள் திணைக்களம் “தொல்பொருள் பாதுகாப்பு" என இந்துக்கள் இக் கோவிலுக்குள் போவதை தடுத்தது. இப்போ இந்த ராணுவ பாதுகாப்புவலயத்தில் இது. இந்த பேரினவாதம் உடன் நிறுத்தப்பட வேண்டும் - மனோ கணேசன்
சமஸ்கிருத மொழியிலோ
சமஸ்கிருத மொழியிலோ அல்லது இந்தி மொழியிலோ வள்ளுவருக்கு இணையான புகழ் கொண்ட அறிஞர் இல்லை.
எனவேதான் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வள்ளுவரை இந்துவாக அடையாளப்படுத்த யாழ் இந்திய தூதர் முனைகிறார்.
இந்திய தூதரின் இந்த சூழ்ச்சிக்கு சில யாழ் தமிழ் அறிஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை போகிறார்கள்.
தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின்
"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 29ம் ஆண்டு நினவு நாள் 29.03.2023 ஆகும்.
19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார்.
தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின்.
தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார்.
தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார்.
தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார்.
தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும்.
தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
குறிப்பு- தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது . இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2016/03/blog-post_33.html
கச்சதீவில் சிங்கள அரசின் பௌத்த
கச்சதீவில் சிங்கள அரசின் பௌத்த மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்கு திருமா அவர்களுக்கு நன்றி.
ஆனால் இது வெறும் மத கலவர விடயம் இல்லை. இலங்கையில் பௌத்த மதம் தமிழ் இன அழிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்து முன்னணி அர்சுனன் சம்பத்
இந்து முன்னணி அர்சுனன் சம்பத் வந்து இந்துப் பிரச்சாரம் செய்யலாம். கிருத்தவ பால் தினகரன் வந்து மத போதனை செய்யக்கூடாதா?
இது என்ன நியாயம்?
டில்லியில் சீக்கிய விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு உதவினார் என்ற கோபத்தில் பிரதமர் மோடி தனது யாழ் இந்திய தூதர் மூலம் பால் தினகரனை பழி வாங்கிறாரா?
அதற்கு ஈழத்து சிவசேனைத் தலைவர் துணை போகிறாரா?
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு
“எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஓடினான்
திருடன் திருடன் என்று நான் கத்தினேன்
அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக என்னை கைது செய்துவிட்டார்கள்”
– கவிக்கோ அப்துல் ரகுமான்
பொலிஸ் அரசின் வன்முறைக்கருவி-
பொலிஸ் அரசின் வன்முறைக்கருவி- காரல் மார்க்ஸ்
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளின் பல்லைப் பிடுங்கும் தைரியம் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கு இருக்கா?
பொலிஸ் அரசைப் பாதுகாக்கும்
அரசு பொலிஸைப் பாதுகாக்கும்
பொலிஸ் இராணுவம் துப்பாக்கி இல்லையேல் அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கா
சென்னைக்கு மிக அருகில்
சென்னைக்கு மிக அருகில் நான்கு பக்கமும் கடலாலும் கடனாலும் சூழப்பட்டுள்ள 65610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு காணி விற்பனைக்கு உண்டு. விமான நிலையத்திலேயே இந்தி, சீன அறிவிப்பு பலகைகள் உண்டு.
பாகிஸ்தானில் , இங்கிலாந்தில் இந்து ஆலயங்கள்
பாகிஸ்தானில் , இங்கிலாந்தில் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் கடும் கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு, இலங்கையில் சிங்கள அரசு இந்து ஆலயங்களை அழிக்கும்போது என்ன நடவடிக்கை எடுக்கின்றது?
தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி வழங்க பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதுதான் இந்திய அரசின் இந்து முகம்!
1983க்கு முன்னர் தலைமன்னாரில் இருந்த
1983க்கு முன்னர் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கப்பல் போக்குவரத்து இருந்தது.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தப்படி தாயகம் திரும்பும் மலையக தமிழருக்கு அது பயன்பட்டது.
இப்போது நீண்ட காலத்தின் பின்னர் காங்கேசன்துறை காரைக்கால் கப்பற்சேவை ஆரம்பிக்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கு இது பயன்பட வேண்டும்.
அவ்வாறு விரும்பும் அகதிகளுக்கு பயண செலவு உட்பட அவர்கள் மீள் குடியேற்றம் செய்வதற்குரிய உதவிகளையும் இந்திய அரசு வழங்க வேண்டும்.
இலங்கை இந்திய அரசுகள் என்ன நோக்கத்தில் விமான போக்குவரத்தை அடுத்து இந்த கப்பல் போக்குவரத்தையும் ஆரம்பிக்கின்றது என்று தெரியவில்லை.
ஆனால் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் இதனை பயன்படுத்தி தமக்கிடையே ஒரு நெருக்கமான ஜக்கியம் ஏற்படுத்த வேண்டும்.
ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற தமிழ்த் தேசியத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
பாஜக கூட்டணியில் இருந்தாலும்
பாஜக கூட்டணியில் இருந்தாலும் கச்சதீவில் சிங்கள அரசின் பௌத்த மயமாக்கலுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நன்றியும் பாராட்டுகளும்.
ஆனால் திராவிட முதல்வர் ஏன் இன்னும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார்?
கலைஞர் ஆட்சியில் கச்சதீவு சிங்கள அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதை யாராவது கேட்டுவிடுவார்களோ என்று அச்சப்படுகிறாரா?
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஹரியானா சென்று அங்குள்ளவர்களின் பல்லை பிடுங்கிவிட்டு அது வெளியில தெரிந்தவுடன் அவர்களை மீண்டும் அடித்து தாமாக விழுந்து பல் உடைந்து விட்டது என்று கூற வைக்க முடியுமா?
ஆனால் ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரால் தமிழ்நாட்டில் வந்து இப்படி செய்ய முடியும்.
ஏனெனில் தமிழ்நாட்டில் தமிழனை ஆள்வது தமிழன் இல்லையே?
ஒருபுறம் சிங்கள அரசு
ஒருபுறம் சிங்கள அரசு
மறுபுறம் யாழ் இந்திய தூதரின் ஏஜெண்டுகள்
எத்தனை தடைகள் எத்தனை சூழ்ச்சிகள்
அத்தனையும் தாண்டி தமிழினம் போராடுகிறது.
ஏனெனில் ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது.
Subscribe to:
Posts (Atom)