•ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதை இது!
கசிப்பு மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க சாராயக் கடைகளை திறக்க வேண்டும் என்று கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 64 சாராயக்கடைகள் உள்ளன என்றும் ஆனால் கிளிநொச்சியில் ஒரு சாராயக்கடைகூட இல்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனுக்கு எதிரான மதுவை ஒழிக்க வேண்டும் என்று கூறும் தலைவர்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம்.
மக்கள் நலனுக்கு எதிரான சாராயக்கடைகளை திறக்க வேண்டும் என்று கோரும் பாராளுமன்ற உறுப்பினரை முதன் முதலாக இப்பதான் பார்க்கின்றோம்.
இத்தனைக்கு இவர் முன்னர் ஆசிரியராக (வாத்தி) இருந்தவர் என்று வேறு சொல்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவாளி(?) வாத்தியிடம் படித்த மாணவர்கள் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஆனால் இவரை “வாத்தி சிறீ” என்று அழைப்பதைவிட “கமிஷன் சிறீ” என்று அழைத்தால்தான் பலருக்கும் இப்ப தெரிகிறது.
சொகுசு வாகனம் விற்று 5 கோடி ரூபா சம்பாதித்தவர். அது போதாதென்று புலம்பெயர் நாடுகளில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு அனுப்பிய உதவிப் பணத்தில் தனக்கு 15% கமிஷன் பெற்று வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பிய உதவிப் பணத்தில் தனக்கு கமிஷன் கேட்டு வாங்கிய ஒரே பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையும் இந்த சிறீ வாத்திக்கே உண்டு.
யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுவில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு உலகவங்கி பல மில்லியன் டொலர் பணத்தை வழங்கியிருந்தது.
ஆனால் இந்த சிறீதரன் எம்.பி யின் எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டு பணம் திருப்பி அனுப்பப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு தண்ணி கொடுக்க மறுத்த இந்த சிறீவாத்தி, நல்லூரில் புது வீடு வாங்கி பிள்ளைகளை யாழ் பாடசாலையில் சேர்த்து படிப்பிக்கிறார்.
கல்வியில் முதல் மாவட்டமாக சிறந்து விளங்கிய யாழ் மாவட்டம் இன்று மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
போர் நடந்த காலத்தில்கூட இந்தளவு தூரம் யாழ் மாவட்டம் கல்வியில் பின்தங்கியிருக்கவில்லை.
அதேவேளையில் இலங்கையில் அதிகளவு சாராயம் விற்ற மாவட்டமாக யாழ் மாவட்டம் முதன்மை இடத்தை பெற்றுள்ளது.
யாழ் பாடசாலை வாசலிலேயே கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து எமது தமிழ் தலைவர்கள் யாருமே கவலைப்படவும் இல்லை. இவற்றை தடுப்பது குறித்து அக்கறை கொள்ளவும் இல்லை.
இப்போது கிளிநொச்சியிலும் சாராயக்கடைகள் திறக்க வேண்டும் சிறீதரன் எம்.பி கோரியிருப்பதையும் எந்தவொரு தலைவரும் கண்டிக்கவில்லை.
ஏனெனில் சாராயக்கடைகள் திறப்பதன் மூலம் இந்த அரசியல் தலைவர்களுக்கு பெருமளவு கமிஷன் பணம் கிடைக்கிறது அல்லவா!
No comments:
Post a Comment