•ஏழு தமிழர் விடுதலை
ஏமாற்றுவது அவர்கள் வழக்கமாகிவிட்டது
ஏமாறுவது மக்கள் பழக்கமாகி விட்டதா?
ஏமாற்றுவது அவர்கள் வழக்கமாகிவிட்டது
ஏமாறுவது மக்கள் பழக்கமாகி விட்டதா?
ஏழு தமிழர் விடுதலைக்கு மத்திய அரசையும் குடியரசு தலைவரையும் வற்புறுத்துவோம் என்று ஆளும் அதிமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
முதலாவது ஏமாற்று,
தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பின்பு அதன்படி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே மீண்டும் மத்திய அரசையும் குடியரசு தலைவரையும் வற்புறுத்துவோம் என்பது மக்களை ஏமாற்றுவது ஆகும்.

இரண்டாவது ஏமாற்று,
இப்போது ஆட்சியில் இருப்பது அதிமுக கட்சியும் அதன் கூட்டணி கட்சியுமான பாஜக வுமே. எனவே இப்போதே வற்புறுத்தி விடுதலை செய்யலாம்தானே. எதற்கு தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து மக்களை ஏமாற்ற வேண்டும்?
இப்போது ஆட்சியில் இருப்பது அதிமுக கட்சியும் அதன் கூட்டணி கட்சியுமான பாஜக வுமே. எனவே இப்போதே வற்புறுத்தி விடுதலை செய்யலாம்தானே. எதற்கு தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து மக்களை ஏமாற்ற வேண்டும்?
முக்கியமாக,
ஏழு தமிழர் விடுதலையை கோரிக்கையாக வைத்தே கூட்டணியில் சேர்ந்ததாக பாமக கட்சி தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
ஏழு தமிழர் விடுதலையை கோரிக்கையாக வைத்தே கூட்டணியில் சேர்ந்ததாக பாமக கட்சி தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல கடந்த 10 ம் திகதி முன்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது ஏழு தமிழர் விடுதலை இல்லை என்பதை தமிழக அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது.
எனவே தன்னை மானஸ்தனாக கூறிக்கொள்ளும் டாக்டர் ராமதாஸ் என்ன செய்யப் போகிறார்?
கூட்டணியில் இருந்து விலகப் போகிறாரா அல்லது தனக்கு ஏழு தமிழர் விடுதலையை விட பெட்டியும் சீட்டும்தான் முக்கியம் என கூறப் போகிறாரா?
இவர்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களும் தொடர்ந்து இவர்களை நம்பி ஏமாறுகிறார்கள்.
இம்முறையாவது மக்கள் இவர்களுக்கு தகந்த பாடத்தை புகட்டுவார்களா?
No comments:
Post a Comment