Wednesday, December 20, 2023
இந்த வருடம் இதுவரை 1200 பதிவுகள்
இந்த வருடம் இதுவரை 1200 பதிவுகள் செய்துள்ளேன். அதாவது சராசரியாக மாதம் ஒன்றிற்கு நூறு பதிவுகள்.
2013 முதல் முகநூலில் பதிவுகள் செய்கிறேன். மொத்தம் 6393 பதிவுகள்.
அனைத்து பதிவுகளும் என் புளக்கில் உள்ளது. கீழே லிங்க் தந்துள்ளேன். விரும்பியவர்கள் பார்க்கலாம்.
நான் தொடர்ந்து எழுத உதவுபவர்கள், ஊக்கப்படுத்துபவர்கள் அனைவருக்கும் நன்றி.
புத்தாண்டில் சந்திப்போம். வாழ்த்துகளுடன்.
குறிப்பு – என்னை திட்டுபவர்களுக்கான பதில்,
நாய் குரைத்து சந்திரன் தேய்வதில்லை.
நான் பாலச்சந்திரன் தேய்ந்துவிடுவேனா?
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய தேவனும் தேவையில்லை
தண்ணீரில் நடக்கும் இறைவனும் தேவையில்லை
செங்கடலை இரண்டாக பிளந்த ரட்சகரும் தேவையில்லை
மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தெய்வமும் தேவையில்லை
தன் தேவாலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளையாவது செயலிழக்க வைக்கும் கடவுளே தற்போது தேவை.
மாவீரர்களுக்கு அஞ்சலி செய்தமைக்காக
மாவீரர்களுக்கு அஞ்சலி செய்தமைக்காக இரண்டு சிறுமிகளை விசாரணை செய்யும்படி உத்தரவிட்ட சிங்கள ஜனாதிபதி ரணில்,
தனது வெற்றியை மண்ணுக்காக மடிந்த மாவீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறிய சிறுமி கில்மிசாவை பாராட்டியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் சென்று நாட்டுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த அகிலத்திருநாயகிக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை,
தனது காணாமல் ஆக்கப்பட்ட மாமாவுக்காக “கண்டால் வரச்சொல்லுங்கள்” பாடலை பாடிய கில்மிசாவுக்கு கொடுத்துள்ளன சிங்கள ஊடகங்கள்
இதுதான் “மீடியா பவர்” என்பதா?
சுமந்திரன் தம்பிகள் - சேர்!
சுமந்திரன் தம்பிகள் - சேர்! நாங்க இமயமலைப்பிரகடனத்தை ஆதரிக்கனுமா வேண்டாமா? குழப்பாமல் ஒன்றை சொல்லுங்க. முதல்ல, தீர்வின் முதற்படியாக இந்த பிரகடனத்தை ஏற்கலாம் என்டீங்க. அப்புறம் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறீங்க. நாங்க என்னதான் செய்யிறது ?
😂😂
செய்தி – 65 வயதில் அரசியலில் இருந்து
செய்தி – 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கோழிக்கு இரண்டு கால்கள்தான். ஆனால் இதையே நரி சொன்னால் நாம் கோழியின் மூன்றாவது காலை தேட வேண்டும் என்பார்கள்.
அரசியல்வாதிக்கும் ஓய்வு வயதெல்லை தேவைதான். ஆனால் இதை சுமந்திரன் கூறும்போது சந்தேகப்பட வைக்கிறது.
ஏற்கனவே சம்பந்தர் ஐயாவை பதவி விலகும்படி நேரிடையாக கூறினார்.
இப்போதும் தான் 65 வயதில் ஓய்வு பெறுவேன் என்று மறைமுகமாக சம்பந்தர் ஐயாவுக்குதான் கூறுகின்றார்.
ஆனால் எப்படி கூறினாலும் சம்பந்தர் ஐயா சாகும்வரை பதவி விலகப்போவதில்லை.
சுமந்திரன்கூட 65வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது சந்தேகமே.
ஏனெனில் தீர்வு பெற்று தரவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என கடந்த நல்லாட்சி அரசில் சுமந்திரன் கூறியிருந்தார்.
தனது ராஜினாமா கடிதம் தன் சட்டைப்பொக்கற்றில்; இருக்கிறது என்றார்.
தீர்வும் வரவில்லை. கூறியபடி அவரும் இதுவரை ராஜினாமா செய்யவில்லை.
எனவே இப்போது கூறுகின்றபடி 65 வயதில் ஓய்வு பெறுவார் என்று எப்படி நம்புவது?
ராணுவ தளபதி சவேந்திர சில்வா
ராணுவ தளபதி சவேந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என்று அவருக்கு பயண தடை விதித்துள்ளது அமெரிக்கா.
ஆனால் அந்த இனப்படுகொலையாளி சவேந்திரசில்வாவை அழைத்து வரவேற்பளித்து கௌரவப்படுத்தியுள்ளது இந்திய அரசு.
சீனா வந்துவிட்டது. எனவே இந்துத் தமிழீழம் அமைக்க இந்தியா உதவப்போகிறது என்று கூறும் காசி ஆனந்தனோ
அல்லது, அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் அமைத்தவர்களோ
இது குறித்து என்ன கூறப்போகிறார்கள்?
மாபெரும் ஆசான் தோழர் மாவோ
•மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2023)
மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 130வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது.
தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர்.
ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் .
தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர்.
மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர்.
சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை.
சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.
குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின்நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது.
ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன்
ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்
18.12.2023 மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும்.
தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை.
அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும்,
பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும்,
உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும்,
கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும்,
ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள்.
இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்.
ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது.
மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.
(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல.
“ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர்.
இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.
தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2014/12/blog-post_26.html
சிலர் அவர் மார்க்சிய வழியில்
சிலர் அவர் மார்க்சிய வழியில் திறனாய்வு செய்தவர் என்கிறார்கள்.
இன்னும் சிலர் அவர் பெரியாரியத்தை ஆதரித்தவர் என்கிறார்கள
இவ்வாறு இவர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.
அவர் சிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல சிறந்த தமிழ் இன உணர்வாளரும்கூட
அதனால்தான் ஈழத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டபோது அவருக்கு வலித்தது.
ஈழப் படுகொலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதான எனது ஆத்திரம் உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்று கூறினார்.
உறக்கமில்லாமல் கழிந்த அந்த இரவுகள் திரும்ப திரும்ப நினைவுக்கு வருகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றதும் எமக்கு வலித்தது.
எமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட உணர்வைத் தந்தது.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள்.
குறிப்பு - 24.12.2023யன்று தொ.பரமசிவம் அவர்களின் 3வது நினைவு தினம் ஆகும்.
Tuesday, December 19, 2023
வெகு தொலைவில்
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….
- கவிஞர் இன்குலாப்
இன்று 7வது நினைவு தினம் (01.12.2016)
பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக
பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. அப்படியிருந்தும் தமிழர்கள் அந்த மாவீரர்களுக்காக அணிதிரள்கிறார்கள்”
-வெளிநாட்டு ஊடகத்தில்
மாவீரர் பின்னால் தமிழ்மக்கள் இருக்கிறார்கள் என்பது வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிகிறது. இந்திய மற்றும் சிங்கள அரசுகளுக்கு தெரியுதில்லையே?
ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கலையா?
•ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கலையா?
அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் ??
திருமலை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் தந்தையை நினைவுகூர பொலிசார் அனுமதிக்காததை ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
மாவீரரான தன் தந்தையை நிம்மதியாய் நினைவுகூர அடுத்த வருடமாவது வாய்ப்பு ஏற்படுத்தித்தாருங்கள் என கேட்டிருக்கிறார்.
அவர் தனக்கு நிதி உதவி தாருங்கள் என கேட்கவில்லை
அவர் தனக்கு வீடு கட்டித் தாருங்கள் என கேட்கவில்லை
அவர் தனக்கு தீர்வு பெற்று தாருங்கள் என கேட்கவில்லை
அவர் தன் தந்தையை நினைவுகூர வாய்ப்பு எற்படுத்தித்தாருங்கள் என்று மட்டுமே கேட்டுள்ளார்.
அவர் தந்தை சாதாரண மரணம் அடைந்தவர் இல்லை.
தமிழ் இனத்திற்காக போராடி மாவீரர் ஆனவர்.
அவருக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை இல்லையா?
அவரை நினைவுகூர வாய்ப்பு எற்படுத்திக் கொடுப்பது நமது பொறுப்பு அல்லவா.
இவர் சம்பந்தர் ஐயாவின் சொந்த தொகுதியை சேர்ந்தவர்.
மாவீரர்களின் தியாகத்தாலேயே சம்பந்தர் ஐயாவுக்கு பதவி கிடைத்துள்ளது.
அந்த பதவி மூலம் இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தராவிட்டாலும் பரவாயில்லை இவர்களை நினைவு கூரும் வாய்ப்பையாவது பெற்றுக் கொடுக்கலாமே?
செய்வார்களா நம் தமிழ் தலைவர்கள்?
காய்ந்து கருகிய புல்கூட சிறு மழைத் துளி பட்டதும்
காய்ந்து கருகிய புல்கூட
சிறு மழைத் துளி பட்டதும் துளிர்த்து எழுகிறது.
காலில் மிதிபடும் புழுகூட
துடித்து எழுகிறது
மாவீரர் சிந்திய ரத்தமும்
அவர்களைப் பெற்ற தாய்மார் வடிக்கும் கண்ணீரும் நாம் மீண்டும் எழுந்திட வைக்காதா?
இதுதான் இந்திய அரசு?
• இதுதான் இந்திய அரசு?
அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள சீக்கிய தலைவரை கொலை செய்ய முயற்சி செய்தமைக்காக இந்திய அரசு ஊழியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்திய அரசு ஊழியர் போதைபொருள் கடத்தல்கார இந்தியர் ஒருவரை இதற்காக பத்தாயிரம் டொலருக்கு ஒப்பந்தம் செய்ததாக அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கனடா நாட்டில் கொல்லப்பட்ட சீக்கிய தலைவரின் விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்து வருகிறார்.
இதேவேளை கர்த்தார் நாட்டில் உளவு பார்த்ததாக எட்டு இந்திய அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு இந்திய எதிர்ப்பு தீவிரவாத தலைவர் கொல்லப்பட்டார். அவர் கொலைக்கும் இந்திய உளவு நிறுவனம் காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
எல்லை தாண்டி ஈழத் தமிழர்களை கொன்றவர்கள் இப்போது எல்லை தாண்டி சீக்கிய தலைவர்களை கொல்கின்றனர்.
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால்
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்கிறார்கள்.
இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் காரல் மார்க்ஸ் சாதனைக்கு பின்னால் அவர் மனைவி ஜென்னி இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும்
“நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும்
பலமிழந்துபோனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே
தாய் நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்”
-புதுவை இரத்தினதுரை
காணாமல் ஆக்கப்பட்ட தாயக கவிஞனுக்கு
75வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் (03.12.1948)
கடந்த வருடம் வெளிவந்த பாடல்.
கடந்த வருடம் வெளிவந்த பாடல்.
இதுவரை பல மில்லியன் பேர் கேட்டு ரசித்துள்ளனர்.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் பெண் ஒருவர்
போட்டிகள் நிறைந்த ஆங்கில இசை உலகில்
இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இந்த பாடலை கேட்கும்போது “வாடா என் மச்சி” என்ற ராஜேந்தர் பாடல் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா?
குறிப்பு – பாடல் கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன். ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.
அன்று அடுப்பூதும் பெண்களுக்கு
அன்று அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட சமூகம்.
இன்று கபொத சாதாரண பரீட்சையில் இலங்கையில் இரண்டாவதாக வந்து சாதனை.
அக்சயா ஆனந்தசயனன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும
இவர் தமிழச்சி தங்க பாண்டியன்.
இவர் தமிழச்சி தங்க பாண்டியன். திமுக எம்.பி.
இவர் பிரபாகரனுடன் சேர்ந்து உணவு உண்ண விரும்புவதாகவும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் இவர் கூறிய இக் கருத்துகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
இது தேர்தல் நேரம் இல்லை. இந்த கருத்தை கூறித்தான் தன்னை தக்க வைக்க வேண்டும் என்ற அவசியமும் இவருக்கு இல்லை.
கூட்டணிக்கட்சி காங்கிரஸ் மட்டுமன்றி தனது திமுக தலைமைகூட விரும்பாது என்று தெரிந்தும் தன் கருத்தை தைரியமாக கூறியிருக்கிறார்.
அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு.
அசானிக்கு இலங்கை குடியுரிமை உண்டு. குடியுரிமை உள்ளபடியால்தான் அவரால் இலங்கை கடவுச்சீட்டு பெற முடிந்தது.
இலங்கை கடவுச்சீட்டு இருந்தபடியால்தான் அவரால் இந்திய விசா பெற்று விமானம் மூலம் இந்தியா சென்று சரிகமப நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்தது.
இதை உணர்ந்துகொள்ள முடியாத நடிகர் சத்யராஜ் அவர்கள் அசானிக்கு மட்டுமல்ல இலங்கையில் மலையக தமிழர் எவருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார்.
உண்மை என்னவெனில் இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை.
அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையில் மலையக தமிழர் விரும்பிய கல்வி கற்க முடியும். அரச வேலை பெற முடியும். அவர்கள் அமைச்சராகவும் கவர்னராகவும் இருக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் உரிய புள்ளி எடுத்தாலும் மருத்துவ கல்வி கற்க முடியாது. அரச வேலை பெற முடியாது. அமைச்சராகவோ கவர்னராகவோ வர முடியாது.
இலங்கை அரசுக்கு மனசாட்சி இருந்தால் மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
உண்மை என்னவென்றால் அவர் இதை இந்திய அரசைப் பார்த்துதான் கூற வேண்டும்.
ஆச்சரியம் என்னவெனில் மலையக தமிழருக்கு குடியுரிமை உண்டு என்பது சத்யராஜ்க்கு தெரியவில்லை என்பதைவிட அந்த நிகழ்வில் பங்குபற்றிய யாருக்குமே தெரியவில்லையா என்பதுதான்.
இதுகூடப் பரவாயில்லை. 1984ல் மதுரை மருத்துவமனையில் ஒரு மருத்துவர் என்னிடம் இலங்கையில் இருந்து பஸ்சில் வந்தீர்களா அல்லது ரயிலில் வந்தீர்களா என கேட்டார்.
அவருக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல் இருக்கிறது என்பதுகூட தெரியவில்லை.
இது உண்மையில் அவர்கள் தவுறு இல்லை. இத்தனை நாளாக நாம் இன்னும் எமது பிரச்சனைகளை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்கவில்லை என்பது எமது தவறே.
எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு
எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு ஒரு பூனையை மறித்துப்பார்.அங்கு ஒரு புலியை நீ காண்பாய்
- கவிஞர் இன்குலாப்
தீப் பொறிகளின் ஒற்றை விரல் கூறும் தத்துவம் என்ன?
திருப்பி அடிக்காமல் தீர்வு இல்லை என்பதுதானே.
கண்டனப் போராட்டம் வெற்றி பெறட்டும்!
கண்டனப் போராட்டம் வெற்றி பெறட்டும்!
அலெக்ஸ் கொலைக்கு நீதி கிடைக்கட்டும்!!
எப்படி கேப்பாபுலவில் குழந்தை
எப்படி கேப்பாபுலவில் குழந்தை ஒன்று தன் நிலத்திற்காக வீதியில் படுத்து போராடியபோது தலைவர் சம்பந்தர் ஐயா கொழும்பில் சொகுசு மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்தாரோ ,
அப்படித்தான் மலையக தமிழர் இந்தியாவில் அகதிமுகாமில் வாடும்போது அமைச்சர் தொண்டைமான் குடும்பம் சொகுசாக வாழ்ந்து வருகிறது.
அமைச்சர் தொண்டைமானுக்கு தமிழ்நாட்டில் வீடு சொத்து இருப்பது அனைவரும் அறிந்தவிடயம்தான். அங்கு அவர் பெரும் செலவில் காளை மாடு வளர்த்து வருகிறார்.
தமிழ்நாட்டில் இருக்கும் மலையக தமிழர் குடியுரிமை அற்று 40 வருடமாக அகதிமுகாமில் வாழும்போது அவர் தனது காளைமாட்டை குளிரூட்டப்பட்ட வண்டியில் கொண்டு சென்று ஜல்லிக்கட்டில் கலந்துகொள்கிறார்.
குளிரூட்டப்பட்ட வண்டி வைக்கும் அளவிற்கு தன் காளை மாட்டின் மீது அக்கறை கொண்ட இந்த அமைச்சர் தனது மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை.
மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்காமல் அவர்களை அகதியாக வைத்திருக்கின்றமையை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற அமைச்சர் அதன்படி அனைவருக்கும் குடியுரிமை வழங்குமாறு இந்திய அரசை கோரவில்லை.
மாறாக, இந்தியாவில் இருக்கும் மலையக தமிழரை திரும்பி வரும்படி கொஞ்சம்கூட பொறுப்பின்றி கூறுகின்றார்.
தமிழ்நாட்டில் மலையக தமிழர் குடியுரிமை இன்றி இருப்பதை நடிகர் சத்யராஜ் மட்டுமல்ல நம் ஈழத்து தலைவர்களும் கண்டிக்க தயங்குகின்றனா
தகைசால் திராவிடர்
“தகைசால் திராவிடர்” என்றுதானே வர வேண்டும்.
ஏன் “தகைசால் தமிழர்” என்கின்றனர்.
அப்படி போட்டால்தான் தமிழரை ஏமாற்ற முடியும் என்று நினைக்கிறார்களா?
#திராவிட உருட்டு
அலிபாபாவும் பதினான்கு கூமுட்டைகளும்
• அலிபாபாவும் பதினான்கு கூமுட்டைகளும்
கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை. அதுபோல் இவர்களின் இந்திய விஜயம் தீர்வு எதனையும் பெற்று தரப்போவதில்லை.
இவர்கள் டில்லி பார்க்க விரும்பினால், அங்கு சப்பாத்தி பூரி சாப்பிட விரும்பினால் தாராளமாக சென்று வரட்டும்.
ஆனால் தமிழ் மக்களுக்கு தீர்வுக்காக போவதாக தயவு செய்து ஏமாற்ற வேண்டாம்.
அதுவும் தீர்வு 13ஐ வலியுறுத்த சென்றதாக கூறுவது சுத்த அயோக்கியதனமானது.
கடந்த வருடம் தீர்வு 13ஐக் கேட்டு மோடிக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை.
இப்போதும்கூட மோடியையோ அல்லது வெளியுறவு அமைச்சரையோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் நிலையை அங்குள்ள அதிகாரிகளுக்கு விளக்கிறார்களாம்.
இங்கிருந்து சென்று விளக்கும் நிலையிலா இந்திய அதிகாரிகள் இருக்கிறார்கள்?
அப்படியென்றால் இத்தனை வருடமும் சம்பந்தர் ஐயாவும் மற்றவர்களுக்கும் இந்திய அரசுக்கு என்னத்தை விளக்கியவர்கள்?
40 வருடமாக ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் வைத்திருக்கிறார்கள்.
அதுவும் 30 ஆயிரம் மலையக தமிழரையும் குடியுரிமை வழங்காமல் அகதியாக வைத்திருப்பதை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தன் நாட்டில் இருக்கும் தமிழருக்கு உதவி செய்யாத இந்திய அரசு சிங்கள அரசிடமிருந்து தீர்வு பெற்று தரும் என எப்படி இவர்கள் நம்புகிறார்கள்?
மலேசியாவில் நடைபெற்ற
மலேசியாவில் நடைபெற்ற
சர்வதேச மனக்கணித போட்டியில்
ஈழத் தமிழர் விக்னேஸ்வரன் ருஷாந்தன்
வெற்றியாளராக தெரிவாகியுள்ளார்.
அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
பல கலைகள கற்போம்
•பல கலைகள கற்போம்
அதில் சாதனைகள் படைப்போம்!
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு
சமூக சேவைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட
மாகாண மட்டத்திலான சித்திர போட்டியில்
கிழக்கு மகாணத்தில் முதலாம் இடத்தை
செல்வி ஜோமிசா பெற்றுள்ளார்.
அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
குறிப்பு – படத்தில் செல்வி ஜோமிசா மற்றும் அவரது சித்திர ஆசிரியை மானிஷா.
காரல் மார்க்ஸ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில்
காரல் மார்க்ஸ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் முப்பது பேரே கலந்துகொண்டனர்.
ஆனால் இன்று அவரது கல்லறைக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.
மன்னர்களின் கல்லறைகளுக்குகூட இந்தளவு பேர் வருவதில்லை.
லண்டன் ஹைகேட் மயானத்தில் அவரது கல்லறை இருக்கிறது.
1960 களில் இந்த கல்லறைக்கு வெடி குண்டு வீசப்பட்டது. அதனால் சிறிது சேதமடைந்தது.
காரல் மார்க்ஸ் தத்துவம் மட்டுமல்ல அவரது கல்லறைகூட முதலாளித்துவத்திற்கு அச்சத்தைக் கொடுக்கிறது.
வாரிசுகள் யாரும் இல்லாததால் தற்போது ஒரு குழு இந்த கல்லறையை பராமரிக்கிறது.
இந்த குழுவின் சார்பில் ஒரு பிரசுரம் அங்கு விநியோகிக்கப்படுகிறது.
அதில் காரல் மாக்ஸ்க்கும் அவரது வீட்டு பணிப்பெண்ணிற்கும் இருந்த உறவால் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறந்த காதலர்களுக்கு உதாரணமாக மார்க்ஸ் மற்றும் ஜென்னி கூறப்படுகிறது.
அப்படியிருக்கையில் மாக்ஸ் எப்படி தன் காதல் மனைவிக்கு துரோகம் இழைத்திருப்பார்?
ஆதாரமற்ற இந்த செய்தி குறித்து நான் இக் குழு உட்பட பலருடன் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அது பற்றிய விபரம் இன்னொரு பதிவில் தருகிறேன்.
குறிப்பு – புலவர் அவர்களின் மகன் தோழர் சோழன் நம்பியார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப் படம் பதிவு செய்துள்ளேன்.
ன்று 31 ஆண்டுகளுக்கு முன்னர்
இன்று 31 ஆண்டுகளுக்கு முன்னர் (06.12.1992) பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் ஆகும்.
பாபர் மசூதியை இடித்தவர்களை நிரபராதிகள் என்று இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி பாபர் மசூதி தானாக இடிந்து விழுந்த நாள் இன்று ஆகும்.
இது இந்திய அதிசயம்!
ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம்
ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் சாதியை ஒழிக்கும் என்று கருதிய திருமா அவர்கள்,
தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கார் சிந்தினைகளை முன்வைப்பது ஏன்? அல்லது,
ஈழத்தில் சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கார் சிந்தனைகளை பின்பற்றும்படி புலிகளிடம் ஏன் வலியுறுத்தவில்லை?
எதிரியை சந்திப்பது,
எதிரியை சந்திப்பது, சந்திக்கும்போது கை குலுக்குவது தவறு இல்லை. ஆனால் எதிரியை பாராட்டுவது தவறு.
மாவீரர்களை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த ஒரு வாரத்தில் 11 தமிழர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுகள் யாவும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே இதனை ஜனாதிபதியிடமே நேரில் கேட்டு அவரை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.
மாறாக, நாட்டை கட்டி எழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தை பாராட்டியிருக்கின்றனர்.
அத்துடன் அதற்கு தமது பங்களிப்பு வழங்கப்படும் என்றும் உலக தமிழர் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
எதிரியை பாராட்டியதன் மூலம் இவர்கள் எதிரிக்கு சோரம் போய்விட்டனரோ என்ற சந்தேகத்தை தருகிறது.
இதில் ஒருவர் சோனியா காந்தி லண்டன் வந்தபோது அவரை சந்தித்தவர். சந்தித்துவிட்டு “ அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீரைக் கண்டேன்” என்று அறிக்கை விட்டவர்.
புலிகளை வைத்து அமைப்பு ஆரம்பித்தவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் எதிரிகளை நாடி செல்கின்றனர்.
இது செத்த மாட்டில் இருந்து கழரும் உண்ணிகளை நினைவூட்டுகின்றது.
போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்
போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்
26 வருடங்கள் போராடி மிகப் பெரிய அமெரிக்க வல்லரசை விரட்டியடித்தனர் வியட்நாமிய மக்கள்.
இந்த வெற்றியின் ரகசியம் என்ன என்று வியட்நாம் தலைவர் ஹோசிமினிடம் கேட்ட போது,
“கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களுக்கு தெரியப்படுத்தினேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றியை பெற்று தந்தார்கள்” என்றார் அவர்.
தமிழ் மக்களுக்கு கசப்பான உண்மையை கூறாமல் மறைத்து இனிப்பான பொய்யை கூறி ஏமாற்றுகிறார்கள் நம்மவர் சிலர்.
இதன் மூலம் இவர்கள் சாதிக்கப்போவது என்ன?
மக்களுடன் சேர்ந்து உண்ணுங்கள்.
மக்களுடன் சேர்ந்து உண்ணுங்கள். மக்களுடன் சேர்ந்து உறங்குங்கள். மக்களுடன் சேர்ந்து போராடுங்கள் என்றார் மாசே துங்.
இதன் அர்த்தம் மக்களுக்காக போராடுபவர்கள் மக்களுடன் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்பதே.
அதாவது தண்ணீருக்குள் இருக்கும் மீனைப் போல் ஒரு போராளி இருக்க வேண்டும்.
எப்படி தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்தால் ஒரு மீன் வாழ முடியாதோ அதேபோன்று மக்களைவிட்டு அந்நியப்படுபவர்களால் மக்களுக்காக போராட முடியாது.
நீருக்குள் இருக்கும் மீன் எப்போதும் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தும். அதேபோன்று மக்கள் மத்தியில் இருக்கும் போராளிகள் மக்களை அடிமைப்படுத்தும் தழைகளுக்கு எதிராக செயற்பட வேண்டும்.
ஒரு போராளியின் தலைமறைவு வாழ்க்கை என்பது மக்களுக்கு வெளிப்படையாகவும் அரசுக்கு ரகசியமாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் இன்று தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் சிலரின் வாழ்க்கை மக்களுக்கு ரகசியமாகவும் அரசுக்கு வெளிப்படையாகவும் இருக்கிறது.
உதாரணமாக மக்களுக்கு தலைமைதாங்கி வழி நடத்தப்போவதாக கூறும் பெண்மணி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக யூ ரியூப்பில் உரையாற்றியுள்ளார்.
யூ ரியூப் உட்பட இண்டர்நெட் ஊடகம் எதிலும் பேக் ஐடியில் வந்தாலும் அவர்களின் முழு விபரங்களையும் அரசுகளால் பெற முடியும்.
அதாவது மக்களுக்காக போராடுவதாக கூறும் இவர்கள் அரசுக்கு வெளிப்டையாகவும் மக்களுக்கு இரகசியமாகவும் இருக்கின்றனர்
பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது.
பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது.
இந்திய அரசு உதவும் என்ற கற்பனையில் ஈழத் தமிழர் விடுதலை பெற முடியாது.
இதை இனியாவது “இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும்” என்று கூறும் காசி ஆனந்தனும்
“சீனா வந்து விட்டது. எனவே இந்தியா தமிழீழம் பெற்று தரும்” என்று கூறும் திரு மாஸ்டரும் உணர வேண்டும்.
ஈழம் வேறு. தமிழீழம் வேறு.
ஈழம் வேறு. தமிழீழம் வேறு. இரண்டும் ஒன்றே என்று சிலர் நினைப்பது தவறு.
இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம். தமிழர் பிரிவினை கோரிய பகுதி தமிழீழம்.
இப்போது சிங்கள அரசும் இந்திய அரசும் ஈழம் என்ற சொல்லை முற்றாக ஒழிக்க முயலுகின்றன.
ஈரோஸ் மற்றும் இபிஆர்எல்எவ் இயக்கம் கோரிய ஈழம் என்பது இவற்றைவிட வித்தியாசமானது.
இது குறித்து ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபா அவர்களுடன் நடத்திய ஒரு உரையாடலை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1982ம் ஆண்டு எமது தோழர் செல்லப்பா நாகராசா ( வாத்தி) அவர்களை சந்திக்க சென்றிருந்தேன்.
அவர் அப்போது சென்னையில் அடையாறு இந்திரா நகரில் தங்கியிருந்தார்.
அங்கு சில நாட்கள தங்கியிருந்தபோது லண்டனில் இருக்கும் தனது தோழர்களுடன் ரெலிபோனில் கதைப்பதற்காக நாபா வருவதுண்டு.
லண்டனில் இருந்து வரும் ரெலிபோன் அழைப்பு நள்ளிரவில்தான் வரும் என்பதால் அதுவரை நாபாவிற்கு பேச்சு துணையாக நான் பேசிக் கொண்டிருப்பதுண்டு.
அப்போதுதான் இந்த உரையாடல் நடைபெற்றது.
நான் - EPRLF , EROSS இரண்டும் ஒரே கொள்கைதானே. அப்படியிருக்கையில் நீங்கள் எதற்காக EROSS லிருந்து பிரிந்தீர்கள்?
நாபா - EROSS இன் தலைமை லண்டனில் இருக்கிறது. அதனால் நாம் பிரிந்தோம்.
நான் - அப்படியென்றால் EPRLF தலைமை நீங்கள் இந்தியாவில் இருப்பது சரியா?
நாபா – ஆம். அது தவறுதான். விரைவில் இலங்கை சென்று அங்கிருந்து பணி செய்வேன்.
நான் - மற்ற இயக்கங்கள் கோரும் தமிழீழத்திற்கும் நீங்கள் கோரும் ஈழத்திற்கும் என்ன வித்தியாசம்?
நாபா – மற்ற இயக்கங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளை மட்டும் கோருகின்றனர். நாம் மலையகத்தையும் சேர்த்து கோருகின்றோம்.
நான் - மலையக பகுதிக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடைப்பட்ட சிங்கள பகுதியையும் சேர்த்து நீங்கள் கோருவது சரியா?
நாபா – அதற்காகத்தான் மலையகத்தில் பாதி பகுதியை சிங்களவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறோம். அதற்கு பதிலாக சிங்கள பகுதியான இங்கினியாக்கல பகுதிகளை நாம் எடுத்துக்கொள்கிறோம்.
நான். - இப்படி ஒரு மக்களின் பகுதிளை விட்டுக் கொடுக்கவும் இன்னொரு மக்களின் பகுதிகளை சேர்க்கவும் உங்களுக்கு அந்த மக்கள் அதிகாரம் தந்தனரா? அல்லது அந்த மக்களிடம் கேட்டீர்களா?
நாபா – மௌனம்.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில்
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இவர்கள் டில்லி சென்று வந்தனர்.
இவர்கள் சென்று வந்த பின்பு இந்திய அரசு தமிழருக்கு தீர்வு எதுவும் பெற்று தரவில்லை.
மாறாக மன்னாரில் தமிழர் நிலத்தை தனது இந்திய முதலாளி அம்பானிக்கு பெற்றுக் கொடுத்தது.
தமிழரின் திருமலை துறைமுகத்தில் எண்ணெய்குதம் பெற்றுக்கொண்டது.
இப்போது இந்த வருடம் வேறு சிலர் டில்லிக்கு சென்று வந்துள்ளனர்.
இம்முறையும் இந்திய அரசு தமிழருக்கு தீர்வு எதுவும் பெற்று தரப்போவதில்லை.
மாறாக தமிழர் வளம் எதனை எடுத்துக்கொள்ளப்போகின்றது என்று அச்சமாக இருக்கிறது.
இவர்கள் டில்லிக்கு போவது ஈழத் தமிழருக்காகவா? அல்லது இந்திய நலனுக்காகவா?
இன்று மனிதவுரிமை தினமாம்? (10.12.2023)
•இன்று மனிதவுரிமை தினமாம்? (10.12.2023)
போர் முடிந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை.
இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 7 வருடங்களாக போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்கூட இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மனிதவுரிமை தினத்திலாவது சர்வதேசம் ஈழத் தமிழரை கவனத்தில் கொள்ளுமா?
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார் பாரதியார்.
பாரதியார் ஒரு அற்புதமான கவிஞர். ஆனால் அவர் “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடியது குழப்பமாய் இருக்கிறது
இலங்கையில் அத்தீவிற்கு சொந்தமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது பாரதியாருக்கு நன்கு தெரியும்
ஏனெனில் ஒரு ஈழத் தமிழரையே தன் குருவாக பாரதியார் ஏற்றுக்கொண்டிருந்தார்.
ஆனாலும் அவர் ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக சிங்கள தீவு என ஏன் பாடினார்?
செய்தி – திருமலையில் எனது ஆதரவாளர்கள்
செய்தி – திருமலையில் எனது ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடத்தக் கோருகிறார் சம்பந்தர் ஐயா.
நம்ம சிங்கத்தைச் சீண்டியவன் யாரடா?
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
அதன் சீற்றம் குறைவதில்லை.
அதுபோல நம்ம ஐயா வயதானாலும்
தன் ஆதரவாளர்களை விட்டிடுவாரா என்ன?
அது சரி, ஐயா இங்கு தன் ஆதரவாளர்கள் என்று கூறுவது தன் மகனைத்தானே?
அவர் மகனைப் புறக்கணிப்பது யாரு?
😂😂
ஈழத்தில் சிங்கள மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு
ஈழத்தில் சிங்கள மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய பிரபாகரனை “பயங்கரவாதி” என்று எழுதிய மேற்கத்திய ஊடகங்கள்,
உக்ரைனில் ரஸ்சிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் செலன்ஸ்கியை “உக்ரைனின் உயிர்” என பாராட்டி எழுதுகின்றன.
இது என்ன நியாயம்?
சரியான நிலைப்பாடு
• சரியான நிலைப்பாடு
சிங்கள அரசுக்கு துணைபோகும்
இந்த தமிழின விரோத புலம்பெயர் அமைப்பை
புறக்கணித்த கஜந்திரகுமார் அவர்களுக்கு பாராட்டுகள்.
இந்த லெட்டர் பேட் புலம்பெயர் அமைப்புகளை
தாயகத்தில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் விரட்டி அடிக்க வேண்டும்.
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
•பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
சிங்கள ஜனாதிபதி ரணிலை காப்பாற்றும்
உலக தமிழர் பேரவையின் விஜயத்தின்
பின்னணியில் இருப்பது சின்ன கதிர்காமரா?
குறிப்பு – சின்ன கதிர்காமர் - சுமந்திரன்
ஈழத்து குடுகுடுப்பைக்காரர்!
• ஈழத்து குடுகுடுப்பைக்காரர்!
சுமந்திரன் - நல்ல காலம் பிறக்குது. தமிழருக்கு நல்ல காலம் பிறக்குது
அப்பாவி தமிழன் - ஏன் சேர், சம்பந்தர் ஐயா செத்திட்டாரா?
சுமந்திரன் - இல்லை. லண்டனில் இருந்து நம்ம GTF சுரேன் வந்திருக்கார்.
அப்பாவி தமிழன்; - ஓ! இவர்தானே லண்டனில சோனியா காந்தியை சந்தித்துவிட்டு “ அன்னை சோனியாவின் கண்களில் இரக்கத்தைக் கண்டேன்” என அறிக்கை விட்டவர்.
சுமந்திரன் - அது அப்ப. இப்ப ரணிலை சந்தித்து அவரின் செயற் திட்டத்தை பாராட்டியிருக்கிறார். கவனிக்கவில்லையா நீங்கள்?
அப்பாவி தமிழன் - 11 தமிழ் இளைஞர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்த ரணிலின் செயற்திட்டத்தை பாராட்டியிருக்கிறாரா?
சுமந்திரன் - என்ன இருந்தாலும் ஜனாதிபதி ரணிலை நாம் காப்பாற்ற வேண்டும் அல்லவா. அதற்காக இமயமலைப் பிரகடனம் செய்திருக்கிறார். எனவே தமிழருக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.
அப்பாவி தமிழன் - சேர் ! நல்லாட்சி அரசிலும் தீர்வு வரும். இல்லையேல் ராஜினாமா செய்வேன் என்றீர்கள். தீர்வும் வரவில்லை. ராஜனாமாவும் செய்யவில்லை. அது சரி, அந்த ராஜினாமா கடிதம் இப்பவும் சட்டைப் பொக்கற்றுக்குள்ள இருக்குதோ சேர்?
சுமந்திரன் - இப்படி கேட்டா எப்படி? நான் தமிழரசுக்கட்சி தலைவராக வேண்டாமா?
அப்பாவி தமிழன் - ஓ! உங்களுக்குத்தான் எப்பவும் நல்ல காலம் சேர்.
அகதி நாய்களே, தமிழ்நாட்டு அரசியலை
“அகதி நாய்களே, தமிழ்நாட்டு அரசியலை ஏன் பேசுகின்றீர்கள்?” என ஈழத் தமிழரிடம் கேட்கும் உடன்பிறப்புகளிடம் ஒரு கேள்வி. இந்த ஈழத்தடிகள் யார் என்று தெரியுமா?
அப்துல் ரவூப்!
• அப்துல் ரவூப்!
என்றும் நினைவில் கொள்வோம்!
1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள்.
சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது.
அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது.
அப்துல் ரவூப் மரணம்,
• ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது
• தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது.
• ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது.
• தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது.
இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான்.
அதுமட்டுமன்றி சாத்வீக வழிகளில் போராடுவதால் குறிப்பாக தங்களைத் தாங்களே எரித்துக்கொள்வதால் இலங்கை இந்திய அரசுகள் மனம் இரங்கப்போவதில்லை என்பதையும் அவனது மரணம் காட்டியுள்ளது.
அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது.
காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது.
அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது.
ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை.
ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள்.
இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பு- 15.12.2023 யன்று அப்துல் ரவூப் அவர்களின் 28வது நினைவு தினம்.
இருவரும் அரசியல் வாரிசுகள்
இருவரும் அரசியல் வாரிசுகள்
இருவருக்கும் ஒரே துறை அமைச்சு
ஒருவரை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள்
இன்னொருவரை மக்கள் எப்போது தூக்கி எறிவார்கள்?
முன்னாள் நக்சலைட் போராளி.
முன்னாள் நக்சலைட் போராளி. இன்று பழங்குடி நல்வாழ்வுதுறை அமைச்சர் என்று அரசும் அதன் ஊடகங்களும் சீதாக்காவை உதாரணம் காட்டுகின்றன.
ஆனால் தேர்தல் பாதை மூலம் பழங்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதற்கு இதே சீதாக்காவை நக்சலைட்டுகள் விரைவில் உதாரணமாக காட்டுவார்கள்.
ஏனெனில் சீதாக்கா அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு காப்ரேட் கம்பனிகளின் நலனை காக்குமே தவிர பழங்குடிகளின் நலன் காக்காது.
இதுதான் மேற்கு வங்கத்தில் நடந்தது. காப்ரேட் கம்பனிக்காக பழங்குடிகளை சுட்டுக்கொன்றது கம்யுனிஸ்ட் கட்சி அரசு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இது உலக தமிழ் பேரவை அல்ல இது உலக தமிழ் பேயரவை
•இது உலக தமிழ் பேரவை அல்ல
இது உலக தமிழ் பேயரவை ( பேயர் - முட்டாள்)
“நீ உன் நண்பர்களை கூறு. நான் உன்னைப் பற்றி கூறுகின்றேன்” என ஒரு பழமொழி உண்டு.
மகிந்த ராஜபக்சாவை சந்தித்ததன் மூலம் தாம் யார் என்பதை உலக தமிழ் பேரவையினர் தமிழ் மக்களுக்கு இனங்காட்டியுள்ளனர்.
மகிந்த ராஜபக்சாவை அவரது சிங்கள மக்களே தூக்கி எறிந்துவிட்டனர்.
அவரும் அவருடைய குடும்பமும் மக்கள் முன் வரமுடியாமல் ஒளித்து திரிகின்றனர்.
அத்தகைய மகிந்த ராஜபக்சாவை சந்தித்து அவரது அரசியல் மீள் வருகைக்கு உதவியுள்ளனர் இவர்கள்.
பரவாயில்லை. மகிந்தவை சந்தித்தபோது அவர் கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர் எங்கே என்பதையாவது கேட்டிருக்கலாம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் “இவர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்” என்று ஏன் கூறினார்கள் என்று இப்போது புரிகிறதா?
அது சரி இந்த இமயமலைப் பிரகடனம் மக்களுக்கானதா அல்லது தலைவர்களுக்கானதா?
மக்களுகானது என்றால் மக்களுக்குதானே முதலில் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் அங்கீகாரம் பெற வேண்டும்.
கட்சி - திராவிட முன்னேற்ற கழகம்
கட்சி - திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சி – திராவிட மாடல் ஆட்சி
நிதி கேட்க – உலக தமிழர்களே
ஏன் அதிலையும் உலக திராவிடர்களே என்று கேட்க வேண்டியதுதானே?
# திராவிட உருட்டு
கரடியே காரித்துப்பிடிச்சு!
• கரடியே காரித்துப்பிடிச்சு!
மாப்பிளை அவர்தான். ஆனால் சட்டை தன்னுடையது என்கிறாரா?
திருக்குறளை எழுதியது கலைஞர் கருணாநிதி
திருக்குறளை எழுதியது கலைஞர் கருணாநிதி என்று தமிழக கல்வி அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். அது பற்றியது அல்ல எனது இந்த பதிவு.
லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலை உண்டு. இது லண்டனில் இருக்கும் பல தமிழருக்கு தெரியாது.
நான்கூட அந்த பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சோசலிச கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோதுதான் கண்டேன். ( அப்போது எடுத்த படமே கீழே பதிவு செய்துள்ளேன்)
இன்று இந்த திருவள்ளுவர் சிலைக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
சென்னையில் உள்ள எனது நண்பர் ஒருவர் இந்த நிகழ்வை குறிப்பிட்டு இவ் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் உண்மையான தமிழ் உணர்வு கொண்டவர்களா அல்லது திராவிட தரப்பு ஆட்களா என கேட்டிருந்தார்.
ஒருவேளை திருவள்ளுவர் சிலையை அகற்றிவிட்டு அதில் கலைஞர் கருணாநிதி சிலையை வைத்துவிடுவார்களோ என் நண்பர் பயந்திட்டார் போல இருக்கு 😂
திடீரென அறிய தந்ததால் என்னால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமற் போய்டவிட்டது.
யாராவது சென்றிருந்தால் அல்லது விபரம் தெரிந்தால் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர்,
தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர், ஈழத் தமிழர் சி. வை .தாமோதரம் பிள்ளை என்பதை “அகதி நாய்களே வெளியேறுங்கள்” என்று கூறும் திமுக உடன்பிறப்புகள் அறிவார்களா?
கலைஞர் கருணாநிதி ஊழல் வழக்குகளில்
கலைஞர் கருணாநிதி ஊழல் வழக்குகளில் மாட்டுப்பட்டபோது அவருக்காக பணம் எதுவும் வாங்காமல் இலவசமாக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஈழத்தமிழ் தலைவர்களில் ஒருவரான ஜி.ஜி.பொன்னம்பலம்
இந்த விடயம் “அகதி நாய்களே வெளியேறுங்கள்” என்று எழுதும் இன்றைய திமுக உடன்பிறப்புகள் அறிவார்களா?
பெரியார் - அடேய் !நான் தமிழன் இல்லடா.
பெரியார் - அடேய் !நான் தமிழன் இல்லடா. திராவிடன்டா!!
(200 ரூபா) உபி - போடா சங்கிப்பயலே!! போய் பெரியாரை முழுசா படி..
😂😂
இருவரும் தமிழகத்து தலைவர்கள்
இருவரும் தமிழகத்து தலைவர்கள்
ஒருவர் திராவிடர் கழக தலைவர் பெரியார்.
இன்னொருவர் உலக தமிழின முன்னேற்ற கழக தலைவர் பெருஞ்சித்திரனார்
ஈழத்து தலைவர் தந்தை செல்வா தமிழ்நாடு சென்று ஆதரவு கோரிய போது பெரியார் ஆதரவு வழங்கவில்லை. மறுத்துவிட்டார்.
ஆனால் பெருஞ்சித்திரனார் ஆதரவு வழங்கியதுடன் முதல் பெண் போராளி ஊர்மிளாவை பல நாட்கள் தன் வீட்டில் இரகசியமாக வைத்திருந்து பாதுகாத்தவர்.
பெருஞ்சித்திரனார் தானாக வந்து ஆதரவு வழங்கியதற்கும் ஆதரவு கேட்டும் பெரியார் மறுத்தமைக்கும் என்ன காரணமாக இருக்கும்?
ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ?
ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ?
நன்றாகத்தான் இருக்கிறது.
ஒருமுறை கேட்டு பாருங்களேன்.
கலைப்பீட மாணவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்
இதுவரை பல ஈழத் தமிழர் கலந்துகொண்டனர்.
இதுவரை பல ஈழத் தமிழர் கலந்துகொண்டனர்.
ஆனால் ஒருமுறைகூட பரிசை வென்றதில்லை
அதற்கு பல காரணங்களை கூறினார்கள்.
ஆனால் இம்முறை அதையெல்லாம் உடைத்து பரிசை வென்றிருக்கிறார் கில்மிஷா.
பரிசு பெற்ற பலர் இன்னமும் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பின்றி இருக்கின்றனர்.
ஆனால் பரிசு பெற முன்னரே பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு இசையமைப்பாளர் போட்டி முடியுமுன்னரே வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இன்னொரு இசையமைப்பாளர் எப்போது போட்டி முடியும் என காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.
இந்தியாவில் இத்தகைய ஒரு பெருமையை ஈழத் தமிழர் ஒருவர் பெறுவது அதிசயம் எனில் அதைவிட அதிசயம் அதை அவர் இத்தனை சிறிய வயதில் சாதித்திருப்பது.
அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Thursday, November 30, 2023
எழுவர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின்
எழுவர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மக்களை நோக்கி நடைப்பயணம் மேற்கண்டபோது அவருக்கு பெரிதும் உதவிகரமாக அமைந்தது “உயிர்வலி” என்ற ஆவணப்படம்.
அதேபோல் இப்போது சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் ஆவணப்படம் “ மறுக்கப்படும் நால்வர் விடுதலை”
முதலில் இப் படத்தை வெளிக் கொணர்ந்த அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இப் படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பகிரவேண்டிய படம்.
ஏனெனில் இப் படம் சிறப்புமுகாமில் உள்ளவர்களின் விடுதலைக்கு தமிழக அரசே பொறுப்பு என்பதை தெளிவாக காட்டியுள்ளனர்.
இனி மத்திய அரசே பொறுப்பு என்று தமிழக முதல்;வரோ அல்லது திமுக உடன்பிறப்புகளோ உருட்ட முடியாது. மக்களை ஏமாற்ற முடியாது.
அதுமட்டுமன்றி தமிழக மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விடுதலை பெற முடியும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக மக்களுக்கு இதனை கொண்டு செல்வோம். மக்கள் ஆதரவு மூலம் நால்வர் விடுதலைக்கு வழி காணுவோம்.
குறிப்பு – கீழே இப் படம் இணைப்பு தரப்பட்டுள்ளது.
மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால்
மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று இவர் தனது 41வது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார்.
ஆனால் இவர் போர் நிறுத்தம் கோரி ஈழத் தமிழருக்காக தன் 27வது வயதில் உயிரை நீத்தார்.
இவர் கோரிய போர் நிறுத்தம் ஏற்படவில்லை. ஈழத் தமிழர் காப்பாற்றப்படவும் இல்லை.
ஆனால் இவர் மரணம் கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை நன்கு காட்டிவிட்டு சென்றுள்ளது.
இனி வரலாற்றில் இவர் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் கலைஞர் துரோகமும் நினைவுக்கு வந்து செல்லும்.
தமிழ் மக்களின் எதிர்ப்பையடுத்து
தமிழ் மக்களின் எதிர்ப்பையடுத்து நடிகை குஸ்புவை நீக்கியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இனியாவது நடிகை குஸ்பு மட்டுமன்றி போராளிகளை அவதூறு செய்யும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும்.
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து இந்தியாவில்
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து இந்தியாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதே இந்தியாவில் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இன்னொரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை இவர் அறிவாரா?
நல்லவேளை. இவர் தமிழ் நாட்டிற்கு வரவில்லை!
இன்று காலை பெண் ஒருவர் எனக்கு
இன்று காலை பெண் ஒருவர் எனக்கு ஆண்கள் தின வாழ்த்து அனுப்பியிருந்தார்.
எனக்கு ஆச்சரியம். ஏனெனில் இன்று ஆண்கள் தினம் என்பதையும் ஆண்களுக்காக ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்பதையும் இன்றுதான் அறிகிறேன்.
அடிமைப்பட்டுக்கிடக்கும் பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக பெண்களுக்கு “மகிளிர் தினம்” கொண்டாடப்படுகிறது.
ஆனால் ஆதிக்கத்தில் இருக்கும் ஆண்களுக்கு எதற்காக “ஆண்கள் தினம்” கொண்டாடப்படுகிறது என்று புரியவில்லை.
இந்நிலையில் எங்கெல்ஸ் கூறிய ஒரு வரி என் நினைவுக்கு வருகிறது.
“எவ்வளவு முற்போக்கான ஆணாக இருப்பினும் அவனை தோலுரித்தால் ஒரு துளியேனும் ஆணாதிக்கம் இருக்கும்” என்றார் அவர்.
ஆம். அவர் கூறிய அந்த வரி எனக்கும் பொருந்தும் என்பதை வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன்.
பூனையும் எலியும் ஓடும்போது
பூனையும் எலியும் ஓடும்போது பெரும்பாலும் எலியே வெற்றி பெறுகின்றது
ஏனெனில் எலி உயிருக்காக ஓடுகிறது. பூனை உணவுக்காக ஓடுகிறது.
இந்திய அணி 100% வெற்றி தமக்கே என்ற மமதையில் ஆடியது.
ஆனால் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் ஆடியது.
இந்திய அணி வீரர்கள் தமது அணி வெற்றி பெற வேண்டும் என்று விளையாடியதைவிட தாம் ஒவ்வொருவரும் சாதனை படைக்க வேண்டும் என்றே விளையாடினார்கள்.
ஆனால் அவுஸ்ரேலிய அணி தமது அணி வெற்றி பெற வேண்டும் என ஒற்றுமையாக ஒருமித்து விளையாடினார்கள்.
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆனாலும் நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணியினருக்கு வாழ்த்துக்கள்.
தமிழர் தம் கடலில்
தமிழர் தம் கடலில்
எவ்வித அச்சமும் இன்றி
கடற்படையின் அச்சுறுத்தல் இன்றி
மீன் பிடிக்கும் காலம் எப்ப வரும்?
குறிப்பு -
இலங்கு இரும்பரப்பின் ஏறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமிர் பரகுவர் - அகநானூறு 350
பெயர் - திருமதி. அகிலத்திருநாயகி
பெயர் - திருமதி. அகிலத்திருநாயகி
வயது – 75
இடம்- முல்லைத்தீவு
சாதனை – 1500 மீட்டர் ஓட்டம் - தங்கப்பதக்கம்
5000 மீட்டர் விரைவு நடை – தங்கப்பதக்கம்
800 மீட்டர் ஓட்டம் - வெண்கலப்பதக்கம்
5000 மீட்டர் ஓட்டம் - நான்காம் இடம்
வயது வெறும் நம்பர்தான்
அது சாதனை புரிவதற்கு ஒரு தடை இல்லை என்பதை
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் நிரூபித்த
அகிலத்திருநாயகி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சீரழியும் இளையவர்களுக்கு ஒரு நல்ல உதாரணத்தை காட்டியுள்ளார்.
வன்மையான கண்டனங்கள்
• வன்மையான கண்டனங்கள்
பொலிசாரின் சித்திரவதையினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு நீதி பெற தமிழ் அமைப்புகள் யாவும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி இனி இப்படி ஒரு இளைஞனுக்கு நடக்காமல் இருப்பதற்கும் தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
மாவீரர்களை “பயங்கரவாதிகள”; என்போருக்கு
மாவீரர்களை “பயங்கரவாதிகள”; என்போருக்கு
மாவீரர்களை “பாசிசவாதிகள்” என்போருக்கு
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அளித்துள்ள பதில் இது.
மாணவர்களின் பதிலை இனியாவது இவர்கள் புரிந்து கொள்வார்களா?
அமைச்சர் உதயநிதி அவர்களே!
அமைச்சர் உதயநிதி அவர்களே!
இந்த ஈழத் தமிழ் அகதிக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்கப் போகிறீர்களா? அல்லது கருணைக் கொலை செய்யப் போகிறீர்களா?
அண்ணாமலை அவர்களே!
பாகிஸ்தானில் இருந்துவரும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு ஈழத்தில் இருந்து வரும் இந்து அகதிகளுக்கு ஏன் குடியுரிமை வழங்குவதில்லை? ஈழத்தில் இருந்து வருபவர்கள் தமிழர் என்பதாலா?
நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்.
நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய். ஆனால் ஒவ்வொரு விதையும் மண்னோடு போராடியே மரமாகிறது
எதுவுமே எளிமை இல்லைதான். ஆனால் அனைத்துமே சாத்தியம்தான்.
எமக்காக மண்ணிற்குள் விதையானவர்களை நினைவு கூர்வோம்
தமிழ் மக்களுக்காக
தமிழ் மக்களுக்காக
இவர்கள் இதுவரை
விதைத்தது என்ன?
அறுவடை செய்தது என்ன?
யாராவது சொல்லுங்களேன் பிளீஸ்
சுமந்திரன் - ஆறு தமிழர் 30 வருடமாக சிறையில் இருந்தபோது
சுமந்திரன் - ஆறு தமிழர் 30 வருடமாக சிறையில் இருந்தபோது அவர்களை விடுதலை செய்யச்சொல்லி நாம் ஒருதடவைகூட கேட்கவில்லை. இப்போது அவர்களை சிறப்புமுகாமில் அடைத்திருக்கிறார்கள். இப்பவாவது ஒரு அறிக்கை விடுவமா ஐயா?
சம்பந்தர் ஐயா – விடலாம்தான். ஆனால் அப்புறம் இந்திய தூதர் கோபித்தால் என்ன செய்வது?
சுமந்திரன் - இல்லை ஐயா, அண்மையில் கொழும்பில் விடுதலையான எட்டு அரசியல் கைதிகளுக்கு லைக்கா முதலாளி உரிமை கோருகிறார். இவர்களுக்காவது நாம் ஒரு குரல் கொடுப்போம். எலெக்சன் வேற வரப்போகுது. போற போக்கைப் பார்த்தால் அடுத்த எலெக்சனில் லைக்கா முதலாளி எம்.பி யாகிவிடுவாரோ என்று பயமாய் இருக்கு.
சம்பந்தர் ஐயா – நீர் சொல்ல வார பிரச்சனை எனக்கு புரியுது. ஆனால் எங்கள் கஸ்டம் இந்திய தூதருக்கு புரியுதில்லையே? நான் என்ன செய்வது?
சுமந்திரன் - மாவீரர் தினம் வருகுது. அதற்காவது ஒரு அறிக்கை கொடுப்பமா ஐயா?
சம்பந்தா ஐயா – மாவீரர் தினத்திற்கு வெளிப்படையா அறிக்கை விட்டால் இந்திய அரசுக்கு பிடிக்காது. அதனால் நீர் ஏதாவது ஒரு மாவீரர் வீட்டுக்கு ரகசியமாக சென்று விளக்கு ஏற்றிவிட்டு வாரும்.
😂😂
கேள்வி – புலம்பெயர்ந்த இளையவரின் பேச்சை
கேள்வி – புலம்பெயர்ந்த இளையவரின் பேச்சை பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அதை இகழ்வது ஏன்?
பதில் - எல்லோரிடமும் பேசிப் புரிய வைக்க முயலாதீர்கள். ஏனெனில் சிலவேளை முன்னால் இருப்பது எருமையாககூட இருக்கலாம்.
குறிப்பு - இவர்களை எருமையுடன் ஒப்பிட்டமைக்கு எருமையிடம் மன்னிப்பு கோருகிறேன். ஏனெனில் முட்டாள் மனிதனை “எருமை” என்று திட்ட முடியும். ஆனால் முட்டாள் எருமையை “மனிதன்” என்று திட்ட முடியாது அல்லவா? 😂
சரி. விடயத்திற்கு வருகிறேன்.
அன்று உலகம் பூராவும் இடம்பெயர்ந்த யூதர்கள் தமக்கான தாயகத்தை கோரியபோது எந்தவொரு யூதனும் இஸ்ரவேலில் வந்து நின்று குரல் கொடுக்கும்படி கூறவில்லை.
இன்று கனடாவில் இருந்து சீக்கியர் தமது தாயக விடுதலைக்காக குரல் கொடுக்கும்போது பஞ்சாபில் வந்து குரல் கொடுக்கும்படி எந்த சீக்கியனும் கூறுவதில்லை.
ஆனால் புலம்பெயர்ந்த தமிழர் தாயகத்திற்காக குரல் கொடுக்கும்போது இலங்கையில் வந்து நின்று குரல் கொடுக்கும்படி நக்கலாக கூறுகின்றனர்.
புலத்தில் குரல் கொடுப்பவர்களை நசுக்க முடியாத காரணத்தால் அவர்களை நசுக்குவதற்காக கோத்தபாயா ராஜபக்சா இலங்கைக்கு வருமாறு அழைத்தார்.
அவருடைய அழைப்பிற்கும் இவர்களுடைய அழைப்பிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
ஈழத் தமிழரில் சுமார் ஏழு லட்சம் பேர் புலத்தில் இருக்கின்றனர். அதாவது மூன்றில் ஒன்று பங்கினர் இருக்கின்றனர்.
அவர்கள் தாயத்திற்காக குரல் கொடுக்க தாயகத்திற்கு வர வேண்டும் எனக் கோருவது அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்.
எனவே தமிழன் எங்கிருந்து குரல் கொடுக்கிறான் என்று பார்க்காதீர்கள். அவன் தமிழின விடுதலைக்காக குரல் கொடுக்கிறானா என்பதை மட்டும் பாருங்கள்.
இந்தியா சென்று பாடிய சிங்களப் பொப் பாடகிக்கு
இந்தியா சென்று பாடிய சிங்களப் பொப் பாடகிக்கு கொழும்பில் வீடு கட்ட பல கோடி ரூபா பெறுமதியான காணி வழங்கிய சிங்கள அரசு,
பிலிப்பைன்ஸ் சென்று பல சாதனை புரிந்த தமிழ் பெண் அகிலத்திருநாயகிக்கு வழங்கிய பரிசு என்ன?
மகிந்த ஆட்சியில் இருந்தபோது ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்திற்கு கொழும்பு - 02 கொம்பனி தெருவில் வீடு ஒன்றை பரிசளித்துள்ளார்.
ஆனால் அதேவேளை குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இந்துகாதேவிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சா எந்த பரிசும் அளிக்கவில்லை.
இதற்கு பிரியந்த ஹேரத் சிங்களவர் , இந்துகாதேவி தமிழர் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் உண்டா?
தமிழ் மக்களுக்காக போராடியவர்களை
தமிழ் மக்களுக்காக போராடியவர்களை
தமிழ் மக்களின் நலனுக்காக அழித்தோம் என்றார்கள்.
அழித்துவிட்டு "வடக்கில் வசந்தம்” என்றார்கள் "கிழக்கில் உதயம்” என்றார்கள்
ஆனாலும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து
அந்த மாவீரர்களின் நினைவுகளை அகற்ற முடியவில்லை.
அவர்கள் மலர்களை நசுக்கலாம்
ஆனால் வசந்தம் வருவதை ஒருபோதும் நிறுத்த முடியாது
இலங்கை நீதித்துறை வரலாற்றில்
இலங்கை நீதித்துறை வரலாற்றில்
மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக தேர்வாகிய
மாதுரி நிரோசன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தடை அதை உடை
• தடை அதை உடை
மட்டக்கிளப்பு கிரான் தரவையில் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்ற அமைக்கப்பட்ட தூபி பொலிசாரால் உடைத்தெறியப்பட்டுள்ளது.
கொடிகாமம் பருத்திதுறை வீதியில் கட்டப்பட்டிருந்த மாவீரர் கொடிகள் அறுத்தெறியப்பட்டுள்ளன.
மாவீரர் நிகழ்வுகளை தடை செய்யுமாறு பொலிசார் நீதிமன்றில் கோரி வருகின்றனர்.
இறந்த தம் உறவுகளை நினைவுகூர்வதை தடை செய்யக்கூடாது என சட்டம் இருந்தும் சிங்கள அரசு அதை தடுப்பதற்கு பல விதங்களில் முயல்கிறது.
எத்தனை தடைகளை போட்டாலும் அத்தனை தடைகளையும் தகர்த்து தமக்காக மரணித்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவு கூர்வர்.
இதுவே வரலாறாக பதிவு செய்யப்படும்.
மாணவன் செந்தூரனின் 8வது நினைவு தினம்!
மாணவன் செந்தூரனின் 8வது நினைவு தினம்!
நவம்பர் 7 திகதிக்கு முன்னர் சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று 2015ல் சம்பந்தர் ஐயா கூறியிருந்தார்.
ஆனால் அவர் கூறியபடி கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில்தான் நவம்பர் 26 ம் திகதி சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தான்.
சம்பந்தர் ஐயா சொன்ன நவம்பர் 7ம் திகதி ஒவ்வொரு வருடமும் வருகிறது. ஆனால் சிறைக் கைதிகள்தான் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும் கைதிகள் செந்தூரனின் தந்தையோ அல்லது சகோதரனோ இல்லை. அல்லது அவனது நண்பர்களோ இல்லை.
செந்தூரன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. அவன் எந்தவொரு அரசியல் கட்சி தலைவனும் இல்லை.
இருப்பினும் அவர்களுக்கு இல்லாத கைதிகள் விடுதலை பற்றிய கவலை அவனுக்கு இருந்தது.
செந்தூரன் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் படித்து பட்டம் பெற்று சுக வாழ்வை வாழ்ந்திருக்கலாம்.
அல்லது வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம்
அல்லது இன்று சிலர் செய்வதுபோல் நடிகர்களுக்கு 30 அடியில் கட்அவுட் கட்டி மகிழ்ந்திருக்கலாம்.
ஆனால் மாணவன் செந்தூரன் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக தன் உயிரை கொடுத்துள்ளான்.
தன் மகன் தன்னை பிற்காலத்தில் பார்த்துக்கொள்வான் என்று செந்தூரனின் தாய் கனவு கண்டிருப்பார்.
தன் சகோதரன் தங்களை வாழவைப்பான் என்று செந்தூரனின் சகோதரிகள் நினைத்திருப்பார்கள்.
ஆனால் செந்தூரன் தன்னை பெற்று வளர்த்த தாயின் கனவை நினைக்கவில்லை.
தன் கூடப் பிறந்த சகோதரிகளின் விருப்பத்தை நினைக்கவில்லை.
அவனுடைய நினைவு எல்லாம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே.
அதற்காக அவன் தேர்ந்தெடுத்த பாதை தவறாக இருக்கலாம்.
ஆனால் இந்த சின்ன வயதில் அவன் செய்த அர்ப்பணிப்பு மகத்தானது.
செந்தூரனை நினைவு கூர்வோம்!
குறிப்பு- 26.11.2023 செந்தூரனின் 8வது நினைவு தினமாகும்.
19.11.2023யன்று பொலிசாரின் சித்திரவதை
19.11.2023யன்று பொலிசாரின் சித்திரவதை காரணமாக சித்தங்கேணி இளைஞர் அலெக்ஸ் உயிரிழந்தார்.
இது தொடர்பாக இரண்டு பொலிசாரை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20.10.2016 யன்று பொலிசாரின் துப்பாக்கிசூடு காரணமாக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சன் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை இம் இரு மாணவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. அவர்களை கொன்ற பொலிசார் தண்டிக்கப்படவும் இல்லை.
எனவே சித்தங்கேணியில் கொல்லப்பட்ட இளைஞருக்கு நீதி கிடைக்கும் என்றோ அல்லது அவரைக் கொன்ற பொலிசார் தண்டிக்கப்படுவார்கள் என்றோ எப்படி நம்புவது?
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பவர்கள் தமிழருக்குரிய சட்ட நீதி கிடைக்காமைக்கு என்ன கூறப்போகிறார்கள்?
அரசுக்கு எதிராக தனிமனிதர் போராடினால்
அரசுக்கு எதிராக தனிமனிதர் போராடினால் அவரை “சமூகவிரோதி” என்பார்கள்.
அரசுக்கு எதிராக ஒரு இயக்கமாக போராடினால் “தீவிரவாதி” அல்லது “பயங்கரவாதி” என்பார்கள்.
ஆனால் மக்கள் தமக்காக போராடுபவர்களை “போராளிகள்” என்பார்கள்.
தமக்காக மரணிப்பவர்களை “மாவீரர்கள்” என போற்றுவர்.
அடுத்த சந்ததியும் மாவீரர்களை நினைவு கொள்வது இதனால்தான்.
இவர் இழைத்த தவறுகளில்
இவர் இழைத்த தவறுகளில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசை ஆதரித்த இவர் தவறை யாராலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
சிலர் எம்மை "திராவிடர்" என்கின்றனர்.
சிலர் எம்மை "திராவிடர்" என்கின்றனர்.
சிலர் எம்மை "இந்து" என்கின்றனர்
ஆனால் சீமான் எம்மை “நாம் தமிழர்” என்கிறார்.
அதனால்தான் அவர் அதிகம் விமர்சிக்கப்படுகின்றார்.
எதிரி எவ்வளவு பெரிது என்பது முக்கியம் இல்லை.
எதிரி எவ்வளவு பெரிது என்பது முக்கியம் இல்லை.
எதிர்க்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்.
வரிசையாக வரும் எறும்புக்கூட்டத்தில்
முன்னால் வரும் ஒரு எறும்பை நசுக்கிப் போட்டால்
பின்னால் வரும் எறும்புகள் திரும்பி ஓடுவதில்லை.
தொடர்ந்து முன்னோக்கி வரும்.
ஒன்றரை லட்சம் தமிழரை கொன்று குவித்துவிட்டால்
தமிழ் இனம் வீழ்ந்து கிடந்துவிடுமா?
முதலில் தந்தை செல்வா தலைமையை ஏற்று செயற்பட்டவர்
முதலில் தந்தை செல்வா தலைமையை ஏற்று செயற்பட்டவர்
பின்னர் அமிர்தலிங்கம் தலைமையை ஏற்று செயற்பட்டவர்
அதன் பின்னர் பிரபாகரன் தலைமையை ஏற்று செயற்பட்டவர்
இப்போது துவாராகா தலைமையை ஏற்று செயற்படப்போவதாக கூறுகிறார்.
நல்லது. யார் தலைமையை தான் ஏற்கிறேன் என்று கூற அவருக்கு முழு உரிமை உண்டு.
ஆனால் துவாராகாவை விட வயதும் அனுபவமும் மிக்க தானே தலைமை ஏற்றிருக்கலாமே. எதற்காக 14 ஆண்டுகள் துவாரகாவிற்காக காத்து இருந்தார்?
இந்த துவாரகா கதை ஆரம்பித்தவுடனேயே சிலர் இதன் கதை வசனம் தயாரிப்பு எல்லாம் இந்திய உளவுப்படை என்றனர்.
அதை நான் அப்போது நம்பவில்லை. ஆனால் இப்போது இந்தியாவின் துணையுடனே துவாராகா போராடுவாள் என்று இவர் கூறியிருப்பது சந்தேகத்தை தருகிறது.
சரி. துவாராகா இந்தியாவின் துணையுடன் போராடுவது இருக்கட்டும். துவாராகா தலைமையில் புலிகளையும் தமிழீழத்தையும் இந்தியா வெளிப்படையாக அங்கீகரிக்க தயாரா?
கடவுள் இருக்கிறார் என்று கூறுபவர்களே
கடவுள் இருக்கிறார் என்று கூறுபவர்களே கடவுள் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
மாறாக, கடவுள் இல்லை என்று கூறுபவர்களிடம் கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கும்படி கேட்பதில்லை.
அதுபோல் பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுபவர்களே அவர் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
மாறாக, பிரபாகரன் இல்லை என்று கூறுபவர்களிடம் அவர் இல்லை என்பதை நிரூபியுங்கள் என கேட்பது முட்டாள்தனம்.
பிரபாகரன் இருக்கிறார், அல்லது அவர் இல்லை என்பதற்கப்பால் அவர் இருந்தால் நல்லது என்று நினைக்கும் பலர் இப்போது உண்டு.
அவ்வாறு பலர் எண்ணுவதையே சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்த முனைகின்றனர்.
இதுவே பிரபாகரன் இருக்கிறார் ,துவாரகா வருகிறார் என்ற கதைகளின் அடிப்படை.
ஆனால் இவ்வாறு துவாராகா வருகிறார் என்று கூறுவது தமிழ் மக்களுக்கு அளிக்கும் நன்மையைவிட இலங்கை இந்திய அரசுகளுக்கே அதிக பயன் அளிக்கும் என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர்.
அதைவிட தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பிரபாகரன் மீதான நன்மதிப்பிற்கும் பங்கம் விளைவிக்கப்போகிறது என்பதையும்கூட இவர்கள் காண தவறுகின்றனர்.
வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை.
வழி நடத்த தலைவர் இல்லை.
பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை.
ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது?
எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது.
ஆனால் இரண்டு நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது.
ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல.
தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 203வது பிறந்தநாள். .
•தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 203வது பிறந்தநாள். .
தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார்.
ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார்.
அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் அவர்களின் 203வது பிறந்ததினம் இன்று ஆகும்.
உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு.
கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு.
இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர்.
மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.
அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார்.
1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார்.
1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார்.
அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார்.
1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.
நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார்.
தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார்.
மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.
தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர்.
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது.
மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.
எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.
மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.
போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை
“போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை
அவர்கள் எமக்காக மாண்ட மாவீரர்கள்”
உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் ஒன்று திரண்டு நினைவு கூர்ந்ததன் மூலம் கூறியிருக்கும் செய்தி இதுதான்.
இனியாவது சிங்கள , இந்திய அரசுகள் இதனை புரிந்துகொள்ளுமா?
புலம்பெயர்ந்த தமிழர்கள்
புலம்பெயர்ந்த தமிழர்கள்
உலகத்திற்கு சொல்லும் செய்தி இதுதான்,
“ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம்
நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம்.
ஆனால் ஒருபோதும் எமது இயக்கத்தை நிறுத்திவிட மாட்டோம்”
உயிர்களை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்
உடமைகளை இழந்தோம்
ஆனால் உணர்வுகளை இழக்கவில்லை
எமக்காக மாண்டவர்கள் நாளில்
உறுதியாக உரத்து கூறுகின்றோம்
மீண்டும் எழுவோம் முன்பைவிட பலமாய்
எந்தப் புலனாய்வு பல்கலைக்கழகத்திலும் பயிலவில்லை.
எந்தப் புலனாய்வு பல்கலைக்கழகத்திலும் பயிலவில்லை. பயிற்சியும் பெற்றதில்லை.
அதி நவீன கருவிகள்கூட இருந்திருக்கவில்லை. இன்றைய கைத்தோலைபேசிகள்கூட அப்போது இருக்கவில்லை.
ஆனாலும் ஒரு சிறிய காட்டிற்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வின் அனைத்து சதி முயற்சிகளையும் எப்படி இவர் முறியடித்தார்?
அதிசயம். ஆனால் உண்மை. வரலாறு இவரை இப்படித்தான் பதிவு செய்யப் போகிறது.
மரணித்தவர் அனைவர் மீதும் வருத்தம் இருக்கும்.
ஆனால் ஒரு சிலர் மீதுதான் இப்போது இருந்தால் நல்லாய் இருக்கும் என நினைக்கத் தோன்றும்.
அந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர் என்பது நிஜம்.
இன்று இவர் இருந்திருந்தால் இந்திய ஆதரவில் (போலி) துவாராகா வருவதை முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பார்.
போராட்டம் மகிழ்சிகரமானது
"போராட்டம் மகிழ்சிகரமானது" என்றார் காரல் மார்க்ஸ்.
ஆம். அதனால்தான் போராளிகள் எப்போதும் அழகானவர்களாக இருக்கிறார்கள்.
சரி , அவர்களை போராட வைப்பது எது?
"உணர்ச்சி"யாக இருந்தால் சிறிது காலத்தில் மறைந்துவிடும்
"உணர்வு" தான் அவர்களை இறக்கும்வரை போராட வைக்கிறது.
இரண்டு கை உள்ள சிலர் எதிரியை கைகூப்பி வணங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கையை இழந்த பின்னும் இவர்களால் எப்படி போராட முடிகிறது?
இவர்கள் கைகளை இழந்தார்கள். ஆனால் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.
அதனால்தான் இரண்டு கால் உள்ள சிலரே அடிமையாக வீழ்ந்து கிடக்கையில் ஒரு காலை இழந்த பின்னும் இவர்களால் மீண்டும் எழுந்து நிற்க முடிகிறது
நாம்,
உயிர்களை இழந்தோம்
உடமைகளை இழந்தோம்
ஆனால் உணர்வுகளை இழக்கவில்லை.
நாம் உணர்வுகளை இழக்கவில்லை என்ற இந்த செய்திதான் எம் எதிரிகளை அச்சம் கொள்ள வைக்கிறது.
சம்பந்தர் – என்ன தம்பி நேற்று மாவீரர்
சம்பந்தர் – என்ன தம்பி நேற்று மாவீரர் நிகழ்வில் பயங்கர கூட்டமாமே?
சுமந்திரன் - ஆம் ஐயா. எல்லா இடமும் சரியான கூட்டம்.
சம்பந்தர் – அப்ப என்ன செய்யலாம்? அடுத்த முறை இந்திய தூதரைச் சந்திக்கும்போது கோபப்படப் போகிறாரே?
சுமந்திரன் - இவர்களை கொன்றதால்தான் திருமலைக்கு சுதந்திரமாக சென்றுவர முடிகிறது என்று நீங்கள் கூறியிருக்கிறியள். நான் இவர்களின் தவறுகளையும் விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா வில் கூறியிருக்கிறேன். இதையெல்லாம் இந்திய தூதரிடம் கூறி சமாளிக்கலாம்தானே ஐயா?
சம்பந்தர் - இந்திய தூதரைச் சமாளிக்கலாம். ஆனால் இதையே தம்பி கஜன் அடுத்த தேர்தலில் மக்களிடம் கூறினால் என்ன செய்வது?
சுமந்திரன் - தேர்தலில் கூட்டங்களில் மாவீரர் பாடல்களை ஒலிபரப்பலாம். ஜனநாயகப் போராளிகள் கட்சிகாரர்களை நம்ம வித்தியாதரன் மூலம் எங்கள் மேடையில் ஏற்றலாம். இப்படி பல திட்டம் இருக்கு ஐயா
😂😂
மறந்து போகுமோ எம் மண்ணின் வாசனை
"மறந்து போகுமோ எம் மண்ணின் வாசனை
தொலைந்து போவமோ இந்த தூர தேசத்தில்
ஏக்கமுடன் நாம் எழுப்பும் குரல்
எம் உறவுகளுக்கு கேட்கிறதா?"
எத்தனை தடைகள், அத்தனையும் தமிழ் மக்களால் உடைக்கப்பட்டன.
எத்தனை இகழ்வு பேச்சுக்கள். அத்தனைக்கும் தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் பதில் அளித்தனர்.
மாவீரர்களை பயங்கரவாதிகள் என்றோ
மாவீரர்களை பாசிசவாதிகள் என்றோ
கூறி வருபவர்களுக்கு தேவை மக்கள் பதில் என்றால்
அதை மக்கள் போதிய அளவிற்கு வழங்கியுள்ளனர்.
சர்வதேசமே வியக்கும் அளவிற்கு ஒன்று திரண்டு தமக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர் தமிழ் மக்கள்.
குறிப்பாக வழக்கத்தைவிட இம்முறை அடுத்த சந்ததியினர் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
புலம்பெயர் ஈழத் தமிழரின் செயற்பாடுகள் தமக்கு உத்வேகத்தை கொடுத்ததாக புலம்பெயர் சீக்கியர்கள் கூறுகின்றனர்.
குர்திஷ் அமைப்புகள் புலம்பெயர் ஈழத் தமிழ் அமைப்புகளுடன் நட்புறவு பேண விரும்புகின்றன.
புலம்பெயர்ந்த தமிழர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேசத்திற்கு கூறும் செய்தி ஒன்றுதான். அது
ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம்
நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம்
ஆனால் ஒருபோதும் இயங்குவதை நிறுத்த மாட்டோம்!
வன்மையான கண்டனங்கள்.
• வன்மையான கண்டனங்கள்.
பெண் போராளிகள் போல் உடையணிந்திருந்தார்கள் என்று சிறுவர்கள் மீது விசாரணை ஆரம்பித்துள்ளது சிங்கள அரசு.
முதலாவது, இது பெண் போராளிகளின் சீருடை இல்லை.
இரண்டாவது இந்த உடைகளை அணியக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை.
அப்படியிருக்கையில் எதற்காக சிறுவர்கள் மீது விசாரணை?
மிரட்டுவதே பொலிசாரின் நோக்கம்.
இந்த மிரட்டலுக்கு இடங்கொடுக்கக் கூடாது.கொடுத்தால் அப்புறம் கோமணம் அணியக்கூட கேள்வி கேட்பார்கள்.
தமிழ் தலைவர்கள் உடனடியாக இதனைக் கண்டிக்க வேண்டும்.
சாதாரண உடையைக்கூட அணிவதற்கு தமிழருக்கு உரிமை இல்லை என்பதை சர்வ|தேசத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
Thursday, November 23, 2023
சிரித்துக்கொண்டே செருக்களம் புகுந்தனர்
சிரித்துக்கொண்டே செருக்களம் புகுந்தனர் என்ற
சங்க இலக்கிய வரிகளை உண்மைதான் என்று
எம் கண் முன்னே நிரூபித்துக் காட்டியவர்கள்.
மாவீரர் போர்க் அவர்களின் நினைவு தினம் 23.11.1990
Friday, November 17, 2023
தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
•தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்!
லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.
இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது.
சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார்.
இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்..
அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது.
இவர் கொல்லப்பட்டபோது இலங்கை அரசு உட்பட பல சர்வதேச நாடுகளும் கண்டித்தன.
ஒரு வெளிநாட்டு அமைச்சரை கொன்றது தவறு என்று அவர்கள் கூறினார்கள்.
ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு இறுமாப்பாக கூறியது.
இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல.
மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே.
ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை.
சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள்.
இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள்.
குறிப்பு - 02.11.2023 தமிழ்செல்வனின் நினைவுதினம் ஆகும்.
கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது?
•கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது?
தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை
ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது.
அதுமட்டுமல்ல,
குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை.
அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை.
இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை .
எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை.
கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை.
தமிழனும் ஒருவேளை கோழியாக பிறந்திருந்தால் தன் இனத்தை காக்க போராடியிருப்பானோ?
குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே?
குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை?
அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை.
குழந்தை- ஏன் வேலை போய்விட்டது?
அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள்.
மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது.
இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர்.
சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும்.
இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது.
இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை.
பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது.
ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள்.
எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும்.
எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்க முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார்.
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
குரைக்கும் நாய் கடிக்காதா?
• குரைக்கும் நாய் கடிக்காதா?
எல்லா தமிழர்களையும் வெட்டுவேன் என்று வீரம் பேசிய சிங்கள பிக்கு இரண்டு நாளில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இதில் இருந்து தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?
தமிழ் மக்கள் ஒன்று திரண்டு இனவெறியர்களை எதிர்க்க முடியும்.
அவ்வாறு ஒன்று திரண்டு எதிர்த்தால் அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை உருவாகும். அவர்கள் பின்வாங்குவார்கள்.
ஆம். தமிழ் மக்கள் ஒற்றுமையாக திரண்டால் அதிசயங்களை நிகழ்த்தலாம்.
வடக்கு கிழக்கில் இந்து கோயில்களை
வடக்கு கிழக்கில் இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகாரைகளை கட்டுகின்றனர்.
இந்து தமிழரை விரட்டிவிட்டு சிங்கள பௌத்தர்களை குடியேற்றுகின்றனர்.
இதையெல்லாம் இந்திய இந்து அமைச்சர் கண்டிக்கவில்லை.
மாறாக கண்டி சென்று சிங்கள மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெறுகின்றார்.
ஆனால் காசி அனந்தனும் மறவன்புலவு சச்சிதானந்தனும் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறுகின்றனர்.
இவர்களுக்கு மூளையே இல்லையா அல்லது தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்களா?
இந்திராகாந்தி இருந்திருந்தால்
•இந்திராகாந்தி இருந்திருந்தால்
தமிழீழம் கிடைத்திருக்குமா?
இந்திராகாந்தி அம்மையாரின் நினைவு தினமான நேற்று (31.10.23) அவர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என வழக்கம்போல் சிலர் எழுதியுள்ளனர்.
ஆனால் இந்திராகாந்தி அம்மையார் உயிரோடு இருந்திருந்தாலும் ராஜீவ் காந்தி செய்ததையே செய்திருப்பார் என்பதே உண்மையாகும்.
(1)பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்த இந்திராகாந்தி அம்மையார் தமிழீழ விடுதலையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை
(2)பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் அரபாத்திற்கு செங்கள வரவேற்பளித்த இந்திராகாந்தி அம்மையார் ஈழவிடுதலை இயக்கங்களை ஒருபோதும் சந்தித்ததில்லை.
(3) பாலஸ்தீன விடுதலை இயக்கம் வெளிப்படையாக இந்தியாவில் அலுவலகம் அமைத்து இயங்க அனுமதித்த இந்திராகாந்தி அம்மையார் ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டில் வெளிப்படையாக இயங்க அனுமதிக்கவில்லை.
(4) இலங்கையில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர் இருவரைக் கடத்தி சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் இயக்கம் கோரியபோது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு சம்மதித்தார். ஆனால் இந்திராகாந்தி அம்மையார் ஈபிஆர்எல்எவ்; தலைவர்களை பிடித்து அடித்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார்.
(5)இந்திராகாந்தி அம்மையார் நினைத்திருந்தால் ஈழ விடுதலை இயக்கங்களை ஒன்றினைத்து பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கியிருக்க முடியும்.
(6) ஆனால் அவரோ மொத்தம் 36 இயக்கங்களில் 5 இயக்கங்களுக்கு மட்டுமே அதுவும் தனித் தனியாகவே பயிற்சி கொடுத்தார்.
(7) இந்தியாவிடம் பயிற்சி பெற்ற மொத்த போராளிகளின் எண்ணிக்கை ஜந்நூறை தாண்டாது. அதுபோல் பயிற்சி பெற்ற 10 போராளிகளுக்கு தலா ஒரு ஆயுதம் என்ற அளவிலேயே ஆயுதமும் வழங்கப்பட்டது.
(😎 ஆயுதம் போதாது என்று இயக்கங்கள் கூறியபோது “ தரப்படும் ஆயுதம் தற்பாதுகாப்பிற்கேயொழிய தாக்குதலுக்கு அல்ல” என்று இந்தியா பதில் கூறியது.
(9)அதேவேளை இயக்கங்கள் தாங்களாக உலக சந்தைகளில் ஆயுதம் வாங்குவதையும் இந்தியா தடுத்தது. புளட் இயக்கம் இறக்குமதி செய்த 150 ரைபிள் துப்பாக்கிகளை இந்திய அரசு பறிமுதல் செய்தது.
(10) முழு இலங்கையையும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்திராகாந்தி அம்மையார் இயக்கங்களுக்கு சிறிதளவு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கினார்.
(11) பாகிஸ்தானை பிரித்து பலவீனப்படுத்தவே வங்க தேச விடுதலையை இந்திராகாந்தி அம்மையார் ஆதரித்தார். ஆனால் முழு இலங்கையையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் இருந்தமையினால் தமிழீழ விடுதலையை அவர் ஆதரிக்கவில்லை.
(12) எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழம் விடுதலை அடைந்தால் அது தமிழ்நாடு விடுதலைக்கு உத்வேகம் கொடுக்கும் என்ற அச்சம் இந்திராகாந்தி அம்மையார் உட்பட அனைத்து இந்திய தலைவர்களுக்கும் உண்டு.
(13) ஏனெனில் தமிழ்நாடு தனி நாடானால் இந்தியா சுக்கு நூறாக உடையும். எனவே இந்தியா உடைவதற்கு வழி வகுக்கும் தமிழீழ விடுதலைக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது.
எனவே இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைத்திருக்காது என்பதே உண்மையாகும்
இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர்
இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர் திருகோணமலை ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளார்.
ஆனால் இந்த இந்து ஆலயம் கொகன்ன விகாரை மேல் உள்ளது என்று சிங்களம் உரிமை கோரி வருவதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலை மண்ணில் உள்ள நீலியம்மன் சைவ கோவில் முழுமையாக சிதைக்கப்பட்டு அங்கு 'பாசன பப்பாத ராஜமஹா' என்கின்ற விகாரையை உருவாக்கி இருக்கின்றார்கள் என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
அது மட்டுமல்ல, குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு அதே இடத்தில "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள் என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலையில் அரிசிமலையில் தமிழ் நிலங்களில் 'ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரை' கட்டப்பட்டு இருப்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலை மண்ணில் தென்னமரவடி கந்தசாமி மலை வழிபாடு தடை செய்யப்பட்டு அங்கு பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலை மண்ணில் 64ம் கட்டை (பச்சனூர் மலை) விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டுப்பட்டு வருகின்றது என்பதையாவது நிதி அமைச்சர் அறிவாரா?
பெரியகுளம் பகுதி தமிழர் நிலங்களில் பொரலுகந்த ராஜமகா விகாரை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலை மண்ணில் ராஜவந்தான் மலை கோவில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
தமிழர் நிலமான திருகோணமலையில் 74 ற்கு மேற்பட்ட பிரதேசங்களை பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் இடங்களாக சிங்கள அரசு அடையப்படுத்தி இருக்கிறது.
திருக்கோணேஸ்வரம் கோவில் சூழல் முழுமையாக சிங்கள மயப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இங்கு வியாபாரம் செய்வதற்காக இரத்தினபுரியிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்
கன்னியா , குச்சவெளி , கும்புறுப்பிட்டி , சாம்பல்தீவு , சம்பூர் மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் என பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை மாவட்டம் சீரழிந்து வருகின்றது
இந்திய நிதி அமைச்சர் ஒரு இந்து மட்டுமல்ல தமிழரும் கூட. அவர் திருமலை மாவட்டத்தில் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுவது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
ஆம். நடவடிக்கை எடுத்துள்ளார். திருமலையில் இந்திய வங்கி ஒன்றை திறந்து வைத்துள்ளார்.
சயிக்கிள் ரிக்ஸாவில் சென்று
சயிக்கிள் ரிக்ஸாவில் சென்று பிரச்சாரம் செய்த கலைஞரின் குடும்பம் இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்கார குடும்பம்.
கலைஞரை சயிக்கிள் ரிக்ஸாவில் அழைத்துச் சென்ற அந்த ரிக்ஸா ஓட்டுனரின் குடும்பம் இன்று என்ன நிலையில் உள்ளது என்பதை யாராவது அறிய தருவீர்களா?
இருவரும் பெண்கள்.
இருவரும் பெண்கள். இருவரும் தாம் பெண்களுக்காக குரல் கொடுப்பதாக கூறுகின்றனர்.
ஆம். உண்மைதான். இருவரும் மணிப்பூரில் பெண்களுக்காக குரல் கொடுத்தனர்.
தற்போது பாலஸ்தீன பெண்களுக்காகவும் உரத்து குரல் கொடுத்துள்ளனர்.
ஆனால் பாலஸ்தீன பெண்களுக்காக குரல் கொடுக்கும் இவர்கள் ஈழத்தில் தமிழ் பெண்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
ஈழத் தமிழ் பெண்களை இவர்கள் பெண்களாக கருத வில்லையா அல்லது மனிதர்களாகவே கருதவில்லையா?
தெலுங்கன் தமிழ் பேசினால் அவன் “தமிழர்”
தெலுங்கன் தமிழ் பேசினால் அவன் “தமிழர்”
தமிழன் தமிழ் பேசினால் அவன் “திராவிடர்”
அப்படித்தானே பேராசிரியரே?
அது சரி,
தமிழனுக்கு எதற்கு “திராவிட முழக்கம்”?
“தமிழ் முழக்கம்” ஏன் இருக்கக்கூடாது?
விளையாட்டுதான்,
விளையாட்டுதான்,
இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
ஒரு காலத்தில் சாம்பியனாக இருந்த டீம் என்றும் பார்க்காமல் இப்படியா அடித்து துவைப்பது?
கிரிக்கட்டா விளையாடினார்கள்? கிட்டி பொல்லு விளையாடியிருந்தால்கூட இப்படி ஒரு தோல்வி வந்திராதே?
இப்படி அசிங்கப்படுத்தினால் அப்புறம் எந்த முகத்துடன் நாடு திரும்புவது?
😂😂
நாம் தோற்றுப் போய்விட்டோமா?
நாம் தோற்றுப் போய்விட்டோமா?
குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக பத்து எண்ணுவதற்குள் மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும்.
அதேபோல் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மாறாக மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் அது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் அழிவு என்பது ஒரு பின்னடைவேயொழிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான தோல்வி அல்ல.
ஏனெனில் போராட்டம் வெற்றியை தராது போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுபுறத்து உண்மையாகும்.
பொதுவாகவே ஒரு மனிதன் பிறக்கும்போதே போராட்டத்துடனே பிறக்கிறான்.
அவன் பூமியில் பிறந்தவுடன் செய்யும் முதல் போராட்டமே அழுகைதான். அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்கிறார்கள்.
அதுபோலவே பிறக்கும்போதே போராட்டத்துடன் பிறக்கும் மனிதன் இறக்கும்வரை போராட்டத்துடனே வாழ்கிறான்.
ஒருவன் போராட தயங்கினால் அவன் வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்துவிடுவான்.
எப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும்.
எனவே தமிழ் இனமும் அழியாமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறது என்றால் அது இத்தனை காலமும் போராடி வருகின்றது என்றே பொருள்.
எனவே இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டுமென்றால் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அடிப்படையாகும்.
ஏடறிந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழ் இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக எல்லாம் தொடர்ந்து போராடியதை அறிய முடியும்.
இத்தகைய வீரம் செறிந்த போராட்ட குணாம்சமே தொடர்ந்தும் இலங்கை மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் இனத்தை போராட வைக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
எனவேதான் தமிழ் மக்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றிவிழாக் கொண்டாடியவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை.
அதனால்தான் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோல்வியை ஒத்துக்கொள்ளும்டி தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றனர்.
ஆனால் அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.
ஏனெனில் தமிழ் மக்கள் இதுவரை தோற்கவில்லை. இனியும் தோற்கப்போவதில்லை.
குறிப்பு - இதைப் படித்தவுடன் இத்தனை காலமும் போராடி கண்ட பலன் என்ன அழிவைத் தவிர என்று சிலர் மனதில் கேள்வி எழுக்கூடும். அவர்களுக்கான பதில் அடுத்த பதிவில்.
ஒரு டவுட்!
ஒரு டவுட்!
நாய்க்குட்டிகள் இறைச்சித் துண்டு கிடைக்கும் என நினைத்து எஜமானுக்கு வாலாட்டுகின்றனவா? அல்லது,
நாய்க்குட்டிகள் வாலாட்டுவதால் அவற்றுக்கு எஜமான் இறைச்சித் துண்டுகளை வீசுகின்றாரா?
ராஜீவ் காந்தி ஒரு சிங்களவனைக்கூட
ராஜீவ் காந்தி ஒரு சிங்களவனைக்கூட கொலை செய்யவில்லை.
ஆனாலும் சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்தியை மண்டையில் அடித்து கொல்ல முயன்றான்.
அந்த சிங்களவனை சிங்கள அரசு பொதுமன்னிப்பில் விடுதலை செய்தபோது ஒரு காங்கிரஸ்காரன்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது ஏன்?
ஆழ்ந்த இரங்கல்
• ஆழ்ந்த இரங்கல்
சிறந்த தமிழத்தேசிய செயற்பாட்டாளரும் ஈழத்தமிழரின் உறுதியான ஆதரவாளருமான
சீதையின் மைந்தன் அவர்கள் காலமானார்.
அன்னை பூபதியின் மரணம்!
•அன்னை பூபதியின் மரணம்!
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
அன்னை பூபதி தனது 56 வயதில் 19.03.1988 யன்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.
சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 யன்று அவர் மரணமடைந்தார்.
அன்னைபூபதி ஒரு சாதாரண தமிழ்பெண். அவர் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடினார்.
ஆனாலும் காந்தி தேசம் என்று கூறப்பட்ட இந்திய அரசு அவரின் போராட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை.
மாறாக அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளை கைது செய்து மிரட்டியது.
இவ்வாறு அன்னை பூபதியைக் கொன்றவர்கள் இப்போது கொஞ்சம்கூட வெட்கம் இன்றி வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவுகிறார்கள்.
ஆனால், அன்னை பூபதி தன் மரணத்தின் மூலம் எமக்கு இரண்டு பாடங்களை கற்பித்துள்ளார்.
முதலாவது, இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது.
இரண்டாவது, அகிம்சை போராட்டம் தீர்வை பெற்று தராது என்பது.
இந்த இரண்டு பாடங்களையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
இதுவே அன்னை பூபதிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
குறிப்பு - இன்று (03.11.23) அன்னை பூபதியின் பிறந்த தினம் ஆகும்
மாலைதீவு சம்பவம்
•மாலைதீவு சம்பவம்
நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?
மாலைதீவில் நடந்தது புரட்சி அல்ல. அது எதிர்க்கட்சி தலைவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி.
அவர் ஆட்சி அமைத்தால் மாலைதீவை பின்தளமாக பயன்படுத்த தம்மை அனுமதிப்பார் என்ற நம்பிக்கையில் புளட் போராளிகள் உதவி புரிந்தனர்.
உண்மையில் பளட் இயக்கத்திற்கு முன்னரே இப்படி ஒரு சிந்தனை TEA இயக்க தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு இருந்தது.
அவர் மாலைதீவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதனை பின்தளமாக பயன்படுத்த முடியுமா என சிந்தித்தார்.
மாலைதீவு சம்பவம் நடந்த பின்னர் அவர் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ள தீவு ஒன்றை இவ்வாறு பெற முடியுமா என்று முயற்சி செய்தார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்தியாவை பின்தளமாக தொடர்ந்து பயன்படுத்த போராளி இயக்கங்களால் முடியவில்லை என்பதே.
அதனால் அவர்கள் இதற்காக வேறு இடங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னரே இந்திய அரசு புலிகளுக்கும் ஈழத் தமிழருக்கும் எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டது என சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அதற்கு முன்னரே இந்திய அரசு போராளிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தது என்பதற்கு சிறந்த உதாரணம் மாலைதீவு சம்பவம் ஆகும்.
இந்தியாவில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும்கூட போராளிகள் பின்தளமாக பயன்படுத்த இந்திய அரசு அனுமதிக்காது என்பதற்கும் மாலைதீவு சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
ஏனெனில் மாலைதீவு அரசு இந்திய அரசிடம் உதவி கோராத நிலையிலும் இந்திய அரசு வலியவந்து புளட் போராளிகளை கொன்று ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அடக்கியது.
இதற்கு முன்னர் இபிஆர்எல்எவ் இயக்கத்தினர் யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர் இருவரைக் கடத்தியிருந்தனர்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வந்தார்.
ஆனால் இந்திராகாந்தி ஜெயவர்த்தனா கோராமலே இபிஆர்எல்எவ் தலைவர்களை பிடித்து சென்னை ஹோட்டல் ஒன்றில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார்.
ஆனால் இபிஆர்எல்எவ் தலைவர்கள் இன்றும் இந்திய விசுவாசிகளாகவே இருந்து வருகின்றனர்.
குறிப்பு – இந்தியாவுக்கு எதிராக மாலைதீவில் பின்தளம் அமைக்க முயற்சி செய்து மரணம் அடைந்த புளட் போராளிகளுக்கு எமது அஞ்சலிகள். அவர்கள் தியாகம் என்றும் மதிக்கப்பட வேண்டியதே.
தமிழா!
தமிழா!
மடிந்த போராளிகள்
எமக்காக ஏங்கினார்கள்
எமக்காக போராடினார்கள்
இறுதிவரை உறுதிமாறாமல்
எமக்காகவே இறந்தார்கள்
எம் தமிழ் மொழிக்காகவும்
எம் தமிழ் இனத்திற்காகவும்
எம் தமிழ் மண்ணிற்காகவும்
தொடர்ந்து இயங்கினார்களே.
இன்று நாம் இயங்க வேண்டாமா?
மயங்கியும் தயங்கியும்
அலைந்தும் குலைந்தும்
நிலையில்லாது இயங்கும் நாம்
நமக்காக
நம்மவருக்காக
நம்முடையதற்காக
இயங்க வேண்டாமா?
அதற்கென நாம் இணைய வேண்டாமா?
அதற்குரிய உறுதியை
அதற்குரிய சூழினை
இன்று நாம் எம் உள்ளத்தில்
மேற்கொள்ள வேண்டாமா?
அவ் உறுதிக்குரிய வல்லுணர்வினை
மாவீரர்களின் நினைவுகளில் இருந்து பெறுவோமாக அதன்வழி நாம் பெருமையும் உறுவோமாக
முதலில் உரிமைகளை இழந்தோம்
பின்னர் உடமைகளை இழந்தோம்
இறுதியாக உயிர்களை இழந்தோம்
ஆனால் உணர்வுகளை இழக்கவில்லையே
மீண்டும் எழுவோம்
முன்னைவிட வலிமையாக எழுவோம் என்று கூறியதும் ஓடிவந்து வேண்டாம் இன்னொரு போர் என்பர் புலிகளாலேயே முடியவில்லை என்பர்
இனி யாரால்தான் முடியும் என்றும் கேட்பர்
புலிகள்போல் மீண்டும் வரமுடியாமல் போகலாம் ஆனால் புலிகளைவிட
அதிக தூரம் நிச்சயம் எம்மால் பார்க்க முடியும்
ஏனெனில்,
எமக்காக மாண்டவர்கள் தங்கள் தோள்களில் அல்லவா எம்மை தாங்கி நிற்கின்றனர்
என்னபடி நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்டாலும்
தாம் சொன்னபடி எதுவும் தராமல் ஏமாற்றுவதையே முதற்படியாய் கொண்டுவிட்டனர் இலங்கை அரசினர் அவர்தம் காலடியை நக்கியே நம் தலைவர்கள் அடி பணிந்து இருக்கின்றனர் -
தமிழா!
இன்னும் இன்னபடி நீ வீழ்ந்து கிடந்தால்
எப்படித்தான் மேற்படியை எட்டுவாயோ?
எத்தனை நாள்
எத்தனை ஆண்டு
எத்தனை பேர்
எத்தனை போர்
எத்தனை தோள் திரண்டு எழுவதோ
எத்தனை பேச்சு
எத்தனை பாட்டு
எத்தனைதாம் எழுதிக் குவிப்பதோ
எத்தனை நாள் நாம் பொறுப்பது
எத்தனை பேர் நாம் இறப்பது
எத்தனைநாள் இன்னும் நாம் அடிமையாக கிடப்பதோ?
எமது மொழி
எமது இனம்
எமது மண்
மீட்பதற்கு நாமே சோர்ந்து போனால்
பின் யார்தான் முன்வருவர் எமக்காக
எம் இனம் இன்று தாழ்வுற்றுக் கிடக்கிறது
சிந்தனைத் திறன் இல்லாது சீரழிந்து குலைகிறது
பிறர் இதை எடுத்துச்சொன்னாலும் உணர்வு பெறாமலே இருக்கிறது
எவ்வளவுதான் உருகி உருகி எடுத்து கூறினாலும் செயல்படாது அடிமையாய் பணிந்து கிடக்கிறது
தமிழர் தலைமையோ பதவி நலன்களுக்காக
நம் பகைவனிடம் அண்டிப் பிழைக்கின்றது
அண்டிப்பிழைக்கும் தலைமையிடம்
இன் சொல்லால் சொன்னோம்
எரிச்சலுடனும் கூறியுள்ளோம்
புண் சொல்லும் வீசினோம்
புண்படவும் சொல்லிவிட்டோம்
என்னவகை சொன்னாலும் அவர் தம் உடலில் சின்னதொரு மாற்றமும் இன்னும் ஏற்படவில்லையே
தம்மை எமது தலைவர்கள் என்றார்கள்
எம் மத்தியில் வருவதற்கு அவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்
5 கோடி ரூபா சொகுசு வாகனம் வேண்டும்
கொழும்பில் சொகுசு பங்களா வேண்டும்
தேர்தலில் தம்மை தெரிவு செய்தால்
ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார்கள்
அவர்களுக்கு எல்லாம் வந்தது
ஆனால் எமக்குத்தான் ஒரு ம- - ம் வரவில்லையே!
யுத்தம் முடிந்து 14 வருடமாச்சு
காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம்பெயர்ந்தோர் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை
அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை
ஆனால்,
கிழக்கில் சிங்கள குடியேற்றம்
வடக்கில் பௌத்த விகாரைகள்
நாளுக்கு நாள் அரங்கேறுது
ஒருபுறம் சிங்கள ஆக்கிரமிப்பு
மறுபுறம் இந்திய ஆக்கிரமிப்பு
தமிழன் தன் மண்ணில் நீட்டி நிமிர்ந்து
நிம்மதியாக உறங்க முடியவில்லையே
ஏய் தமிழா!
அன்று ஒரு பெரு நிலம் உனக்கிருந்தது அறிவாயோ இன்று அரைக் காணி நிலத்திற்கு வேலிச் சண்டை போடுகிறாயே
எல்லா இனமும் தாய் மொழியில் பேசும்
நீ பேசுவது மொழிகளின் தாய் மொழியில் என்பதையாவது நீ அறிவாயோ?
நீ வீழ்ந்து கிடப்பது
எதிரியின் பலத்தால் அல்ல
உன் பலத்தை அறியாததால்
தன் பலம் அறியாமல் யானை கோவில் வாசலில் பிச்சை எடுப்பதுபோல்
உன் பலம் அறியாமல் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறாய்
போர்த்துக்கேயரை விரட்டியவன் நீ
ஒல்லாந்தரை விரட்டியவன் நீ
ஆங்கிலேயரை விரட்டியவன் நீ
ஆக்கிரமிப்பாளர்கள் எல்லாரையும் விரட்டிய
வீரம் செறிந்த வரலாற்றைக் கொண்டவன் நீ.
ஆனால் இன்று,
பல்லி சொல்லுக்கு பலன் அறிய
பஞ்சாங்கத்தை தேடிக்கொண்டிருக்கிறாயே?
குட்டக் குட்டக் குனிந்துகொடுக்கும் முட்டாள் தமிழனே மூடப் பிறவியே ஒன்று கேள்
நீ ஒரு ஊமைப் பிறவியல்லன்
தொன்று தொட்டு தொழும் அடிமைப் பிறவியும் அல்லன் அன்று உன் கொடி உன் மண்ணில் நிமிர்ந்து பறந்ததே இன்று உன் தலை குனிந்து தாழ்ந்து கிடக்கிறதே
ஏய் தமிழா!
எந்த நிலை வரினும் ஏற்றம் தளரோம்
நாம் சோர்வுற்றபோது மாவீரரை நினைத்தெழுவோம் என்ன துயர் வரினும் ஏற்ற பணி முடிப்போம்
அன்னை தமிழ் மீது அருஞ்சூழ் உரைத் தெழுவோம்
துரோகிகள் எமை தாழ்த்தி வீழ்த்திடினும்
எம் இனத்திற்கு உழைப்பதே கொள்கை என்போம் இலங்கை அரசால் செத்தாலும்
இந்திய அரசால் செத்தாலும்
தமிழ் இன விடுதலை ஒன்றே நம் இலக்கு என்போம்
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ்வோம் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ் பொருட்டே ஆவோம்
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வோம் தனியேதான் நின்றாலும் எம் கொள்கையில் மாற மாட்டோம்
சூழ்ந்தாலும் தமிழ் சுற்றம் சூழ்ந்து உரிமை கேட்போம் சூழ்ச்சியினால் எம் உடலை கூறாக்கினாலும்
முடிவு அந்த முடிவே
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்கள் எல்லாம் அதுவே!
வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக
“வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை. இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது” – எங்கெல்ஸ்
இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு
இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடுவார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. தமிழன் மட்டும் அடிமையாக வீழ்ந்து கிடந்துவிடுவானா?
ரஸ்சிய புரட்சி !
• ரஸ்சிய புரட்சி !
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என்பது விடை காணவேண்டிய வினாவாக இன்றும் இருக்கலாம்.
ஆனால் மார்க்சின் பின்னரான இந்த 150 ஆண்டு காலப் போராட்டங்களும் வென்றெடுப்புகளும் முதலாளித்துவத்திற்கான ஒரே மாற்று மார்க்சிசமும் சோசலிசமுமே என்பதை நிரூபித்துள்ளன.
மார்க்சிசம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல.
அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது.
மாபெரும் அக்டோபர் புரட்சி மூலமாக அது லெனினிசமாக வளர்ச்சி கண்டது.
சீனப்புரட்சியின் ஊடாக மாஓசேதுங் சிந்தனையாக அது மேலும் விரிவு கண்டது.
இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மார்க்சிசம் வளர்ச்சி பெற்று வருகின்றது.
இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி மார்க்சிசம் நிற்கின்றது.
அது ட்ராக்சியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் விட்டுக்கொடுக்காத இடையறாத போராட்டத்தை நடத்தி வருகிறது.
புரட்சி நடைபெற்ற நாடுகளில் இன்று புரட்சி அரசுகள் இல்லாமல் போயிருக்கலாம்.
ஆனால் அந்த புரட்சிகளே,
•உலகில் உழைக்கும் மக்களும் நாடாள முடியும் என்பதை நிரூபித்தன.
•உலகில் உழைக்கும் மக்களும் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நிரூபித்தன
•உலகில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ண உரிமை கொண்டவை என்றன.
•உலகில் சர்வாதிகார பாசிச ஆட்சிகளை ஒன்றுதிரண்டு தூக்கியெறிய முடியும் என்பதை நிரூபித்தன.
•உலகில் இன மத சாதி மற்றும் நிற பேதங்களை கடந்து அனைவரும் சமமான மனிதர்கள் என பறைசாற்றின.
உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் நாம் இழப்பதற்கு எதுவுமேயில்லை -ஆனால் நாம் வெல்லுவதற்கு ஒரு உலகம் இருக்கிறது!
பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு
பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்தவர் இன்று இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்.
இவரால் தமிழ் நாட்டில் படித்து பட்டம் பெற முடிந்துள்ளது.
இவரால் தமிழ்நாட்டில் விரும்பிய வேலை செய்ய முடிந்துள்ளது.
இவரால் தமிழ்நாட்டில் மட்டுன்றி இந்தியா முழுவதும் தொழில் செய்து இன்று 37000 கோடி ரூபா சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர் ஆக முடிந்துள்ளது.
ஆனால் ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்த ஈழத் தமிழர்கள் 40 வருடமாக அகதியாகவே இருக்கின்றனர்.
இந்த நிலை என்று மாறும்?
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி அறக்கொடை நிறுவனத்தினர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிஸ்மிசாவிற்கு ஐந்து லட்சம் ரூபாவும் மலையகத்தை சேர்ந்த அசானிக்கும் பத்து லட்சம் ரூபாவும் அன்பளிப்பு செய்துள்ளனர்.
மலையக மக்கள் பிரதிநிதியான வடிவேல் சுரேஸ் அவர்கள் சென்னை சென்று சரிகம நிகழ்வில் பங்குபற்றி அசானியை மட்டுன்றி கில்மிசாவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி அசானி மற்றும் கில்மிசாவிற்கு வாய்ப்பளித்தமைக்காக ஜீ (ZEE)டிவியினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண தமிழர்கள் மலையக தமிழர்களை புறக்கணிக்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யும் சில திமுக உடன்பிறப்புகளுக்கான பதில் இது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் அது மிகை அல்ல
ஓடாத மானும் போராடாத
ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது
கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுதலை
வாழ்த்துக்கள்.
எமக்காக மரணித்த மாவீரர்களை நினைவுகூர்வது
எமக்காக மரணித்த மாவீரர்களை நினைவுகூர்வது
அழுது புரள்வதற்காக அல்ல. மீண்டும் எழுவதற்காக.
#மீண்டும் எழுவோம்!
இவர்கள் தேடுவது தமது உறவுகளின்
இவர்கள் தேடுவது தமது உறவுகளின் பெயர்களை அல்ல. தங்கள் உறவுகளின் வேர்களை.
இலங்கை அரசு மாவீரர்களின் கல்லறைகளை உடைக்கலாம். ஆனால் இந்த சிறார்களின் நெஞ்சுறுதியை ஒருபோதும் உடைக்க முடியாது
இவர்கள் தங்களுக்குரிய நியாயத்தை கேட்பார்கள். அதுவும் தங்களுக்கே உரிய மொழியில் கேட்பார்கள்
ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?
ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?
ரவிராஜ் கொலைக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை?
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடியவரா? இல்லை
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாரா? இல்லை
ரவிராஜ் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தவராக குற்றம் சாட்டப்பட்டாரா? இல்லை
ரவிராஜ் ஒரு தேடப்பட்ட சந்தேக நபரா? அல்லது குற்றவாளியா? இல்லை
அப்படியாயின் ரவிராஜ் ஏன் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்?
கொல்லப்படும் அளவிற்கு ரவிராஜ் செய்த தவறுதான் என்ன?
ரவிராஜ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் புலிகள் அமைப்பை ஆதரித்தார்.
புலிகள் அமைப்பை ஆதரித்தது தவறு என்றால் ஏன் மற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படவில்லை?
எல்லா தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளின் ஆதரவுடன்தானே பதவியைப் பெற்றவர்கள்.
புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொன்ன சம்பந்தர் ஐயாவையல்லவா இலங்கை அரசு முதலில் சுட்டிருக்க வேண்டும்
ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே.
ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார்.
இனவாதம் மூலம் ஆட்சி செய்யும் இலங்கை அரசு அந்த இனவாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்காது.
இனங்களுக்கடையே நல்லிணக்கம் ஏற்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும்கூட அனுமதிக்காது.
முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் பௌத்த இனவாதிகளுடன் சிங்கள மொழியில் விவாதம் செய்து அவர்களை அம்பலப்படுத்தினார். அதனாலேயே அஸ்ரப் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
தன்னை சந்தித்த சிங்கள மக்களிடம் சிங்கள மொழியில் தமிழர் நியாயங்களை தான் கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் சிங்களப் பகுதிகளில் வந்து அவற்றை கூறும்படி தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார்.
அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் கொல்ல வேண்டும் என்றும் இனவாதிகள் கத்தினார்கள்.
தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழர் பிரச்சனையை காலம் காலமாக இந்தியாவுக்கு கூறியிருக்கிறார்கள்.
அமெரிக்கா பிரிட்டனுக்கு எல்லாம் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை கூற அவர்கள் முயற்சி செய்யவில்லை.
ஆனால் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஒருவேளை தமிழ் மக்களுக்கு ஏதும் தீர்வைப் பெற்றுத்தர முன்வந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
ஏனவே இனியாவது காலம் சென்ற ரவிராஜ் காட்டிய பாதையில் சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுவோம்.
அவர்களை இனவாத ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து வென்றெடுப்போம்.
குறிப்பு- ரவிராஜ் கொல்லப்பட்ட நினைவுதினம் 10.11.2023.. ரவிராஜ்க்கு சிலை வைத்த தமிழ்தேசியகூட்டமைப்பால் அவரின் கொலைக்குரிய நீதியை இன்னும் பெறவில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு நீதி பெற முடியாதவர்கள் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி பெற்று தருவார்கள் என எப்படி நம்புவது?
யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம்
யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம் சென்று மலையக மக்கள் விடுதலை முன்னணி (ULO)அமைத்து மலையக தமிழ் மக்களுக்காக போராடியவேளை இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டவர் தோழர் நெப்போலியன்.
ஈழப் போராளிகள் மலையக தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை என பிரச்சாரம் செய்யும் திமுக உடன்பிறப்புகள் இந்த வரலாறு அறிவார்களா?
தோழர் நெப்போலியன் தோழர் தமிழரசன் நடத்திய பெண்ணாடம் மாநாட்டில் பங்கு பற்றியவர்.
தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியவர் தோழர் நெப்போலியன்.
அதனாலேயே இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டவர் தோழர் நெப்போலியன்.
ஈழப் போராளிகள் தமிழ்நாடு விடுதலைக்கு உதவவில்லை என்று கூறுவோர் இதனை அறிவார்களா?
எதை அறுவடை செய்ய விரும்புகிறாரோ
எதை அறுவடை செய்ய விரும்புகிறாரோ
அதை அவர் நன்றாகவே விதைக்கிறார்
#பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால்
"பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால் பாம்பை விடு. பார்ப்பாணை அடி. ஏனெனில் பாம்பின் விஷத்தைவிட கொடியவன் பார்ப்பாண்".
சில பார்ப்பணர்களை காணும்போது இந்த வரிகள் உண்மைதானோ என எண்ணத் தோன்றுகிறது.
33 வருடமாக தொடரும் சாந்தனின்
33 வருடமாக தொடரும் சாந்தனின் சிறைவாசம் எப்போது முடிவுக்கு வரும்?
இறப்பதற்கு முன் தன் மகனை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற தாயின் விருப்பம் எப்போது நிறைவேறும்?
எத்தனை மனுக்கள். எத்தனை கோரிக்கைகள். ஆனாலும் திராவிட முதல்வர் ஸ்டாலின் இரக்கம் காட்ட மறுப்பதேன்?
சாந்தன் நாடு திரும்ப அனுமதி மறுப்பது ஏன்?
தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக
தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக செங்கொடி உயிர் நீத்தார்.
ஈழத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவன் செந்தூரன் உயிர் நீத்தார்.
செங்கொடி விருப்பம் நிறைவேறிவிட்டது. செந்தூரன் விருப்பம் எப்போது நிறைவேறும்?
(26.11.2015 செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தன் உயிர் நீத்தார்)
உறுதியான கருங்கல் பாறையில்
உறுதியான கருங்கல் பாறையில் இருந்துகூட ஒரு விதை முளைத்து எழுகிறது.
உடைத்து குவிக்கப்பட்டிருக்கும் மாவீரர் கல்லறைகளில் இருந்து தமிழினம் மீண்டும் எழுந்துவிடாதா?
எந்தவொரு நீண்ட இரவுக்கும் விடிவு உண்டு. எம் தமிழினத்திற்கு ஒரு விடுதலை வந்திடாதா?
1990ம் ஆண்டு இந்த கொடிய சிறப்புமுகாமை
1990ம் ஆண்டு இந்த கொடிய சிறப்புமுகாமை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி.
இப்போது மகன் ஸ்டாலின் அந்த சிறப்புமுகாமில் தொடர்ந்து ஈழத் தமிழர்களை அடைத்து சித்திரவதை செய்கிறார்.
இதுதான் திராவிட திமுக அரசு ஈழத் தமிழர் மீது காட்டும் அக்கறை என்பதை உலகம் இனியாவது அறிந்து கொள்ளட்டும்.
சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு.
ஆனால் சில திமுக உடன்பிறப்புகள் சிறப்புமுகாமில் உள்ளவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த உருட்டை தமிழக தமிழர்கள் மட்டுமன்றி சில ஈழத் தமிழர்களும் நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றனர்.
நான் எட்டு வருடம் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவன்.
இறுதியாக தாயகம் திரும்ப அனுதி பெற்று விமானம் மூலம் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டவன்.
“சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளேன்.
இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளும் அனுப்பியுள்ளேன்.
தொடர்ந்து சிறப்புமுகாமில் உள்ளவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறேன்.
அப்படிப்பட்ட எனக்கு சிறப்புமுகாம் பற்றி எதுவும் தெரியவில்லை என இன்று ஒருவர் துப்பி விட்டு சென்றுள்ளார்.
என்னே கொடுமை இது?
அச்சப்பட்டு அடிமையாக கிடப்பதைவிட
அச்சப்பட்டு அடிமையாக கிடப்பதைவிட ஆபத்தை ஒருமுறையேனும் சந்திப்பது மேலானது – லெனின்
பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்!
•பெருமை கொள்ளும் தாய்த் தமிழகம்!
ஈழத் தமிழர்கள் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று வெறும் வாய்ப் பேச்சில் அவர்கள் சொல்லி வரவில்லை.
உண்மையிலே தங்களால் இயன்றளவு ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் அர்ப்பணித்து வருகிறார்கள்.
உலகில் எந்தவொரு இனமும் தமிழகம் போல் தன் இனத்திற்கு உதவியிருக்குமா என தேடிப் பார்க்கிறேன்.
ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் சேயாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது.
எம்மவர் சிலர் அவர்கள் மண்ணில் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள்.
ஆனால் அவர்கள் ஒருமுறைகூட ஈழ அகதிகள் வெளியேற வேண்டும் என்று கோரவில்லை.
கடந்த 40 ஆண்டுகளாக தங்க வைத்திருப்பதோடு ரேசனில் உணவுப் பொருட்களும் தந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் ஒரு நேர உணவுக்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள்.
பெங்களுரில் இருந்து விரட்டப்பட்ட தமது உறவுகளைக்கூட அவர்கள் உரிய முறையில் பராமரிக்கவில்லை
ஆனால் எத்தனை இடர் வந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதில் அவர்கள் ஒருபோதும் பின்னின்றதில்லை.
அகதிகளை பலவந்தமாக ஜெயா அம்மையார் வெளியேற்ற முனைந்தபோது அதனை வழக்கு போட்டு தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள்.
அதே ஜெயா அம்மையார் சிறப்புமுகாம் அகதிகளை அந்தமான் சிறைக்கு அனுப்ப முயன்றபோதும் தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது 5000க்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
ஆனால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு ஈழத் தமிழன் கூட பாதிக்கப்படாமல் காத்தவர்கள் அவர்கள்.
ஈழத் தமிழர்களை பாதுகாக்குமாறு கோரி இதுவரை 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்துள்ளனர்.
பல தமிழக இளைஞர்கள் ஈழத்திற்கே வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடி இறந்துள்ளனர்.
சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்ற தனுஸ்கோடி செந்தூரபாண்டியன்.
அவர் தனது 18 வயதில் 11.11.1993யன்று பலாலி முகாம் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார்.
நாளை அவரது 30 வது நினைவு தினம் ஆகும். எமக்காக மரணித்த அந்த சகோதரனை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
இங்கு வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள் நன்றி மறந்து “ எங்கட பிரச்சனை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? “ என்று தமிழக தமிழர்களிடம் கேட்கிறார்கள்.
ஆனால் அவர்களோ அப்போதும்கூட கோபம் கொள்வதில்லை. 7கோடி பேர் தாம் அருகில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டோமே என்றுதான் தலை குனிகிறார்கள்.
ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இனி அடுத்த போராட்டம் தாயும் சேயும் இணைந்தே நடத்தப் போகிறார்கள். அந்த அற்புதத்தை உலக வரலாறு பார்க்கத்தான் போகிறது!
15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோகராஜா நிரோஜன், கரன் எனப்படும் சுப்பிரமணியம் சுரேந்திர ராஜா மற்றும் கனகரத்தினம் ஆதித்தியன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்,
2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த மூவரையும் விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மூவரின் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
மீதி உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை பெற வேண்டும்.
இருவரும் ஈழத் தமிழர்கள்
இருவரும் ஈழத் தமிழர்கள்
ஒருவர் கிருத்தவ மதத்தைச் சேர்ந்தவர்
இன்னொருவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்
கிருத்தவ மதத்தைச் சேர்ந்தவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுகிறார்.
இந்து மதத்தைச் சேர்ந்தவர் தமிழின அழிவிற்கு கிருத்தவர்களே காரணம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்.
இதில் யார் தமிழ் மக்களுக்கு தேவையானவர்?
ஆண்டவரே!
ஆண்டவரே!
நேத்து வந்த பயல் உதயநிதி
நாலு படம் நடிச்சு எம்.எல்.ஏ வாகி
இப்ப அமைச்சராகியும் விட்டான்.
நீங்க என்னடா என்றால்
பிக்பாஸில் மாமா வேலை பார்த்துக்கொண்டிருக்கிறியள்.
வெட்கமாய் இல்ல?
எதுவுமே எளிமை இல்லை.
எதுவுமே எளிமை இல்லை. ஆனால் அனைத்துமே சாத்தியம்தான்.
வெற்றியை அடையவில்லை என்பதற்காக வருத்தம் இல்லை
இன்னும் நின்றுவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது பெருமைதான்.
உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை.
உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை. ஏனெனில் நீ தமிழன்
உனது இனத்திற்கு சமவுரிமை இல்லை. ஏனெனில் நீ தமிழன்
உனது இனம் படுகொலைக்கு நீதி இல்லை. ஏனெனில் நீ தமிழன்.
உனது உறவுகள் சிறையில் இருந்து விடுதலை இல்லை. ஏனெனில் நீ தமிழன்
உனது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து எந்த பதிலும் இல்லை. ஏனெனில் நீ தமிழன்.
உனக்காக மரணித்த உனது உறவுகளை நினைவுகூரக்கூட உனக்கு அனுமதி இல்லை. ஏனெனில் நீ தமிழன்.
குறிப்பு – ஜேவிபி தமது கார்த்திகை வீரர்களை நிரைனவுகூர அனுமதி உண்டு. ஆனால் தமிழர்கள் தமக்காக இறந்தவர்களை நினைவுகூர பல தடைகள்
கண்ணன் வரமாட்டான் !
கண்ணன் வரமாட்டான் !
“அநியாயங்கள், அக்கிரமங்கள் பெருகும்போது கண்ணன் அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவான்” - இந்து மதம்
• முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டபோது காப்பாற்ற கண்ணன் வரவில்லை.
• சிறையில் அடைபட்டு இருக்கும் இளைஞர்களை விடுவிக்க இதுவரை கண்ணன் வரவில்லை
• தமிழக சிறப்புமுகாமில் அடைபட்டிருக்கும் அகதிகளை விடுவிக்ககூட கண்ணன் வரவில்லை
• தமிழ்பெண்களை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்யும்போது காப்பாற்ற கண்ணன் வரவில்லை
• வறுமையின் கொடுமையில் இருந்து சிறுவர்களைக் காப்பாற்ற கண்ணன் இன்னும் வரவில்லை
தீபாவளி கொண்டாடுவோரே கொஞ்சம் சிந்தியுங்கள்!
இதுவரை வராத கண்ணன் இனியும் வரமாட்டான்
இதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
பகுத்தறிவோடு சிந்தித்து செயற்படுங்கள்.
மக்களே!
“கண்ணன் வருவான” என காத்து இருக்காதீர்கள்.
அநியாயங்களுக்கு எதிராக
அக்கிரமங்களுக்கு எதிராக
ஆயுதம் ஏந்துங்கள்.
வதம் செய்யுங்கள்.
நீங்கள்தான் “கண்ணன்”
பன்றிகள் பல குட்டிகள் போடலாம்.
பன்றிகள் பல குட்டிகள் போடலாம். ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் பூமி அதிர்கிறது.
எமக்காக பல அதிர்வுகளை நிகழ்த்தியவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
ஒரு பூனையை தப்பி ஓட முடியாதபடி நாலு பக்கமும் அடைத்துவிட்டு
ஒரு பூனையை தப்பி ஓட முடியாதபடி
நாலு பக்கமும் அடைத்துவிட்டு
போய் எதிரில் நின்று பார்
அங்கு ஒரு புலியை காண்பாய்.
அடுத்த தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும்
“அடுத்த தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும்” என்ற சம்பந்தர் ஐயாவின் அறிக்கை இம்முறையும் வந்திருக்கா?
சம்பந்தர் ஐயா தமிழ் மக்களை ஏமாற்றி வருவதைக்கூட பொறுத்துக்கலாம்.
ஆனால் அவருக்கு கனடாவில் “வாழும் வீரர்” பட்டம் கொடுத்தவர்களை என்ன செய்வது?
தீபாவளிக்கு நாம் பெரிதும் எதிர்பார்த்த
தீபாவளிக்கு நாம் பெரிதும் எதிர்பார்த்த சம்பந்தர் ஐயாவின் அறிக்கை வந்துள்ளது.
சம்பந்தர் ஐயாவின் அறிக்கையில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?
முதலாவது, ஐயா உயிருடன் உள்ளார்.
இரண்டாவது, அவர் நீண்ட உறக்கத்தில் இருந்து எழுந்து அறிக்கை விட்டுள்ளார்.
சரி. அறிக்கை சொல்வது என்ன?
ரணிலை நம்ப முடியாதாம்.
ரணிலை நம்ப முடியாது என்பதையே ஐயா இப்பதான் கண்டு பிடித்துள்ளார்.
அது சரி , ரணில் ஒரு நரி என்று அன்டன் பாலசிஙகம் கூறியபோது ஐயா என்ன கோமாவிலா இருந்தவர்?
ஐயா! பிளீஸ் போதும். இப்பவாவது பதவியை விட்டு விலகுங்கள். கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சும்.
நான்கு தமிழர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டு
நான்கு தமிழர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது.
இதை ஆங்கில பத்திரிகை ஒன்று நினைவூட்டியுள்ளது.
எமது தமிழ் பத்திரிகைகள் மட்டுமல்ல எமது தமிழ் தலைவர்களும் இந்த நான்கு பேரையும் மறந்துவிட்டனர்.
எந்த தமிழக அரசும் செய்யாததை உச்ச நீதிமன்றம் முன்வந்து இந்த நான்கு பேரையும் விடுதலை செய்தது.
உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தும் இவர்கள் ஈழத் தமிழர் என்பதால் சிறப்புமுகாமில் அடைத்தது தமிழக அரசு.
இவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அப்போது தமிழக முதல்வர் உறுதியளித்தார்.
அதன்படி தான் நாடு திரும்ப விரும்புவதாக சாந்தன் கூறினார். ஆனால் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
இதனால் பிரதமர் மோடிக்கு மனு அனுப்பினார் சாந்தன். ஆனால் பிரதமரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் வேறு வழியின்றி சாந்தன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கடந்த ஒக்டோபர் 18ம் திகதி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று நவம்பர் 12ம் திகதியாகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
சிறையில் முருகன் இருந்தபோது அவரது
சிறையில் முருகன் இருந்தபோது அவரது விடுதலைக்கு குரல் கொடுக்கும்படி சம்பந்தர் ஐயாவிடம் நேரிடையாக கோரிக்கை வைத்தார் முருகனின் தாயார். அப்போதும் சம்பந்தர் ஐயா குரல் கொடுக்கவில்லை.
இப்போது முருகன் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போதும்கூட சம்பந்தர் ஐயா முருகனுக்காக குரல் கொடுக்கவில்லை.
லண்டனில் இருக்கும் தம் மகளுடன் சென்று வாழப்போவதாக முருகனும் அவர் மனைவி நளினியும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் அனுமதியளிக்காமல் இருக்கின்றன.
சம்பந்தர் ஐயா ஏன் முருகன் மீது இரக்கம் காட்ட மறுக்கிறார்? சிறீதரன்கூட மௌனம் காப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
முருகன் ஒரு இந்து மட்டுமல்ல அவர் இப்போது ஒரு சாமியாராகவே காணப்படுகிறார்.
இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் இந்த முருகன் விடுதலைக்கு குரல் கொடுக்கலாமே?
ஏன் சில திமுக உபிஸ் புலிகளை இகழ்கின்றனர்?
ஏன் சில திமுக உபிஸ் புலிகளை இகழ்கின்றனர்?
ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
நாம் ஏன் மாவீரர்களை நினைவு கூர வேண்டும்?
•நாம் ஏன் மாவீரர்களை நினைவு கூர வேண்டும்?
எமக்காக மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
எமக்காக மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
எமக்காக மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
அப்படியென்றால் மரணித்த மாவீரர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்?
அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
எமது இளம் சிறார்கள் இதை உணர்வதற்கு மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
வீட்டில் கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு
வீட்டில் கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு அண்ணாவைக் கூப்பிட்டவர்கள் ,
களத்தில் சக தோழியை காப்பாற்ற
சுமந்து செல்லும் வலிமை மிக்கவர்களாக
அவர்களை மாற்றியது போராட்டம்.
ஆம். போராட்டம் மகத்தானது
நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதைவிட
“நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதைவிட, இலட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து. உலகம் உன்னை போற்றும்” - லெனின்
நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும்
நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும்.அதே கல்லை தேன்கூட்டிற்கு எறிந்தால் நாம் ஓட வேண்டி வரும்
தேனியை விட நாய் பலமானது. ஆனாலும் தேனி அனைத்தும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து விரட்டுவதால் நாம் ஓட வேண்டியிருக்கிறது
தமிழ்இனம் ஒற்றுமையாக ஒன்றுதிரண்டால் தமிழின எதிரிகள் அனைவரும் ஓட்டம் எடுப்பர்
ஒரு எலும்பிற்காக
"ஒரு எலும்பிற்காக
ஒரு நேர்மையான மனிதன்
ஒருபோதும் தன்னை
நாயாக்கிக் கொள்ளமாட்டான்"
- வியட்நாம் பழமொழி
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்த கும்பலே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இப்போது நம் முன் எழும் கேள்வி என்னவெனில் இந்த கும்பல் சிறையில் அடைக்கப்படுமா அல்லது ஏதும் சதி செய்து மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுமா என்பதே.
இந்த கும்பல் சுருட்டி வைத்திருக்கும் மொத்தப் பணமும் பறிக்கப்பட வேண்டும்.
இந்த கும்பல் யாவும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இனி வரும் அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.
நடக்குமா?
1989ல் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீரா
1989ல் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு சிங்கள அரசு கொன்றது.
ரோகண விஜயவீரா "பயங்கரவாதி" எனவே அவரது பிள்ளைகளும் "பயங்கரவாதிகள்" என கூறி அவரது பிள்ளைகளை சிஙகள அரசு கொல்லவில்லை.
மாறாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பாதுகாத்து படிக்கவும் வைத்தது சிங்கள அரசு.
அது மட்டுமன்றி ரோகண விஜேயவீராவுக்கு சிலை வைக்கவும் வருடந்தோறும் நினைவு அஞசலி செய்யவும்கூட அனுமதிக்கிறது.
(சிங்கள) ரோகண விஜேயவீராவுக்கு ஒரு நியாயம். (தமிழ்) பிரபாகரனுக்கு இன்னொரு நியாயம். இதுதான் சிங்கள அரசின் நியாயமா என நாம் கேட்கப் போவதில்லை
ஏனெனில் சிஙகள அரசு இப்படித்தான் நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்தான்.
ஆனால் இங்கு எமக்கு எழும் டவுட் என்னவெனில,
சிஙகள புத்திஜீவிகள் யாராவது ஜேவிபியை “பாசிசவாதிகள்” என கூறியுள்ளனரா? அல்லது,
புலிகளை “பாசிசவாதிகள்” என்று கூறும் நம் தமிழ் புத்திஜீவிகள் யாராவது ஜேவிபியை “பாசிசவாதிகள்” என்று கூறியுள்ளனரா?
2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள்
2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கலைஞர் டிவியில் “மானாட மயிலாட” போட்டு மகிழ்ந்தவர்கள் இன்று அதே முள்ளிவாய்க்காலில் வந்து படம் பிடித்து போட வேண்டிய நிலை.
காலம் எவ்வளவு அற்புதமானது. அது இந்தளவு விரைவாக எம் கண் முன்னே மாறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
ஆனால் இதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் காரணம் என்றால் அது மிகையல்ல.
இதை இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணனே “ புலம் பெயர்ந்த தமிழர்களே நமக்கு சோறு போடும் கடவுள்கள்” என்று தெளிவாக கூறிவிட்டார்.
சந்தை என்று ஒன்று இருந்தால் அதில் விற்பனை செய்ய வியாபாரிகள் வரத்தான் செய்வார்கள்.
எனவே தம் சந்தைக்கு வரும் (கலை) வியாபாரிகளை தெரிவு செய்யும் பொறுப்பு புலம்பெயர் தமிழருக்கு உண்டு.
அதை அவர்கள் சரியாகவே செய்வார்கள் என நான் நம்புகிறேன்.
இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்
இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்
இவர்கள் இலங்கை ராணுவத்தைவிட அதிக தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றார்கள்
இவர்களிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள்.
இவர்களால் இப்பவும் தமக்கு ஆபத்து என்று இந்திய அரசு தடையை நீடிக்கிறது.
இவர்களை நினைவுகூரத் தடை விதிக்கின்றனர்.
இவர்களின் கல்லறைகளைக்கூட இடித்து தள்ளுகின்றனர்.
ஆனால் தமிழ் மக்கள் இவர்களுக்காக அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஏனெனில் இவர்கள் தமது உறவுகள் என்பதற்காக அல்ல,
மாறாக, இவர்கள் தமக்காக மாண்டவர்கள் என்று உணர்வதாலேயே அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதனால்தான் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் இவர்களை நினைவு கூர்கின்றனர்.
ஈழத் தமிழர்களுக்காக போராடியவர்களை
ஈழத் தமிழர்களுக்காக போராடியவர்களை “பயங்கரவாதிகள்” என்றார்
ஈழத் தமிழர்கள் தமக்காக போராடி மரணித்தவர்களை நினைவுகூரும் வேளையில் “உங்களை சந்திக்க வருகிறேன்” என்கிறார்.
அவர் வருவது உண்மையில் ஈழத் தமிழருக்காக என்றால் தான் பேசியதற்கு ஒரு வருத்தம் தெரிவித்திருப்பார்.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சியின் அரசியலுக்காக அப்படி பேசிவிட்டேன் என்றாவது கூறியிருக்கலாம்.
மாறாக, தான் எவ்வளவு இழிவாக பேசியிருந்தாலும் தன்னை ஈழத் தமிழர் வரவேற்பர் என எப்படி இவர் நினைக்கிறார்?
எதிரி உன்னை பாராட்டுகிறான் என்றால்
“எதிரி உன்னை பாராட்டுகிறான் என்றால் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்” - மாவோ சேதுங்
தமிழ் துரத்துகின்றது
சிங்களம் வரவேற்கின்றது என்றால்
நீ யாருக்கானவன் என்பதை இனங்காட்டிவிட்டாய்.
இவர் டிக்கட் இன்றி ரயிலில் வரவில்லை.
இவர் டிக்கட் இன்றி ரயிலில் வரவில்லை.
தன் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து சுருட்டவில்லை.
கோடிக்கணக்கான தன் சொத்தை தமிழ் மக்களுக்காக இழந்தார்
பல வருடம் சிறையில் வாடினார்.
இவர் வீட்டில் தெலுங்கு பேசவில்லை.
அதனால்தான் என்னவோ இவரை "உலக தமிழின தலைவர்" என்று அழைக்கவில்லை?
மெரினா கடற்கரையில் இவருக்கு 80 கோடி ரூபாவில் நினைவு சின்னம் தமிழக அரசு அமைக்கவில்லை?
குறிப்பு - 18.11.2023 கப்பல் ஓட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வஉசி சிதம்பரனாரின் 87வது நினைவுதினம்.
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர் கொலை,
800க்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு ,
பல கோடி ரூபா பெறுமதியான உடமைகள் அழிப்பு,
இத்தனைக்கும் காரணமான குற்றவாளி ராஜீவ்காந்தியை நீங்கள் கொண்டாடுவதை என்னவென்று அழைப்பது மேடம்?
மொத்த முட்டாள்களும்
மொத்த முட்டாள்களும் பாஜக வில்தான் இருக்காங்க போல. 😂
நீதி – நீ முட்டாளாக இருக்க உனக்கு உரிமை உண்டு. ஆனால் உன் முட்டாள்தனத்தை பரப்ப உனக்கு உரிமை இல்லை.
சின்னக் குருவி நீ சினுங்கி அழக்கூடாது
சின்னக் குருவி நீ சினுங்கி அழக்கூடாது
ஏழைக் குருவி நீ ஏங்கி அழக்கூடாது
வலை என்ன பெருங் கனமா ?
அதை அறுத்திட பல வழி இருக்குது
வழியில் என்ன பெருந்தடை வந்தாலும்
அதை தகர்த்தெறிய பல வழி இருக்குது!
தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின்
•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் 19.11.1967ஆகும்.
அவர் மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று தன் குடும்பத்துடன் 56வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார்.
ஆனால் தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார்.
தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின்.
தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார் .
தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார்.
தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார்.
தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும்.
தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
Tuesday, October 31, 2023
தமிழா!
தமிழா!
கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது
வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது
காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது
முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது
நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு
கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது
நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது
அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது
உனது ரயில்வேயில் உனக்கு வேலை இல்லை. 90% வேலை வட மாநிலத்தவருக்கு.
காஸ்மீர் எல்லையில் காவலுக்கு சென்று நீ சாக வேண்டும். ஆனால் கடலில் உன் மீனவனைக் காக்க யாரும் வருவதில்லை.
வருடம் 85 ஆயிரம் கோடி ரூபா வரி நீ கட்ட வேண்டும். ஆனால் கொரோனோவுக்கு காசு கேட்டு நீ கையேந்தினாலும் உதவி கிடைப்பதில்லை.
தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் நீ அதை ஆள முடியாது!
உன் கைக்கு எட்டும் தூரத்தில் 2 லட்சம் தமிழர் உன் கண்முன் கொல்லப்படும்போதும் உன்னால் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நீ அடிமையாக இருக்கிறாய்
தமிழா! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் கிடக்கப் போகிறாய்
தமிழா! மூவாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு உனக்கு உண்டு.
ஆனால் அதை உணராமல் கைபர் கணவாய் வழியே ஆடு மாடு மேய்த்து வந்தவனிடம் அடிமையாகக் கிடக்கிறாயே.
நீ எட்டுக் கோடி தமிழா. ஆனால் இரண்டு கோடி சிங்களவன் எப்படி உன் தொப்புள் கொடி உறவுகளை தைரியமாக கொல்ல முடிந்தது?
ஏனெனில் அவன் இரண்டு கோடியாக இருந்தாலும் அவனுக்கு தனி நாடு இருக்கிறது. அவனுக்கு ஒரு அரசும் இருக்கிறது.
உனக்கும் ஒரு நாடும் அதில் உன் அரசும் இருந்தால் நீயும் தலை நிமிர்ந்து வாழ முடியும் அல்லவா?
உன்னைவிட வரலாறும் சனத் தொகையும் குறைந்த பிரான்ஸ் இன்று வல்லரசு. பிரிட்டன் இன்று வல்லரசு.
ஆனால் நீ மட்டும் இதை உணராமல் அடிமையாகக் கிடக்கிறாயே?
நீ அடிமையாக கிடப்பது கேவலம் அல்ல. மாறாக நீ அடிமையாக கிடக்கிறாய் என்பதை உணராமல் இருக்கிறாயே அதுதான் கேவலம்.
உன் அடிமைத்தனத்தை உணர்ந்துகொள் உன் பலத்தை அறிந்துகொள்
அதன் பின்னர் கிழக்காசியாவில் ஒரு அதிசயம் நிகழ்வதை நீ காண்பாய்.
"ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதே ஈழத்தமிழருக்கு செய்யும் உதவியாகும்" – தோழர் தமிழரசன்.
Subscribe to:
Posts (Atom)