•இரண்டு பெண் அமைச்சர்கள்
இரண்டு விதமான அணுகுமுறைகள்
இரண்டு விதமான அணுகுமுறைகள்
லண்டன் உள்துறை அமைச்சர் ஒரு பெண். அவர்மீது குற்றச்சாட்டு வந்ததும் அவர் உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.
அதேகாலத்தில் வடமாகாண பெண் அமைச்சர் ஆனந்தி மீதும் குற்றச்சாட்டு வந்துள்ளது. ஆனால் அவரோ ராஜினாமா செய்ய முன்வரவில்லை.
ஒரு போராட்ட அமைப்பில் இருந்து வந்த ஆனந்தி மீது ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வந்தது மட்டுமன்றி அதன்பின்னரும் அவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வராதது ஆச்சரியமாக இருக்கிறது.
இவருடைய மோசடிகள் பற்றிய விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் அடிக்கடி ஆளுநரை சந்தித்து தப்ப முயல்கிறார் என்று கூறுகிறார்கள்.
குறிப்பாக, ஆளுநரிடம் நல்ல அபிப்பிராயம் பெறுவதற்காக அளுநரின் உறவினரின் மரணச்சடங்கிற்கு நள்ளிரவில் களுத்துறை சென்றார் என்றும் கூறுகிறார்கள்.
ஆளுநரின் உறவினரின் மரணச்சடங்கிற்கு செல்வது தவறில்லை. ஆனால் அதேவேளையில் அண்மையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற பண உதவியின்றி மரணமான முன்னாள் போராளியின் மரண சடங்கிற்கும் இவர் சென்றிருக்கலாம் அல்லவா?
அதுமட்டுமன்றி, சொகுசு வாகனம் விற்று 5 கோடி ரூபா பணம் பெற்றுள்ளார் என்றும் அதில் இருந்து ஒருரூபா கூட எந்த முன்னாள் போராளிக்கும் அவர் உதவவில்லை என்றும் கூறுகிறார்கள்.
இவையெல்லாம் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அமைச்சர் ஆனந்தி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையாக மக்கள் முன் பதில் அளிக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
No comments:
Post a Comment