முள்ளிவாய்க்காலில்,
கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவது
அழுது புலம்புவதற்காக அல்ல -மாறாக,
நாம் மீண்டும் எழுந்து நிற்பதற்காகவே!
கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவது
அழுது புலம்புவதற்காக அல்ல -மாறாக,
நாம் மீண்டும் எழுந்து நிற்பதற்காகவே!
நாம் எழுந்து நடந்தால் இமய மலையும் எமக்கு வழி கொடுக்கும். மாறாக நாம் உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழும். அப்படியிருக்க தமிழ் இனம் மட்டும் அடங்கி அடிமையாக கிடந்து விடுமா என்ன?
அழுத பிள்ளையே பால் குடிக்கும். போராடிய இனமே விடுதலை பெறும். இப்போது எம்முன் உள்ள கேள்வி நாம் போராடப் போகிறோமா அல்லது அடிமையாக கிடக்கப் போகிறோமா?
தாயகத்தில் உள்ள எம் உறவுகள் தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக அறிவித்து போராடி வருகிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது உறவுகளின் போராட்டத்திற்கு துணை நிற்கப் போகிறார்களா? அல்லது போராட்டத்தை காட்டிக் கொடுக்கப் போகிறார்களா?
தலைமைகள் அரசின் சலுகைகளுக்காக துரோகம் புரிந்தாலும் பரந்து பட்ட மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். வருவார்கள்.
போத்துக்கேயரை எந்த மக்கள் விரட்டினார்களோ, ஒல்லாந்தரை எந்த மக்கள் விரட்டினார்களோ, ஆங்கிலேயரை எந்த மக்கள் எதிர்தார்களோ அதே மக்கள்தான் இந்திய ராணுவத்தையும் எதிர்த்தார்கள். இலங்கை அரசையும் எதிர்க்கிறார்கள்.
எமது மக்கள் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்கள் ஒருபோதும் அடிமைத்தனத்திற்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.
இலங்கை இந்தியஅரசுகள் மட்டுமல்ல எத்தனை அரசுகள் சேர்ந்து அடக்கினாலும் எம் மக்கள் பயந்து மண்டியிட மாட்டார்கள்.
அவர்கள் தமது மூச்சுக்காற்றை நிறுத்துவார்களேயொழிய ஒருபோதும் போராட்டத்தை விட்டு விடமாட்டார்கள்.
இதையே கடந்தகால வரலாறு காட்டுகிறது. எதிர்கால வரலாறும் இதையே நிரூபித்துக் காட்டும்.
எனவே முள்ளிவாய்க்கால் நினைவுகளை இயன்றளவு எந்தவித அமைப்பு வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்று திரண்டு செய்வோம்.
மீண்டும் எழுந்து நிற்போம். இம்முறை கடந்த முறையைவிட பலமாக எழுந்து நிற்போம
No comments:
Post a Comment