Saturday, March 30, 2019

•இந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்!

•இந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது
ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்!
சிங்களவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லை. ஆனால் தமிழர்களே இந்தியாவுக்கு பூரண விசுவாசமாக இருக்கிறார்கள். இதனை இந்தியா புரிந்து ஈழத் தமிழருக்கு உதவ வேண்டும் என சிலர் நினைக்கின்றனர்.
இந்தியாவில் ஏழு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தொப்புள்கொடி உறவுகளே ஈழத் தமிழர்கள். எனவே இதனை இந்தியா புரிந்து கொண்டு ஈழத் தமிழருக்கு உதவ வேண்டும் என இன்னும் சிலர் விரும்புகின்றனர்.
ஈழத் தமிழர்கள் இந்துக்கள். எனவே ஈழத் தமிழர்கள் “இந்து தமிழீழம்” கேட்டால் இந்தியா அதனை புரிந்துகொண்டு உதவும் என வேறு சிலர் நம்புகின்றனர்.
இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது. எனவே ஈழத் தமிழரே தமது உண்மையான பாதுகாப்பு என்பதை இந்தியா புரிந்துகொண்டு உதவும் என சிலர் ஆய்வு கட்டுரைகள் எழுதுகின்றனர்.
இந்தியாவை பயன்படுத்த நினைத்தனர் ஈழத் தமிழ் தலைவர்கள். ஆனால் அவர்களை பயன்படுத்திக்கொண்டது முழு இலங்கையையும் ஆக்கிரமித்துவிட்டது இந்தியா.
ஆனாலும் இன்றும்கூட இந்தியா புரிந்துகொண்டு உதவும் என இத் தமிழ் தலைவர்கள் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஆனால் இந்தியாவை பணிய வைக்க முடியும்.
தமிழர்கள் அனைவரும் ஒருமித்து இந்தியாவுக்கு எதிராக போராடுவதன் மூலம் இந்தியாவை பணிய வைக்க முடியும்.
கடந்த வருடத்தில் இந்திய அரசுக்கு எதிராக அதிக போராட்டம் நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடுதான்.
சுமார் பன்னிரண்டாயிரம் போராட்டங்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.
இது இப்போது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளின் கவனத்தையும் பெற ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு அம்சமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீசிய அணுகுண்டு.
“புலிகள் அநீதிக்கு எதிராகவே தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள்” என்று அவர் வீசிய இக் குண்டு நிச்சயம் பெரிய விளைவுகளை எற்படுத்தப் போகிறது.
இம்ரான்கான் தமிழ் மக்கள் மீது உண்மையான பரிவு கொண்டவரல்ல. அதுமட்டுமல்ல அவர் தனது நாட்டில் பல இனங்களின் போராட்டத்தையே அடக்கிக்கொண்டு இருக்கிறார்.
ஆனாலும் அவர் தமிழருக்கும் இந்திய அரசுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை கவனத்தில் எடுத்திருக்கின்றார் என்பதையே அவரது புலி பற்றிய பேச்சு காட்டுகின்றது.
புலிகளின் போராட்டத்தைப் பற்றி முதன் முதலாக ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது தமிழரின் பிரச்சனையை உலகில் யாருமே கவனத்தில் கொள்ள மாட்டார்கள் என்று இறுமாப்பாக இருந்த இந்திய அரசுக்கு விழுந்த பெரிய அடியே..

•இவர்கள் ஊடகங்களா? அல்லது மோடிக்கு கூட்டிக் கொடுக்கும் “மாமா”க்களா?

•இவர்கள் ஊடகங்களா? அல்லது
மோடிக்கு கூட்டிக் கொடுக்கும் “மாமா”க்களா?
பிடிபட்டவுடன் தமிழக விமானி என்றார்கள்.
விடுதலையானவுடன் இந்திய விமானி என்கிறார்கள்.
தமிழனும் இந்தியன்தான் என்றால்
இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவுடன்
தமிழக மீனவன் பலி என்று ஏன் போடுகின்றனர்?
இவர்கள் ஊடகங்கள் இல்லை.
இவர்கள் மோடிக்கு கூட்டிக் கொடுக்கும் மாமாக்கள்
.
தமிழா!
நீ 300 வருடமாகத்தான் இந்தியன்
ஆனால் 3000 வருடங்களுக்கு மேலாக தமிழன் என்பதை
இனியாவது உணர்ந்து கொள்.

காணவில்லை?

காணவில்லை?
போர் வந்தால் சொல்லி அனுப்புங்கள் என்றாரே
தற்போது போர் முனையில் இருக்கிறாரா?
அல்லது அடுத்த பட சூட்டிங்கில் இருக்கிறாரா?
யாராவது கண்டீர்களா இந்த வருங்கால தமிழக முதலமைச்சரை?
மோடி அபிநந்துவிற்கு பதிலாக இவரை அனுப்பியிருந்தால்
பாகிஸ்தானை தனி அளாக நின்று துவம்சம் செய்துவிட்டு
இம்ரான்கானையே கட்டி இழுத்து வந்திருப்பாரே?
குறிப்பு – தமிழிசையின் ஆலோசனைக்கு இணங்க விஜயகாந்தை மோடி தன் அணியில் சேர்க்கிறார் என்பதை அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இன்ரான்கான் பயத்தில் விமானியை விடுதலை செய்ததாக தினமலம் பத்திரிகை கூறுகிறதாமே. இது உண்மையா நண்பர்களே?😃

மோடியே திரும்பி போ ! (GO BACK MODI )

மோடியே திரும்பி போ ! (GO BACK MODI )
காவிக் கூட்டத்தை அடித்து விரட்டும் காட்சி
தமிழகத்தில் மட்டுமே நடக்கும் அற்புத காட்சி
இனி இந்தியா முழுவதும் அரங்கேறப் போகும் காட்சி
இன்று கன்னியாகுமரி
நாளை இந்தியா முழுவதும்

•லண்டனில் நடைபெற்ற பெண்கள் தின விழா!

•லண்டனில் நடைபெற்ற பெண்கள் தின விழா!
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களால் பெண்களுக்காக நடைபெற்ற பெண்கள்தின விழா.
முதன் முதலாக கிழக்கு லண்டன் தமிழ் பெண்கள் இவ் பெண்கள் விழாவை நடத்தியுள்ளனர்.
ஆரோக்கியமான ஒரு நிகழ்வு. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு.

இவர் ஒரு ஈழத்து தமிழ்பெண்

இவர் ஒரு ஈழத்து தமிழ்பெண்
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட சமூகத்தில்
துப்பாக்கி ஏந்தி போராடப் புறப்பட்ட பெண் இவர்
களத்தில் ஒரு கை போனவுடன் அவர் துவண்டு இருந்துவிடவில்லை
மறு கையுடன் களத்தில் அதே துப்பாக்கியை ஏந்தி நின்றார்
இந்த அர்ப்பணிப்புதான் ஈழத் தமிழர் போராட்டத்தை உலகறிய வைத்தது.
இன்று இம்ரான்கான் ஈழத் தமிழர் போராட்டம் பற்றி பேசியது ஆச்சரியம் இல்லை.
மாறாக அவர் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம்
.
இனி ஒவ்வொருவராக உலகம் பேச ஆரம்பிக்கும்.
பேச வைப்போம்!
மாண்ட போராளிகளை விட அதிக தூரத்தை நாம் பார்ப்போம்
ஏனெனில் மாண்ட போராளிகள் தங்கள் தோள்களில் அல்லவா எம்மை தாங்கி நிற்கிறார்கள்.

இவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள்

இவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள்
இவர்கள் போர்க்குற்றம் இழைத்தார்கள் என்றார்கள்
இவர்களுடைய போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் என்றார்கள்.
இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கை ராணுவத்தை விட இவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்றார்கள்.
சரி. அப்படியென்றால் 10 வருடமாக ஏன் இது குறித்து விசாரணை செய்யவில்லை?
உங்கள் கையில்தானே அரசும் அதிகாரமும் இருக்கிறது.
நீங்கள் நினைத்திருந்தால் ஒரு வாரத்தில் இறந்தவர்களின் பட்டியலை திரட்டி வெளியிட்டிருக்கலாமே?
அதில் எத்தனைபேர் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள், எத்தனை பேர் இவர்களால் கொல்லப்பட்டவர்கள் என்ற விபரத்தை காட்டியிருக்கலாமே?
இவர்களிடமிருந்து தமிழ் மக்களை காக்கவே போர் தொடுத்தோம் என்றீர்களே
அப்ப ஏன்டா தேர்தல் வந்தால் இவர்களின் பாட்டை போட்டு வோட்டு கேட்கிறீர்கள்?
அப்புறம் என்டா மாவீரர் தினத்தில் விளக்கேற்றி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறீர்கள்?
போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்.

•தொடரும் சிறப்புமுகாம் சித்திரவதைகள்!

•தொடரும் சிறப்புமுகாம் சித்திரவதைகள்!
தன்னை விடுதலை செய்யுமாறு கோரி ஈழ அகதி ஒருவர் சிறப்புமுகாமில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இலங்கையில் போர் முடிந்து பத்து வருடங்களாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் சிறப்புமுகாம் மூடப்படவில்லை.
எதிரி நாட்டில் எல்லைதாண்டி குண்டு போடச் சென்ற அபிநந்தனைக்கூட மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியவர்கள் இந்த சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதில்லை.
இந்த சட்டவிரோத சித்திரவதை முகாம் இன்னும் எத்தனை வருடங்கள் தமிழகத்தில் இருக்கப் போகின்றது?
இதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி ஈழஅகதிகள் எப்போது விடுதலை செய்யப்படப் போகிறார்கள்?
1990ம் ஆண்டு சிறப்புமுகாமை ஆரம்பித்த கலைஞர் கருணாநிதியும் மரணமடைந்துவிட்டார்.
பல சிறப்புமுகாம்களை உருவாக்கி அதில் பல ஈழ அகதிகளை அடைத்த ஜெயா அம்மையாரும் மரணமடைந்துவிட்டார்.
ஆனால் சிறப்புமுகாம் எனப்படும் இச் சித்திரவதைமுகாம் இன்னும் மூடப்பட வில்லை.
இவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை. ஏனெனில் இவர்கள் அகதிகள் மட்டுமல்ல தமிழ் இனமாகவும் பிறந்துவிட்டார்கள்.

•அப்பாவி அகதியும் ஐபிசி முதலாளியும்

•அப்பாவி அகதியும் ஐபிசி முதலாளியும்
அப்பாவி அகதி – ஐயா வணக்கம். நான் திருச்சியில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை விடுதலை செய்யுமாறு கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.
ஐபிசி முதலாளி – ஓ! அப்படியா? சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
அப்பாவி அகதி – என்னுடைய கையில் ஐபிசி ஊடகம் இருந்திருந்தால் பத்தாயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் காப்பாற்றியிருப்பேன் என்று கனடாவில நீங்கள் பேசினதை அறிந்தேன். அப்படியென்றால் எனக்காகவும் கொஞ்சம் குரல் கொடுக்க முடியுமா?
ஐபிசி முதலாளி – எனக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று விருப்பம்தான் தம்பி. ஆனால் அப்பறம் இந்திய உளவுப்படைகாரங்கள் கோவிப்பாங்களே. அதுதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.
அப்பாவி அகதி – என்ன ஐயா! நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தனீங்கள். அகதிகளுக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாதா?
ஐபிசி முதலாளி- தம்பி நான் ஒரு முதலாளி என்பதை நீர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். போட்ட பணத்தை எப்படி இரட்டி மடங்காக எடுக்கலாம் என்றுதான் நான் பார்ப்பேன். அகதிகளுக்கு உதவுவதால் எனக்கு என்ன லாபம்?
அப்பாவி அகதி – என்ன ஐயா இப்படி பேசறீங்க? வன்னியில் உள்ள முன்னாள் போராளிகளை எல்லாம் சந்தித்து உதவி வருகிறீர்கள் என்று கூறுகிறார்களே?
ஐபிசி முதலாளி – அது எனக்கு தரப்பட்ட அஜெண்டா தம்பி. தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காக குழப்புறவேலை எனக்கு தரப்பட்டிருக்கு.
அப்பாவி அகதி – என்ன ஐயா! உங்களின் ஊடகத்தை தமிழ் தேசிய ஊடகம் என்கிறாங்களே?
ஐபிசி முதலாளி – தேசிய ஊடகமும் இல்லை. தேசிக்காய் ஊடகமும் இல்லை. அதெல்லாம் என்னை வைத்து பிழைப்பதற்கு என்கூட இருக்கிறவங்கள் கட்டி விடுகிற கதைகள்.
அப்பாவி அகதி – சரி ஐயா. ஒரு சின்ன வேண்டுகோள். உங்களை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக என்ரை மகள் காப்பிலியுடன் ஓடிவிட்டாள் என்று வீடீயோ மட்டும் போட்டிடாதையுங்கோ.
ஐபிசி முதலாளி – சரி சரி பார்க்கலாம்.
(யாவும் கற்பனை)

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.
தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் இன்று ஆகும்.(04.03.2019)
புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர்.
தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர்.
அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார்.
வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை.
தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும்.

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும்.
தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை.
அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்.
ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது.
மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.
(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர்.
இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.