Saturday, May 26, 2018

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.
தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் 11வது நினைவு தினம் இன்று ஆகும்.(16.05.2007)
“தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர்.
தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர் புலவர் கலியபெருமாள் அவர்கள்.
புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,
"சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள்.
பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினேன்.
மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்."
நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார்.
அதன் பின் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது,
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர்.
பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மொத்த குடும்பமும் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டது எனில் அது புலவர் கலியபெருமாள் குடும்பம் மட்டுமே.
கொடைக்கானல் டிவி வெடிகுண்டு வழக்கு, கிண்டி நேருசிலை வெடிகுண்டு வழக்குகளில் வேண்டுமென்றே புலவர் கலியபெருமாளை இணைத்தனர் தமிழக பொலிசார்.
தள்ளாத வயது, ஒருபுறம் நோய்களின் தாக்கம், மறுபுறம் கடும் பொருளாதார நெருக்கடி . இருந்தும் இறக்கும் இறுதிக்கணம்வரை தன் உறுதியை அவர் விட்டுவிடவில்லை.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர், நீண்டகாலம் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர். இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இவரை நினைவுகூர நெடுமாறன் அய்யா தயங்கினாலும் ஈழத்தமிழர் மனங்களில் இவர் என்றும் இடம்பெறுவார்.

எமது நாட்டு அரசே எம்மீது குண்டு போட்டது

எமது நாட்டு அரசே எம்மீது குண்டு போட்டது
எமது நாட்டு ராணுவமே எம்மை சுட்டுக்கொன்றது
இரண்டுநாளில் 40ஆயிரம் மக்களை கொன்று புதைத்துவிட்டு
இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றார்கள்
.
“வடக்கின் வசந்தம்” என்றார்கள்
“கிழக்கின் உதயம்” என்றார்கள்
ஒரு நாசமறுப்பும் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை
முள்ளிவாய்க்கால் கடல் அலையைக் கேட்டுப்பாருங்கள்
அது எமது ஓராயிரம் வலிகளை ஆர்ப்பரித்து சொல்லும்
அன்றும் நடந்தோம்
இன்றும் நடக்கிறோம்
இனியும் நடப்போம்
ஆனால் ஒருபோதும் வீழ்ந்து கிடந்துவிடமாட்டோம்.
என்றாவது ஒருநாள்
எமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
தொடர்ந்து நடந்துகொண்டேயிருப்போம்!
போராடாத இனம் விடுதலை பெற்றதில்லை
போராடிய இனம் விடுதலை பெறாமல் விட்டதில்லை

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அதை புலிகள் குழப்பிப்போட்டார்கள் என்றார்கள்
சரி. இப்ப புலிகள் இல்லைத்தானே. ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்று கேட்டால்
புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றிருக்காவிட்டால் இந்தியா தீர்வு பெற்று தந்திருக்கும் என்று பதில் கூறுகிறார்கள்.
அப்படியென்றால், இந்திராகாந்தியைக் கொன்றமைக்காக சீக்கிய இனம் புறக்கணிக்கப்படவில்லையே. சீக்கிய மன்மோகன்சிங்கைத்தானே சோனியா பிரதமர் ஆக்கினார். தமிழ் இனத்தை மட்டும் ஏன் பழிவாங்க வேண்டும்?
ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்காவிடினும்; இந்தியா ஈழத் தமிழருக்கு விடுதலை பெற்று தந்திருக்காது. இதுவே உண்மை.
காங்கிரஸ் அரசானாலும் பாஜக அரசானாலும் ஒருபோதும் ஈழத் தமிழருக்கு உதவப்போவதில்லை. அவர்களுடைய அக்கறை எல்லாம் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பே.

•நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்?

•நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்?
மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
அப்படியென்றால் மரணித்தவர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்?
அவர்கள் எதற்காக போராடி மரணித்தார்களே அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
எமக்கான நியாயத்தை உலகம் வழங்கும்வரை எமக்கான தீர்வு கிட்டும்வரை நாம் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்.
ஆம். மரணித்தவர்களை நினைவு கூர்வது அழுது ஒப்பாரி வைப்பதற்காக அல்ல. நாம் மீண்டும் எழுவதற்காகவே.
எழுவோம். முன்பைவிட பலமாக எழுவோம்!

இந்த சிறுவன் அழுதவிட்டு ஓய்ந்துவிடுவான்

இந்த சிறுவன் அழுதவிட்டு ஓய்ந்துவிடுவான்
என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்
இவன் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்த மண்ணே – அவன் முன்
மூதாதையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்த மண்ணே - அவர்கள்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இம் மண்ணே
இன்னுயிர் தந்து இவனை ஈன்று வளர்த்து
அருள் ஈந்ததும் இம் மண்ணே - இவன்
அன்னையர் தோளில் ஆயுதம் ஏந்தி
சமர் புரிந்ததும் இம் மண்ணே - அவர்கள்
உடல் நிர்வாணமாக்கி வீழ்ந்தப்பட்டபோதும்
தாங்கி நின்றதும் இம் மண்ணே - தங்கள்
உறவுகளின் குருதி வடிந்த உடலை கண்ட
இவன் மனம் வெறுமனே அடங்கித்தான் கிடந்திடுமோ?
குறிப்பு- இவன் தனக்குரிய நியாயத்தை தனக்கே உரிய மொழியில் நிச்சயம் கேட்பான்.

கடவுள் முருகனும் தமிழ் பக்தனும்

கடவுள் முருகனும் தமிழ் பக்தனும்
முள்ளவாய்க்கால் படுகொலைகளும்
பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா?
முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?
பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா!
முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது கெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்?
பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்? உன்னைவிட்டால் எமக்கு வேறு யார்தான் இருக்கிறார்கள்? “இயேசு சீக்கிரம் வருகிறார்” என்று கொஞ்சப் பேர் சொல்லித் திரியிறாங்க. அப்ப அவங்களிட்ட கேட்டுப் பார்க்கட்டுமா?
முருகன்- நவாலியில் அவரது தேவாலயத்தின் மீதே குண்டு போட்ட போது அவர் வந்தாரா? அல்லது அவரது பங்கு தந்தை கருணாகரன் அடிகளார் கிளைமோர் குண்டில் கொல்லப்பட்டபோது வந்தாரா? அல்லது சரணடைந்த வண.பிதாக்களையாவது கண்டு பிடித்துக் கொடுத்துள்ளாரா?
பக்தன்- இல்லை முருகா! அவர் இன்னும் வரவில்லைதான்.
முருகன்- அவர் மட்டுமல்ல இந்த ஏடறிந்த 2000 வருடத்தில் யாராவது ஒரு கடவுளாவது வந்திருக்கிறாரா? ஏன் எந்தக் கடவுளும் இப்ப வருவதில்லை என்று எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா?
பக்தன்- ஆமாம் ஆமாம் முருகா! அப்ப கடவுள் மதம் எல்லாம் பொய்யா?
முருகன்- “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்திவைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்று தோழர் லெனின் சொல்லியிருப்பதை நீ அறியவில்லையா?
பக்தன்- என்ன முருகா நீயும் கம்யுனிஸ்ட்; ஆகிவிட்டாயா?
முருகன்- ஹா ஹா ஹா! சரி இதை அப்புறம் பேசுவோம். இப்ப உன் பிரச்சனையைப் பார்ப்பம்.
பக்தன்- ஆமாம் முருகா! எம் இனம் விடுதலை பெற வழிகாட்டு முருகா.
முருகன்- உன் மூதாதையர் 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயரை எப்படி விரட்டினார்கள்? 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தரை எப்படி விரட்டினார்கள்? 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை எப்படி விரட்டினார்கள்?
பக்தன்- எப்படி முருகா?
முருகன்- அப்போதும் நான் நல்லுர் கோவிலில் இருந்தேன். ஆனால் அவர்கள் உன்னைப்போல் வந்து என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையுடன் போராடி விரட்டியடித்தார்கள்.
பக்தன்- 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எம்மால் 60 வருடம் ஆளும் இலங்கை அரசை விரட்டியடிக்க முடியவில்லையே. அது ஏன் முருகா!
முருகன்- அன்று, ஆங்கிலேயர் நல்லாட்சி செய்வதாக கூறுவதற்கு சம்பந்தர் சுமந்திரன்கள் உங்கள் மூதாதையர் மத்தியில் இருக்கவில்லை.
பக்தன்- இருந்தாலும், ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் அய்யா கூறுவது நியாயம்தானே?
முருகன்- அப்படியென்றால் உலகின் முதலாவது பயங்கரவாதி நான்தானே? நான் அகிம்சை வழியிலா சூரனை அழித்தேன்? வேலாயுதம் ஏந்தி போர் செய்துதானே சூரனை அழித்தேன்
பக்தன்- என்ன இருந்தாலும் போர் அழிவு அதிகமாக இருக்கிறது முருகா. நாங்க மீண்டும் எழும்ப முடியுமா?
முருகன்- வீழ்வது கேவலம் இல்லை. வீழ்ந்து கிடப்பதுதான் கேவலம். வீழ்வது மீண்டும் எழுவதற்கே! மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனம் நீங்கள் மீண்டும் எழும்ப முடியும். அதுவும் முன்பைவிட பலமாக எழும்ப முடியும்.
பக்தன்- கேட்க நல்லாத்தான் இருக்கு முருகா! ஆனால் இது சாத்தியமா?
முருகன்- ஏன் சாத்தியமில்லை? 1971ல் அழிக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டும் எழவில்லையா? 1989ல் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்ட பின்பும்கூட ஜே.வி.பி மீண்டும் எழுந்துதானே நிற்கிறது. சிங்கள் மக்களால் மீண்டும் எழுந்து நிற்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் முடியாது?
பக்தன்- ஆம் முருகா! இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது.
முருகன்- போராடாத இனம் உரிமை பெறுவதில்லை. போராடிய இனம் உரிமை பெறாமல் விட்டதில்லை. தமிழ் இனம் நடத்தும் போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்.

தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல

•தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல
உலகத்திற்கும் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள்.
தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்மக்கள் ஒன்றுகூடி ஒருமித்த குரலில் ஒரு செய்தி கூறியுள்ளார்கள்.
ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி தமிழக தமிழர்கள், மலேசிய தமிழர்கள் என அனைத்து தமிழரும் ஒன்றுகூடி ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்கள்.
ஆம். தமிழர்களை கொல்லப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாது என்ற செய்தியே அது.
சொந்த நாட்டு மக்கள் மீது போர் நடத்தியவர்கள். அந்த போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று வெற்றிவிழா கொண்டாடியவர்கள் வேறு வழியின்றி இராணுவத்திற்கு தொடர்ந்தும் அதிக செலவு செய்து வருகின்றனர்.
ஆம். தமிழர்கள் மீண்டும் எழுவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்து உள்ளது.
அதனால்தான் போர்க்காலத்தில் ஒதுக்கப்பட்ட அதேயளவு பணத்தை இப்பவும் ராணுவத்திற்கு ஒதுக்கி வருகின்றனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றி விட்டோம் என்றார்கள். ஆனால் தமிழ்மக்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த இப்படி ஆயிரக்கணக்கில் திரண்டு அவாகள் முகத்தில் கரியை பூசிவிட்டனர்.
இப்போது இலங்கை அரசு மட்டுமன்றி உலக நாடுகளும்கூட தமிழ் மக்களின் செய்திக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள்?
கொன்று புதைத்தால்
முளைத்து எழுவோம்
துண்டு துண்டாய் வெட்டி
கடலில் வீசி எறிந்தாலும்
முள்ளிவாயக்கால் கடல் அலைபோல்
மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்து எழுவோம்!

ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?

ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?
இன்று வியட்நாம் தந்தை என புகழப்படும் ஹோசிமின் அவர்களின் பிறந்த தினம் ஆகும்.
26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் ஹோசிமின் அவர்கள்.
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று ஹோசிமின் அவர்களிடம் கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார்.
ஆனால் இன்று சில தலைவர்கள் பிரபாகரன் இல்லை என்ற உண்மையை மக்களிடம் கூறுவதற்கு தயங்குகிறார்கள்.
அதுவும் குறிப்பாக வைகோ, நெடுமாறன், காசிஆனந்தன் போன்றவர்கள் “பிரபாகரன் மீண்டும் வருவார்” என்று பொய் கூறுகிறார்கள்.
இவ்வாறு “பிரபாகரன் மீண்டும் வருவார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு எந்த பயனும் அளிக்கவில்லை. மாறாக இலங்கை இந்திய அரசுகளுக்கே உதவியளிக்கிறது.
தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என உண்மையாகவே விரும்புவார்கள் எனில் அவர்கள் ஹோசிமின் கூறியபடி கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மக்களுக்கு கூற முன்வரவேண்டும்.
இந்தியா மிகப்பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து ஈழத் தமிழர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறுபவர்களும் ஹோசிமின் வரலாற்றை படிக்க வேண்டும்.
வியட்நாம் மக்களால் அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியாது?
நிச்சயமாக முடியும்!
முடியும் என்று காட்டுவோம்!!

•விமர்சனம் செய்வது எப்படி?

•விமர்சனம் செய்வது எப்படி?
இன்று முகநூலில் உள்ள முக்கிய பிரச்சனை விமர்சனம் செய்வது எப்படி என்பதே.
சிலர் தமது நட்பு சக்திகளை “கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டதாக” பெருமையுடன் எழுதுகின்றனர்.
குறிப்பாக பொதுவெளியில் செயற்படும் பெண்கள் மீது மிகவும் தரங்கெட்ட விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
எதிரியையும் நட்பு சக்திகளையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமலே அப்படி செய்கின்றனர்.
ஆனால் மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் இது குறித்து எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார்.
'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது.
நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்..
எமது உரையாடல்கள் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில்

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில்
தமிழீழம் கிடைத்திருக்குமா?
மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல்
மே மாதம் வந்துவிட்டால் சிலர் முகநூலில் விஷம் கக்குகின்றனர்.
ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்று எழுதுகின்றனர்.
இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதியவர்கள்.
ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை.
இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது.
தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தாங்களாகவே போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள்.
அதனால்தான் அப்போது தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார்.
அதேபோன்று ராஜீவ் காந்தி; பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில் உரையாற்றிய முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர்.
இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும்.
இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை.
அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது.
இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய பொதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை.
இததான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை. ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.
இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை மிதிக்க வேண்டும்.

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி வந்த கலைஞர் கருணாநிதியை

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி வந்த கலைஞர் கருணாநிதியை வாழும் வள்ளுவர் என்று அழைத்தபோது வராத கோபம்,
நடிகை ஜெயலலிதாவை ஜான்சிராணி அல்லது வேலு நாச்சியார் என்று அழைத்தபோது வராத கோபம்,
சீமானை தமிழ்நாட்டு பிரபாகரனாக பார்க்கிறேன் என்று பாரதிராஜா கூறியபோது ஏன் வருகிறது?
கலைஞர் எத்தனை குறள் எழுதினார் என்று கேட்காதவர்கள்,
ஜெயலலிதா எந்த களத்தில் வாளேந்தி போராடினார் என்று கேட்காதவர்கள்,
சீமான் எப்போது துப்பாக்கி ஏந்தி போராடினார்; என்று கேட்பதேன்?
உண்மையில் இங்கு இவர்களின் பயம் சீமான் மீது அல்ல. மாறாக பிரபாகரன் மீதே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலும் பிரபாகரன் போன்று ஒரு ஆயுதப் போராட்;டத்தை தமிழக இளைஞர்கள் ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பதட்டத்தில் இவர்கள் கோபம் காட்டுகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறோம், சீமான் விரும்புகிறாரோ இல்லையோ சீமான் பின்னால் திரளும் இளைஞர்கள் ஆயுதம் தூக்கப்போவதை யாராலும் இனி தடுக்க முடியாது.
வரலாறு அதை நோக்கியே வேகமாக நகருகிறது. இனி அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழ் மக்கள் மீண்டும் எழுவதற்கு

•தமிழ் மக்கள் மீண்டும் எழுவதற்கு
பெருமையளிக்கும் மாணவர் பங்களிப்புகள்!
முள்ளிவாய்க்காலில் அயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமக்கு நியாயம் கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு தெரிவித்துள்ளார்கள்.
தமிழ் மக்கள் இத்தனை விரைவாக ஒற்றுமையுடன் திரும்பி எழவார்கள் என்பதை எதிர்பார்காதவர்கள் திகைத்து நிற்கின்றனர்.
இதுவரை முள்ளிவாய்க்கால் அவலத்தை அழுது ஒப்பாரி வைக்கும் நிகழ்வாக நடத்தியவர்கள் மத்தியில், அதனை மீண்டும் எழுவதற்கான நிகழ்வாக நடத்தியவர்கள் மாணவர்களே.
தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பெருமையளிக்கும் மாணவர்களின் இந்த பங்களிப்பை சிலர் எரிச்சலுடன் விமர்சிகக் முயலுகின்றனர்.
மாணவர்கள் கறுப்பு சட்டையுடன் வரிசையாக நிற்கின்றனர். விறைப்பாக நிற்கின்றனர் என்றெல்லாம் படம் போட்டு விமர்சிக்கின்றனர்.
இதெல்லாம் ஒரு விமர்சனமா? நாலு பேர் தாங்கிப் பிடிக்க எப்போதும் தளர்ந்து நிற்கும் வயதான சம்பந்தர் அய்யாவைப் பார்த்தவர்களுக்கு மாணவர்கள் விரைப்பாக நிற்பது எரிச்சலைக் கொடுக்கிறதா?
உண்மையில் இவர்களது கவலை எல்லாம் மாணவர்கள் தங்களை ஒதுக்கிவிட்டு நினைவு தினத்தை கொண்டாடி விட்டார்களே என்று அல்ல.
மாறாக, இதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்று மாணவர்கள் போராட்ட தலைமையை அடைந்து விடுவார்களோ என்றுதான் அச்சப்படுகின்றனர்.
ஏற்கனவே தமிழ்செல்வனுக்கு பின்னால் பைல்கட்டுகளை தூக்கிக்கொண்டு அலைந்தது போல் மீண்டும் பதவிக்காக இந்த மாணவர் பின்னால் அலைய வேண்டு வந்துவிடுமோ என்றுதான் இவர்கள் அஞ்சுகின்றனர்.
இதே மாணவர்கள் இவர்களை ஆதரித்தபோது தவறானவர்களாக தெரியவில்லை. ஆனால் இவர்களை ஒதுக்கிவிட்டு இதே மாணவர்கள் நினைவு நிகழ்வை செய்யும்போது “ரவுடிகள்”, “கஞ்சா அடிக்கிறார்கள்”, “பிரதேசவாதம் பேசுகின்றனர்”, “விறைப்பாக நிற்கின்றனர்;” என்றெல்லாம் குறை கூறுகின்றனர்.
மாணவர்கள் எம்மவர்கள். நாம் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
எனவே அவர்கள் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதுபோல் இருக்க வேண்டும். மாறாக புலி தன் இரையைக் கவ்வுவது போல் இருக்கக்கூடாது.

•தனுவுடன் ஒரு உரையாடல் (யாவும் கற்பனை அல்ல)

•தனுவுடன் ஒரு உரையாடல் (யாவும் கற்பனை அல்ல)
கேள்வி- உன்னை ஒரு பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறுகிறதே?
தனு- ஏன் அப்படி சொல்கிறார்கள்?
கேள்வி – குண்டு வெடிக்க வைத்தமையினால்?
தனு- அப்படியென்றால் பகத்சிங் என்ன பூவையா வீசினார்? பாராளுமன்றத்திற்கு குண்டு விசிய பகத்சிங்கை ஆங்கிலேய அரசு பயங்கரவாதி என்று தூக்கில் இட்டுக் கொன்றது. ஆனால் இதே இந்திய அரசு அவரை சுதந்திர போராட்;ட தியாகி என்று பாராட்டுவதை கவனியுங்கள்.
கேள்வி- அப்படியென்றால் …?
தனு- இந்திய அரசு என்னை பயங்கரவாதி என்று முத்திரை குத்தினாலும் எனது தமிழ் மக்கள் நான் ஒரு விடுதலைப் போராளி என்பதை நன்கு அறிவார்கள்.
கேள்வி - இருப்பினும் ராஜீவ் காந்தியை கொல்வது தவறு இல்லையா?
தனு- இந்தியாவில் வேறு யாராவது தலைவர்களை நாம் கொன்றிருக்கிறோமா? இல்லையே. ராஜீவ் காந்தியை மட்டும் ஏன் கொல்ல வேண்டி வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.
கேள்வி- இந்திய அமைதிப்படை ஈழத்தில் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கான தண்டனையா இது?
தனு- இந்திய ராணுவம் மேற்கொண்ட அக்கிரமங்கள் மட்டுமன்றி அந்த அக்கிரமங்கள் குறித்து இந்திய நீதிமன்றம் ஒன்றில்கூட எமக்கு நியாயம் வழங்கப்படவில்லையே.
கேள்வி- புரியவில்லை?
தனு- ராஜீவ் காந்தி கொலை என்பது பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட தண்டனை.
கேள்வி- இருந்தாலும் இந்தியா சென்று ராஜீவ் காந்தியைக் கொன்றது என்ன நியாயம்?
தனு- பஞ்சாபில் 400 இந்திய மக்களைக் கொன்ற டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று உத்தம்சிங் கொன்றார். அவரை தியாகி என்று இந்திய அரசு கௌரவித்துள்ளது. அவர் செய்தது நியாயம் என்று பாராட்டுபவர்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழரைக் கொன்றவரை இந்தியா சென்று நான் கொல்வது எப்படி அநியாயம் என்று கூறமுடியும்?
கேள்வி- என்ன இருந்தாலும் பிரியங்கா, ராகுல் இருவரும் தம் இளம் வயதில் தந்தையை இழப்பது கொடுமை அல்லவா?
தனு- பிரியங்கா போன்று 800 க்கு மேற்பட்ட எமது பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். ராகுல் போன்று பல்லாயிரம் குழந்தைகள் தமது தாய் தந்தையரை இழந்திருக்கிறார்கள். ராகுல் பிரியங்காவிற்காக கவலைப்படுபவர்கள் ஏன் எமது தமிழ் குழந்தைகளுக்காக கவலைப்படவில்லை?
கேள்வி- பெண்கள் தற்கொலைத் தாக்குதல் செய்வது தவறு இல்லையா?
தனு- குயிலி என்ற பெண் தற்கொலை தாக்குதல் செய்து வரலாற்றில் எமக்கு வழி காட்டியுள்ளார். குயிலி செய்தது தவறு என்று யாரும் எமக்கு சொல்லவில்லையே?
கேள்வி- பயங்கரவாத இயக்கங்கள் அப்பாவி பெண்களை மூளைச் சலவை செய்து போதை மருந்து செலுத்தி தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்களே?
தனு- இந்திய ராணுவத்தின் பல அக்கிரமங்கள் என் கண் முன்னே நடந்திருக்கின்றன. இந்த பொறுப்பை நானே கேட்டுப் பெற்றேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து உண்மையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கேள்வி- நிஜமாகவா? அச்சம் எதுவும் இல்லையா?
தனு- கடந்த 3 நாட்களாக நான் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனது தோழி சுபா தான் செல்கின்றேன் எனக் கேட்டார். நான் விரும்பியிருந்தால் இந்த தாக்குதலில் இருந்து விலகியிருக்க முடியும். ஆனால் நான் வற்புறுத்தி இந்த வாய்ப்பைப் பெற்றேன்.
கேள்வி- என்னதான் துணிச்சல் பெற்ற ஆண்களாக இருந்தாலும் தூக்குமேடைக்கு செல்லும்போது அவர்கள் கால்கள் சோர்ந்துவிடும். அரைவாசி மயங்கிய நிலையிலேயே அவர்களை இழுத்துச் சென்று தூக்கில் இடுவார்கள் என அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் உன்னால் எப்படி கொஞ்சம்கூட மரணபயம் இன்றி முகத்தை இயல்பாக வைத்திருக்க முடிந்தது?
தனு- இந்திய ராணவத்தால் பாதிக்கப்பட்ட என் உறவுகளே என் மனக்கண்முன் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நினைவே என்னை இயக்குகிறது.
கேள்வி- இதனால் சாதிப்பது என்ன?
தனு- இனி இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் ஈழத்தில் தலையிடமுன் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திப்பார்கள். ஒரு இனத்தை அதன் சொந்த மண்ணில் தாக்கினால் அது எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் திருப்பி அடி கிடைக்கும் என்று வரலாறு இனி இயம்பும்.

இத்தனை அழிவுக்கு பின்னரும்

இத்தனை அழிவுக்கு பின்னரும்
இத்தனை அழிவுக்கும் காரணமான இந்திய அரசு
தமிழீழம் எடுக்க உதவும் என்று கூறும் காசிஆனந்தன்!
வைகோ தமிழன் இல்லை என்றால் தானும் தமிழன் இல்லை என்று காசி ஆனந்தன் கூறியுள்ளார்.
வைகோ தமிழன் என்று காசி அனந்தன் சேட்டிபிக்கேட் கொடுக்க வேண்டிய நிலை. இப்படியொரு நிலை தனக்கு வரும் என்று வைகோ கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்.
அதேவேளை தமிழீழத்தில் வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் சிலை வைக்கப்படும் என்றும் காசி ஆனந்தன் கூறியிருக்கிறார்.
தமிழீழத்திற்காக போராடிய முன்னாள் போராளி ஒருவர் முள்ளந்தண்டு நோய் காரணமாக சிகிச்சையின்றி நேற்றைய தினம் மன்னாரில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பல முன்னாள் போராளிகள் தொடர்ந்து மரணமுற்று வருகின்றனர்.
ஆனால் காசி அனந்தன் வைகோவை தமிழனா என்று சிலர் சந்தேகப்படுவது குறித்து விம்மி அழுகிறார்.
முன்னாள் போராளிகள் குறித்து அக்கறை கொள்ளாமல் வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தமிழீழத்தில் சிலை வைப்பது குறித்து அவர் அக்கறை கொள்கிறார்.
இந்த போராளிகள் போராடியபோது இவர் தனது இரண்டு மகள்களையும் டாக்டருக்கு படிப்பித்தார். அதைக்கூட குறையாக நாம் இங்கு குறிப்பிடவில்லை.
ஆனால் அந்த மகள்களை அவர் இந்த முன்னாள் போராளிகளுக்கு சிகிச்சை செய்ய அனுப்பியிருந்தால் நிச்சயம் பெருமைப்பட்டிருக்க முடியும். ஆனால் இவர் அவர்களை லண்டனில் பணிபுரிய அல்லவா அனுப்பியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி இந்தியாவை எதிர்ப்பவர்கள் ஏன் எம்.பி, எம்எல்ஏ எலெக்சனில் போட்டியிடுகின்றனர் என்று வேற கேட்டுள்ளார்.
ஆனால் இலங்கை அரசை எதிர்த்து தமிழீழம் கேட்ட இவர் மட்டக்ளப்பில் தமிழரசுக்கட்சி சார்பில் எலெக்சன் கேட்டதை மறந்துவிட்டார் போலும்.
சரி அதைகூட விட்டுவிடலாம். ஆனால் தமிழீழம் எடுக்க இந்தியா உதவும் என்று கூறியிருப்பதை என்னவென்று அழைப்பது?
ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட இத்தனை அழிவுக்கு பின்னரும், இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா, ஈழத் தமிழருக்கு உதவும் என்று கூறுவது பச்சைத் துரோகம் ஆகும்.
அன்றும் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. இன்றும் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. என்றுமே இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கப்போவதில்லை.
ஆனால் அம்பாந்தோட்டையில் சீனா வந்தவிட்டதால் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கும் என்று காசி அனந்தன் கூறுகிறார்.
முதலாவது, அம்பாந்தோட்டையில் சீனா செய்துள்ள முதலீட்டைவிட அதிகளவு முதலீட்டை இந்தியாவில் செய்துள்ளது.
இரண்டாவது, அருணாச்சல பிரதேசத்தில் 4 லட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கச் சுரங்கத்தை சீனா அத்துமீறி தோண்டி வருகிறது.
இவ்வாறு தனது எல்லையிலேயே சீனாவின் ஊடுருவலைக் கண்டுகொள்ளாத இந்தியா, இலங்கையில் அம்பாந்தோட்டையில் ஊடுருவல் செய்வதற்காக தமிழீழம் பெற்று தரும் என்று எப்படி காசி ஆனந்தன் நம்புகிறார்?
சீனா இலங்கையில் மட்டுமல்ல பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு என இந்தியாவின் அயல்நாடுகள் எல்லாவற்றிலும் இலங்கையில் செய்த முதலீட்டைவிட அதிக முதலீட்டை செய்துள்ளது.
இப்படி தனது அயல்நாடுகள் எல்லாவற்றிலும் சீனாவின் ஊடுருவல் இருப்பதை கண்டுகொள்ளாத இந்தியா இலங்கையில் மட்டும் ஆபத்தாக கணித்து தமிழீழம் எடுக்க உதவும் என்று காசி ஆனந்தன் எப்படி நம்புகிறார்?
காசிஆனந்தன் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்தும் இந்திய உளவு நிறுவனங்களுக்கு உதவும் அரசியலையே மேற்கொண்டு வருகிறார்.
இத்தனை நாளும் பிரபாகரன் இருக்கிறார் வருவார் என்று கூறிவந்தவர் இப்போது புலிகள் மீண்டும் வருவார் தமிழீழம் எடுப்பர் என்று கூறியதோடு 6 கோடி ரூபா தந்து உதவுமாறு தமிழக பெரிய கட்சிகளிடம் கேட்டுள்ளார்.
6 கோடி ரூபாவுக்கு தமிழீம் எடுக்க முடியுமா? வேண்டுமானால் அவருக்கு ஒரு வீடு வாங்கலாம்!