Monday, June 29, 2020
எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ
எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ
அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே
அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள்.
ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார்.
அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம்.
அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார்.
எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பயங்கரவாதம்தான் காரணம் என்று கூறுகிறார்களோ அதுபோல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் யாராவது ஒரு தமிழர்தான் காரணம் என்று இவர்கள் எதிர்காலத்தில் கூறுவார்கள்.
அல்லது, கிருசாந்திகளும் இசைப்பிரியாக்களும் தங்களைத் தாங்களே பாலியல் வல்லுறவு செய்து இறந்தார்களே அதே மாதிரி யாழ் நூலகமும் தனக்கு தானே தீ வைத்து எரிந்தது என்றும்கூட இவர்கள் கூறுவார்கள்.
அது உண்மைதான் என்று நம்புவதற்கும் அதனை பிரச்சாரம் செய்வதற்கும் நம் மத்தியிலும் நாலு பேர் இருப்பதுதான் எமது இனத்தின் சாபக்கேடு.
குறிப்பு - இன்று யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் ஆகும். (31.05.1981)
Image may contain: sky and outdoor
கலைஞர் கருணாநிதியிடம் முத்பதாயிரம் கோடி ருபா சொத்து
கலைஞர் கருணாநிதியிடம் முத்பதாயிரம் கோடி ருபா சொத்து எப்படி சேர்த்தீர்கள் என்று கேட்டால் அவர் “அந்தம்மா நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்து வைச்சுருக்குது அதை கேட்க மாட்டீங்களா?” என்று பதில் கூறுவார்.
அதன்படி ஜெயா அம்மையாரிடம் எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்து சேர்த்தீர்கள் என்று கேட்டால் “முப்பதாயிரம் கோடி ரூபா சொத்து எப்படி சேர்த்தார் என்று கருணாநிதியிடம் கேளுங்கள்” என்பார்.
இப்படி மாறி மாறி கூறினார்களேயொழிய கடைசிவரைக்கும் இருவரும் தாங்கள் எப்படி இத்தனை ஆயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தோம் என்று பதில் கூறியதில்லை.
அதைவிட முக்கியம் என்னவெனில் “முதலில் நீங்கள் எப்படி சொத்து சேர்த்தீர்கள் என்பதைக் கூறுங்கள்”என்று இவர்கள் இருவரிடமும் கேட்கக்கூடிய தைரியமான ஊடகவியலாளர் ஒருவர்கூட தமிழ்நாட்டில் இல்லை.
அத்தகைய தைரியமான(?) ஊடகவியலாளர்களில் ஒருவர், காசுக்காக நான் சீமானுக்கு ஆதரவாக எழுதுவதாகவும் எனக்கு ஆயிரம் ரூபா தன் சம்பளத்தில் இருந்து தருவதாகவும் எழுதியிருக்கிறார்.
இந்த மூத்த ஊடகவியலாளர் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டார் என்ற நம்பிக்கையில், காசுக்காக நான் சீமானுக்கு எழுதியதற்கான ஆதாரத்தை தரும்படி கேட்டேன்.
ஆனால் அந்த ஊடகவியலாளர் எனக்கு இதுவரை பதில் தரவில்லை. மாறாக தனது அப் பதிவை நைசாக நீக்கிவிட்டார்.
என்னைப் பற்றி நன்கு தெரிந்த அந்த மூத்த ஊடகவியலாளர் ஏன் இப்படி எழுதினார் என்று வருத்தத்துடன் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
அதற்கு அந்த நண்பர் “ பாவம். அவருக்கும் பசிக்குமில்லே” என்றார்.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த ஊடகவியலாளரின் பதிவை நம்பி பகிர்ந்த சில ஈழத் தமிழர் இப்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றனர்.
Image may contain: 1 person, text
தீ பரவட்டும்!
தீ பரவட்டும்!
உலகில் இதுவரை பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு தீப் பொறியில் இருந்தே ஆரம்பித்தது.
பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான்.
குறிப்பு - இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் பாலச்சந்திரன் எப்படி பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும்.
Image may contain: 1 person
•அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவது மேல் !
•அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட
எழுந்து நின்று போராடி மடிவது மேல் !
இரண்டு கொலைகள். இரண்டும் பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது
.
ஒன்று அமெரிக்காவில் அமெரிக்க பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது.
மற்றது இலங்கையில் கொக்குவிலில் இலங்கை பொலிசாhhல் நடத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் கொல்லப்பட்டவர் கறுப்பு இனத்தவர். அவரின் பெயர் ஜோர்ஜ் பிளைட்
இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் இருவர் (20.10.2016) அவர்கள் தமிழர்கள் . அவர்கள் மாணவர்கள். அவர்களின் பெயர் சுலக்சன் மற்றும் கஜன்.
அமெரிக்காவில் நடந்தது நிற ஒடுக்குமுறை என்றும் அதற்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமன்றி ஜரோப்பாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் இலங்கையில் தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டது இன ஒடுக்குமுறை என்று கூறுவதற்கோ அல்லது அவர்களுக்கு நீதி பெறுவதற்காக போராடுவதற்கோ தமிழ் தலைவர்கள் இன்றுவரை தயாராக இல்லை.
கறுப்பு இனத்தவரான ஒபாமா அமெரிக்க அரசின் இக் கொலையைக் கண்டித்ததோடு தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார். இத்தனைக்கும் அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி.
ஆனால் தமிழ் தலைவர் சுமந்திரன் தமிழ் மாணவர்களை கொலை செய்தவர்களை நல்லாட்சியினர் என்றும் அவர்களுடன் சேர்ந்து வாழ தனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்றும் கூறுகிறார்.
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் சிறுபான்மையினர். ஆயினும் அவர்கள் தமது ஒடுக்கு முறைக்கு எதிராக துணிந்து போராடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் பொலிசார் முன்னிலையிலேயே அமெரிக்க தேசியக்கொடியை தீயிட்டு கொளுத்துகிறார்கள்.
ஆனால் எமது தலைவர் சம்பந்தர் ஜயா இலங்கை தேசியக்கொடியை அவமதிக்கக்கூடாது என்றும் சிங்கள மக்களுக்கு கோபம் வராமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறார்.
கறுப்பு இன மக்களின் நிற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க வெள்ளை இன மக்களின் ஆதரவு மட்டுமன்றி சர்வதேச ஆதரவும் கிடைத்து வருகிறது.
ஆனால் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு இன்னும் இத்தகைய ஆதரவு ஏன் கிடைக்கவில்லை?
குறிப்பு - கறுப்பு இன மக்களின் போராட்டத்தை சுமந்திரன் ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது அதையும் வன்முறை என்றும் தன்னால் ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்போகிறாரா?
Image may contain: one or more people and outdoor
Image may contain: 2 people, selfie
Image may contain: 1 person
Image may contain: 1 person
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் - தோழர் தமிழரசன்.
கறுப்பு இன ஒடுக்குமுறைக்கு எதிராக தனது அதரவைத் தெரிவிக்கும் இந்த சிங்கள பெண்ணின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
ஆனால் இவர் முதலில் செய்ய வேண்டியது தான் போர்த்தியிருக்கும் சிங்கக் கொடியின் கீழ் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
இலங்கை இனவெறி அரசின் இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே கறுப்பு இன மக்களுக்கான உண்மையான ஆதரவாக இருக்கும்.
மாறாக, இலங்கையில் இனப்படுகொலையை ஆதரித்தக்கொண்டு அல்லது கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டு அமெரிக்காவில் நிற ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது வெறும் வேஷம் ஆகும். அதை அந்த கறுப்பு இன மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
Image may contain: one or more people, people standing and outdoor
ஒரு குரல் - ஜயோ! கழுத்தை நெரிக்கிறார்கள். என்னால் சுவாசிக்க முடியவில்லை.
ஒரு குரல் - ஜயோ! கழுத்தை நெரிக்கிறார்கள். என்னால் சுவாசிக்க முடியவில்லை.
மிஸ்டர் எக்ஸ் - உன் கழுத்தை நெரித்து கொல்பவர் இலங்கை பொலிசா?
ஒரு குரல் - இல்லை
மிஸ்டர் எக்ஸ் - உன் கழுத்தை நெரித்து கொல்பவருக்கு இந்திய அரசு உதவி செய்கிறதா?
ஒரு குரல் - இல்லை
மிஸ்டர் எக்ஸ் - நீ ஒரு ஈழத் தமிழனா?
ஒரு குரல் - இல்லை
மிஸ்டர் எக்ஸ் - உன் பெயர் சுலக்சன் அல்லது கஜனா?
ஒரு குரல் - இல்லை.
மிஸ்டர் எக்ஸ் - அப்ப நீ யாரு?
ஒரு குரல் - நான் ஜோர்ஜ் பிளைட். என்னை அமெரிக்க பொலிஸ் கழுத்தை நெரித்து கொல்கிறது.
மிஸ்டர் எக்ஸ் - அப்படியா? இப்ப பாரு,
“அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!”
“அமெரிக்க நிற ஒடுக்குமுறை ஒழிக”
“ஓயமாட்டோம் ஓயமாட்டோம் கறுப்பு இனத்தவருக்கு நீதி கிடைக்கும்வரை ஓய மாட்டோம்.”
மிஸ்டர் எக்ஸ் - பார்த்தாயா உனக்காக எப்படி குரல் கொடுத்துள்ளேன் என்று.
ஒரு குரல் - எங்கே ஒருக்கால் உன் மூஞ்சியைக் காட்டு. த்தூ... செருப்பால அடி வாங்கிறத்துக்குள்ளே ஓடிப் போயிடு.
குறிப்பு - இந்த மிஸ்டர் எக்ஸ் என்ற இடத்தில் தமிழ் தலைவர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ் மனதவுரிமைவாதிகள் யார் பெயரையும் பொருத்திப் பாருங்கள். யாவும் சரியாகவே பொருந்தும்.
Image may contain: one or more people, people standing and outdoor, text that says "APOUS"
•நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்!
•நாம் ஊமையாக இருக்கும்வரை
உலகம் செவிடாகவே இருக்கும்!
வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார்.
என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன்.
1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன்.
ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
அதுவும் ஜெர்மனியில் யூதர்களின் நூல்கள் எரிக்கப்பட்ட அதே சதுக்கத்தில் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதை தமிழர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் இந்த நிகழ்வில் அதிகளவு அடுத்த சந்ததியினரான இளையவர்கள் பங்கு பற்றியுள்ளனர்.
எந்த சந்ததி தமிழை மறந்துவிடும் என்றார்களோ, எந்த சந்ததி தமது வேர்களை தேடமாட்டார்கள் என்று கூறினார்களோ அந்த சந்ததி பங்குபற்றியிருக்கிறது.
இந்த அடுத்த சந்ததியினர் தாம் வாழும் நாடுகளில் உள்ள மக்கள் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியில் தமக்குரிய நீதியை கோருகிறார்கள்.
எனவே இனி உலகம் செவிடாக இருக்க முடியாது. ஏனெனில் எமது அடுத்த சந்ததி பேச ஆரம்பித்து விட்டார்கள்.
மிக விரைவில் எமக்குரிய பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகிறது.
இதனால்தான் இலங்கை இந்திய அரசுகளின் விசுவாசிகளுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.
Image may contain: one or more people, people standing, basketball court and outdoor
கரூர் நீதிமன்றத்தில் புலிப் போராளி சிவா வழங்கிய வாக்குமூலம்!
கரூர் நீதிமன்றத்தில்
புலிப் போராளி சிவா வழங்கிய வாக்குமூலம்!
தமிழ்நாட்டில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாகிய சிறப்புமுகாம் இருப்பது பலர் மறந்துவிட்டனர். அதுவும் இச் சிறப்புமுகாம் கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டது என்பதுகூட இப்போதைய திமுக உடன் பிறப்புகளுக்கு தெரிவதில்லை.
துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிப் போராளி சிவா அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கரூர் நீதிமன்றத்தில் 17.10.1994 யன்று நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஆனால் அந்த நீதிபதி போராளி சிவாவுக்கு நீதி வழங்கவில்லை. மாறாக அவரை வேலுர் சிறப்புமுகாமில் கொண்டுபோய் அடைத்தார்கள். அதன்பின் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை நான் அறியாமல் இருந்தேன்.
கடந்த வாரம் முகநூலில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், போராளி சிவா வேலூர் சிறப்புமுகாமில் இருந்து தப்பி வந்து வன்னியில் இயங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் கொல்லப்பட்டுவிட்டதாக கூறினார்.
லெப்.கேணல் மகேந்தியுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிவா உட்பட வாகனத்த்pல் பயணித்த நால்வரும் இறந்துவிட்டதாக அந்த நண்பர் கூறியதுடன் அவர்களின் புகைப்படத்தையும் தந்து உதவினார்.
போராளி சிவா தங்களின் கொடுமைகளை நீதிமனத்தில் கூறிவிட்டார் என்பதற்காக சிவாவைவிட என்மீது அதிக கோபம் கொண்டனர் தமிழக கியூ பிரிவு உளவுப் பொலிசார்.
ஏனெனில் சிவா வாக்குமூலம் கொடுப்பதற்கு நான் உதவியதுடன் இவ் வாக்குமூலத்தை எமது தோழர் தமிழ் முகிலன் அவர்களுக்கும் இரகசியமாக வழங்கிவிட்டேன்.
தோழர் தமிழ்முகிலன் உடனே அவ் வாக்குமூலத்தை “குற்றப் பரம்பரையாக கருதப்படும் ஈழத் தமிழர்கள்” என்னும் தலைப்புடன் சிறு பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டுவிட்டார்.
அந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்குவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் ஜெயா அம்மையார். ஆனாலும் அதையும் மீறி ஈழத் தமிழருக்கான ஆதரவை வழங்கியவர்களில் தமிழ் முகிலனும் ஒருவர்.
ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கிய போராளி சிவாவின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் அதனை வெளியிட்டு ஆதரவு தந்த தோழர் தமிழ் முகிலன் பெயரும் உச்சரிக்கப்படும்.
குறிப்பு- கீழ்வரும் இணைப்பில் போராளி சிவாவின் வாக்குமூலத்தை படிக்கலாம்.
http://tholarbalan.blogspot.com/2020/06/blog-post_83.html
Image may contain: 1 person, text
No photo description available.
அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்
அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்
ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார்.
அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார்.
ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை.
3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார்.
ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.
பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு தன் இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார்.
ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு அந்த இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார்.
பக்கத்தில் மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழன் பண்பாடு என்று பேசுவார்.
ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் மாண்டிருக்க உங்கள் பிள்ளைகளின் பதவி எற்பு விழா தேவையா என்று கேட்டால் சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் செத்தவீடு நடக்கும்போது பக்கத்து வீட்டில் கலியாணம் நடந்தது என்பார்.
வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம்.
ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே.
குறிப்பு - கலைஞர் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் நாமும் அதிகமாக எழுதமால் சுருக்கமாக திட்டியுள்ளோம்.
Image may contain: 1 person, sitting
இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?
இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?
கலைஞர் வெறும் மாநில முதலமைச்சர்தான். அவருக்கு இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தும் அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள்.
இன்னும் சிலர், கலைஞர் மட்டுமல்ல இந்திய அரசே நினைத்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார்கள்.
ஆனால், இந்தியாவுக்காகவே யுத்தத்தை நடத்தினோம் என்று மகிந்த ராஜபக்சா கூறிய போது இந்திய அரசோ அல்லது இந்த இவர்களோ ஏன் அதை மறுக்கவில்லை?
சரி. பரவாயில்லை. இந்தியாவின் உதவி இல்லையேல் எம்மால் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது என்று கோத்தபாயா கூறினாரே. அப்போது அதை ஏன் இந்திய அரசோ அல்லது இவர்களோ மறுக்கவில்லை?
சரி. பரவாயில்லை. யுத்தத்தை நிறுத்த இந்தியா விரும்பவில்லை. புலிகள் அழியும்வரை யுத்தம் தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருந்தது என்று ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருக்கிறாரே. இதற்கு இவர்கள் என்ன கூறப் போகிறார்கள்?
சரி. அதெல்லாவற்றையும் விடுவோம். நாராயணனும் சிவசங்கர்மேனனும் ஒவ்வொரு முறையும் கொழும்பு சென்று திரும்பும்போது சென்னை வந்து கலைஞர் கருணாநிதியை எதற்காக சந்தித்தனர்?
எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சரிடம் இவர்கள் சந்தித்து என்ன பேசினார்கள்? கலைஞரிடம் திருக்குறளுக்கு விளக்கம் கேட்க சந்தித்தார்கள் என்று கூறப்போகிறார்களா?
பிரபாகரனை கைது செய்யும்போது கௌரவமாக நடத்த வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அறி-க்கை விட்டிருந்தார். பிரபாகரனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படப்போகின்றது என்பது எந்தவித அதிகாரமும் இல்லாத முதலமைச்சரான கலைஞருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது?
இறுதி நேரத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கலைஞருடன் பேசக் கேட்டபோது “பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் கூறுங்கள்” என்று கனிமொழி கூறினாரே. அப்போதாவது கலைஞர் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நடேசனிடம் கூறியிருக்கலாமே ?
மாறாக கனிமொழி மூலம் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு சரண்அடையும்படி எந்த அதிகாரமும் இல்லாத கலைஞர் ஏன் எற்பாடு செய்தார்?
குறைந்தபட்சம் சரணடையும்போது கொல்லப்படப் பொகிறீர்கள் என்பதையாவது இந்த எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சர் நடேசனிடம் கூறியிருக்கலாமே?
மத்திய அரசுடன் சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போனதுடன் தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையினையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் எந்த அதிகாரமும் இல்லாத இந்த முதலமைச்சர் கருணாநிதி.
இந்த விபரங்களை தெரியாத தமிழக அப்பாவி உடன்பிறப்புகள் கலைஞரை ஆதரிப்பது புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நன்கு விபரம் தெரிந்த சில ஈழத் தமிழர் கலைஞரை நியாயப்படுத்துவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
Image may contain: 2 people, people standing
தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.
சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர்.
சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.
குறிப்பாக அமிர்தலிங்கம் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் தயவோடு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கிப் படிக்க வைத்தார். தலைவர் சிவசிதம்பரம் மகனை லண்டனுக்கு அனுப்பி படிக்கவைத்தார்.
சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார். எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார்.
பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் கடத்தல்காரர்கள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது.
அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை. எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள். தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும்.
சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர். தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர்.
Image may contain: 1 person, text
கடந்த வருடம் வவுனியாவில்
கடந்த வருடம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயார் ஒருவர் சுமந்திரனுக்கு செருப்பு காட்டினார்.
அப்போது அதை அரசியல் நாகரீகம் அற்றது என்று கூறி கண்டித்தவர்கள் இப்போது சுந்தரவள்ளி “அறுத்திடுவேன்” என்று பொதுவெளியில் பேசியதை அறச்சீற்றம் என்று பாராட்டுகிறார்கள்.
சம்பந்தர் ஜயாவிடம் தேசியக்கொடி பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதையே தவறு என்று கூறியவர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் தேசியகொடி எரிக்கப்படுவதை பாராட்டுகிறார்கள்.
இந்த அரசியல் நாகரீகம் என்பதுகூட ஈழத் தமிழருக்கு ஒரு வரையறை, உலகத்திற்கு இன்னொரு வரையறை என்பதை நாம் தெரிந்துகொண்ட நாள் இன்று.
Image may contain: Athavan Ananth, standing and outdoor
Image may contain: 1 person, sitting and close-up
கேட்பவன் கேணையன் என்றால்
கேட்பவன் கேணையன் என்றால்
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்வார்கள்!
செய்தி - புத்தரின் போதனைகள் மூலம் கொரோனோவை வெற்றி கொண்டுள்ளோம் - பிரதமர் மகிந்த ராஜபக்சா.
நம்பிட்டோம் பிரதமர் அவர்களே! அப்படியே அந்த கிளிநொச்சிவரை வந்தவிட்ட வெட்டுக்கிளி கூட்டத்தையும் புத்தரின் போதனைகள் மூலம் விரட்டிவிடுங்கள்.
அடுத்து, மலையகத்தில் நேற்றும் ஒரு பெண் குளவிக்கடியால் இறந்துள்ளார். அந்த குளவிகளையும் கொஞ்சம் புத்தரின் போதனைகள் மூலம் கலைத்து விடுங்கள்.
தமிழர்களின் கிழக்கு மண்ணில் தொல்பொருள் ஆய்வு செயலணி நியமித்துள்ளீர்கள். அதில் ஒரு தமிழருக்குகூட இடமளிக்கவில்லை. அதற்கும்கூட புத்தரின் போதனைகள்தான் காரணமா பிரதமர் அவர்களே?
அடுத்தமுறை இந்தியா சென்று திருப்பதி வெங்கடஜலபதியை வணங்கும்போது உங்கள் நண்பர் மோடிக்கும் புத்தர் போதனைகள் சிலவற்றை கூறிவிடுங்கள்.
ஏனெனில் அவர் இந்தியாவில் கொரோனோவுக்கு கை தட்டுங்கள் விளக்கு பிடியுங்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறார். இப்ப கடைசியாக கொரோனோவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்.
Image may contain: 7 people, people standing, wedding and indoor
தியாகி சிவகுமாரனே!
தியாகி சிவகுமாரனே!
மீண்டும் வந்து பிறந்துவிடாதே
பிறந்தாலும் தமிழ் இனத்திற்காக போராடிவிடாதே
ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும்
துரோகிகள் தியாகிகளாகவும் மாறும் காலம்
நீ கொல்ல முயன்ற துரையப்பா நல்லவராம்
அவரைக் கொன்றவர்கள்; வன்முறையாளர்களாம்.
துரையப்பாவை துரோகி என்று யார் உனக்கு சொல்லி தந்தார்களோ
அவர்களே இப்ப கூறுகிறார்கள் துரையப்பாவை சுட்டது தவறாம்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் இறப்பதற்கு
யார் காரணம் என்று என்று நீ கோவப்பட்டாயோ
அவர்களுடன் சேர்ந்து வாழ்வது தான் செய்த பாக்கியம் என்று கூறுபவரே
இப்போது தமிழினத்தின் தலைவராக இருக்கிறார்.
யார் உனது போட்டோவைக் காட்டி தேர்தலில் வென்றார்களோ
அவர்களே இப்போது கூறுகிறார்கள் தாங்கள் ஒரு போதும்
பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லையாம்.
எனவே தயவு செய்து மீண்டும் பிறந்துவர எண்ணிவிடாதே!
Image may contain: 1 person
தியாகி சிவகுமாரனும்
•தியாகி சிவகுமாரனும்
தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டமும்!
தியாகி சிவகுமாரன் இட ஒதுக்கீட்டு எதிரானவராமே என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் என்னிடம் கேட்கிறார்.
அவர் இவ்வாறு கேட்டது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஏனெனில் இன்றைய ஈழத் தமிழர் பலருக்கே தியாகி சிவகுமாரன் பற்றி தெரியவில்லையே.
இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்குவது. அத்தகைய சாதீய ஒதுக்கீடு எதுவும் இலங்கையில் இல்லை.
இலங்கையில் இருப்பது தரப்படுத்தல். அதாவது பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்பதற்கு வழங்கப்படுவது.
ஆரம்பத்தில் தரப்படுத்தல் என்பது இன ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது சிங்கள மாணவன் குறைந்த புள்ளியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவான். ஆனால் தமிழ் மாணவன் கூடிய புள்ளிகள் எடுத்தாலும் வாய்ப்பு பெறுவது கஸ்டமாக இருந்தது.
அதனால் தமிழ் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. இதற்கு எதிராக சிவகுமாரன் உட்பட தமிழ் மாணவர்கள் பாரிய போராட்டங்களை மேற்கொண்டனர்.
அதன்பின்பே இலங்கை அரசு மாவட்ட ரீதியான தரப்படுத்தலைக் கொண்டு வந்தது. இதுவே இப்பவும் நடைமுறையில் இருந்து வருகிறது.
சிவகுமாரன் விரும்பியிருந்தால் வெளிநாடு சென்று உயர் கல்வியும் வசதியான வாழ்வும் பெற்றிருக்க முடியும். அதற்கான வாய்ப்பும் வசதியும் அவருக்கு இருந்தது.
ஆனால் அவர் தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடினார். அதனால் அவர் சிறை மற்றும் சித்திரவதைகளை அனுபவித்தார்.
அவர் உயிர் பிரியும் அந்த அந்த இறுதி நேரத்திலும் தான் மீண்டும் பிறக்க விரும்புவதாகவும் பிறந்து தமிழ் இனத்திற்காக போராட விரும்புவதாகவும் கூறினார்.
ஆனால் சிவகுமாரன் போன்றவர்களை போராடத் தூண்டிய தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.
அதுவும் தலைவர் அமிர்தலிங்கம் தன் மகனுக்கு மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு பெற்று படிக்க வைத்தார். அந்த மகன் டாக்டருக்கு படித்துக்கொண்டே TENA என்ற இயக்கத்தை நடத்தினார்.
இந்திரா காந்தியிடம் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதமோ பயிற்சியோ வழங்க வேண்டாம் என்று கூறிய அமிர்தலிங்கம் தன் மகன் ஆயத இயக்கம் நடத்தியதை தடுக்கவில்லை.
தன் படிப்பை நிறுத்தாத அமிர்தலிங்கத்தின் மகன் தமிழ் இளைஞர்களை படிப்பை கைவிட்டிட்டு தன் இயக்கத்திற்கு வரும்படி அழைத்தார்.
அமிர்தலிங்கத்தின் மகனுக்கு நாட்டில் இருந்து இளைஞர்களை பிடித்து அனுப்பியவர் மாவை சேனாதிராசா. ஆனால் மாவை சேனாதிராசா தன் பிள்ளைகளை ஒருபோதும் போராட்டத்திற்கு அனுபியதில்லை.
அவ்வேளையில் அமிர்தலிங்கத்தின் மகனின் கடிதம் ஒன்றைக் கொண்டுவந்த அவரது உறவினர் ஒருவர் தள்ளாடி ராணுவ முகாமில் கைது செய்யப்பட்டார்.
உடனே அமிர்தலிங்கம் தொலைபேசியில் ஜனாதிபதி ஜெயவர்தனாவுடன் தொடர்பு கொண்டு அந்த இளைஞரை விடுவித்தார்.
அதேவேளை பல தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்கு அவர் பேசவில்லை.
இப்படிப்பட்டவர்கள் இனத்திற்காக போரடியவர்களை வன்முறையாளர்கள் என்றும் தங்களை தியாகிகள் என்றும் இப்போது கூறுகின்றனர்.
என்னே கொடுமை இது?
Image may contain: 1 person, text
ஓடாத மானும் போராடாத இனமும்
ஓடாத மானும் போராடாத இனமும்
உலகில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை!
வெள்ளை இனத்தவரான கனடா பிரதமர் முழந்தாளிட்டு தனது ஆதரவை கறுப்பு இன மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய மக்களின் பாரிய போராட்டமே இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது.
இந்த போராட்டங்கள் ஒரு உண்மையை மீண்டும் ஒருமுறை ஈழத் தமிழருக்கு உணர்த்தியுள்ளது.
அதாவது, இரந்து பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெறுவது.
எனவே தமிழ் மக்கள் விடுதலை பெறுவதற்கு, சம உரிமை பெறுவதற்கு, அமைதியான வாழ்வு வாழ்வதற்கு மூன்று வழிகள் உண்டு.
அவையாவன,
முதலாவது வழி - போராட்டம்
இரண்டாவது வழி - போராட்டம்
மூன்றாவது வழி - போராட்டம்.
போராட்டத்தை விட வேறு வழி எதுவும் இல்லை.
இந்தியா பெற்று தரும், ஜநா பெற்று தரும் என்று கனவு காணாமல் போராடுவதே தமிழருக்கு இருக்கும் ஒரே வழி.
குறிப்பு - போராட வேண்டும் என்பதை பொறுக்க முடியாமல் கோத்தாவின் விசுவாசிகள் “லண்டனில் இருந்து சொல்லிக்கொண்டிருக்காமல் உடனே ஓடிவந்து வந்து நாட்டில் இருந்து போராடுங்கள்” என்று இப்ப இதில் பின்னூட்டம் எழுதுவார்கள் பாருங்கள்.
Image may contain: 1 person, standing and shoes
•மக்களின் குரல் வளையை நெருக்கும் இந்திய அரசு!
•மக்களின் குரல் வளையை நெருக்கும் இந்திய அரசு!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் உண்டு என்கிறார்கள்.
ஆனால் இந்திய அரசின் கொடுமைகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க முனைந்தால் அவர்களின் குரல் வளையை நெரிக்கிறார்கள்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியதால் அசாம் விவசாயிகள் சங்கத் தலைவரான அகில் கோயின் உதவியாளரான பிட்டு சோனாவால் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியபோது பொலிசார் அவர் மீது மீண்டும் வழக்கு போட்டுள்ளனர்.
அதாவது அவர் தன் முகநூலில் லெனின் படத்தை போட்டு தோழர் என்று எழுதியுள்ளமையை குற்றமாக வழக்கு பதிவு செய்துள்ளனர் பொலிசார்.
“தோழர்” என்ற சொல்லையே இந்திய அரசால் ஜீரணிக்க முடியவில்லை. வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கு அந்த ஒரு சொல்லே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் தோழர் விவேக் என்பவர் ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இனி மக்கள் சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க வேண்டும் போல் இருக்கிறது.
Image may contain: 1 person
•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!
•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!
இன்று (09.06.2020) தோழர் சுந்தரம் அவர்களின் மூன்றாவது நினைவு தினம் ஆகும்.
தனக்கென்று வாழ்ந்து
தனக்கென்று உழைப்பவன்
மனிதன்!
தன் வாழ்க்கையையும்
தன் உழைப்பையும்
பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்
-மாமேதை காரல் மார்க்ஸ்
ஆம். மறைந்த தோழர் சுந்தரம் அவர்களும் ஒரு மாமனிதர்தான். அவர் தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைத்தவர் அல்ல. மாறாக, இறக்கும் வரையில் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையையும் மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு புரட்சியாளர்.
தோழர் சுந்தரம் மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளை தனது வழிகாட்டியாக கொண்டவர். அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர்.
தோழர் தமிழரசன் மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படைக்கு தலைமை ஏற்று பரந்து பட்ட மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவர்.
32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் சுமார் பத்து வருடங்கள் சிறை வாழ்க்கை. எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள். இத்தனைக்கும் மத்தியில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம்.
தோழர் சுந்தரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர்.நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியவர்.
அத்தகைய தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் சுந்தரம் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். இக் குறிப்பு “விடுதலை அறம்” இதழில் வெளிவந்துள்ளது.
https://tholarbalan.blogspot.com/2017/06/blog-post_25.html…
Image may contain: 1 person, text
இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-
இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-ஆனால்
புயலை எதிர்த்து கழுகுகள் மட்டுமே பறக்கமுடியும்!
தேர்தல் காலங்களில் சம்பந்தர் ஜயாவும் சுமந்திரனும் வருவார்கள். ஆனால் மக்கள் போராடும்போது இவர்கள் வருவதில்லை.
இப்போது மகிந்த ராஜபச்சாவிடம் இருந்து இரந்து உரிமை பெறுவோம் என கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
மகிந்த ராஜபக்சா முன் கை கட்டி குனிந்து நின்று இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடி பெறுவது.
இத்தனை அழிவிற்கு பின்பும் இத்தனை அழிவிற்கும் காரணமான மகிந்த ராஜபக்சா கும்பலை இனியும் நம்பி அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவது மேல்.
காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனை தேடிய தந்தை சின்னச்சாமி நல்லதம்பி மரணமடைந்துள்ளார்.
அவர் கடந்த 1200 நாட்களாக எழுந்து நின்று போராடியே மரணமடைந்துள்ளார்.
அவருடைய போராட்டம் தொடரும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
Image may contain: 4 people, text
அவர் மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும்
அவர் மீதும் அவர் சார்ந்த கட்சி மீதும்
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால்
தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என தெரிந்தும்
மக்களுக்கு சேவை செய்த அவரின் உணர்வு
நிச்சயம் பாராட்டுக்குரியது.
இத்தனைக்கும் அவர் ஆளும்கட்சியும் இல்லை.
எதிர்க்கட்சிதான். எனவே ஒரு அறிக்கையை விட்டிட்டு
வீட்டில் பாதுகாப்பாக இருந்திருக்கலாம். ஆனால்
அவர் மக்களுக்கு சேவை ஆற்றி உயிர் துறந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் உயிர் துறந்த முதலாவது எம்.எல்.ஏ.
அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
Image may contain: ஃபாரூக் முகமது, close-up
•பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை
•பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை
என்றும் நினைவில் கொள்வோம்!
இன்று(11.06.2020) ஜயா பெரும்சித்திரனார் அவர்களின் 25வது நினைவு தினமாகும்.
1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் ஈழப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் ஜயா பெருஞ்சித்திரனார் அவர்கள்.
அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் ஈழத்தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை.
நான் ஜயா அவர்களுடன் அதிகம் பழகவில்லை. அவருடைய மகன் தோழர் பொழிலன் அவர்களுடனே அதிகம் பழகியிருக்கிறேன்.
பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் ஜயா அவர்களுடன் பேசியிருக்கிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன். அவ்வேளைகளில் ஈழப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார்.
அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர்.
ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்போது கண்டு கொண்டேன். ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார்.
தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார். அப்போது அவர் ஜயா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு விடுதலையில் ஜயா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
இன்றும்கூட சிலர் சட்டத்திற்கும் சிறைக்கும் பயந்து தமிழ்நாடு விடுதலை பற்றியோ அல்லது தோழர் தமிழரசன் பற்றியோ பேச தயங்கும் நிலையில் அன்று உறுதியாக ஆதரித்து குரல் கொடுத்தவர் ஜயா பெருஞ்சித்திரனார்.
அவரிடம் சென்று பழகாத ஈழப்போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர்.
அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள்.
முதல் பெண் போராளி ஊர்மிளாவுக்கு நெருக்கடியான நேரத்தில் ஜயா அவர்களே தனது வீட்டில் நீண்ட நாட்கள் வைத்து பாதுகாத்து அனுப்பினார்.
ஜயா அவர்கள் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை.
ஈழத் தமிழர்கள் ஜயா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள்.
Image may contain: 1 person, text
•கூட்டமைப்பின் தேர்தல் வியூகம்!
•கூட்டமைப்பின் தேர்தல் வியூகம்!
மாவை சேனாதிராசா - ஜயா! சொன்னால் கேளுங்கள். இந்தமுறை அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. வேறு ஏதாவது புதிசாக சொல்ல வேண்டும்.
சுமந்திரன் - ஆம் ஜயா! போறபோக்கைப் பார்த்தால் இம்முறை என்னை தோற்கடித்துவிடுவாங்களோ என்று பயமாய் இருக்கு. ஏதாவது செய்யனும் ஜயா.
சம்பந்தர் - இந்த கருமத்திற்குதானே வாயை மூடிட்டு சும்மாய் இரும் என்ற எத்தனை தடவை சொன்னேன். கேட்டீரா?
சுமந்திரன் - அதுதான் தேர்தலை தள்ளிப்போட வழக்குப் போட்டுப் பார்த்தன். அதுவும் சரிவரவில்லை ஜயா.
மாவை சேனாதிராசா - இந்தியன் எம்பசி தந்த காசு இருக்குதானே ஜயா. அதில சாராயம் வாங்கி மக்களுக்கு கொடுத்துப் பார்த்தால் என்ன ஜயா?
சம்பந்தர் - தம்பி மாவை! தமிழ்நாட்டு; மக்கள் கைநீட்டி வாங்கினால் விசுவாசமாக வோட்டு போடுவார்கள். ஆனால் ஈழத் தமிழர் விபரமானவர்கள். வாங்கி குடித்துவிட்டு தனக்கு விருப்பமானவர்களுக்குதான் போடுவார்கள்.
சுமந்திரன் - அப்ப என்னதான் செய்வது ஜயா? என்னை நம்பி அம்பிகாவும் வேலையை ராஜினாமா செய்திட்டுது. எப்படியாவது எம்.பி யாக்கிறதா அவவுக்கு வாக்கு கொடுத்திட்டன்.
சம்பந்தர் - புரியுது. புரியுது. உமக்கு மட்டுமா எனக்குகூட பிரச்சனைதான். இந்த லெக்சனில் வெல்லவில்லை என்றால் எப்படியும் சொகுசு பங்களாவை பறித்திடுவாங்கள். அப்புறம் இந்த வயசில நான் எங்கேபோய் தங்குவது?
சுமந்திரன் - ஆமா ஜயா. நானும் வெல்லவில்லை என்றால் எனது அதிரடிப்படை பொலிஸ் பாதுகாப்பை நீக்கிவிடுவாங்கள். அப்புறம் போறவன் வாறவன் எல்லாம் செருப்பால் அடிப்பானே?
சம்பந்தர் - சரி. சரி. கவலைப்படாதையுங்கோ. நான் போய் இந்திய தூதரின் காலில் விழுகிறேன். அவர் ஏதாவது ஜடியா தருவார்தானே?
(தொடரும்)
Image may contain: 1 person, standing
•சுமந்திரன் வெற்றி பெற்றால்?
•சுமந்திரன் வெற்றி பெற்றால்?
தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழருக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.
ஆனால் தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெற்றால்,
(1) நடந்தது இனப்படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றமே என்று தான் கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.
(2) போர்க்குற்ற விசாரணையில் புலிகள் செய்த இனச்சுத்திகரிப்பும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் கூறியதை தமிழ் மக்கள் எற்றுக்கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.
(3) ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் அதனை செய்தவர்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.
(4) இன அழிப்பு செய்தவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ கிடைத்தது பாக்கியம் என்று தான் கூறியதை தமிழ் மக்கள் சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று சுமந்திரன் கூறுவார்.
(5) தான் ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றதையும்; தனக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற்றதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக சுமந்திரன் கூறுவார்.
(6) அம்பிகா அன்ரிக்கு எம்.பி பதவி பெற்றுக் கொடுக்க தான் முனைவதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக சுமந்திரன் கூறுவார்.
இவ்வாறு பல விடயங்களை சுமந்திரன் வெற்றி பெற்றால் கூறப் போகிறார்.
தமிழ் மக்கள் கையில் இருப்பது வோட்டு அல்ல வேட்டு. அதை அவர்கள் சுமந்திரனுக்கு எதிராக எப்படி பயன்படுத்தப் போகிறார்கள்?
Image may contain: 1 person
கொளுக்கட்டை பிடிப்பது எப்படி? - சம்பந்தர் ஐயா
கொளுக்கட்டை பிடிப்பது எப்படி? - சம்பந்தர் ஐயா
தமிழ் மக்களே!
கொளுக்கட்டை பிடிப்பது எப்படி என்ற கருமத்தை இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன். கவனமாக கேளுங்கள்.
என்ன நெடுக சொல்வதுதூனே என்று நீங்க நினைக்கக்கூடும். என்ன செய்வது? எத்தனை தடவை சொன்னாலும் சிலருக்கு புரிய மாட்டேங்குது.
அரிசி மாவை எடுத்து நன்றாக பிசைந்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். அதுதான் கொளுக்கட்டை
மகிந்தவுக்கு இது கொளுக்கட்டை என்று கூறுவேன். இதையே ரணில் சேர் கேட்டால் மோதகம் என்பேன்.
இதனை கூட இருந்து பார்க்கும் என் தம்பி சுமந்திரன் “இதுவல்லோ சாணக்கியம்” என்பார். கடவுள் தந்த வரம் என்று என்னை புகழ்வார்.
கனடாவில் இருக்கும் நம்மவர் இன்னும் ஒருபடி மேலே சென்று எனக்கு “வாழும் வீரர்” என்று பட்டம் தருவார்.
சரி. மக்களே இனி அடுத்த தீபாவளிக்கு கொளுக்கட்டை பிடிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
இப்படிக்கு உங்கள்
சம்பந்தர் ஐயா.
செய்தி - தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாங்களே. அதை இம்முறையும் மக்கள் நிரூபிக்க வேண்டும் - சம்பந்தர் வேண்டுகோள்.
குறிப்பு - இதுவரை ஏக பிரதிநிதியாக இருந்து என்ன ம - ரை பிடுங்கினீர்கள் என்று இதைப் படிக்கும் உங்களுக்கு கேட்க தோன்றும். அப்படி கேட்பது நாகரீகம் இல்லை. எனவே என்ன ஆணியைப் பிடுங்கினீர்கள் என்று கேட்போம்.
Image may contain: 1 person, sitting and living room
•5வது நாளாக தொடரும்
•5வது நாளாக தொடரும்
சிறப்புமுகாம் அகதிகளின் உண்ணாவிரதம்!
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 42 அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் தொடர்கிறது. ஆனால் இதுவரை தமிழக அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. ஒரு அதிகாரிகூட அவர்களை சென்று சந்திக்கவில்லை.
இந்த கொரோனா பிரச்சனை நேரத்திலும்கூட தமிழக அரசு இந்த ஈழத் தமிழ் அகதிகள் மீது இரக்கம் காட்ட மறுக்கிறது.
பொதுவாக தேர்தல் நேரங்களில் அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சனை விடயங்களில் வலிய வந்து அக்கறை காட்டுவார்கள்.
ஆனால் இலங்கையில் தேர்தல் அறிவித்த இந்த நேரத்திலும்கூட இவ் அகதிகளின் விடுதலைக்கு எந்தவொரு அரசியல் தலைவரும் குரல் கொடுக்கவில்லை.
இலங்கையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கே தம்மிடம் திறப்பு இல்லை என்று நக்கலாக கூறிய தலைவர் இந்தியாவில் உள்ள அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாதுதான்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று அக்கறைப்பட்டவர்கள்கூட இந்த அகதிகளின் விடுதலை குறித்து கவனம் கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது.
யாராலுமே கண்டு கொள்ளப்படாத பாவப்பட்ட ஜென்மங்கள் இந்த ஈழத் தமிழ்அகதிகள்.
Image may contain: 1 person, sitting
•சமஷ்டியைக் காணவில்லை என்று தேடிய சுமந்திரன்.
•சமஷ்டியைக் காணவில்லை என்று தேடிய சுமந்திரன்.
ஒரு நாள் யாழ் மருத்துவமனைக்கு சுமந்திரன் டாக்டரைத் தேடி வந்தார். அவரை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.
"சொல்லுங்கள் சுமந்திரன். உடம்புக்கு என்ன?"
"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"
"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீங்கள் பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த பில்டிங்கில இருக்கார்."
"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"
"சரி எதனால வலி?"
"நான் சமஷ்டியை முழுங்கிட்டேன்!"
"ஓ...அப்படீன்னா நீங்கள் இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படுங்க”
உள்ளே அழைத்துச் சென்று, அவருக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவர் வழியிலேயே சென்று அவரை குணப்படுத்த எண்ணிய டாக்டர், ஒரு பைல் கட்டை கொண்டு வந்து மருத்துவமனை மேசையில் வைத்தார்.
சுமந்திரன் தூங்கி எழுந்ததும், டாக்டர் அவர் அருகில் சென்று சொன்னார்.
"அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"
"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"
"நீங்கள் நிஜமாவே சமஷ்டியை முழுங்கியிருந்தீர்கள். அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டேன். நல்ல வேளை, உடனடியா நீங்கள் என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்டீங்க. அந்த சமஷ்டியும் பிழைச்சிட்டுது"
"அப்படியா டாக்டர். அந்தக் சமஷ்டியை நான் பார்க்கலாமா?"
"மேசையில் வைத்திருக்கிறேன். வந்து பாருங்கள்"
சுமந்திரன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து மேசைப் பக்கம் போனார். அங்கே சமஷ்டியைப் பார்த்தார். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினார். டாக்டர் பெருமிதத்துடன் அவரைப்; பார்த்தார்.
"பளார்!!"
எதிர்பாராமல் சுமந்திரன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "ஏன் சேர் என்னை அடிக்கிறீர்கள்" என ஆவேசமாக கேட்டார்.
"நீங்க ஒரு போலி டாக்டர். நான் சட்டம் படித்தவன். என்னை யாரும் ஏமாற்ற முடியாது. நான் முழுங்குனது ஏக்க ராஜ்ஜியத்தில் உள்ள சமஷ்டி. ஆனா நீங்க சந்திரிக்காவின் சமஷ்டியைக் காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"
டாக்டர் மயங்கி விழுந்தார்.
அதன்பின் சுமந்திரன் தன் அதிரடி பாதுகாப்புடன் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்றார்.
அங்கிருந்த அதிகாரியிடம் "சமஷ்டியைக் காணவில்லை. கெதியாக கண்டு பிடித்து தாருங்கள். தேர்தல் வந்துவிட்டது. நான் தமிழ் மக்களுக்கு காட்ட வேண்டும் "என்று முறையிட்டார்.
அதை பொறுமையாக கேட்ட அந்த சிங்கள பொலிஸ் அதிகாரி “அப்படியா சேர்? ஏற்கனவே ஒருவர் தீபாவளிக்கு பெற்ற தீர்;வைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்திருக்கிறார். முதலில் அவரின் தீர்;வைக் கண்டு பிடித்துவிட்டு அப்புறம் உங்கள் சமஷ்டியை கண்டு பிடிக்கிறோம்” என்றார்.
“அப்படியா? யார் தீர்வைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்தது?” என்று சுமந்திரன் கேட்டார்.
அதோ கதிரையில் நீண்ட உறக்கத்தில் இருக்கிறாரே. அந்த முதியவர்தான். அவர் தன் பெயர் சம்பந்தர் ஜயா என்று கூறுகிறார்.
குறிப்பு - சுமந்திரன் எப்படியும் சமஷ்டியுடன் வருவார் என அவரது விசுவாசிகள் ஆவலுடன் காத்தக் கொண்டிருக்கின்றனர்.
Image may contain: 1 person
Image may contain: 1 person
சுமந்திரன் தோற்கடிக்க முடியாதவரா?
சுமந்திரன் தோற்கடிக்க முடியாதவரா?
இலங்கை அரசின் நோக்கத்தை சுமந்திரன் பூர்த்தி செய்து வருவதால் எப்படியாவது அவரை வெற்றி பெற்றதாக இலங்கை அரசு அறிவிக்கும் என சிலர் கூறுகிறார்கள்.
சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டால் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும். எனவே இந்திய உளவுத்துறை எப்படியாவது சுமந்திரனைக் காப்பாற்றும் என வேறு சிலர் கூறுகின்றனர்.
சுமந்திரன் வடமராட்சியைச் சேர்ந்தவர். எனவே அந்த மக்கள் மண்ணின் பாசத்தில் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என இன்னும் சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறு கூறுபவர்கள் வரலாற்றை கொஞ்சம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். ஆனானப்பட்ட அமிர்தலிங்கத்தையே தோற்கடித்த தமிழ் மக்களுக்கு சுமந்திரன் எம்மாத்திரம்?
உடுப்பிட்டி சிங்கம் என அழைக்கப்பட்டவர் சிவசிதம்பரம். அவரையே வடமராட்சியில் உடுப்பிட்டி தொகுதி மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.
விகிதாசாரத் தேர்தலை அறிமுகப்படுத்தி இதில் யாரும் 100 வீத வெற்றி பெற முடியாது என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா கூறினார்.
அவர் அதை கூறிய முதல் மாவட்டசபைத் தேர்தலிலேயே 100 வீத வெற்றியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெற்றுக் கொடுத்தவர்கள் யாழ் மாவட்ட மக்கள்.
எனவே மக்கள் முடிவு எடுத்துவிட்டால் அப்புறம் இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய உளவுப்படையே நினைத்தாலும் சுமந்திரனை காப்பாற்ற முடியாது.
மக்கள் மீது நம்பிக்கை வைப்போம். மக்கள் அற்புதம் நிகழ்த்துவார்கள்.
குறிப்பு - ஒரேயொரு விடயம் மட்டும் சுமந்திரனுக்கு வாய்ப்பாக இருக்கிறது. அது என்னவெனில் சுமந்திரனுக்கான ஒரு பலமான மாற்று இன்னும் வைக்கப்படவில்லை.
Image may contain: 1 person, standing
அமீர் சொன்ன பொய்
அமீர் சொன்ன பொய்
ஆனாலும் அது எமக்கு பிடிச்சிருக்கு!
அண்மையில் மரணமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகள் விடுதலைப் புலிகள் இயக்க தலைவருக்கு ஜாமீன் பெற்று தன் இடத்தில் தங்கவைத்து உதவி செய்தார் என இயக்குனர் அமீர் கூறியிருக்கிறார்.
நான் அறிந்தவரையில் அமீர் கூறியது தவறான செய்தி. ஆனாலும் அவர் அவ்வாறு கூறியது ஒருவழியில் எமக்கு மகிழ்வு தருகிறது.
ஏனெனில் 12 வருடம் சட்டமன்ற உறுப்பினராகவும் திமுக மாட்ட தலைவராகவும் இருந்தவருக்குகூட ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்தார் என்பதை கூறி பெருமை சேர்க்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது அல்லவா!
எந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் தடையை நீடித்து வருகிறதோ அந்த இயக்கத்தின் தலைவருக்கு உதவியதாக கூறி பெருமை தேட வேண்டிய நிலை ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே ஏற்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமாகிய ஜீ.வி. பிரகாசிடம் யாராவது ஒருவர் வாழ்வை ஒருநாள் வாழ சந்தர்ப்பம் கிடைத்தால் யாருடைய வாழ்வை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டபோது தயக்கமின்றி ஒருவர் பெயரை அவர் குறிப்பிட்டார்.
அவர் குறிப்பிட்ட அந்த ஒருவர் பெயர் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன். இந்த பெயரைக் கூறுவதால் அவருக்கு எந்த சலுகையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக இந்திய அரசின் நெருக்கடிகளே கிடைக்ககூடும். ஆனாலும் அவர் தைரியமாக கூறியிருக்கிறார்.
பயங்கரவாதிகள் என்று எந்த திலீபன் , பாலச்ந்திரன் போன்றவர்களை இந்திய அரசு கொன்றதோ இன்று அவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டார்கள்.
ஆம். பெட்டிக்கடைகளின் பெயர்கள், வாகனங்களில் அவர்கள் படம், பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் என எங்கும் எதிலும் அவர்கள் வந்துவிட்டார்கள்.
இப்போது புரிகிறதா, ஏன் இந்திய அரசு தமிழர்களை கண்டு அஞ்சுகிறது என்று?
Image may contain: 1 person, beard and close-up
Image may contain: 1 person, beard
இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் வழக்கறிஞர்கள்.
இருவரும் ஈழத் தமிழர்கள்
இருவரும் வழக்கறிஞர்கள்.
இருவரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதுவும் யாழ் மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர்.
ஒருவர் மகிந்த அணியில் போட்டியிடும் செலஸ்ரின்.
மற்றவர் தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் சுமந்திரன்.
தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் 5வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதை அறித்து அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் செலஸ்ரின்.
இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாகவும் செலஸ்ரின் கூறியுள்ளார். ( அவர் பேசிய வீடியோ கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது)
இப்போது எமது கேள்வி என்னவெனில் மகிந்த ராஜபக்சாவின் அணியில் உள்ள ஒருவரே ஈழ அகதிகளுக்கு குரல் கொடுக்க முடிகிறது என்றால் சுமந்திரனால் ஏன் கொடுக்க முடியாது?
தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளாக தங்களை ஆதரிக்கும்படி கேட்கும் சுமந்திரன் ஈழ அகதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது கடமை அல்லவா?
இலங்கையில் சிறையில் உள்ளவர்களின் பட்டியலை பிரதமர் மகிந்தவிடம் கையளித்தேன் என பெருமையாக கூறும் சுமந்திரன் அதேபோன்று இந்தியாவில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கும் பட்டியல் வழங்கி பெருமை கொள்ளலாமே?
மக்களுக்கு குரல் கொடுப்பதற்கே எம்.பி பதவியே யொழிய சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெறுவதற்கோ அல்லது சொகுசு பங்களா பெறுவதற்கோ அல்ல என்பதை யார் சுமந்திரனுக்கு கூறுவது?
Image may contain: Stanislaus Celestine
Image may contain: 1 person
முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட
முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட
எழுந்து நின்று சாவது மேலானது- சேகுவாரா
இன்று (14.06.20) தோழர் "சே" யின் பிறந்த தினமாகும்.
அவர் கையில் கிட்டார் இருந்தபோதும் சரி அவர் கையில் துப்பாக்கி இருந்தபோதும் சரி அவை எப்போதும் மக்களுக்காகவே இயங்கின.
அவர் பல கருத்துக்களை கூறியிருந்தபோதும் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான கருத்து “ அடிமையாக விழுந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவதே மேல்” என்பதாகும்.
எமக்கு என்று ஒரு தொன்மையான மொழி உண்டு
எமக்கு என்று ஒரு கலை கலாச்சாரம் மற்றும் பண்பாடு உண்டு
எமக்கு என்று நாம் செறிந்து வாழும் ஒரு நிலப் பரப்பு உண்டு
எமக் கென்று பொருளாதார வளமும் இயற்கை வளமும் கூட உண்டு
இருந்தும் எம்மை நாமே தீர்மானிக்கும் ஆட்சி எம்மிடம் இல்லை
ஏனெனில் நாம் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறோம்.
போர்த்துக்கேயரை எதிர்த்து போராடிய நாம்
ஒல்லாந்தரை எதிர்த்து போராடிய நாம்
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நாம்
இன்று ஏன் போராடாமல் வீழ்ந்து கிடக்கிறோம்?
ஏனெனில் நாம் “அடிமை” என்பதை உணராமல் இருக்கிறோம்.
எமக்கு தேவை அடுத்த வருடம் தீர்வு வரும் என்று ஏமாற்றும் தலைவர் அல்ல
எமக்கு தேவை இந்தியாவின் உதவியுடன் தீர்வு வரும் என்று கூறும் தலைவர் அல்ல.
எமக்கு தேவை அடிமையாக கிடக்கிறாய். எழுந்து நின்று போராடு என்று கூறும் ஒரு தோழர் சே
Image may contain: 1 person, playing a musical instrument, guitar and text
•இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
•இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது காந்தி தேசத்தின் (இந்திய)தூதரான டிக்சித் அவர்கள் “திலீபன் ஒரு பயங்கரவாத புலி இயக்க உறுப்பினர். எனவே அவரின் உயிர் போவது பற்றி இந்திய அரசுக்கு கவலை இல்லை” என்று திமிராக பதில் கூறினார்.
இன்று தீட்சித் யார் என்றோ அல்லது அவர் எங்கே என்றோ யாருக்கும் தெரியாது. ஆனால் திலீபன் இந்தியாவில் தூத்துக்குடியில் பெட்டிக்கடைவரை வந்துவிட்டார்.
எந்த திலீபனை பயங்கரவாதி என்று இந்திய அரசு கொன்றதோ இன்று அந்த திலீபன்; தமிழ்நாட்டில் பல வடிவங்களில் திகழ்கிறார்.
தூத்துக்குடியில் பெட்டிக்கடையின் பெயராக, மதுரையில் ஒரு வீதியின் பெயராக, தஞ்சாவூரில் ஒரு பேருந்து தரிப்பிட நிழற்குடையாக, பிறக்கும் பல குழந்தைகளின் பெயராக தமிழ்நாடு எங்கும் திலீபன் இருக்கிறார்.
ராஜிவ்காந்தி கொலைக்கு பின் தமிழ்நாட்டில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என பார்ப்பணிய ஊடகங்கள் கூறி வருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி என்று பெயர் வைப்பதைவிட திலீபன் என்ற பெயரே அதிகமாக ஏன் வைக்கப்படுகிறது என்பதை இவர்கள் கூறுவதில்லை.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
நாம் திலீபனை. அறுவடை செய்கிறோம். ஏனெனில் நாம் விதைத்தது திலீபனையே யொழிய தீட்சித்தை அல்ல.
இனி இவ்வாறு பல அறுவடைகளை நாம் பெறப்போகிறோம்!
Image may contain: 1 person, outdoor
நான் தோற்றுப் போகலாம்;
•நான் தோற்றுப் போகலாம்; ஆனால்
அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல - சே
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு.
ஆனால் இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது. இதுதான் உண்மை.
தொட்டுவிடும் தூரத்தில்தான் வானம் இருக்கிறது. அது விரைவில் எம் வசப்படும்
இதுவரை தமிழின விடுதலைக்காக பலர் உயிர் துறந்துள்ளனர். விரைவில் இவர்களின் விருப்பம் வசப்படும்.
வானம் வசப்படும். இது உறுதி.
Image may contain: 1 person, beard and close-up
•இதுவரை இவர்கள் பிடுங்கிய ஆணி என்ன?
•இதுவரை இவர்கள் பிடுங்கிய ஆணி என்ன?
தங்களை ஏகபிரதிநிதிகளாக தெரிவு செய்யுங்கள் என்று இவர்கள் கேட்கிறார்கள்.
இதுவரை ஏகபிரதிநிதிகளாக இருந்து என்னத்தை பிடுங்கினார்கள்? இனியும் ஏகபிரநிதியாகி இவர்கள் என்னத்தை பிடுங்கிவிட முடியும் என்று கேட்கிறார்கள்?
அண்மையில் அமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கறுப்பு இனத்தவர் கள்ள நோட்டு குற்றச்சாட்டிலே கைது செய்யப்பட்டார்.
அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை. கைது செய்யும்போது கழுத்து நெரித்து கொல்லப்படுகிறார்.
ஆனாலும் கறுப்பு இனத்தவர்கள் மட்டுமல்ல முழு உலகமே அதை நிற ஒடுக்குமுறை என கண்டிக்கிறது. அதற்கு எதிராக போராட்டம் நடக்கிறது.
ஆனால் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்பும் அது இனப்படுகொலை என்று கூற முடியாதாம். ஏனெனில் ஜ.நா ஏற்றுக்கொள்ளாதாம்.
கறுப்பு இனத்தவர் கொல்லப்பட்டதை ஜ.நா நிற ஒடுக்குமுறை என்று ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்று யாரும் அக்கறை கொள்ளவில்லை.
மாறாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா உட்பட அனைவரும் நிற ஒடுக்குமறை என்றே இதனை கண்டிக்கிறார்கள்.
ஆனால் எங்கட தலைவர் சுமந்திரனுக்கு மட்டும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று கூற முடியாதாம். ஏனெனில் ஜ.நா ஏற்றுக் கொள்ளாதாம்.
அதுமட்டுமல்ல சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் புலிகளும் இனச் சுத்திகரிப்பு செய்தவர்கள், புலிகளின் படுகொலைகளும் விசாரிக்க வேண்டும் என்றுதானே இவர்கள் கூறினார்கள்.
அதுமட்டுமல்ல, இனப்படுகொலை செய்தவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ தனக்கு கிடைத்தது பாக்கியம் என்று கூறியவர் அல்லவா இந்த சுமந்திரன்.
அப்படிப்பட்டவர் கொழும்பில் போட்டியிட்டு பதவி பெறவேண்டியதுதானே? எதற்கு யாழ் மாவட்டத்தில் வந்து போட்டியிட வேண்டும்?
தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதற்கு தமிழ் மக்களிடமே வந்து பதவி கேட்கும் இவர்கள் தமிழ் மக்களை முட்டள்களாக நினைக்கவில்லை. மாறாக மூளையே இல்லாதவர்களாக நினைக்கிறார்கள்.
தமிழ் மக்கள் தங்களுக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை இந்த தேர்தலில் இவர்களுக்கு நிச்சயம் காட்ட வேண்டும்.
குறிப்பு - ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைதானே கொன்றனர். மீதி இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனரே. எனவே எப்படி இனப்படுகொலை என கூறமுடியும் என சுமந்திரன் கேட்கிறார். அப்படியென்றால் அமெரிக்காவில் ஒரு கறுப்பு இனத்தவர்தானே கொல்லப்பட்டிருக்கிறார். அனைத்து கறுப்பு இனத்தவரும் கொல்லப்படவில்லையே. அங்கு மட்டும் எப்படி அதை நிறப்படுகொலை என கூறமுடிகிறது?
Image may contain: 2 people, people standing
•மணிவண்ணன் அவர்களை நினைவில் கொள்வோம்!
•மணிவண்ணன் அவர்களை நினைவில் கொள்வோம்!
அவர் ஒரு சினிமா இயக்குனர் மட்டுமல்ல பிலபலமான நடிகரும்கூட
அவர் விரும்பியிருந்தால் ஜெய் ஹிந் என்று படம் எடுத்திருக்கலாம். நாலு காசு சம்பாதித்திருக்கலாம்.
ஆனால் அவர் எந்த நெருக்கடிக்கும் அஞ்சாமல் ஈழத் தமிழர்களை ஆதரித்தார்.
புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்து படம் காட்டிய சில தலைவர்கள் நெருக்கடியான இறுதி நேரத்தில் பேச முனைந்தபோது தொலைபேசியை அணைத்துவிட்டு உறங்கினார்கள்.
ஆனால் அவர்களுக்கு மத்தியில் தான் இறந்தால் தனக்கு புலிக்கொடியை போர்த்த வேண்டும் என தைரியமாக அறிவித்தவர் இவர்.
அவரிடம் உதவி கேட்டுச் சென்ற எந்தவொரு ஈழத் தமிழனும் உதவி பெறாமல் திரும்பி வந்தில்லை.
ஈழத் தமிழர்கள் ஒரு உண்மையான உணர்வாளனை இழந்து விட்டார்கள்.
இன்று அவரது 7வது நினைவு தினம். நன்றியுடன் நினைவு கூர்கிறோம
Image may contain: one or more people and indoor
•சிறப்புமுகாம் அகதிகளின் உண்ணாவிரதம் முடிவுற்றது!
•சிறப்புமுகாம் அகதிகளின் உண்ணாவிரதம் முடிவுற்றது!
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறுகோரி கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்தனர்.
இந்நிலையில், ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்வதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை அகதிகள் முடித்துள்ளனர்.
கடந்த காலங்கள் போல் ஏமாற்றாமல் இம்முறை வாக்குறுதி அளித்தபடி அதிகாரிகள் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
இச் சிறப்புமுகாம் இருக்கும்வரை கியூ பிராஞ் அதிகாரிகள் அகதிகளை பிடித்து அடைத்துக்கொண்டே இருப்பார்கள்.
எனவே இச் சிறப்புமுகாமை மூடுமாறு தமிழின உணர்வாளர்கள் இந்திய அரசிடம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
Image may contain: 2 people, people sitting
தவறுக்கு வருந்துவதுடன் மன்னிப்பு கோருகிறேன்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் எல்லையில் எலுமிச்சம்பழம் கட்டிய படம் போலியானது என்று சிலர் தெரிவித்துள்ளனர். எனவே அப் பதிவை நீக்கியுள்ளேன். தவறுக்கு வருந்துவதுடன் மன்னிப்பு கோருகிறேன்.
இட்லிக்குள் கறி வந்தது எப்படி
இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று கேட்பவர்கள் தமிழ்நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலை குறித்து ஏன் கேட்பதில்லை என்று ஒரு பதிவு அண்மையில் போட்டிருந்தேன்.
உடனே தமிழ்நாட்டு மூத்த ஊடகவியலாளர் ஒருவர் நான் சீமானிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுவதாகவும் தேவையானால் தான் ஆயிரம் ரூபா தருவதாகவும் எழுதினார்.
நான் லண்டனில் இருக்கிறேன். அவர் தரும் ஆயிரம் ரூபா எனக்கு குண்டி துடைக்கும் பேப்பர் வாங்கவே பத்தாது என்பது அவருக்கு தெரியுமோ தெரியாது.
ஆனால் நான் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசனையும் அவரது தமிழ்நாடு விடுதலைப்படையையும் ஆதரிக்கிறேன் என்பதை நன்கு தெரிந்தும் எதற்காக அவர் என்மீது சீமான் முத்திரையை குத்தினார் என்று யோசித்து பாhத்தேன்.
கடந்தவாரம் சேலத்தில் இருந்து ஒரு பொறியல் பட்டதாரி மாணவன் என்னுடன் தொடர்பு கொண்டார். அசாமில் லெனின் படம் போட்டதாக ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செய்தியை தந்து அது பற்றி ஒரு பதிவு எழுதுமாறு என்னிடம் கேட்டார்.
அப்போது நான் அவரிடம் “இந்தியாவில் இதை எழுதுவதற்கு பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க ஈழத் தமிழனான அதுவும் லண்டனில் இருக்கும் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்” என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் உடனே “ உங்கள் பதிவுகளை பலர் படிக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்” என்று பதில் அளித்தார்.
அம். உண்மைதான். பலபேர் படிக்கிறார்கள். அதனால்தான் எனது பதிவுகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் சிலர் முத்திரை குத்த முனைகின்றனர்.
நான் எந்த பதவியிலும் இல்லை. நான் எந்த ஊடகத்திலும் என் கருத்துகளை கூறவில்லை. ஆனாலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு என் கருத்துகள் சென்றடைகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் மக்கள் என்மீது கொண்ட நம்பிக்கை.
இந்த நம்பிக்கை என்பது ஒரு நாளில் வந்தது அல்ல. இதற்கு பின்னால் 40 வருட மக்களுக்கான எனது உண்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது.
இதுபுரியாமல் நான் விதைக்கும் கருத்துகள் மக்களால் பற்றிக் கொள்ளப்பட்டுவிடுமோ என அஞ்சி முத்திரை குத்தி பதில் அளிக்க முனைகின்றனர்.
அவர்களுக்கு நான் கூறும் பதில் முடியுமாயின் என் கருத்தை கருத்தால் சந்தியுங்கள். அவதூறுகளால் அல்ல.
குறிப்பு - கீழே உள்ள படம் எனது பதிவு ஒரு முகநூலில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்து இருபத்தோயாயிரம் பேரை சென்றடைந்ததைக் காட்டுகிறது. நான் நாலு முகநூலில் என் பதிவுகளை செய்கிறேன். அதை பலபேர் பகிர்கிறார்கள். அப்படியென்றால் மொத்தம் எத்தனை லட்சம் பேரை என் பதிவுகள் சென்றடைகிறது என்பதை கணக்கிட்டு பாருங்கள்.
Image may contain: Balan Chandran, sitting and text
உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, நீதி இவற்றின் மறுவடிவம் சுமந்திரன்.
உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, நீதி இவற்றின் மறுவடிவம் சுமந்திரன்.
ஆம்ட. இது 100% உண்மை. எனவே முழுமையாக இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் யாருக்கு ?
சுமந்திரன் ரணில் அரசுக்கு உண்மையாக இருந்தார்.
சுமந்திரன் ரணில் அரசுக்கு நேர்மையாக இருந்தார்
சுமந்திரன் ரணில் அரசுக்கு வெளிப்படையாக இருந்தார்
சுமந்திரன் ரணில் அரசுக்கு ஆபத்து வந்தபோது நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் சென்றார்.
இதுதானே உண்மை. இந்த உண்மையை சுமந்திரன் விசுவாசிகளே சொல்வதால் நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் ஒன்று, இப்பெல்லாம் சுமந்திரனை அவரது ஆதரவாளர்களே கலாய்க்க ஆரம்பித்தவிட்டார்கள்.
நேற்று ஒரு பதிவில் ஒரு சுமந்திரன் விசுவாசி “பிரபாகரன் கனவை நனவாக்க சுமந்திரன் உழைக்கிறார்” என்று எழுதியுள்ளார்.
இப்படி இன்னும் நாலு பதிவுகள் வந்தால் அப்புறம் சுமந்திரனை கடவளாலும் காப்பாற்ற முடியாது.
தோல்வி உறுதி.
Image may contain: Kumaresan Asak, text
•இது என்ன நியாயம்?
•இது என்ன நியாயம்?
இன்று தியாகி வாஞ்சிநாதன் நினைவுநாள்.
வாஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற தினமான ஜூன் 17ம் நாள் வீரவணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிறையில்.அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் அப்போதைய நெல்லை கலெக்டர் ஆஷ்துரை துப்பாக்கிக்சூடு நடத்த உத்தரவிட்டார்.
இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட வாஞ்சிநாதனும், சாவடி அருணச்சல பிள்ளையும் சேர்ந்து ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல திட்டமிட்டனர்.
அதன்படி 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்ட கலெக்டர் ஆஷ்துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு களமரணம் அடைந்தார்.
வாஞ்சிநாதன் மரணம் அடைந்த ஜூன் 17ம் தேதியில் ஆண்டுதோறும் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுக்கல்லுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
1987ம் ஆண்டு இலங்கை வந்த இந்திய ராணுவம் 10000ற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர். கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை சேதமாக்கினர்.
இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களுக்கு உத்தரவிட்ட பிரதமர் ராஜீவ்காந்தியை தானு என்ற தமிழ் பெண் வெடி குண்டு மூலம் கொன்றார். தானும் அதில் மரணமடைந்தார்.
ஆனால், நாலு பேர் இறப்புக்கு காரணமான ஆஷ்துரையை கொன்ற வாஞ்சிநாதனை தியாகி என்று கொண்டாடும் இந்திய அரசு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் இறப்புக்கு காரணமான ராஜீவ்காந்தியை கொன்ற தானுவை பயங்கரவாதி என்கிறது.
இது என்ன நியாயம்?
உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
Image may contain: 1 person, close-up
Image may contain: 1 person, close-up
•இந்திய அரசு ஈழத் தமிழருக்கு
•இந்திய அரசு ஈழத் தமிழருக்கு
உதவும் என்று இனியும் நம்பலாமா?
ஜ.பிசி வானொலிக்கு பேட்டியளித்த லண்டன் தமிழ்தேசியகூட்டமைப்பு முக்கியஸ்தர் போஸ் அவர்கள் தீர்வு பெறுவதற்கு இந்திய அரசைப் பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளார்.
கோரோனா பிரச்சனை முடிந்தபின் திங் ராங் போன்ற குழுவொன்றை அமைத்து அதன்மூலம் இந்திய அரசைப் பயன்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
போஸ் அவர்களுக்கு லண்டனில் புறப்பட்டி ஏஜென்சி பிசினஸ் நன்கு நடக்கின்றது. அப்புறம் எதற்காக இப்படி ஒரு புது பிசினஸ் டீல் ஆரம்பிக்கின்றார் என்று தெரியவில்லை.
கடந்தவருடம் இதே காலத்தில் இந்தியாவுடன் பேசி தீர்வுவொன்றைப் பெறப்போவதாக இவருடைய தலைவர் சம்பந்தர் ஐயா கூறியிருந்தார்.
சம்பந்தர் ஐயா இந்திய அரசைப் பயன்படுத்தி இதுவரை பெற்ற தீர்வு என்னவென்று தெரியவில்லை. இப்போது சம்பந்தர் ஐயா சரியாக பேச வில்லை என நினைத்து போஸ் ஆரம்பிக்கின்றாரா என்றும் தெரியவில்லை.
போஸ் லண்டனில் இருக்கிறார். லண்டன் அரசில் லொபி செய்யாமல் எதற்காக டில்லி சென்று லொபி செய்ய போஸ் முனைகிறார் என்றும் புரியவில்லை.
போஸ் ஏதோ இப்பதான் இந்தியாவை பயன்படுத்த முனைகின்றார் என்று இல்லை. இதுவரை தனியாக சென்று வந்தவர் இனி கும்பலாக குழுவாக செல்லப் போகிறாராம். அவ்வளவுதான்.
“நாங்கள் இந்தியாவை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களைப் பயன்படுத்திவிட்டது” என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபா கூறினார்.
இதே வரிகளைத்தான் போஸ் அவர்களும் இன்னும் சில வருடங்கள் கழித்து கூறுவார். சிலவேளை அவருடைய பிசினஸ்சில் ஒரு 40 வீடுகள் அதிகரிக்கலாம்.
இத்தனை அழிவுக்கு பிறகும் இத்தனை அழிவுக்கும் காரணமான இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இனியும் நம்புவர்களை என்னவென்று அழைப்பது?
Image may contain: 1 person
• நானும் தோசையும்!
• நானும் தோசையும்!
உனக்கு பிடித்த மூன்று உணவு கூறு என்று யாராவது என்னிடம் கேட்டால் தயங்காமல் உடனே
(1) தோசை
(2) தோசை
(3) தோசை என்று கூறுவேன். அந்தளவுக்கு எனக்கு தோசை பிடிக்கும்.
அதனால் சில நண்பர்கள் “ ஈஸ்ட்காம் தோசைக்கடை வாசலில் நின்றால் பாலன் தோழரை பிடிக்கலாம்” என கிண்டலாக கூறுவார்கள்.
படிக்கிற காலத்தில் பருத்தித்துறை வட்டப்பாறை கடலில் குளித்துவிட்டு அப்படியே வந்து சிவன் கோவிலடி தோசைக்கடையில் தோசை சாப்பிடுவது வழக்கம்.
அந்தக்கடையில் தோசை மட்டுமல்ல அதற்கு சிவப்பு வெள்ளை பச்சை கலர்களில் தரும் சம்பல்களும் ருசியாக இருக்கும்.
நான் 1981ல் முதன்முதலாக இந்தியா சென்றபோது திருச்சி பஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள அருணா லாட்ஜில் தங்கினேன்.
அதன்கீழ் தளத்தில் உணவகம் இருந்தது. எனவே காலை உணவுக்கு சென்றபோது சர்வரிடம் எனக்கு முதலில ஐந்து தோசை கொண்டு வாருங்கள். அப்புறம் அடுத்து இன்னொரு ஐந்து தோசை வேண்டும் என்றேன்.
அந்த சர்வர் இளைஞன் என்னை ஒருமாதிரி பார்த்தார். ஒரு பத்து பதினைந்து தோசைப் பெயர்களை கூறி அதில் எது வேண்டும் எனக் கேட்டார்.
எனக்கு புரியவில்லை. நான் மீண்டும் “முதலில் ஐந்து தோசை கொண்டு வாருங்கள்” என்றேன். உடனே அந்த சர்வர் “ சார் நீங்கள் மலையாளியா?” என்று கேட்டார்.
அதற்கு நான் “ இல்லை. நான் ஈழத் தமிழன். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறேன் “ என்றேன். அவருக்கு என் நிலைமை புரிந்து விட்டது.
முதலில் ஒருதோசை கொண்டு வந்து தருகிறேன். அப்புறம் அதை சாப்பிட்ட பிறகு தேவையானால் கூறுங்கள் தருகிறேன் என்றார்.
அதன்படி ஒரு தோசை கொண்டு வந்தார். மிகப் பெரிதாக இருந்து. சுருட்டி கொண்டு வந்து தந்தார். அதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியம் அவர் தோசைக்கு சம்பல் தரவில்லை.
வெள்ளையாக தண்ணியாக ஒன்றை தந்தார். அது உறைக்கவும் இல்லை. காரமாகவும் இல்லை. இது என்னவென்று கேட்டேன். சட்னி என்றார்.
அந்தமுறை சுமார் 15 நாட்கள் நான் தமிழ்நாட்டில் இருந்தேன். ஆனால் அந்த 15 நாட்களில் அதன்பின் ஒருமுறைகூட தோசை சாப்பிடவில்லை. அந்தளவுக்கு தோசை மீது வெறுப்பே வந்துவிட்டது.
அதன்பின்னர் பலமுறை தமிழகம் சென்றேன். ஒருவழியாக தமிழ்நாட்டு தோசை சாப்பிட பழகிவிட்டேன். ஆச்சரியம் என்னவெனில் இப்போது எனக்கு ஈழத்து தோசையைவிட தமிழக தோசையே நன்கு பிடிக்கும்.
குறிப்பு - சத்தியமாக இது அரசியல் பதிவு இல்லை. தொடர்ந்து சுமந்திரன் பற்றி எழுதியதால் சில சுமந்திரன் விசுவாசிகள் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். அவர்களை கூல் பண்ணுவதற்கான ஒரு ரிலாக்ஸ் பதிவு இது.
கீழே உள்ள எனது படம் எப்போது எங்கே எடுத்தது என்று எனக்கே நினைவு இல்லை. ஆனால் ஒரு முகநூல் நண்பர் இதை எனக்கு அனுப்பி ஆச்சரியப்பட வைத்துள்ளார். முகநூல் அற்புதம் இது.
Image may contain: Balan Chandran, suit
• யார் எழுத்தாளர்?
• யார் எழுத்தாளர்?
எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றார் ரஸ்சிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி.
ஆம். அவர் அப்படி இருந்தமையினால்தான் இன்று உலகம் போற்றும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இன்று மார்க்சிம் கார்க்கியின் நினைவு தினமாகும்(18.06.1936). இவர்தான் உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட புரட்சிகர “தாய்” நாவலை எழுதியவர்.
அன்றைய ரஸ்சிய ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி சுமார் இரண்டாயிரம் மக்கள் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர்.
ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர்.
அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.
இந்நிலையில் ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு கார்க்கிக்கு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
லெனின் புரட்சிக்கு நிதி சேகரிக்க வேண்டி கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு தான் உலகப் புகழ்பெற்ற தாய் நாவலை அவர் எழுதினார்.
இன்று ரஸ்சிய பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை.
Image may contain: 1 person, text
ஒருவனுக்கு எழும்பி நடக்க முடியல்லையாம்.
ஒருவனுக்கு எழும்பி நடக்க முடியல்லையாம். ஆனால் ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம் என்ற பழமொழிதான் இந்த படத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.
கண் தெரியுதில்லை. காது கேட்குதில்லை. மற்றவர் உதவியின்றி நடக்கவும் முடியுதில்லை. ஆனாலும் பதவியை விட மனம் வருகுதில்லை.
உலகில் உள்ள எல்லா வேலைக்கும் பென்சன் வயது இருக்குது. ஆனால் இந்த அரசியலுக்கு மட்டும் சாகும்வரை பதவியில் இருக்க முடியுது.
இந்த மிருகவதைச்சட்டம் போல் முதியவர் வதைச்சட்டம் ஏதும் இல்லையா? இருந்தால் அதன் கீழ் வழக்கு போட்டு சம்பந்தா ஐயாவை யாராவது காப்பாற்றுங்கள்.
அல்லது மக்களாவது அவருக்கு இந்தமுறை தோல்வியை வழங்கி ஓய்வு கொடுங்கள்.
Image may contain: 2 people, people standing
இதோ நானும் போட்டாச்சு!
இதோ நானும் போட்டாச்சு!
முகநூல் நண்பர் மகேந்திரா கண்ணா அவர்கள் எனது இந்த போட்டோக்களை உருவாக்கி அனுப்பியுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இதை எப்படி உருவாக்குவது என்பது இன்னமும் எனக்கு தெரியவில்லை. ஏனவே யாராவது அறிய விரும்பினால் மகேந்திரா கண்ணா அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.
Image may contain: Balan Chandran, sitting
Image may contain: one or more people, fire and night
Image may contain: Balan Chandran
Image may contain: Balan Chandran, smoking
தீபெத்திய மக்கள் ஜ.நா மன்றத்தின்
தீபெத்திய மக்கள் ஜ.நா மன்றத்தின் முன் ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் நேற்றைய தினம் குரல் கொடுத்துள்ளனர்.
தீபெத்திய மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தும் இலங்கையில் பௌத்த மதத்தின் பேரால் நடந்த இனப்படுகொலையை கண்டித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல இந்திய அரசு எரிச்சல் அடையும் என்று தெரிந்திருந்தும் அவர்கள் தமது ஆதரவை ஈழத் தமிழருக்கு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காஸ்மீர் , சீக்கிய மற்றும் குர்திஸ் போராடும் மக்கள் தமது ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
ஆனால் வேதனை என்னவெனில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக வரும் சுமந்திரன் நடந்தது இனப்படுகொலை அல்ல. போர்க்குற்றம் மட்டுமே என்கிறார்.
அவர் சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்கிறார்.
அவர் இலங்கை அரசு கோராதபோதும் ஒருமுறை அல்ல இரண்டுமுறை கால அவகாசம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
எனவே, என்னதான் உலக மக்கள் அனைவரின் ஆதரவை நாம் பெற்றாலும் சுமந்திரன் இருக்கும்வரை இனப்படுகொலைக்கான நீதியை ஒருபோதும் பெற முடியாது.
எனவேதான் சுமந்திரனை தமிழ் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது முன்நிபந்தனையாக அமைகிறது.
Image may contain: one or more people, people sitting and outdoor
•யார் ஒற்றுமையைக் குழப்புவது?
•யார் ஒற்றுமையைக் குழப்புவது?
செய்தி - இது முக்கியமான தேர்தல். எனவே தமிழ் மக்கள் ஒற்றுமையாக எமக்கு வாக்களிக்க வேண்டும் - சுமந்திரன்
ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவேன் என்று வீராப்பு பேசியவர் இப்போது வந்து தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமக்கு வாக்களிக்குமாறு கெஞ்சுகிறார்.
தமிழினப் படுகொலையாளிகளுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ்வது தனது பாக்கியம் என்று பேட்டியளித்தவர் இப்போது தமிழ் மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்.
சரி. பரவாயில்லை. தமிழ் மக்கள் எப்போதும் ஒற்றுமையாகத்தானே வாக்களித்து வருகிறார்கள். ஆனால் நீங்கள்தானே ஒற்றுமையைக் குழப்புகிறீர்கள்.
நீங்கள்தானே விக்கினேஸ்வரன் அவர்களை அழைத்து வந்தீர்கள். அப்புறம் நீங்கள்தானே அவரை கேவலப்படுத்தி வெளியேற வைத்தீர்கள்.
கஜே;ந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் எல்லாம் உங்களுடன்தானே இருந்தார்கள். அவர்களை ஏன் ஒற்றுமையாக வைத்திருக்காமல் வெளியேற்றினீர்கள்?
அனந்தி சசிதரனை நீங்கள்தானே அழைத்து வந்தீர்கள். அப்பறம் அவரை ஏன் வெளியேற வைத்தீர்கள்.
இப்பகூட உங்கள் வேட்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லையே. உங்கள் வேட்பாளர் தவராசா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று நீங்கள்தானே அவதூறு பரப்புகிறீர்கள்.
அப்புறம் எந்த முகத்தோட வந்து ஒற்றுமையாக வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்கிறீர்கள்?
குறிப்பு - இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆம். உண்மைதான். ஆனால் இது தமிழ் மக்களுக்கு முக்கியமாக தேர்தல் இல்லை. சுமந்திரனுக்குத்தான் முக்கியமான தேர்தல். ஏனெனில் அவரது அரசியல் வாழ்வை தீர்மானிக்கப்போகும் தேர்தல்.
Image may contain: 1 person
இந்திய சீன யுத்தம் நிகழ்ந்தால்
இந்திய சீன யுத்தம் நிகழ்ந்தால் இந்தியாவின் பிடியில் உள்ள காஸ்மீர் விடுவிக்கப்படும் என சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சீன ஆய்வாளர்களால் கணிக்காத ஒரு விடுதலை இந்தியாவின் தென்பகுதியில் நிகழும்.
ஆம். தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெறும்.
அதற்குரிய அனைத்து தகுதிகளுடனும் ஒரு விடிவுக்காய் தமிழ்நாடு காத்துக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசு ஒரு யுத்தத்தை இந்திய மக்கள் மீது சுமத்துமாயின் அதனை தமது விடுதலை யுத்தமாக மாற்றும் சக்தி தமிழ் மக்களுக்கு உண்டு.
இந்த யுத்தம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழருக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்கும்.
No photo description available.
•சுமந்திரனுக்கு ஏற்படும் பரிதாபநிலை?
•சுமந்திரனுக்கு ஏற்படும் பரிதாபநிலை?
தமிழ் மக்களுக்கு எதிரானவர்களுக்கு தன்னால் ஆதரவு கோர முடியாது என்று தமிழரசுக்கட்சி வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கூறுகிறார்.
சுமந்திரனுடன் கூடச் சென்றால் தனக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என சுமந்திரனின் விசுவாசியான ஆர்னோல்ட்டே சுமந்திரனை தவிர்க்கிறார்.
சிறீதரன் இன்னும் ஒருபடி மேலே சென்று “ சுமந்திரனுடன் சென்றால் தோல்வி வரும் என்றால் அதை ஏற்க தயார்” என்று கூறியுள்ளார்.
ஆக மொத்தத்தில், சுமந்திரன் தோல்வி அடையப் போகிறார் என்பதை அவரது கட்சிக்காரர்களே வெளிப்படையாக கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவேன் என்று திமிராக பேட்டியளித்த சுமந்திரனுக்கு தன் கட்சிக்காரர்களாலேயே இப்படி ஒரு நிலை வரும் என நிச்சயம் எதிர் பார்த்திருக்கமாட்டார்.
ஆனால் இதைவிட சுமந்திரனுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொடுக்கப் போகிறார்கள்.
ஆம். சுமந்திரனுக்கு வாக்களிக்கக்கூடாது என அவர்கள் தமிழ் மக்களிடம் கோரப் போகிறார்கள்.
எனவே இனி சுமந்திரனை மகிந்த ராஜபக்சா மட்டுமல்ல இந்திய தூதுவராலும் காப்பாற்ற முடியாது.
இவை எல்லாம் தெரிந்தும் எப்படி சிலரால் சுமந்திரனை புகழ்ந்து பதிவுகள் இட முடிகிறது என நீங்கள் யோசிக்கலாம்.
ஆம். அவர்கள் செத்த மாட்டில் இருந்து உண்ணி கழருவதுபோல் சுமந்திரன் தோல்வி அடைந்தவுடன் விலகி விடுவார்கள். இது சுமதிரனுக்கும் தெரியும்.
Image may contain: one or more people, people standing, outdoor and nature, text that says "i PAGETAMIL.COM சுமந்திரனுக்காக பிரச்சாரம் செய்வதால் தமிழ் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால்,..."
68You, Mathanarajah Nada, Iravi Arunasalam and 65 others
23 comments
பத்மநாபா !
பத்மநாபா !
தெரிந்து கொள்ளப்பட வேண்டியவரா?
புரிந்து கொள்ளப்பட வேண்டியவரா?
பத்மநாபா எளிமையானவர் , பத்மநாபா நல்லவர் என்றெல்லாம் எழுதி நாபாவை தெரிய வைப்பதில் எந்த பயனும் இல்லை.
மாறாக, நாபாவை தமிழ் மக்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே எழுத வேண்டும்.
பத்மநாபா விடுதலையை விரும்பினார்
பத்மநாபா புரட்சியை விரும்பினார்
பத்மநாபா ஈழத்தை விரும்பினார்
ஆதனால்தான் அவர் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யை நிறுவி போராடினார்.
ஆனால்,
நாபா முன்வைத்த விடுதலையை கைவிட்டவர்கள்
நாபா முன்னெடுத்த புரட்சியை கைவிட்டவர்கள்
நாபா முன்வைத்த ஈழத்தை கைவிட்டவர்கள்
இன்று அவருக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள்.
இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
ஏனெனில் நாபாவே தன் இறுதிக் காலத்தில்
தான் உச்சரித்த புரட்சியை கைவிட்டார்.
தான் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்
இந்திய உளவு நிறுவனங்களின் வழிகாட்டலில் தேர்தல் பாதையில் பயணித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்திய அரசை ஆதரித்தார்.
அதன் மூலம் அவரை நம்பிய தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார்.
இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு துணை போனார்.
அதனால் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு துரோகியானார்.
பத்மநாபா புதைக்கப்பட்டார். அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து சிலர் ரத்தம் பாய்ச்சுகிறார்கள் அவர் உயிர்த்தெழுவார் என்று
ஆனால் அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
எனினும் பத்மநாபா தன் இறுதிக் காலத்தில் கூறிய ஒரு வரியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
“இந்தியாவை பயன்படுத்த நாம் நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது”என்று அவர் கூறினார்.
எனவே தயவு செய்து இனியாவது இந்திய அரசுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
Image may contain: தாயகச் செய்திகள், beard and text
அன்று இந்த கல் மட்டும் உருண்டு விழுந்திருந்தால்
•அன்று இந்த கல் மட்டும் உருண்டு விழுந்திருந்தால்
இன்று இந்திய மக்கள் மட்டுமல்ல சீன மக்களும் நிம்மதியாக இருப்பர்!
சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வரவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் இந்திய ராணுவம் 20 பேர் எப்படி எங்கே இறந்தார்கள்? அதை பிரதமர் மக்களுக்கு கூறுவாரா?
தூத்துக்குடியில் நிராயுதபாணியாக வந்த மக்களையே துப்பாக்கியால் சுட்டவர்கள் எல்லையில் எதற்காக கற்களை எறிந்து மோதினார்கள்?
கொரோனோ பிரச்சனையில் மக்கள் கவனத்தை திருப்புவதற்காக பிரதமர் மோடி இவ்வாறான மோதலில் இறங்கியுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இது இந்தியாவின் அதிகளவான அமெரிக்க சார்பினால் எற்பட்ட மோதல் என்றே தோன்றுகிறது.
இங்கு வேடிக்கை என்னவெனில் ஒருபுறம் சீனப் பொருட்களை பகிஸ்கரிக்கும்படி கூறிக்கொண்டு மறுபறத்தில் சீன நிறுவனத்திற்கு 1121 கோடி ரூபா ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அதைவிட வேடிக்கை சீனாவுக்கு அதிகளவு மாட்டிறைச்சியை மோடியின் குஜராத் கம்பனி ஒன்றே ஏற்றுமதி செய்கிறது.
Image may contain: 2 people, people standing and outdoor
இப்போது ஏன் முன்வருகின்றனர்?
•தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்?
தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர்.
போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்?
ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும்.
இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம்,
salary -54,485 Rs
fuel -30,000 Rs
transport-10,000 Rs
Entertainment- 10,000 Rs
mobile phone -2000 Rs
meeting each -500Rs
Current bill - free
Land line phone - free
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)
மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards
ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா.
ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே.
எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா
இந்தளவு சம்பளம் பெறும் உறுப்பினர் பாராளுமன்றில் செய்வது, குறட்டை விட்டு தூங்குவது கெட்ட வாhத்தைகளால் திட்டுவது சண்டை பிடிப்பது, பேப்பர் ராக்கட் விடுவது மிளகாய் தூள் வீசுவது
அப்புறம் மதியம் பாராளுமன்ற கண்டீனில் மலிவு விலையில் சாப்பாடு.
கொழும்பில் சொகுசு பங்களா, சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு
சொகுசு வாகன பெர்மிட்டை விற்று 5 கோடி ரூபா சுளையாக எடுக்கலாம்.
உதவியாளர், சாரதி, அலுவலக வாடகை எல்லாம் தம் உறவினர்களுக்கு கொடுத்து அதில் இருந்தும் காசு பார்க்கலாம்.
5 வருடம் பதவி காலம் முடிய பென்சன் பெறலாம்.
இதைவிட செம்புகளிடமிருந்து “போராளி” “வாழும் வீரர்” போன்ற பட்டங்கள் பெறலாம்.
இத்தனைக்குமாகவே இவர்கள் முன்வருகின்றனர். இவை இல்லை என்றால் இதில் ஒருவர்கூட முன்வர மாட்டார்கள்.
குறிப்பு - பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் - தோழர் லெனின்
Image may contain: outdoor
கீழ்வரும் நிபந்தனைகளுக்கு
கீழ்வரும் நிபந்தனைகளுக்கு
எந்தவொரு வேட்பாளராவது சம்மதிப்பாரா?
(1) தேர்தலில் வெற்றி பெற்றால் பாராளுமன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் வெற்றி பெற்ற தொகுதியில் தங்குவேன். வாரத்தில் ஒருநாளாவது மக்கள் குறைகளை கேட்பேன்.
(2) தேர்தலில் வெற்றி பெற்றால் சொகுசு வாகனம் வாங்க மாட்டேன். வாங்கினாலும் அதை விற்று வரும் 7 கோடி ரூபா பணத்தையும் அப்படியே மக்களுக்கு வழங்குவேன்.
(3) சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக் கொள்ள மாட்டேன். பெற்றுக் கொண்டாலும் மக்கள் மத்தியில் பொலிஸ் காவலுடன் வர மாட்டேன்.
(4) வெற்றி பெற்றபின் கட்சி மாறி அமைச்சுப் பதவி பெற மாட்டேன். அதற்காக 50 கோடி ரூபா பணமும் மகிந்த கும்பலிடம் இருந்து பெற மாட்டேன்.
(5) சாரதி, செயலாளர், இணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு என் உறவினர்களை நியமித்து அதில் இருந்தும் பணம் சம்பாதிக்க மாட்டேன். மாறாக முன்னாள் போராளிகளுக்கு இப் பதவிகளை வழங்குவேன்.
(6) என் பெயரிலோ அல்லது பினாமி பெயர்களிலோ சாராய பெர்மிட் வாங்க மாட்டேன். வன்னியில் பல ஏக்கர் நிலங்களை சுருட்ட மாட்டேன்.
(7) லஞ்சம் பெற மாட்டேன். ஊழல் செய்ய மாட்டேன். பதவி ஆரம்பிக்கும்போதும் பதவி முடியும்போதும் எனது குடும்ப சொத்து விபரங்களை பகிரங்மாக மக்கள் முன் தெரிவிப்பேன்.
(8) தேர்தல் செலவுக்காக இந்திய தூதரிடம் பணம் பெற மாட்டேன். யாரிடமாவது பணம் பெற்றாலும் அதற்குரிய கணக்குகளை பகிரங்கமாக தெரிவிப்பேன்.
(9) மக்கள் எங்கு மருத்துவ சிகிச்சை பெறுகிறார்களோ அதே மருத்துவமனையிலேதான் நானும் சிகிச்சை பெறுவேன். மக்கள் பணத்தில் சிங்ப்பூரோ அல்லது டில்லியோ சென்று சிகிச்சை பெற மாட்டேன்.
(10) மற்ற தொழில்கள் போன்று பென்சன் வயது வரும்போது ஒதுங்கி இளையவர்களுக்கு வழி விடுவேன். சாகும்வரை பதவியில் இருப்பேன் என்று அடம் பிடிக்க மாட்டேன்.
குறைந்த பட்சம் இவ் நிபந்தனைகளுக்கு சம்மதிக்கும் வேட்பாரளர் ஒருவராவது இருக்கிறாரா?
தமிழ் மக்களே! வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் கேளுங்கள்.
குறிப்பு - எமது வேட்பாளர்களை பன்றிகளுடன் ஒப்பிட்மைக்காக தேவையானால் பன்றிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
No photo description available.
Image may contain: 1 person
தந்தையர் தினத்தை முன்னிட்டு !
தந்தையர் தினத்தை முன்னிட்டு !
ஒரு மகன் தந்தையின் பாக்கட்டில் உரிமையுடன் பணம் எடுக்க முடியும்.
ஆனால் ஒரு தந்தையால் மகனின் பாக்கட்டில் அதேபோல் உரிமையுடன் பணம் எடுக்க முடியாது.
கடவுள் எங்கே இருக்கிறார் என்று பத்து வயதில் நான் கேட்டபோது உடனே பருத்தித்துறை யுனைட்டட் புத்தகசாலைக்கு கூட்டிச் சென்று பெரியாரின் புத்கங்களை வாங்கித் தந்து படிக்க வைத்தவர்.
இன்று என்னிடம் விலை உயர்ந்த கைத் தொலைபேசி உண்டு. பல கமராக்கள் உண்டு.
ஆனால் என்னுடன் சேர்ந்து நின்று படம் எடுக்க அப்பா உயிருடன் இல்லை.
தந்தையர் உயிருடன் இருக்கும்போது அவர்களின் அருமை தெரிவதில்லை.
அவர்களின் அருமை உணரும்போது அவர்கள் உயிருடன் இருப்பதில்லை.
தந்தையருக்குரிய சாபம் இது?
குறிப்பு- கீழே உள்ள எனது தந்தையாரின் படத்தை தந்து உதவிய நண்பர் லக்ஸ்மன் திருநாவுக்கரசுக்கு நன்றிகள
Image may contain: 1 person
•தூரம் அதிகம் இல்லை
•தூரம் அதிகம் இல்லை
இதோ தெரியுது எதிரியின் எல்லை
தமிழர் எல்லாம் எழுந்து நின்றால்
இந்த எதிரிகளுக்கு இனி பதவி இல்லை
சுமந்திரன் - சேர், இனி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது போல் இருக்கு. சுற்றிவர ஆர்மி பொலிஸ் எல்லாம் இருந்தும் கொஞ்சம்கூட பயமின்றி செருப்பு எறியிறாங்க. அடிக்க வராங்க. பயமாய் இருக்கு.
ரணில் - என்ன சுமந்திரன்? வழக்கம்போல் ஒரு வருடத்தில் தீர்வு அல்லது தீபாவளிக்கு தீர்வு என்று சொல்ல வேண்டியதுதானே?
சுமந்திரன் - சும்மா இருங்க சேர். உங்களுக்கு கள நிலைமை புரியவில்லை. முன்ன மாதிரி இப்ப தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. எல்லோரும் விபரமாயிட்டாங்க. பேஸ்புக்கில கிழி கிழியென்று கிழிக்கிறாங்கள். பத்து வோட்டு கிடைக்குமா என்றே தெரியவில்லை.
ரணில் - என்னாலும் உதவ முடியாது. ஏனென்றால் என் நிலைமையும் மோசமாய் இருக்கு. சஜித் குறுப் கூட இருந்து குழி பறிக்கிறாங்கள். எனக்கே இந்தமுறை சீட் கிடைக்குமா தெரியவில்லை?
சுமந்திரன் - ஆமா சேர். எனக்கும் என் கட்சிக்காரங்களும் குழி பறிக்கிறாங்கள். யாரையும் நம்ப முடியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
ரணில் - நானே மகிந்தவின் காலில்தான் விழப்போறன். தேவையென்றால் நீரும் வாரும். சேர்ந்து போய் விழுவோம். இரண்டுபேரும் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறோம்தானே. எனவே அந்த நன்றிக்காக அவர் ஏதும் உதவுவார் என நம்பகிறேன்.
சுமந்திரன் - ஆமா சேர். நானும் வாறன். அவரை ஜ.நா வில் நான் காப்பாற்றியிருக்கிறேன். எனவே அதற்காக எனக்கு கட்டாயம் உதவுவார்.
Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing and suit
•எதிரி உன்னை புகழ்கிறான் எனின்
•எதிரி உன்னை புகழ்கிறான் எனின்
நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்!
செய்தி - பிரதமர் மோடி சொன்ன கருத்து. புகழ்ந்து தள்ளும் சீன ஊடகங்கள்.
சீன ராணுவம் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் வரவில்லை என்று பிரதமர் மோடி கூறியதை சீனா புகழ்ந்துள்ளது.
சரி. அப்படியென்றால் இருபது இந்திய ராணுவத்தினர் எங்கே எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை பிரதமர் மோடி கூறுவாரா?
பாகிஸ்தான் என்றால் 56 இஞ்ச் நெஞ்சைக் காட்டி சர்ஜிக்கல் ஸ்ராக் அட்டாக் பண்ணும் மோடி சீனா என்றால் ஏன் பம்முகிறார்?
குறிப்பு - IPL ஸ்பான்ஸ்சராக சீனாவின் VIVO தொடரும் என்று BCCI அறிவித்திருக்கிறது. BCCI இன் செயலாளர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஆவார். இது தெரியாமல் தமிழ்நாட்டில் சீன பொருட்களை எரிக்கும் அப்பாவி சங்கிகளை என்ன செய்வது?
Image may contain: 2 people, people standing
மூத்திரம் பெய்து கடலை நிரப்ப முயலும் சுமந்திரனின் குழந்தைகள்!
•மூத்திரம் பெய்து கடலை நிரப்ப முயலும் சுமந்திரனின் குழந்தைகள்!
முதலாவது குழந்தை - சுமந்திரன் வெற்றி பெறுவார்
இரண்டாவது குழந்தை - சுமந்திரன் அமோக வெற்றி பெறுவார்
மூன்றாவது குழந்தை - சுமந்திரன் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
சரி. வெற்றி உறுதி என்றால் எதற்கு சிறீதரனையும் கூட்டிக் கொண்டு குச்சி ஒழுங்கை எல்லாம் இந்த கொரோனா நேரத்தில் சுத்த வேண்டும்? கொழும்பில படுத்திருக்க வேண்டியதுதானே?
சரி. பரவாயில்லை. தேர்தல் நேரத்தில் முன்வைக்கப்படும் தேர்தல் விஞ்ஞாபனம் எப்போது மக்கள் முன் வைக்கப் போகிறீர்கள்?
தமிழ் மக்களுக்கு இதுவரை செய்தது என்ன என்று கூற உங்களிடம் எதுவும் இல்லை.
குறைந்தபட்டசம் இனி என்ன செய்யப்போகின்றீகள் என்பதையாவது தெரிவிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வையுங்கள்.
ஆனால் தயவுசெய்து ஒரு வருடத்தில் தீர்வு என்று கடந்தமுறைபோல் எதையும் கூறி ஏமாற்ற முயலாதீர்கள்.
Image may contain: one or more people, people standing, ocean, outdoor and water
Image may contain: 1 person
•வாயால் சுட்ட வடை!
•வாயால் சுட்ட வடை!
எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க ?
வடை வாங்கிட்டு வரச் சொன்னா சம்பந்தர் ஐயா சுட்டதா? சுமந்திரன் சுட்டதா? என்று கேட்கிறான்.
குறிப்பு - எலெக்சன் கடி ஜோக் -1 ( இப்படி எலெக்சன் முடியும்வரை வரும்.)
Image may contain: 3 people, people standing
•நிதி விடயத்தில் சுமந்திரன் நேர்மை என்ன?
•நிதி விடயத்தில் சுமந்திரன் நேர்மை என்ன?
சுமந்திரன் நல்லவர், வல்லவர், நேர்மையானவர் என்றெல்லாம் அவரது தம்பிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக பண விடயங்களின் அவர் கரங்கள் கறைபடியாதவை என்று வேற பில்டப் கொடுக்கின்றனர்.
சரி. அப்படியென்றால் “தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு வந்த பணம் எங்கே? அதன் கணக்கு வழக்கு என்ன?” என்று மாவை சேனாதிராசாவின் மகன் கேட்டதற்கு ஏன் இன்னும் சுமந்திரன் பதில் அளிக்கவில்லை?
மாவை சேனாதிராசாவின் மகன் இவ்வாறு பகிரங்கமாக கேட்டதால்தான் இம்முறை மாவைக்கு எதிராக சுமந்திரன் செயற்படுகின்றார் என்று கூறுகிறார்களே. அது உண்மையா?
மாவை சோனாதிராசாவின் மகன் கேட்டதைக் கூட விட்டுவிடுவோம். தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேட்டாரே? அவருக்குகூட ஏன் சுமந்திரனால் பதில் அளிக்க முடியவில்லை?
ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் இந்திய தூதர் தரும் பணம் எத்தனை கோடிகள்? அது எப்படி வேட்பாளர்களுக்கு பங்கிடப்படுகிறது? அதன் கணக்கு வழக்குகளை மக்களுக்கு காட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்காவது காட்டலாம்தானே?
அதுவும் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்றும் நேர்மையானவர் என்றும் அவரது தம்பிகளால் அழைக்கப்படும் சுமந்திரனால் ஏன் நேர்மையாக கணக்கு வழக்குகளைக் காட்ட முடியவில்லை@?
சுமந்திரன் ஒரு பிரபலமான வழக்கறிஞர். அவர் தனது லட்சக்கணக்கான ரூபா வருமானத்தை விட்டிட்டு வந்து மக்களுக்கு சேவை செய்வதாக தம்பிகள் கூறுகின்றார்கள்.
சுமந்திரனின் வழக்கு நிறுவனம் இப்போதும் இயங்குகிறது. அதனூடாக அவரது வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அதைவிட கிருத்தவ நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமந்திரன் மனைவிக்கு மாதம் 3 லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். அதை சுமந்திரன் இதுவரை மறுக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இரகசிய மற்றும் பினாமி சொத்துகளை தவிர்த்து அவர் காட்டிய சொத்து பெறுமதியின்படி அவரது சொத்து மதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது.
இத்தனைக்கு பிறகும் சுமந்திரனை நேர்மையானவர் என்று எப்படி அவரது தம்பிகளால் கொஞ்சம்கூட கூச்சமின்றி கூற முடிகிறது?
குறிப்பு - சம்பந்தர் ஐயாவின் மகன் கொழும்பில் செய்யும் பிசனஸ் என்ன? அதற்குரிய முதலீடு எத்தனை கோடிகள்? அது எவ்வாறு பெறப்பட்டது என்பதையாவது சுமந்திரன் கூறுவாரா?
Image may contain: 4 people, including Anthonippillai Reginoldraj, suit
•என்னது சுமந்திரன் அன்டன் பாலசிங்கமா?
•என்னது சுமந்திரன் அன்டன் பாலசிங்கமா?
தன்னை பிரபாகரன் என்று நினைத்து கனவு காண சிறீதரனுக்கு உரிமை உண்டு.
ஆனால் அதற்காக சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக தமிழ் மக்கள் கருத வேண்டும் என்று கேட்பது ரொம்பவும் ஓவர்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் பொய் சொல்வது வழமைதான்.
ஆனால் அதற்காக கொஞ்சம்கூட கூச்சமின்றி இப்படி ஒரு பொய்யை சிறீதரன் கூறியிருக்கக்கூடாது.
அன்டன் பாலசிங்கம் கொழும்பில் வாழ்ந்திருக்கிறார். அவர் எப்போதாவது கொழும்பில் வாழ்ந்தது தனது பாக்கியம் எனக் கூறியிருக்கிறாரா?
அன்டன் பாலசிங்கம் ஆயுதப் போராட்டத்தை வன்முறை என்றும் அதனை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறாரா?
தனது தேர்தல் செலவுக்கு சுமந்திரன் பணம் தருவதற்கு இணங்கிய காரணத்திற்காக சிறீதரன் அன்டன் பாலசிங்கத்தை இந்தளவுக்கு அசிங்கப்படுத்த வேண்டுமா?
தேர்தல் முடிவதற்குள் சுமந்திரன் பற்றி இன்னும் என்னென்னமெல்லாம் கேட்டு தொலைக்க வேண்டி வருமோ?
ஆண்டவா, தமிழ் மக்களை காப்பாத்து!
Image may contain: வால்டேர், close-up
Image may contain: 1 person
தூத்துக்குடி அல்ல,
•தூத்துக்குடி அல்ல,
அது துயரக்குடி!
அன்று 14 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றார்கள். இன்று அப்பாவி தந்தையையும் மகனையும் கொன்றுள்ளார்கள்.
பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை. அது அரசின் ஏவல்படை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாய் உள்ளது.
சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண் பொலிசாரால் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டபோது அந்த பொலிஸ் நிலையத்தையே குண்டு வைத்து தகர்த்த தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதிகள் லெனின் , சுதந்ரம் போன்றவர்கள் இன்று இல்லையே என ஏக்கத்தை தருகிறது.
Image may contain: 2 people, including Antony Suresh
வெற்றியைவிட பெரிசாக ஒன்று இருக்கிறது என்றால்
•வெற்றியைவிட பெரிசாக ஒன்று இருக்கிறது என்றால்
அது எதிரிகளுக்கு நாம் கொடுக்கிற நடுக்கம்தான்!
புலிகளை தடை செய்துவிட்டோம் என்றார்கள்
புலிகளை கொன்று புதைத்து விட்டோம் என்றார்கள்.
புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்றார்கள்
ஆனாலும் அவர்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கிகளுக்குகூட தம்மை விளம்பரப்படுத்த பிரபாகரன் படம்தான் தேவையாக இருக்கிறது.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் சினிமா நடிகரான விஜய்க்குகூட விளம்பரப்படுத்த பிரபாகரன் படம் தேவையாக இருக்கிறது.
தமிழ்நாடு மக்கள் மனங்களில் பிரபாகரன் இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?
Image may contain: 3 people, including கோவி. ரமேஷ் and Kanagarajk Rajk, people standing
சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும்
•சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும் ஆனால்
சிரித்துக்கொண்டு மரணத்தை முத்தமிட முடியுமா?
“சிரித்துக் கொண்டு வாடா தமிழா செருக்களம் புகுர” என்று தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்கள் 1977களில் மேடைகளில் பேசுவதுண்டு.
ஆனால் இவ்வாறு அழைத்த எந்த தலைவர்களும் களம் புகுரவில்லை. அதுமட்டுமல்ல தங்கள் பிள்ளைகளையும் களத்திற்கு அனுப்பவில்லை.
சரி அதை விடுவம். அதைக் கதைப்பதில் இப்ப எந்த பயனும் இல்லை. ஆனால் களம் புகுந்த இளைஞர்கள் சிரித்துக் கொண்டே புகுந்தனர் என்பதில் ஜயம் இல்லை.
அதேவேளை, சிரித்துக்கொண்டே மரணத்தை முத்தமிட முடியுமா என்று நான் சந்தேகப்பட்டது உண்டு.
போராடிக் கொண்டிருக்கும்போது இறப்பது வேறு. ஆனால் இறப்பதற்கென்றே போராட செல்வது வேறு. அதுவும் சிரித்துக் கொண்டே செல்வது இன்னும் வேறுவிதமானது.
அதுவும் எமது காலத்தில் எம் கண் முன்னால் அந்த அதிசயத்தை எமது இளைஞர்கள் செய்து காட்டியுள்ளார்கள் என்பதை அறியும்போது பெரிமிதமாக இருக்கிறது.
இதோ போர்க் என்ற இளைஞரை பாருங்கள்.
மாங்குளம் ராணுவமுகாமை தாக்குவதற்கு வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை சிரித்த முகத்துடன் அவர் விடைபெற்று செல்வதைப் பாருங்கள்.
இன்னும் சில நிமிடங்களில் அவர் மரணமடையப் போகிறார் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
இந்த இறுதி நிமிடங்களில் அவரின் பெற்ற தாயின் முகம் நினைவுக்கு வந்திருக்கும்.
அவரது சகோதரர்களின் நினைவுகள்கூட வந்திருக்கும். அவர் பிறந்து வளர்ந்த மண் நினைவுக்கு வந்திருக்கும்.
இத்தனையும் தாண்டி அவரால் எப்படி சிரித்த முகத்துடன் சென்று மரணத்தை முத்தமிட முடிந்தது?
பெண்களை கர்ப்பமாக்கி தற்கொலைதாரிகளாக அனுப்புகிறார்கள் என்று மணி ரத்தினம் படம் எடுத்தார்.
போதை மருந்து கொடுத்து தற்கொலைதாரிகளை அனுப்புகிறார்கள் என்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்தது.
போராட சென்றவர்களை பலவந்தமாக தற்கொலைதாரிகளாக மாற்றுகிறார்கள் என்று இந்திய அரசு கூறியது.
ஆனால் இதெல்லாம் தவறான, பொய் பிரச்சாரம் என்பதை நிரூபிக்கும் பல சாட்சியங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எதிர்காலத்தில் வரலாறு இவர்களை எப்படி அடையளப் படுத்தப் போகின்றது என்று தெரியவில்லை.
ஆனால், சிரித்தக்கொண்டே மரணத்தை முத்தமிட முடியும் என்பதை நிரூபித்த இவர்களது தியாகம் எந்தவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது. அற்புதமானது.
Image may contain: 1 person
புலிகள் களத்தில் இருக்கும்வரை
புலிகள் களத்தில் இருக்கும்வரை புலிகள் மீதான விமர்சனம் என்பது மாற்று கருத்து என்ற அரசியல் தன்மை இருந்தது.
ஆனால் கடந்த பத்து வருடமாக புலிகள் இல்லாத நிலையில் புலிகள் மீதான விமர்சனம் என்பது இன்னொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
மாறாக புலிகள் மீதான விமர்சனம் என்பது எதிரிகளான இலங்கை இந்திய அரசுகளுக்கு உதவி செய்பவையாக இருக்கக்கூடாது.
தமது புலிகள் மீதான விமர்சனம் இலங்கை இந்திய அரசுகளுக்கே உதவுகிறது என்று தெரிந்தும் ஏன் சிலர் அவ்வாறு செய்கிறார்கள்?
ஏனெனில் போராடாமல் இருப்பதற்கு அது அவர்களுக்கு உதவுகிறது.
புலிகள் மீதான விமர்சனம் என்பது போராடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உதவுகிறது.
Image may contain: 1 person, text
த்தூ! காறி உமிழுங்கள்
த்தூ! காறி உமிழுங்கள்
இந்த வயதான மனிதரின் கேவலமான செயலுக்கு!
சம்பந்தர் ஐயா பதவியைப் பெறுவதற்காக கீழ் இறங்குவார் என்று தெரியும். ஆனால் இந்தளவுக்கு இறங்குவார் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது.
பதவி போனபின்னும் பதவியால் கிடைத்த சொகுசுபங்களாவை விடமால் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் இந்த மனிதர் பதவியைப் பெறுவதற்காக கேவலமான வழியில் இறங்குவது ஆச்சரியம் இல்லைத்தான்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரின் வேட்பாளரை தம் அணிக்கு தாவ வைத்திருப்பது அதுவும் பணம் கொடுத்து தாவ வைத்திருப்பது அசிங்கமானது என்று இந்த மூத்த தலைவருக்கு தெரியவில்லையா?
ஒருவேளை அந்த வேட்பாளரே விரும்பிக் கட்சி மாறினாலும் அது சரியில்லை என்று கூறி அனுப்பியிருக்க வேண்டிய இந்த வயதான தலைவர் மாறாக பணம் கொடுத்து கட்சி மாற வைத்து வெற்றி பெற வேண்டுமா?
இவருடைய கட்சி எம்.பி வியாழேந்திரன் 50 கோடி ரூபா வாங்கிக்கொண்டு மகிந்த அணிக்கு தாவியதை கண்டித்த இந்த வயதான தலைவர் இனி எந்த முகத்துடன் கட்சி தாவுவதைக் கண்டிக்க முடியும்?
தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒரு தும்புக்கட்டையை நிறுத்தினாலே ஈசியாக ஜெயிக்கும் என்றவர்கள், அதுவும் சம்பந்தர் ஐயா படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்றவர்கள் இப்போது மாற்றுக் கட்சியினரை அதுவும் வேட்பாளரையே பணம் கொடுத்து மாற்றுகின்றார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன?
தோல்விப் பயம் சுமந்திரனுக்கு மட்டுமல்ல இந்த வயதான தலைவருக்கும் வந்துவிட்டது. அதனால்தான் வெற்றி பெறுவதற்காக எந்த லெவலுக்கும் இறங்க தயாராகி விட்டனர்.
பொதுவாக தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி இப்படி வேட்பாளர்களை விலைக்கு வாங்கி அசத்துவார். இம்முறை சம்பந்தர் ஐயா இதனை செய்து தான் ஈழத்து கருணாநிதி என்பதை நிரூபித்துள்ளார்.
No photo description available.
Image may contain: 2 people, people sitting
•சர்வதேசமயமாகும் தமிழக பொலிஸ் கொலை!
•சர்வதேசமயமாகும் தமிழக பொலிஸ் கொலை!
தமிழ்நாட்டில் சாத்தான்குளத்தில் பொலிஸ் மேற்கொண்ட இரட்டைக் கொலை இந்தியாவையும் தாண்டி சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற கறுப்பு இனத்தவரின் கொலை எப்படி சர்வதேச கவனத்தை பெற்றதோ அதேபோன்று தமிழக பொலிசின் கொலையும் சர்வதேசத்தின் கவனம் பெற்று வருகிறது.
கொல்லப்பட்ட தந்தையும் மகனும் மாரடைப்பு வந்து இறந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார்.
அதேவேளை இறந்த இருவருக்கும் தலா பத்து லட்சம் ரூபா வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் தெரிவிக்கிறார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது? சுகயீனம் காரணமாக இறந்தார்கள் என்ற காவல் கண்காணிப்பாளரின் கூற்றை தமிழக முதலமைச்சரே நம்பவில்லை அல்லது எற்றுக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்.
ஏனெனில் சுகயீனம் காரணமாக இறந்திருந்தால் எதற்காக தமிழக முதலமைச்சர் நிதி வழங்க முன் வர வேண்டும்?
ஆனால் மக்கள் நிதி கேட்கவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கிறார்கள்.
எப்படி அமெரிக்காவில் பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக மக்கள் நீதி கேட்டார்களோ அதேபோன்று தமிழக மக்களும் பொலிஸ் கொலைக்கு எதிராக நீதி கேட்கிறார்கள்.
எப்படி அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு சர்வதேச மக்களின் ஆதரவு வழங்கப்பட்டதோ அதேபோன்று தமிழக மக்களின் போராட்டத்திற்கும் சர்வதேச மக்களின் ஆதரவு நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.
பொதுவாக “குற்றவாளிகள் தலைமறைவு. பொலிசார் வலைவீச்சு” என்றே செய்தி வருவது வழக்கம். இந்திய வரலாற்றில் முதன் முதலாக “பொலிசார் தலைமறைவு” என்ற செய்தி வந்துள்ளது.
இதுதான் தமிழக மக்களின் போராட்ட சாதனை. இனி இது தொடரும்.
https://www.facebook.com/ProjectNightfall/videos/272402503853278/
Pause
-2:53
Additional visual settings
Enter Watch and ScrollClick to enlarge Unmute
3,858,899 Views
கனடாவில் பெறப்பட்ட 20 கோடி ரூபா எங்கே?
கனடாவில் பெறப்பட்ட 20 கோடி ரூபா எங்கே?
“நேர்மையானவர்” சுமந்திரன் பதில் தருவாரா?
கனடாவில் இருக்கும் தமிழர்களால் தாயகத்தில் உள்ள ஏழை மக்களின் புனர்வாழ்வுக்காக அனுப்பபட்ட 20 கோடி ரூபா நிதி எங்கே?
இதனைக் கேட்பவர்கள் சுமந்திரனின் மாற்று கட்சியினர் அல்ல. மாறாக சுமந்திரனின் தமிழரசுக்கட்சி மகிளிர் அணியினரே கேட்கின்றனர்.
பணம் கனடாவில் இருந்து வந்ததை திருகோணமலை தமிழரசுக்கட்சி வேட்பாளர் குகதாசன் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
பணம் தானே பெற்று வந்ததாக சுமந்திரனும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் பணம் தன்னிடம் தரப்படவும் இல்லை. பணம் எங்கே என்று தனக்கு தெரியவில்லை என்று தமிழரசுக்கட்சி பொருளாளர் கூறுகிறார்.
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பணத்தை சிலர் சுருட்டிவிட்டனர் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் சுமந்திரன் இந்த 20 கோடி ரூபா பணத்தை சுருட்டியவர் யார் என்று கூறுவாரா?
கடந்த 5 நாளில் 79 சந்திப்புகளை தான் நிகழ்த்தியதாக சுமந்திரன் பெருமையாக கூறுகிறார். அதில் ஒரு சந்திப்பிலாவது இந்த பணம் எங்கே என்பதை ஏன் அவரால் கூற முடியவில்லை?
குறிப்பு - கனடாவில் இருந்து வந்த 20 கோடி ரூபாவுக்கும் கணக்கு இல்லை. இந்திய தூதரிடம் இருந்து பெறும் தேர்தல் நிதிக்கும் கணக்கு இல்லை. இந்த லட்சணத்தில சுமந்திரன் நேர்மையானவர், என்ற பில்டப்பிற்கு குறைவில்லை.
Image may contain: 1 person, sitting and indoor
தமது தேசிய இனத்திற்காக போராடுபவர்களை
தமது தேசிய இனத்திற்காக போராடுபவர்களை
தமிழ் இனவாதிகளாக சித்தரிக்கும் சாபக்கேடு
தமிழ் தேசிய இனத்தில் மட்டுமே உண்டு.
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் கொல்லப்பட்டதை
நிறப் படுகொலை என கண்டிக்கும் தமிழ் கம்யுனிஸ்டுகள்
முள்ளிவாய்க்காலில் தமிழர் கொல்லப்பட்டதை
இனப்படுகொலை என கண்டிக்க மறுப்பது ஏன்?
“தேசியம் ஒரு கற்பிதம்” என்று புத்தகம் எழுதியவரே
கீழடி ஆய்வை சுமந்து தமிழ் தேசியம் பேசுகிறார்.
அது தெரியாமல் புலத்தில் இருக்கும் புரட்டுவாதிகள்
தமிழ் தேசியம் பேசுவோரை தமிழ் இனவாதிகள் என்கின்றனர்.
லெனின் இப்போது தமிழனாக பிறந்து வந்தால்
அவரையும் இனவாதி என கூற இவர்கள் தயங்கமாட்டார்கள்.
Image may contain: text that says "தனது தேசிய் இனத்திற்கு போராடாத எவரும்... போராடுலதாக சொல்வது ஏமாற்று வேலையே... -தோழர் லெனின்"
கடந்த வருடம் இந்திய ஆதரவுடன் தீர்வு பெறப்படும் என்றார்.
கடந்த வருடம் இந்திய ஆதரவுடன் தீர்வு பெறப்படும் என்றார்.
இந்த வருடம் சர்வதேச ஆதரவுடன் புதிய அரசுடன் பேசி தீர்வு என்கிறார்.
இனி அடுத்த வருடம் என்ன கூறுவார் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் புதிதாக ஏதாவது கூறுவார்.
கடந்த பத்து வருடமாக 15 எம்.பி களை வைத்து எந்த தீர்வும் பெறவில்லை.
இப்போது 20 எம்.பி களைத் தரும்படி கேட்கிறார். அதை வைத்து என்ன தீர்வை எப்படி பெறப் போகிறார் என்பதையும் கூறவில்லை.
தனக்கு சொகுசு பங்களாவும் சிஙகள பொலிஸ் பாதுகாப்பும் பெற்றதைத் தவிர தமிழ் மக்களுக்கு என்ன பெற்றிருக்கிறார்?
இனியும் இவர் ஏமாற்றுகளை தமிழ் மக்கள் நம்புவார்கள் என்று எப்படி இவர் நினைக்கிறார்.
இவர் தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கவில்லை. மாறாக மூளையே இல்லாதவர்கள் என்று நினைக்கிறார்.
தமக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ் மக்கள் இம்முறை இவருக்கு நிச்சயம் காட்டுவார்கள்.
குறிப்பு - கடந்த தேர்தலின்போது ஒரு வருடத்தில் தீர்வு என்றார். அப்புறம் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்றார்.. அந்த தீர்வுகள் எல்லாம் எங்கே என்று ஐயா கூறுவாரா?
Image may contain: 1 person
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் மண்ணை அள்ளி தூற்றி திட்டியபோது அப் பெண்ணை கஜேந்திரகுமார் பிரியாணி வாங்கிக் கொடுத்து அனுப்பிய பெண் என்றீர்கள்.
அதன்பின்பு ஒரு பெண் வவுனியாவில் செருப்பு காட்டிய போது அவரை கோத்தபாயாவின் ஆள் என்றீர்கள்.
இப்போது ஒரு பெண் 20 கோடி ரூபா எங்கே என்று கணக்கு கேட்டதும் அவரை கட்சியை உடைக்க மகிந்தாவினால் அனுப்பப்பட்ட ஆள் என்கிறீர்கள்.
ஏன்டா சொல்வதுதான் சொல்லுறியள் அவர் சீனாவினால் அனுப்பப்பட்ட ஆள் என்று சொல்லுங்களேன்டா. அது உங்களுக்கும் கொஞ்சம் கெத்தாக இருக்குமேடா.
வாங்கப்போற ஜந்தோ பத்தோ வோட்:டுக்கு என்டா இப்படி கேவலமாக நடந்து கொள்கிறீர்கள்?
இனியாவது சோத்தில கொஞ்சம் உப்பு போட்டுச் சாப்பிடுங்கடா.
குறிப்பு - கணக்கு கேட்டவுடன் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளரை மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறுவது உரிய பதில் இல்லை. 20 கோடி ரூபா எங்கே? சுமந்திரன் உரிய பதில் கூறியேயாக வேண்டும்.
Image may contain: 1 person, text
Image may contain: Athavan Ananth, standing and outdoor
•தவளையும் தன் வாயால் கெடும்!
•தவளையும் தன் வாயால் கெடும்!
தவளையும் தன் வாயால் கெடும் என்பார்கள். அதுபோல சிறீ வாத்தியும் தன் வாயால் கெடுகிறார்.
முதலில் சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக கருத வேண்டும் என்றார்.
இப்போது, தானே 75 கள்ள வோட்டு போட்டேன் என்று எவ்வித கூச்சமும் இன்றி கூறுகிறார்
சிறீதரன் வாத்தியாக இருந்தவர். ஒரு வாத்தியே இப்படி என்றால், இனி யாரிடம் நேர்மையை எதிர் பார்க்க முடியும்.
என்றைக்கு சுமந்திரனுடன் சேர்ந்தாரோ அன்றில் இருந்து இவரும் உளற ஆரம்பித்துவிட்டார்.
இதைத்தான் ஊரில் சொல்வார்கள் “ சேர்க்கை சரியில்லை” என்று
குறிப்பு - இந்த முறை எத்தனை கள்ள வோட்டு போடப் போகிறார்கள்?
Image may contain: one or more people, people standing, shorts and outdoor
யோக்கியன் வாறார்.
•யோக்கியன் வாறார்.
செம்பை எடுத்து உள்ளே வையுங்கோ!
தன்னிடம் 20 கோடி ரூபா பணம் தரப்படவில்லை என சுமந்திரன் மறுத்திருக்கிறார்.
இவ்வாறு மறுப்பு தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் கணக்கு கேட்டவுடன் கேட்டவரை மகிந்தவின் ஊடுருவல் என்று கூறுவது உரிய பதில் இல்லை.
அதுமட்டுமல்ல சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். அது வரவேற்கப்பட வேண்டியது.
ஏனெனில் அப்பதான் அந்த பணம் எங்கே என்ற விபரம் விசாரணையில் தெரிய வரும்.
தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே இந்த பெண் கணக்கு கேட்பதாக கூறுகிறார்.
ஆனால் இதற்கு முன்னரே மாவை சேனாதிராசாவின் மகன் கணக்கு கேட்டிருக்கிறார்.
அதற்கும் முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கணக்கு கேட்டிருக்கிறார்.
கட்சிக்குள் கணக்கு கேட்டிருக்க வேண்டும் என்று இப்போது சுமந்திரன் கூறுகிறார். ஆனால் கட்சிக்குள் கணக்கு கேட்டபோதெல்லாம் சுமந்திரன் கணக்கு காட்டவில்லையே.
எல்லாவற்றையும்விட புலம்பெயர்ந்தோர் அனுப்பும் நிதியில் 15 வீதம் கமிஷன் சிறீதரன் பெறுகிறார். கேட்டால் அது கட்சிக்கு என்கிறார். இது பற்றி சுமந்திரன் வாய் திறப்பாரா?
சுமந்திரன் யோக்கியன் என்றால் தேர்தலுக்கு வரும் நிதி எவ்வளவு, குறிப்பாக இந்திய தூதர் தரும் நிதி எத்தனை கோடி என்ற கணக்கை மக்கள் முன் கூறட்டும் பார்க்கலாம்.
Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing
•சுமந்திரன் சுத்துமாத்து!
•சுமந்திரன் சுத்துமாத்து!
சுத்துமாத்து – 1
தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே இந்த கணக்கு பிரச்சனை எழுப்பப்படுகிறது என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
சுமந்திரன் கூறுவது பொய். ஏனெனில் இது நான்கு மாதங்களுக்கு முன்னர் சுமந்திரனிடமே கேட்கப்பட்டிருக்கிறது.
சுத்துமாத்து – 2
கணக்கு கேட்பவர் மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறுகிறார்.
இது உரிய பதில் இல்லை. மேலும் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் இது பற்றி கேட்டிருக்கிறார். எனவே அவரையும் மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறப் போகிறாரா?
சுத்துமாத்து – 3
கட்சிக்குள் கேட்காமல் கட்சிக்கு வெளியே கணக்கு கேட்பது தவறு. இது கட்சியை உடைப்பதற்கான சதியாகவே கருதப்பட வேண்டும் என சுமந்திரன் கூறுகிறார்.
இதுவும் பொய். ஏனெனில் நான்கு மாதங்களுக்கு முன்னர் கட்சிக்குள்தான் சுமந்திரனிடம் கேட்கப்பட்டது. அப்போது சுமந்திரன் உரிய பதில் அளிக்காததால்தான் இப்போது வெளியில் வந்து கேட்கின்றனர்.
சுத்துமாத்து – 4
தன்னிடம் பணம் எதுவும் தரப்படவில்லை என்று கூமந்திரன் கூறுகிறார்.
இதுவும் பொய். ஏனெனில் இந்த பிரச்சனை கட்சிக்குள் வந்தபோது சுமந்திரன் தானே அப் பணத்தை பெற்றதாகவும் அது மாகாணசபை தேர்தல் செலவுக்கு கொடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
சுமந்திரன் மாறி மாறி பொய் கூறுகிறார். ஆனால் இனிவரும் நாட்களில் இன்னும் பல ஆதாரங்கள் வெளிவர இருக்கின்றன.
குறிப்பு - இதுபற்றிய பத்திரிகை ஆதாரம் கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.
Image may contain: 1 person
Tuesday, June 2, 2020
Subscribe to:
Posts (Atom)