• பேரறிவாளனின் மரண தண்டனையும்
காஞ்சி சங்கராச்சாரிகளின் விடுதலையும்
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் ஓரேவிதமான குற்றத்திற்கு இரண்டுவிதமான தீர்ப்பை இந்திய நீதிமன்றம் வழக்கம்போல் வழங்கியுள்ளது. சட்டம் ஆதிக்க சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் என்பதும் சட்டத்தின் நீதி சாமான்ய மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை ஜயம் திரிபுற நிரூபிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் என்ற தனிநபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 36 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. அந்த வழக்கில் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் சங்கரராமன் என்ற தனிநபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கூட தண்டனை பெறவில்லை. இந்திய நீதிமன்றத்தின் இந்த வினோதமான, வெட்கக்கேடான தீர்ப்பைப் பார்த்து உலகமே சிரிக்கிறது.
பேரறிவாளன் வாக்குமூலத்தை தான் திருத்தியதாக விசாரணை அதிகாரி கூறுகிறார். பேரறிவாளன் எதற்கு என்று தெரியாமல் பற்றரி வாங்கி கொடுத்தமைக்காக நிரூபிக்காத அந்த குற்றத்திற்காக மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் கூலிக்கு ஆள்பிடித்து கொலை செய்த சங்கராச்சாரியார் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அப்படி என்றால் சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்தாரா?
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது என்பதே இந்திய நீதித்துறையின் நோக்கம் என்கிறார்கள். அப்படியாயின் குற்றவாளியான சங்கராச்சாரிகள் தப்பித்தாலும் பரவாயில்லை, நிரபராதியான பேரறிவாளனை தண்டிக்காதீர்கள்.
பேரறிவாளன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!
இல்லையேல் வரலாறு அவரை விடுதலை செய்யும்!!
இது உறுதி!!!