Saturday, November 30, 2013

அதிசயம். ஆனால் உண்மை.!! கொலைகாரர்களே கொலையைக் கண்டிக்கின்றனர் !!!!!

இன்று!

• இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? – கலைஞர்.
• இசைப்பிரியா கொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்- ப. சிதம்பரம்.

நாளை!
• இசைப்பிரியாவின் கொலையை கண்டிக்கிறேன்- மகிந்த ராஜபக்ச

அதிசயம். ஆனால் உண்மை.!!
கொலைகாரர்களே கொலையைக் கண்டிக்கின்றனர் !!!!!

இசைப்பிரியா மட்டுமல்ல 40 அயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள். கொலைக்கு அனைத்து வகையிலும் உதவியவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இலங்கை ராணுவத்திற்கு அன்று மட்டுமல்ல இன்றும்கூட பயிற்சி ஆயுதம் என அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது இந்திய அரசு.

இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம் என்கிறார் கோத்தபாயா. இந்தியாவின் உதவி இல்லாவிடின் யுத்தத்தில் நாம் வென்றிருக்க முடியாது என்கிறார் மகிந்த ராஜபக்ச. அதுமட்டுமல்ல இனப் படுகொலை புரிந்த ராஜபக்சவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாத்து வருவதும் இதே இந்திய அரசுதான்.

ஆனால் இன்று சிலர் ஏதோ ராஜபக்ச மட்டுமே கொலைகாரன் என்பது போலவும் இந்திய அரசு அப்பாவி போலவும் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாக நாம் கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால் கொலைகாரர்களே நீதி விசாரணை வேண்டும் என அப்பாவியாய் நடிப்பதை இப்போதுதான் நிஜத்தில் பார்க்கிறோம்.

தேர்தல் வருகிறது. மக்கள் பிய்ந்த செருப்புகளுடன் தயாராய் இருக்கிறார்கள். ஓட்டு கேட்டு வரும் இந்த நாய்களுக்கு செருப்படி கொடுக்க தயாராய் இருக்கிறார்கள் என்ற பயம். பதவி வேண்டுமே என்ற நப்பாசை. எனவே மக்களை ஏமாற்ற மாயாஜால அறிக்கை விடுகிறார்கள். ஆனால் இம்முறை மக்கள் ஏமாறமாட்டார்கள்.

யுத்தத்தின் இறுதி நேரத்தில் புலிகளும் மக்களும் இந்திய தலைவர்களின் பேச்சை நம்பி சரணடைந்தார்கள். இந்த ஏற்பாட்டை செய்தவர்கள் கலைஞர் மகள் கனிமொழி மற்றும் சிதம்பரம் போன்றவர்கள். சரணடைபவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். இருந்தும் தங்கள் பதவி நலன்களுக்காக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை இவர்கள் காவு கொடுத்தார்கள்.

யார், யார் சரணடைந்தார்கள்? சரணைடைந்தவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் ? என்பதெல்லாம் அப்போதே சோனியாகாந்தி, கலைஞர் கருனாநிதி, சிதம்பரம், கனிமொழி போன்றவர்களுக்கு தெரியும். அனைத்து விடீயோக்களும் இவர்களிடம் உண்டு. ஆனால் ஏதோ இப்பதான் இவற்றை பார்ப்பது போலவும் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைவதாகவும் நாடகம் போடுகின்றனர். மக்களை ஏமாற்ற அறிக்கை விடுகின்றனர். நாளை இசைப்பிரியாவின் கொலை தானும் கண்டிப்பதாக மகிந்த ராஜபக்சவும் அறிக்கை விடக்கூடும்!

மக்களின் படுகொலைகளுக்கு யார் காரணமோ அவர்கள் எல்லாம் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வரலாற்றில் இதுவே இதுவரை நடந்திருக்கிறது. இனியும் இவ்வாறே நிகழும். இதற்கு சோனியாவோ அல்லது கலைஞரோ தப்ப முடியாது. சிதம்பரம் கனிமொழி போன்றவர்கள் சேர்த்து வைத்திருக்கும் கோடிக் கணக்கான ஊழல் பணம் அவர்களை ஒருபோதும் காப்பாற்ற போவதில்லை.

ஓ இசைப் பிரியாவே!

உன்னைக் கொன்ற அதே இலங்கை, இந்திய ராணுவங்களே 1972ல் மனம்பேரி என்ற சிங்கள யுவதியைக் கொன்றது.

60 ஆயிரம் சிங்கள இஞைர்கள் இலங்கை இந்திய ராணுவங்களால் 1989ல் கொல்லப்பட்டார்கள். ஆனால் அதே இளைஞர்கள் மீண்டும் பலமாக எழும்பிய வரலாறு எமது தீவில் உள்ளது அல்லவா!

எனவே உறுதியாக உரத்து கூறுகிறோம். உனது கொலைக்காக நாம் ஒப்பாரி வைக்கப்போவதில்லை.

நாம் வீரம் செறிநத் போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். எனவே மீண்டும் எழுவோம்.

கொலைகாரர்களை வேரோடு சாய்ப்போம். விடுதலை பெறுவோம். இது உறுதி. உறுதி.

No comments:

Post a Comment