Monday, May 30, 2022
மே தின வாழ்த்துகள்
•மே தின வாழ்த்துகள்.
உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்
சீதையை ராவணன் சிறை வைத்த இடத்தை
சீதையை ராவணன் சிறை வைத்த இடத்தை பார்வையிட காட்டிய அக்கறையை ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலையோ அல்லது இரண்டு வருடமாக வீதியில் உட்கார்ந்து போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையோ பார்வையிட அண்ணாமலை அக்கறை காட்டாதது ஏன்? இவர்கள் ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்று தருவார்கள் என எப்படி நம்புவது?
தமிழிசை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது ஈழத்திற்கு வந்தார். இப்போது அண்ணாமலை வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழர்களாக இருந்தும்கூட ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. ஆனால் இந்துத் தமிழீழம் கேட்டால் பாஜக அரசு உதவும் என்று காசி ஆனந்தன் ஐயா எப்படி நம்புகிறார்?
உயிரோடு இருந்திருந்தால் இன்று
உயிரோடு இருந்திருந்தால் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார் இசைப்பிரியா.
2009ல் சிங்கள அரசு இனப்படுகொலை செய்ய எந்த ஆரியமும் திராவிடமும் உதவியதோ அதே ஆரியமும் திராவிடமும்தான் இப்பவும் அந்த சிங்கள அரசுக்கு உதவுகின்றன.
இனியாவது தமிழ் மக்கள் இவர்களை உணர்வார்களா?
சிக்ஸ்பேக் வைத்திருக்கும்
சிக்ஸ்பேக் வைத்திருக்கும் ஒரே தமிழ் நடிகை ரெஜினா என்பதைக்கூறும் உதயநிதி அவர்கள் நீட் தேர்வு ரத்து ரகசியத்தை எப்போது கூறுவார் உடன்பிறப்புகளே
சட்டத்திற்கு புறம்பாக எனக்கு
சட்டத்திற்கு புறம்பாக எனக்கு கைவிலங்கு மற்றும் லீடிங்செயின் போடுவதை உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்காக 1992ல் எனது தோழர்களால் கொடைக்கானலில் எடுக்கப்பட்ட படம் இது.
இப்போது முகநூலில் 30வருட போட்டோவுக்கு இது பயன்படப்போகிறது என அப்போது நினைக்கவேயில்லை.
“பாய் ! பிறை தெரியுதா?”
“பாய் ! பிறை தெரியுதா?”
“பிறை தெரியுது. ஆனால் உன்னை தெரியவில்லை.”
“பிரியாணி தரல்லைன்னா பாஜக உள்ளே வந்திடும் பரவாயில்லையா பாய்?”
குறிப்பு - இது உடன்பிறப்புகளை குறிக்கும் அரசியல் பதிவு இல்லை. 😀
இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.
இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.
ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியா
இன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி
இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர்.
இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார்.
நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள்.
சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார்கள்.
மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. அவரைக் கொன்ற படையினர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் இசைப்பிரியாவை கொன்றவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
இசைப்பிரியாவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
இலங்கை அரசு ஒருபோதும் நீதி வழங்கப்போவதும் இல்லை.
ஏனெனில் நடந்தது வெறும் போர்க்குற்றம் இல்லை. அது இனப்படுகொலை.
குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் அகவை தினமாகும். அவருக்குரிய நீதி கிடைக்க குரல் கொடுப்போம். I
பேயைப் பார்த்தேன்
பேயைப் பார்த்தேன் என சொல்லிப் பாருங்கள் பலர் நம்புவார்கள்.
கடவுளைப் பார்த்தேன் என சொல்லிப் பாருங்கள் ஒருத்தனும் நம்பமாட்டான்.
நல்ல செய்தி வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் சம்பந்தர் ஐயா. அதை யாராவது நம்புகிறார்களா?
சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன்
சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன்
ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன்
குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன் சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன்.
ஆனால், கடைசியில சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று எனக்கு சொல்லவேயில்லையே.
நான் செய்த தவறுதான் என்ன? தமிழனாக பிறந்ததைத் தவிர!
என்னை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டால் பிரபாகரன் பயங்கரவாதி எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி என்கிறார்கள்.
சரி. அப்படியென்றால் விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபோது அவர் மகனை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை.?
மாறாக அவர்களை பாதுகாத்து படிக்கவும் வைத்துள்ளார்களே.
ஏனெனில் அவர் சிங்களவர். நான் தமிழன். அதுதானே காரணம்.
அவர்கள் என்னைக் கொன்றபோதுகூட வலிக்கவில்லை
ஆனால் நடந்தது இனப் படுகொலை அல்ல வெறும் போர்க்குற்றம்தான் என்று சுமந்திரன் அங்கிள் சொல்லும்போதுதான் வலிக்கிறது.
பிளீஸ், சுமந்திரன் அங்கிள்! நீங்கள் எனக்காக நியாயம் கேட்காவிட்டாலும் பரவாயில்லை நடந்தது இனப் படுகொலை அல்ல என்று மட்டும் கூறாதீர்கள்.
அவர்கள் மலர்களை பறித்து விடலாம் -
அவர்கள் மலர்களை பறித்து விடலாம் - ஆனால் வசந்தம் வருவதை தடுத்துவிட முடியாது
அவர்கள் எமது உயிர்களை நசுக்கி விடலாம் -ஆனால் எமது உணர்வுகளை நொருக்கிவிட முடியாது
கிழக்கில் உதிக்கும் சூரியன் போல் எமக்கும் ஒருநாள் விடிவு வரும் அப்போது எமது குழந்தைகளின் சிரிப்பு எமது எதிரியை பழிவாங்கும்!
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. நாம் மட்டும் வீழ்ந்தே கிடந்து விடுவோமா?
மீண்டும் எழுவோம் முன்பைவிட பலமாய்!
பிரபாகரன் பயங்கரவாதி.
பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான்.
இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் அச் சிறுவன் பாலச்சந்திரன் எப்படி தமிழ்நாட்டில் பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும்.
மோடி வந்தார்
மோடி வந்தார்
தமிழிசை வந்தார்
இப்ப அண்ணாமலை வந்திருக்கிறார்.
பலாலி விமானநிலையம், காங்கேசன் சீமெந்து, திருமலை எண்ணெய் குதம் மற்றும் துறைமுகம், மன்னார் எண்ணெய்வளம் என தமிழரின் வளங்கள் அனைத்தும் பெற்றுக்கொண்டனர்.
ஈழத் தமிழருக்கு இவர்கள் பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?
தெலுங்கர் தெலுங்கராக இருக்கும்போது
தெலுங்கர் தெலுங்கராக இருக்கும்போது
கன்னடர் கன்னடராக இருக்கும்போது
மலையாளிகள் மலையாளிகளாக இருக்கும்போது
தமிழர் மட்டும் எதற்கு திராவிடராக இருக்க வேண்டும்?
மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு
•மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு (05.05.1818)
குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே?
குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை?
அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை
குழந்தை- ஏன் வேலை போய்விட்டது?
அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள்.
மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது.
இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர்.
சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும்.
இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது.
இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை.
பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது.
ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும்.
அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும் .
எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்கு முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார்.
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
கொரோனோ நெருக்கடியானது கார்ல் மார்க்ஸ் கருத்துகளை இன்னும் அதிகமாக படிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த காலங்களில் நெருக்கடிகள் தோன்றியபோது எப்படி புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக்கொண்டதோ அதேபோன்று இம் முறையும் அது தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என சிலர் நம்புகின்றனர்.
பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களும் உடனே விடுதலை செய்ய வேண்டும்
பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களும் உடனே விடுதலை செய்ய வேண்டும்
சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு.
சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு. அதைவிட சரணடைந்த சிறுவனைக் கொல்வது மிகப் பெரிய தவறு.
“பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி” என்று சுட்டுக் கொன்றமைக்கான காரணத்தை கோத்தபாய ராஜபக்ச கூறினார்.
1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீராவை பயங்கரவாதி என்று இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது.
அப்போது விஜயவீராவின் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் “ரோகன விஜயவீரா பயங்கரவாதி எனவே அவரது பிள்ளைகளும் பயங்கரவாதி” என்று ஒரு பிள்ளைகூட சுட்டுக் கொல்லப்படவில்லை.
மாறாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உரிய அனைத்து செலவுகளும் அரசே பொறுப்பேற்றது.
விஜயவீராவின் மகன் உபுன்டு விஜயவீரா படித்து பட்டம் பெற்றுவிட்டார். அதுமட்டுமல்ல தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார்.
ரோகண விஜயவீராவின் மகனை படித்து பட்டம் பெற வைத்த இலங்கை அரசு பிரபாகரனின் மகனை சுட்டுக் கொன்றுள்ளது.
விஜயவீராவின் ஆறு பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றிய இலங்கை அரசு பிரபாகரனின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுள்ளது.
இதற்கு என்ன காரணம்?
விஜயவீராவும் அவர் மகனும் சிங்கள இனம். பிரபாகரனும் அவர் மகனும் தமிழர் இனம்.
இதைவிட வேறு என்ன காரணம் இருக்கும்?
ஈழத் தமிழர் விடுதலை பெற்றால்
ஈழத் தமிழர் விடுதலை பெற்றால் அது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழருக்கும் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று அஞ்சியே ஈழத் தமிழர் விடுதலையை இந்திய அரசு நசுக்குகிறது.
ஆனால், ஈழத் தமிழர் விடுதலையை நசுக்கினாலும் தமிழ்நாட்டில் விடுதலை உணர்வு எழும் என்ற பாடத்தை அது விரைவில் கற்றுக்கொள்ளும
அமைதி வழியில் போராடும் மக்களை
அமைதி வழியில் போராடும் மக்களை அடக்குவதற்கு சிங்கள அரசு அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளது
இதனை அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள் கண்டித்துள்ளன.
இந்திய அரசு கண்டிக்கவில்லை. மாறாக மக்களின் தடுப்பரண்களை உடைத்து மக்களுக்கு நீரைப் பாய்ச்சி விரட்டும் கொடிய இயந்திரத்தை வழங்கியுள்ளது.
வைகோ அவர்களே நீங்களுமா?
வைகோ அவர்களே நீங்களுமா?
திமுக வுடன் சேர்ந்து நீங்களும் சிங்கள அரசுக்கு உதவலாமா?
ஈழதமிழர் அகதியாக தமிழ்நாடு செல்லவிடாமல் சிங்கள கடற்படை தடுக்கிறது.
மீறி வருபவர்களை தமிழக காவல்துறை கைது செய்து வழக்கு போடுகிறது.
இதையெல்லாம் கண்டிக்கவேண்டிய நீங்கள் சிங்கள அரசுக்கு உதவி செய்கிறீர்கள்.
திமுக வில் இருந்து விலகியபோது தனக்கு ஆதரவு தரும்படி மதுரை சிறையில் இருந்த டாக்டர் ராமதாசிடம் வைகோ கேட்டார். ராமதாஸ் ஆதரவு வழங்கவில்லை.
இதுபற்றி நான் கேட்டபோது “இன்னொரு கலைஞரை எதற்கு வளர்த்துவிட வேண்டும்?” என ராமதாஸ் கூறினார். இப்போதுதான் அதன் அர்த்தம் எனக்கு புரிகிறது.
ரயிலில் டிக்கட் இன்றி வந்தவர்
ரயிலில் டிக்கட் இன்றி வந்தவர் எப்படி தன் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து சேர்த்தார் என்ற தொழில் ரகசியத்தை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்திய அரசு ஏன் சிறீயண்ணாவைக் காப்பாற்றவில்லை?
•இந்திய அரசு ஏன் சிறீயண்ணாவைக் காப்பாற்றவில்லை?
ரெலோ தலைவர் சிறீசபாரட்ணம் கொல்லப்பட்ட தினம் என்று முகநூலிலும் கிளப்கவுசிலும் சிலர் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
சிறீயண்ணா முன்வைத்த தமிழீழத்தை கைவிட்டவர்கள், அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் அவரை நினைவு கூர்வது ஆச்சரியமாக இருக்கிறது.
சரி. பரவாயில்லை. ஆனால் நினைவு கூர்வது என்ற போர்வையில் அவர்கள் இந்திய ஆதரவை மீண்டும் விதைக்க முனைவது மோசமானது. கண்டிக்கப்பட வேண்டியது.
இந்திய அரசின் உதவியுடன் பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று சிறீயண்ணா கூறியது உண்மைதான்.
ஆனால் அதன் பின் பல பொங்கல் வந்து போய்விட்டது. அவர் கூறிய தமிழீழம் பிறக்க இந்தியா உதவி செய்யவில்லை.
மாறாக, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்திய அரசின் உதவியுடனேயே நசுக்கப்பட்டிருக்கின்றது என்பதை எம் கண் முன்னே கண்டோம்.
இலங்கை அரசு தமிழினப் படுகொலை செய்வதற்கு உதவியதோடு இன்று இக் கணம்வரை அந்த இலங்கை அரசை ஆதரித்து பாதுகாத்து வருவதும் இந்த இந்திய அரசே.
அதை உணராமல் இப்பவும் எப்படி இவர்களால் “ ஈழவிடுதலைப் போராட்டம் இந்திய பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்தது” என்று கூறிக்கொள்ள முடிகிறது?
சரி. இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவவில்லை. குறைந்தபட்சம் தன்னை ஆதரித்த தனது விசுவாசியான சிறீயண்ணாவுக்காவது உதவியதா? இல்லையே.
சிறீயண்ணா யாழ்ப்பாணத்தில் புலிகளால் கொல்லப்டும்போது இந்திய அரசு அவரை எப்படிக் காப்பாற்றியிருக்க முடியும் என கேட்க விரும்புவர்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.
இதே யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற இரு வெள்ளை இனத்தவர்களை ஈபிஆர்எல்எவ் இயக்கம் கடத்தியது.
சிறையில் உள்ள போராளிகள் அவைரும் விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த கடத்தப்பட்ட அலன் தம்பதிகளை சுட்டுக் கொல்லப்போவதாக ஈபிஆர்எல்எவ் இயக்கம் அறிவித்தது.
உடனே அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறையில் உள்ள போராளிகள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தார்.
ஆனால் அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் ஜே.அர்.ஜெயவர்த்தனாவை தொடர்பு கொண்டு போராளிகளை விடுதலை செய்ய வேண்டாம். நான் அலன் தம்பதிகளை விடுதலை செய்விக்கிறேன் என்று கூறினார்.
இதையடுத்து சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் இயக்கதலைவர் பத்மநாபா கைது செய்யப்பட்டு ஒரு ஹோட்டலில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார் அந்த இந்திரா அம்மையார்.
இப்போது எனது கேள்வி என்னவெனில் ஜே.அர் ஜெயவர்தனா கேட்காமலே இரண்டு வெள்ளை இனத்தவர்களுக்கு உதவிய இந்திய அரசு ஏன் தனது விசுவாசியான சிறீயண்ணாவை காப்பாற்றவில்லை?
உண்மையில் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும்.
ஏனெனில் அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருந்தார். அவரை கைது செய்து சிறீயண்ணாவை காப்பாற்ற இந்திய அரசு முயலவில்லை.
ஏனெனில் இந்திய அரசைப் பொறுத்தவரையில் போராளிகள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டும் என்பதே விருப்பம்.
இது இன்று சிறீயண்ணாவின் பெயரால் இந்திய புகழ்பாடுவோருக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் இந்திய ஆதரவை விதைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
பாலகுமார் எங்கே?
•பாலகுமார் எங்கே?
ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார்.
இராணுவத்தினரிடம் அவர் உயிருடன் இருந்தமைக்கான படம் கீழே உள்ளது.
ஆனால் அவரும் அவருடைய மகனும் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
13 வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பலருக்கு அவரை நன்கு தெரியும்.
கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர்கள் இவர்கள்.
இன்று அவர் எங்கே என்பதை அறிவதில் ஏனோ இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
அவர் உயிருடன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்?
சரணடைந்த பாலகுமாரையும் அவர் மகனையும் சர்வதேச விதிகளுக்கு முரணாக கொன்றவர்கள் மீது ஏன் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை?
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர். இன்று அவருக்காக குரல் எழுப்ப ஒரு தமிழர் பிரதிநிதிகூட இல்லையா?
அந்த வயதான மூதாட்டி
அந்த வயதான மூதாட்டி தமிழ்நாடு சென்று சிகிச்சை பெற எதிரி மகிந்தாகூட அனுமதித்தான்.
இந்திய அரசும் விசா வழங்கி அனுமதித்தது.
ஆனால் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பியதை எந்த தமிழனால் மறக்க முடியும்?
ஊரும் நடந்தது உறவும் நடந்தது
ஊரும் நடந்தது உறவும் நடந்தது முள்ளிவாய்க்காலில் நடக்கப்போவது அறியாமல்
பூவும் நடந்தது பிஞ்சும் நடந்தது யாவும் ஒன்றாக நசுங்கப் போவது தெரியாமல்
கூடி மகிழ்ந்திட்ட கோயில் கூரையில் ஷெல் குண்டுகள் வந்து வீழ்ந்தன
பாடி குதூகலித்த வீட்டு முற்றத்தில் பாவியாய் வந்;து புகுந்தது சிங்கள ராணுவம்
“பாதுகாப்பு வலயம்”என்பதை நம்பி முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனரே
ஆனால் அதுதான் தாம் புதைக்கப்படும் வலயம் என்பதை அறியாமலே நடந்தனரே
வந்த பேய்கள் கொளுத்திய தீயில் வெந்து செத்தவர் எத்தனையோ?
ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில்
•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்குமா?
மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் மே மாதம் வந்துவிட்டால் சிலர் முகநூலில் வந்து விஷம் கக்குகின்றனர்.
ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்றெல்லாம் எழுதுகின்றனர்.
இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதியவர்கள்.
ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை.
இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திரா காந்தியும் அவரது இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது.
தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் தாங்களாகவே போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள்.
அதனால்தான் அப்போது இலங்கை தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார்.
அதேபோன்று ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில் உரையாற்றிய முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர்.
இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும்.
இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை.
அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது.
இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய போதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை.
இதுதான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை.
ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.
இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை காலில்போட்டு மிதிக்க வேண்டும்
பை( BYE) பை (BYE )
பை( BYE) பை (BYE )
செய்தி – பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சா விலகினார்.
இரண்டாம் துட்டகைமுனு என்று போற்றப்பட்டவர் இரண்டு வருடத்தில் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் என்றும் மகத்தானவர்கள்.
கொழும்பில் சம்பந்தர் ஐயாவின்
கொழும்பில் சம்பந்தர் ஐயாவின் சொகுசு பங்களாவுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லைத்தானே?
சுமந்திரன் சேர் பாலம் கட்டும் முயற்சிக்கு ஒன்றும் இடைஞ்சல் இல்லைதானே?
மக்கள் மீது வன்முறையை திணித்தால்
மக்கள் மீது வன்முறையை திணித்தால்
மக்கள் அதே வன்முறை மூலம் பதில் அளிப்பார்கள்.
மகிந்தவின் சொகுசு பங்களா மற்றும் சொகுசு வாகனங்கள் பற்றி எரிகின்றன.
மக்களை தாக்குவதற்கு மகிந்தா அனுப்பிய
மக்களை தாக்குவதற்கு மகிந்தா அனுப்பிய காடையரை ஜட்டியுடன் ஓடவிட்ட மக்கள்.
அரசு மக்களுடன் என்ன மொழியில் பேசுகிறதோ அந்த மொழியில் மக்கள் பதில் அளிப்பார்கள்.
ஆட்சியில் இருக்கும்போது அதிகார
ஆட்சியில் இருக்கும்போது அதிகார மமதையில் எத்தனை மாவீரர்களின் கல்லறைகளை சிதைத்திருப்பார் மகிந்தா.
இன்று அவர் கண் முன்னே அவரது தந்தையின் சிலை இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது மக்களால்.
திருப்பி தாக்குவது என்று மக்கள்முடிவு
"திருப்பி தாக்குவது என்று மக்கள்முடிவு எடுத்துவிட்டால் ஆகாயத்தில் பறக்கும் விமானத்தைக்கூட கல்லால் எறிந்து விழுத்துவார்கள்" - சே
மக்களை தாக்கிய மகிந்தவின் காடையர் குழுவுக்கு பாதுகாப்பு வழங்கிய பிரதி பொலிஸ் அதிபர் தென்னக்கோன் மீது தாக்குதல். அவரது வாகனம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது
மக்கள் சக்தி அணுகுண்டைவிட
மக்கள் சக்தி அணுகுண்டைவிட வலிமையானது என்பதை ஓடிச் சென்று திருகோணமலை கடற்படைத் தளத்தில் பதுங்கியிருக்கும் மகிந்த ராஜபக்சா இப்போது நிச்சயம் உணர்ந்திருப்பார்.
செய்தி - இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும்
செய்தி - இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என சுப்பிரமணியசுவாமி கோரிக்கை.
ஆரியமும் திராவிடமும் மகிந்த ராஜபக்சாவை காப்பாற்றுமா?
வாய்ப்பில்லை ராஜா
ஓடி ஓடி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தும்
ஓடி ஓடி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தும்
கலர் கலராக கயிறுகள் கைகளில் கட்டியும்
கடைசியில் எதுவுமே வந்து காப்பாற்றவில்லை
தமிழரை அழித்த அதே மே மாத்தில்
அதே தமிழர் மண்ணில் வந்து பதுங்கும் நிலை மகிந்தவுக்கு வந்துள்ளது.
இலங்கை நேபாளம் அடுத்து இந்தியாவிலும்
இலங்கை நேபாளம் அடுத்து இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி வரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படி நிலை வந்தால் இலங்கை போன்று இந்தியாவிலும் மக்கள் போராடிவிடக்கூடாது என்பதற்காக இந்தியா கோத்தபாயா அரசைக் காப்பாற்ற உதவி வருகிறது.
நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்?
•நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்?
மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
அப்படியென்றால் மரணித்தவர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்?
அவர்கள் எதற்காக போராடி மரணித்தார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
எமக்கான நியாயத்தை உலகம் வழங்கும்வரை எமக்கான தீர்வு கிட்டும்வரை நாம் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்.
ஆம். மரணித்தவர்களை நினைவு கூர்வது அழுது ஒப்பாரி வைப்பதற்காக அல்ல. நாம் மீண்டும் எழுவதற்காகவே.
எழுவோம். முன்பைவிட பலமாக எழுவோம்!
விமர்சனம் செய்து கொள்வது எப்படி?
• விமர்சனம் செய்து கொள்வது எப்படி?
கிளப்கவுஸ் போன்ற சமூகவலைத்தளங்களில் நடைபெறும் விவாதங்களையும் விமர்சனங்களையும் பார்க்கும்போது இப் பதிவை பகிரும் அவசியம் இருப்பதாக உணர்கிறேன்
சிலர் தமது நட்பு சக்திகளை “கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டதாக” பெருமையுடன் கூறுகின்றனர்.
எதிரியையும் நட்பு சக்திகளையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமலே அப்படி செய்கின்றனர்.
சரி அப்படியென்றால் எப்படி விமர்சனம் செய்வது? அல்லது ஆக்கபூர்வமான உரையாடலை எப்படி செய்வது?
இதற்கு மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் அவர்கள் எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார்.
'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது.
நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்..
எமது உரையாடல்கள் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.
குறிப்பு - எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே எமது ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே எமது விமர்சனம்..
புலவரை நினைவில் கொள்வோம்!
புலவரை நினைவில் கொள்வோம்!
தோழர் புலவர் கலியபெருமாள் அவர்களின் 15 வது நினைவு தினம் 16.05.2022 ஆகும்.
புலவர் கலியபெருமாள் மாக்சிச லெனினிச மாவோயிச தத்துவ வழிகாட்டலில் புரட்சியை முன்னெடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
இதனால் அவரை மட்டுமன்றி அவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் பலரையும்கூட கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது தமிழக காவல்துறை.
அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் ஒரு முழு குடும்பத்தையே சிறையில் அடைக்கப்பட்டது என்றால் அது புலவர் குடும்பம் ஒன்று மட்டுமே.
அதேபோல் நான் அறிந்தவரையில் தமிழகத்தில் பொலிஸ் தடையை மீறி மக்களே ஒன்றுதிரண்டு சென்று வயலில் விதைத்து அறுவடை செய்து கொடுத்ததும் புலவருக்கு மட்டுமே.
தமக்காக போராடுபவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை புலவர் வாழ்க்கையில் நாம் காணலாம்.
இறுதிவரை ஈழத் தமிழரை உறுதியாக ஆதரித்த ஒரு தோழர். அவரை ஈழத் தமிழர்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள்.
2009 இனப்படுகொலையை
•2009 இனப்படுகொலையை
தமிழினம் மறந்துவிட முடியுமா?
தமிழ் இனம் மீண்டும் எழுந்திட முடியுமா?
2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் இனம் மறந்துவிட வேண்டும் என இலங்கை இந்திய அரசுகள் விரும்புகின்றன.
“வடக்கின் வசந்தம்” மூலம் கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த ராஜபச்ச நினைத்தார்.
50 ஆயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது.
சுமந்திரனை விலைக்கு வாங்குவதன் மூலம் இனப் படுகொலையை வெறும் போர்க்குற்றமாக தமிழ் மக்கள் மனங்களில் மாற்றிவிட முடியும் என நல்லாட்சி அரசு நினைத்தது.
ஆனால் ஆண்டு செல்ல செல்ல தமிழ்மக்கள் மறப்பதற்கு பதிலா இன்னும் அதிகம் அதிகமாக அதனை நினைவில் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மட்டுமே முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால் இன்று தமிழக தமிழர்கள், மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் எல்லோரும் இதனை நினைவில் கொள்கின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந் நாட்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மற்ற இன மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள்.
புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் எமது அடுத்த சந்ததியினர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நீதியைக் கோராமல் இருந்துவிட மாட்டார்கள்.
ஜ.நா வில் ஈழத் தமிழருக்கான நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால் உலக மக்கள் இந்த அடுத்த சந்ததியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது.
தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி அவர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதையும் அச்சுறுத்தி அடக்க முனைகிறது இலங்கை அரசு.
இலங்கையில் அடக்கலாம். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்க முடியுமா? முடியவே முடியாது.
அனைவரும் ஒருமித்து நினைவுகூர்வதன் மூலம் “தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து விட்டார்கள்” என்ற செய்தியை உலகிற்கு தெரியப்படுத்துவோம்.
ஈழப் போராளிகள் ஆயுத வழியில் போராடியது தவறு.
ஈழப் போராளிகள் ஆயுத வழியில் போராடியது தவறு. அகிம்சை வழியில் போராடியிருந்தால் தீர்வு பெற்றிருக்கலாம் எனக்கூறும் கூமுட்டைகள் கவனத்திற்கு,
துருக்கியில்
14.05.2020 யன்று 323 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த கலைஞர் இப்ராஹிம் கெக்யக் மரணம்.
24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கலைஞர் முஸ்தபா கோஹக் மரணம்.
03.04.20 யன்று 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஹெலின் போலக் என்ற பெண் மரணம்.
சிறையில் சித்திரவதை செய்ய வேண்டாம் என்ற இவர்கள் கோரிக்கையை துருக்கி அரசு மதிக்கவில்லை.
ஆனால் இவர்கள் மரணம் அகிம்சை வழியில் போராடினால் தீர்வு கிடைக்காது என்பதை நிரூபித்துள்ளது.
அடுத்த சந்ததி வெறுமனே
அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்துவிட வேண்டாம்.
அது தனக்கான நீதியை பெறாமல் ஓய்ந்துவிடாது.
அவுஸ்ரேலியாவில் எமக்கான நீதியைக்கோரும் அடுத்த சந்ததி.
தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட.
தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட. தேசிய பட்டியல் மூலம் எம்.பியான ரணிலை பிரதமராக்கிறார் கோத்தா.
மகிந்த கும்பல் தம்மை பாதுகாப்பதற்கு ரணிலை பிரதமராக்கின்றனர்.
மக்கள் போராடியது ரணில் பிரதமராவதற்கு அல்ல. கோத்தாவையும் மகிந்தவையும் பதவியை விட்டு விரட்டுவதற்கே.
இனப்படுகொலையாளிகளான
இனப்படுகொலையாளிகளான மகிந்த கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று சீமான், அன்புமணி கோருகின்றனர்.
திராவிட முதல்வர் இதனை கோரவில்லை. மாறாக அதிக விலையில் அரிசி வாங்கி அவ் மகிந்த கும்பல் அரசுக்கு அனுப்பி உதவுகிறார்.
புலவர் குறித்து நான் எழுதிய கட்டுரையை
புலவர் குறித்து நான் எழுதிய கட்டுரையை; கீழ் வரும் இணைப்பில் படிக்கலாம்.
http://tholarbalan.blogspot.com/2018/05/blog-post_40.html
இதுதான் அந்த இடம்
இதுதான் அந்த இடம் எம் லட்சம் மக்களை கொன்ற இடம்
எம் மக்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்துவிட்ட முள்ளிவாய்க்கால் இடம்.
எம் ஜனங்களின் அழுகுரல் ஓலம் கலந்த காற்று வீசும் இடம் இது.
இங்கு படர்ந்து இருக்கும் வெறுமையில் எம் இனம் பட்டதுயர் நாம் அறிவோம்
முன்னர் முள்ளிவாய்க்காலை கடக்கையில் அத் தண்ணி எடுத்து வற்றாபளை அம்மனுக்கு விளக்கு எரிப்பது நினைவுக்கு வரும்
இனி முள்ளிவாய்க்காலை கடக்கையில் எம் ஆயிரம் விளக்குகள் அணைக்கப்பட்டது நினைவில் வந்து தொலைக்குமே!
விஷவாயுவால் உருக்குலைந்தவர் எத்தனை? ஷெல் குண்டுகளால் கொல்லப்பட்டவர் எத்தனை?
அரை குறை உயிருடன் புதைக்கப்பட்டவர் எத்தனை? பால் அருந்திய நிலையிலேயே குழந்தையும் தாயும் ஒன்றாக புதைக்கப்பட்டது எத்தனை?
அத்தனையும் நினைக்கையில் இன்றும்கூட எம் கண்ணில் நீர் முட்டித் தெறிப்பதை யார் அறிவார்?
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கடக்கையில் எம் ஆவி துடிப்பதை அவர்கள் அறிவார்களா?
சொந்தம் சொல்லி அழுவதற்குகூட எமக்கு அனுமதி தர மறுக்கிறார்களே அவர்கள்.
போர்த்துக்கேயர் வந்தபோது வீழ்ந்தோம் ஒல்லாந்தர் வந்தபோதும் வீழ்ந்தோம் ஆங்கிலேயர் வந்தபோதும் வீழ்ந்தோம்
ஆம். வரலாற்றில் பல தடவை வீழ்ந்தோம் ஆனால் அத்தனை தடவையும் மீண்டும் எழுந்தோம்
முன்னர் வீழ்ந்த போதெல்லாம் மீண்டும் எழுந்து நின்ற எம் இனம் முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தபோது மட்டும் எழுந்துவிடாமல் கிடந்து விடுமா என்ன?
மண்ணுக்கு அடியில் இருக்கும் அருகம்புல் வேர்கூட ஒரு துளி நீர் பட்டவுடன் பொட்டென்று முளைக்கிறது.
முள்ளிவாய்க்காலில் புதையுண்டவர்களை எருவாக்கி புதுயுகம் ஒன்றை உருவாக்க எம்மால் முடியாதா?
எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம். I
நாம் சாகடிக்கப்படலாம்.
நாம் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது.
எமது போராட்டம் வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான்.
ஆனால் அதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அல்ல
ஏனெனில் போராட்டத்திற்கு ஒருபோதும் தோல்வி இல்லை.
எனவேதான் எம்மை தோற்கடிக்கப்பட முடியாது என்கிறோம்.
நாம், உரிமையை இழந்தோம் உடமையை இழந்தோம் உயிர்களை இழந்தோம்- ஆனால் உணர்வை இழக்கவில்லை.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது தமிழன் மட்டும் அடிமையாக கிடந்திட முடியுமா?
என்ன காரணத்திற்காக போராடினோமோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.
எனவே தமிழ் இனம் மீண்டும் போராடுவது தவிர்க்க முடியாதது.
குனிந்து வா என்றால் தவழ்ந்து செல்லும் விசுவாசிகளாக எம் தலைவர்கள் இருக்கலாம்.
எதிரி வீசும் இறைச்சித்துண்டுக்கு வாலாட்டும் நாய்க்குட்டிகளாகவும் அவர்கள் இருக்கலாம்.
ஆனால் தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டத்தை அடக்கிவிடலாம் என எதிரி நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது.
எனவேதான் உரத்து சொல்கிறோம் இறுதி வெற்றி உறுதி தமிழ் மக்களுக்கு.
ஒன்றாய் கூடுவோம் ஒருமித்து குரல் எழுப்புவோம் எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம்.
வெறுமனே அழுது விட்டு ஓய்ந்து போவதற்காக அல்ல மாறாக மீண்டும் நாம் எழுவதற்காக!
ஒரு சந்ததி வெற்றி பெறுகிறது எனில் அதன் பின்னால் பல சந்ததிகளின் முயற்சி இருந்திருக்கும்.
எமது அடுத்த சந்ததியின் வெற்றிக்கு தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்
பல்லாயிரம் பேரை ஓரேயடியாக கொன்றால் போராட்டத்தை அடக்கிவிட முடியுமா என எம்மில் சோதித்தார்கள்.
நாம் பரிசோதனை எலிகள் இல்லை என்பதையும் நாம் பெருமை மிக்க வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள் என்பதையும் எதிரியின் முகத்தில் காறி உமிழ்ந்து காட்ட வேண்டிய தருணம் இது.
பாட்டியுடன் ஒரு உரையாடல் !
•பாட்டியுடன் ஒரு உரையாடல் !
கேள்வி- பாட்டி! ஆயுதம் தூக்கி போராடுவது பயங்கரவாதம் என்கிறார்களே?
பாட்டி- சரி, தூக்குவது தவறு என்றால் தூக்க வைத்தது அதைவிட தவறு அல்லவா? முதல்ல போய் தூக்க வைத்தவனிடம் கேள். அப்பறம் என்னிடம் வா.
கேள்வி- என்ன பாட்டி சொல்லுகிறீர்கள்?
பாட்டி- கிழவி என்றும் பாராமல் கற்பழிக்கிறான். சிறு குழந்தைகளைக்கூட சுட்டுக் கொல்கிறான். விமானத்தில் வந்து குண்டு போடுகிறான். நான் என்ன செய்ய சொல்லுறாய்?
கேள்வி- நீங்க அகிம்சை வழியில் போராடலாம் அல்லவா?
பாட்டி- அகிம்சை வழியில்தானே தந்தை செல்வா போராடினார். அவருக்கு என்னத்தைக் கொடுத்தாங்க?
கேள்வி – அகிம்சை வழியில்தானே இந்தியா சுதந்திரம் அடைந்தது?
பாட்டி- இந்தியா எந்த வழியில் சுதந்திரம் அடைந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் அதே இந்திய அரசு அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது அந்த அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லையே?
கேள்வி- அப்ப, மகாத்மா காந்தி சொன்னது தவறா?
பாட்டி- காந்தி வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக சொன்னது இப்ப உள்ள கொள்ளைக்கார அரசுகளுக்கு பொருந்துதில்லையே? காந்தி இப்போது இருந்தால் அவர் கையில் ஊன்று தடி இருக்காது அவர் கையிலும் துப்பாக்கி இருந்திருக்கும்.
கேள்வி- என்னது, காந்தியும் ஆயுதம் ஏந்தியிருப்பாரா?
பாட்டி- ஆம். முட்ட வரும் மாட்டை கட்டியணைக்க முடியாது. எட்டி உதைக்க வேண்டும். அதுபோல் கற்றபழிக்க வரும் காமுகனை கை நகத்தினாலாவது தாக்குங்கள் என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார் .
கேள்வி- ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே நம்மட சம்பந்தர் அய்யாவும் கூறுகிறார்.
பாட்டி- அவர் மகள் கற்பழிக்கப்பட்டிருந்தால், அவர் வீட்டின் மீது கொத்துக் குண்டு வீசப்பட்டிருந்தால் ஒருநாளாவது பதுங்கு குழியில் வாழ்ந்திருந்தால் யார் பயங்கரவாதி என்று அவருக்கு தெரிந்திருக்கும்.
கேள்வி- இருந்தாலும் இந்த போராட்டம் தேவைதானா?
பாட்டி- எனது மூதாதையர் போராடியிருந்தால் இன்று நான் போராட வேண்டி வந்திருக்காது. அதேபோல் நான் என் அடிமைத்தனத்தை என் பரம்பரைக்கு விட்டுச்செல்ல விரும்பவில்லை.
கேள்வி- அடுத்த பரம்பரையும் இந்த போராட்டத்தை தொடரும் என நம்புகிறீர்களா?
பாட்டி- தம்பி நான் நம்புவதெல்லாம் இந்த போராட்டத்தை மட்டுமே. எனவே இயக்கமோ அல்லது தலைவரோ இல்லாவிட்டாலும்கூட இந்த போராட்டம் தொடரும்.
கேள்வி- எப்படி ? புரியவில்லையே!
பாட்டி- என்ன காரணங்களுக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரை அதற்கான போராட்டமும் இருக்கும்.
குறிப்பு- தமிழ் இனம் மீண்டும் எழுந்து போராடும் என்ற நம்பிக்கையை இத்தகைய பாட்டிகளின் தியாகங்களே உருவாக்குகின்றன
( மீள் பதிவு)
புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்
“புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள்
“புலிகள் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்” என்றீர்கள்
“சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் அதிகம்” என்றுகூட கூறினீர்கள்.
அதனால் “புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம்” என்று கூறினீர்கள்.
சரி. அப்படியென்றால் “புலிகள் இப்போது இருந்தால் நல்லாய் இருக்குமே” என்று தமிழ் மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? அல்லது யார் காரணம்?
ஒருபுறம் புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டதாக போர் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். மறுபுறம் புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
புலிகளை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றால், புலிகள் யாவரும் அழிக்கப்பட்டுவிட்டனர் என்றால் எதற்காக இல்லாத புலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்?
பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்ட ஜே.வி.பி இயக்கத்தின் தடையை நீக்கியுள்ளீர்கள்.
பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ஜே.வி.பி தலைவர் ரோகன விஜயவீராவுக்கு நினைவு சின்னம் வைக்கவும் ஆண்டுதோறும் நினைவு தினம் கொண்டாடவும் அனுமதிக்கிறீர்கள்.
ஆனால் தமிழ் மக்கள் தமக்காக மாண்ட மாவீரர்களை நினைவு கூர்வதை தடை செய்வதோடு பேஸ்புக்கில் லைக் போட்டால்கூட கைது செய்து சிறையில் அடைக்கிறீர்கள்.
புலிகள் எந்த தீர்வுக்கும் வராமல் பிடிவாதம் பிடித்ததால் வேறுவழியின்றி அவர்களை அழித்ததாக கூறுகிறீர்கள்.
சரி. அப்படியென்றால் புலிகள் இல்லாமல் 13 வருடம் ஆகிவிட்டது. ஏன் எந்தவொரு தீர்வையும் உங்களால் தமிழ் மக்களுக்கு வழங்க முடியவில்லை?
சம்பந்தர் ஜயா தமிழீழத்தை தாம் கோரவில்லை என்றார்.
சம்பந்தா ஜயா உங்கள் தேசியக்கொடியை உயர்த்திப் பிடித்தார்
சம்பந்தர் ஜயா மகிந்த ராஜபக்சாதான் தேசிய தலைவர் என்றார்.
அவருக்கு நீங்கள் கொடுத்தது என்ன?
இப்போது புரிகிறதா தமிழ் மக்கள் ஏன் போராளிகளை விரும்புகிறார்கள் என்று.
தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் தமிழ் மக்களை மூளையே இல்லாதவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.
ஏனெனில் அவர்கள் உங்களுக்கு புரியும் விதத்தில் உங்கள் மொழியில் பதில் தரும் வல்லமை உள்ளவர்கள்
செய்தி – ரணிலுடன் பேசி தீர்வு பெறுவோம்
செய்தி – ரணிலுடன் பேசி தீர்வு பெறுவோம் - சம்பந்தர்
என்ன ஐயா மீண்டும் முதலில் இருந்தா?
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் உலகெங்கும் உள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை எமக்கென்னவென்று கடந்து போகவும் முடியவில்லை
இறுதி மூச்சு உள்ளவரை இவர்களுக்குரிய நீதியை பெறாமல் ஓய்ந்து விடப் போவதுமில்லை.
ஈழத்தமிழர், தமிழக தமிழர் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் ஒன்று சேர்வோம் ஒருமித்துக் குரல் கொடுப்போம்.
இதுவே நாம் எதிரிக்கு இன்று கொடுக்கப்போகும் செய்தி
ஆம். எங்கள் பகைவர் எங்கோ மறைவார் நாம் அனைவரும் ஒன்றாதல் கண்டால்! I
இனப்படுகொலை நாளை தமிழ் மக்கள் நினைவு
இனப்படுகொலை நாளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் வேளையில் பேரறிவாளன் விடுதலை என்ற செய்தி ஆறுதல் தருகிறது.
மற்ற ஆறு தமிழர்களையும் தாமதமின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள்.
பேரறிவாளனுக்கு நீதி மறுக்கப்பட்டமைக்கு தமிழக ஆளுநரும் மோடி அரசுமே காரணம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க அண்ணாமலையை அழைத்து வந்து விளக்கு ஏற்றுபவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பேரறிவாளன் தலைக்கு மேலே தூக்கு கயிறு தொங்கிய வேளையிலும் ஈழத் தமிழரை ஆதரித்தது தவறு என்று கூறவில்லை. மாறாக இனியும் ஆதரிப்போம் என்றே தாயார் அற்புதம்மாள் கூறினார்.
அவர் மக்களை நம்பினார். மக்கள் அவர் விரும்பிய மகனின் விடுதலையை பெற உறுதியான ஆதரவை வழங்கினார்கள்.
கால்களை இழந்திருக்கலாம்
கால்களை இழந்திருக்கலாம்
ஆனால் நம்பிக்கையை இழக்கவில்லை
இனப்படுகொலைக்கு நீதி பெறாமல் ஓய்ந்துவிடப் போவதில்லை.
எங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களோ
எங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களோ அந்த முள்ளிவாய்க்கால் தொடக்கம் உலகெங்கும் எங்கு தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
முகநூலில் நினைவு அஞ்சலி இணைய தளங்களில் நினைவு அஞ்சலி பாடல்கள் கவிதைகள் கட்டுரைகள் குறும் ஒலி ஒளி நாடாக்கள் என எங்கும் எதிலும் நினைவு அஞ்சலிகளே
ஆம். கலை கலாச்சாரம் பண்பாட்டு தளங்கள் எல்லாவற்றிலும் நினைவு அஞ்சலி வடிவங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு விட்டது
அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடும் என எண்ணாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது
13 வருடமாக என்னத்தைக் கிழித்தீர்கள் என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களுக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து சொல்லியிருக்கும் செய்தி இதுதான்.
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியைப் பெறாமல் ஓய்ந்துவிடவும் மாட்டோம்.
இனப்படுகொலை செய்த முன்னாள்
இனப்படுகொலை செய்த முன்னாள் சிங்கள ஜனாதிபதிகூட கொல்லப்பட்ட தமிழருக்காக தீபம் ஏற்றியுள்ளார்.
திராவிட முதல்வர் எப்போது தீபம் ஏற்றுவார்?
அவர் தீபம் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை மெரினாவில் தீபம் ஏற்ற விரும்புவர்களுக்கு அனுமதியாவது வழங்குவாரா?
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும் அதற்கு வருத்தத்தையும் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சா தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைக்கு உதவி பரிசல்கள் பெற்ற திராவிடமும் ஆரியமும் தமது தவறுக்கு வருத்தம் தெரிவிக்குமா?
இணைய தளங்கள் எங்கும்
இணைய தளங்கள் எங்கும் 200 ரூபா உடன்பிறப்புகளின் கதறல் அதிமாக இருக்கு.
நேற்று நாம் தமிழர் கூட்டத்தில் சிறப்பான சம்பவம் நடந்திருக்கு போல.
ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?
ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?
இன்று வியட்நாம் தந்தை என புகழப்படும் ஹோசிமின் அவர்களின் 132 வது பிறந்த தினம் ஆகும்.(19.05.1890)
26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் ஹோசிமின் அவர்கள்.
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று ஹோசிமின் அவர்களிடம் கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார்.
ஆனால் இன்று சில தமிழ் தலைவர்கள் உண்மையை மக்களிடம் கூறுவதற்கு தயங்குகிறார்கள்.
தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என உண்மையாகவே அவர்கள் விரும்புவார்கள் எனில் அவர்கள் ஹோசிமின் கூறியபடி கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மக்களுக்கு கூற முன்வரவேண்டும்.
இந்தியா மிகப்பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து ஈழத் தமிழர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறுபவர்களும் ஹோசிமின் வரலாற்றை படிக்க வேண்டும்.
வியட்நாம் மக்களால் அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியாது?
நிச்சயமாக முடியும்!
தனுவுடன் ஒரு (கற்பனை) உரையாடல் !
•தனுவுடன் ஒரு (கற்பனை) உரையாடல் !
கேள்வி- உன்னை ஒரு பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறுகிறதே?
தனு- ஏன் அப்படி சொல்கிறார்கள்?
கேள்வி - குண்டு வெடிக்க வைத்தமையினால்?
தனு- அப்படியென்றால் பகத்சிங் என்ன பூவையா வீசினார்? பாராளுமன்றத்திற்கு குண்டு விசிய பகத்சிங்கை ஆங்கிலேய அரசு பயங்கரவாதி என்று தூக்கில் இட்டுக் கொன்றது. ஆனால் இதே இந்திய அரசு அவரை சுதந்திர போராட்;ட தியாகி என்று பாராட்டுவதை கவனியுங்கள்.
கேள்வி- அப்படியென்றால் ?
தனு- இந்திய அரசு என்னை பயங்கரவாதி என்று முத்திரை குத்தினாலும் எனது தமிழ் மக்கள் நான் ஒரு விடுதலைப் போராளி என்பதை நன்கு அறிவார்கள்.
கேள்வி - இருப்பினும் ராஜீவ் காந்தியை கொல்வது தவறு இல்லையா?
தனு- இந்தியாவில் வேறு யாராவது தலைவர்களை நாம் கொன்றிருக்கிறோமா? இல்லையே. ராஜீவ் காந்தியை மட்டும் ஏன் கொல்ல வேண்டி வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.
கேள்வி- இந்திய அமைதிப்படை ஈழத்தில் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கான தண்டனையா இது?
தனு- இந்திய ராணுவம் மேற்கொண்ட அக்கிரமங்கள் மட்டுமன்றி அந்த அக்கிரமங்கள் குறித்து இந்திய நீதிமன்றம் ஒன்றில்கூட இதுவரை எமக்கு நியாயம் வழங்கப்படவில்லையே.
கேள்வி- புரியவில்லை?
தனு- ராஜீவ் காந்தி கொலை என்பது பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட தண்டனை.
கேள்வி- இருந்தாலும் இந்தியா சென்று ராஜீவ் காந்தியைக் கொன்றது என்ன நியாயம்?
தனு- பஞ்சாபில் 400 இந்திய மக்களைக் கொன்ற டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று உத்தம்சிங் கொன்றார். அவரை தியாகி என்று இந்திய அரசு கௌரவித்துள்ளது. அவர் செய்தது நியாயம் என்று பாராட்டுபவர்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழரைக் கொன்றவரை இந்தியா சென்று நான் கொல்வது எப்படி அநியாயம் என்று கூறமுடியும்?
கேள்வி- என்ன இருந்தாலும் பிரியங்கா, ராகுல் இருவரும் தம் இளம் வயதில் தந்தையை இழப்பது கொடுமை அல்லவா?
தனு- பிரியங்கா போன்று 800 க்கு மேற்பட்ட எமது பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். ராகுல் போன்று பல்லாயிரம் குழந்தைகள் தமது தாய் தந்தையரை இழந்திருக்கிறார்கள். ராகுல் பிரியங்காவிற்காக கவலைப்படுபவர்கள் ஏன் எமது தமிழ் குழந்தைகளுக்காக கவலைப்படவில்லை?
கேள்வி- பெண்கள் தற்கொலைத் தாக்குதல் செய்வது தவறு இல்லையா?
தனு- குயிலி என்ற பெண் தற்கொலை தாக்குதல் செய்து வரலாற்றில் எமக்கு வழி காட்டியுள்ளார். குயிலி செய்தது தவறு என்று யாரும் எமக்கு சொல்லவில்லையே?
கேள்வி- பயங்கரவாத இயக்கங்கள் அப்பாவி பெண்களை மூளைச் சலவை செய்து போதை மருந்து செலுத்தி தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்களே?
தனு- இந்திய ராணுவத்தின் பல அக்கிரமங்கள் என் கண் முன்னே நடந்திருக்கின்றன. இந்த பொறுப்பை நானே கேட்டுப் பெற்றேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து உண்மையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கேள்வி- நிஜமாகவா? அச்சம் எதுவும் இல்லையா?
தனு- கடந்த 3 நாட்களாக நான் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனது தோழி சுபா தான் செல்கின்றேன் எனக் கேட்டார். நான் விரும்பியிருந்தால் இந்த தாக்குதலில் இருந்து விலகியிருக்க முடியும். ஆனால் நான் வற்புறுத்தி இந்த வாய்ப்பைப் பெற்றேன்.
கேள்வி- என்னதான் துணிச்சல் பெற்ற ஆண்களாக இருந்தாலும் தூக்குமேடைக்கு செல்லும்போது அவர்கள் கால்கள் சோர்ந்துவிடும். அரைவாசி மயங்கிய நிலையிலேயே அவர்களை இழுத்துச் சென்று தூக்கில் இடுவார்கள் என அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் உன்னால் எப்படி கொஞ்சம்கூட மரணபயம் இன்றி முகத்தை இயல்பாக வைத்திருக்க முடிந்தது?
தனு- இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட என் உறவுகளே என் மனக்கண்முன் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நினைவே என்னை இயக்குகிறது.
கேள்வி- இதனால் சாதிப்பது என்ன?
தனு- இனி இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் ஈழத்தில் தலையிடமுன் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திப்பார்கள். ஒரு இனத்தை அதன் சொந்த மண்ணில் தாக்கினால் அது எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் திருப்பி அடி கிடைக்கும் என்று வரலாறு இனி இயம்பும்.
குறிப்பு - இது ஒரு மீள்பதிவு
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி இன்று முதல் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளனர்.
திராவிட முதல்வர் ஈழ அகதிகள் மீது இரக்கம் காட்டுவாரா?
ராஜீவ்காந்தி மரணம் கொலை அல்ல. .
ராஜீவ்காந்தி மரணம் கொலை அல்ல. அது ஈழத்தில் அவர் இழைத்த குற்றங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை.
சிறீபெரம்புதூரில் ராஜீவ் நினைவிடம்
சிறீபெரம்புதூரில் ராஜீவ் நினைவிடம் அகற்றப்பட்டு அங்கு வீர மங்கை தாணுவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தமிழ்நாடு விடுதலைப்படை அறிவித்தது.(1992)
தெலுங்கில் சுப்பர் ஸ்டார் சிரஞ்சீவி
தெலுங்கில் சுப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தடை செய்யப்பட்ட நக்சலைட்டாக( மாவோயிஸ்ட்) நடித்த படம் வெளிவந்துள்ளது.
தமிழில் சுப்பர் ஸ்டார் யாராவது விடுதலைப்புலியாக நடிக்க முடியுமா? நடித்தால் அதை ஆரியமும் திராவிடமும் அனுமதிக்குமா?,
தனு வின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுமா?
•தனு வின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுமா?
1991ம் ஆண்டு எப்ரல் மாதம், மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை திடீரென 60 வயதான குருசாமி என்பவரை கொண்டு வந்து எனது அருகில் அடைத்தார்கள்
கொலைக் குற்றம் ஒன்றிற்காக 14 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்த குருசாமியின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டமையினால் தூக்கில் இடுவதற்காகவே அவரை என் அருகில் உள்ள செல்லில் அடைத்தார்கள்.
இறுதியாக அவரது குடும்பத்தவர்கள் வந்து பேசினார்கள். தனக்கு வயதாகிவிட்டது என்றும் தான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். எனவே சாவது பற்றி கவலைப்படவில்லை என சிரித்தக்கொண்டே பிள்ளைகளிடம் அவர் கூறினார்.
அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் அதிகாரிகள் வந்து குருசாமியை எழுப்பினார்கள். அவரை குளிக்கவாத்து சுடு சோறு சாப்பிட கொடுத்தார்கள்.
அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் பீடீ கேட்டு வாங்கி பற்றியதைக் கண்டேன்.
இறுதியாக அதிகாரிகள் “வா குருசாமி போகலாம்” என்று அழைத்தது கேட்டது. ஆனால் அதன் பின்னர் இரு காவலர்கள் அவரை தொர தொரவென்று இழுத்து செல்வதே எனக்கு தெரிந்தது.
முதல் நாள் சாவது பற்றி தனக்கு கவலை இல்லை என்று கூறியவர் அடுத்த நாள் தானாகவே நடந்து செல்வார் என நினைத்திருந்த எனக்கு அவர் இழுத்து செல்லப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
இதுபற்றி அவரை இழுத்துச் சென்ற காவலரிடம் அடுத்த நாள் கேட்டேன். அதற்கு அவர் “என்னதான் உறுதியாக இருந்தாலும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் கால்கள் சோர்ந்துவிடும். பாதி மயக்க நிலையிலேயே இழுத்து சென்று தூக்கில் இடுவது வழக்கம்” என்றார்.
1991ம் அதே ஆண்டு. ஆனால் மே மாதம் 21ம் திகதி. மதுரை சிறையில் நள்ளிரவு. திடீரென்று எனது செல் முன்பு காவல் பலப்படுத்தப்பட்டது.
என்ன காரணம் என்று கேட்டபோது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சேதி சொல்லப்பட்டது. பின்னர் ராஜீவ்காந்தி கொலை பற்றிய விபரங்கள் வெளிவந்தபோது தனு வின் உணர்வுகள் குறித்து சிந்தித்து பார்த்தேன்.
இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது. குண்டு வெடித்தால் தனது இலக்கு மட்டுமல்ல தானும் மரணமடையப்போவது அந்த பெண்ணிற்கு தெரியும்.
ஆம். தான் இறக்கப்போவது அந்த பெண் தனு விற்கு நன்கு தெரியும். அவரது அந்த இறுதி நிமிடங்களில் நிச்சயம் தன் தாய் தந்தையர் முகம் வந்திருக்கும் தன் கூடப்பிறந்த சகோதர்கள் நினைவுகள் வந்திருக்கும்.
ஆனால் அவர் முகத்தில் எந்த பட படப்பும் இல்லை. எந்த மரண பயமும் இல்லை. கொஞ்சம் காட்டியிருந்தால்கூட அவரது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்பதையும் அவர் அறிந்திருக்கவேண்டும்.
வயதான, எல்லாம் அனுபவித்த குருசாமிகூட மரண தருவாயில் கால்கள் சோர்ந்து பாதி மயக்க நிலைக்கு சென்றார்.
ஆனால் இந்த இளம் வயதில் எதையும் அனுபவிக்காத தனு உறுதியாக நின்றமைக்கு என்ன காரணம்?
தனு விரும்பியிருந்தால் பின்வாங்கியிருக்கலாம். மனம் மாறியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது.
ஆனால் தனு தானாகவே கேட்டு இதனை மேற்கொண்டதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் தனு வின் இந்த உணர்வுகளுக்கு என்ன காரணம்?
ராஜிவின் கொலை பற்றி பேசுபவர்கள் எத்தனை பேர் இந்த தணுவின் உணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர்?
அவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தால் அமைதிப்படை என்று வந்து இந்திய ராணவம் செய்த கொலைகள , பாலியல் வல்லுறவுகள், சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட விபரங்கள் தெரிந்திருக்கும்.
ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தனு என்ற இளம் பெண் கொடுத்த தண்டனை இது என்று புரிந்திருக்கும்.
அதனால்தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் தளபதி தோழர் லெனின் “தனுவிற்கு வீர வணக்கம்” செலுத்தவதாகவும் ராஜீவ் நினைவு மண்டபம் அகற்றப்பட்டு அங்கு தனுவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
4 ஆண்டுகள் ஆகிவிட்டது.
4 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இன்னும் இவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை.
நச்சுக் காற்றை சுவாசிக்க விரும்பவில்லை என்று கூறியதற்காக அந்த மாணவியின் வாயில் சுட்டுக் கொன்ற கொடுமையை எப்படி மறக்க முடியும்?
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவர் தலையில் தாக்கிய இந்த சிங்கள சிப்பாய் தண்டனை எதுவுமின்றி சுதந்திரமாக திரிகிறார்.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக போராடும் தமிழக காங்கிரசார் இது குறித்து ஏன் எதிர்த்து போராடுவதில்லை?
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராக மட்டும்தான் இவர்கள் போராடுவார்களா?
திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம்
திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருந்த அகதிகளை பலவந்தமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பொலிசாரை அனுப்பிய திராவிட அரசினால் ஏன் அவ் அகதிகளின் கோரிக்கைக்கு பதில் அளிக்க ஒரு அதிகாரியை அனுப்ப முடியவில்லை?
சிங்களவர்கள் மீது இரக்கம் காட்டி உணவு அனுப்புங்கள் என்று தமிழக முதல்வரிடம் கேட்ட சுமந்திரன், தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர்கூட தருவதில்லை என்றுகூறி உண்ணாவிரதம் இருக்கும் ஈழஅகதிகள் மீது இரக்கம் காட்டுங்கள் என்று ஏன் கேட்க முடியவில்லை?
ஈழத் தமிழர்கள் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு இரக்கம் காட்டும் என்று கூறும் காசிஆனந்தன் ஐயா, இந்தியாவில் உண்ணாவிரதம் இருக்கும் இந்த ஈழ அகதிகள் இந்துதானே, இவர்கள் மீது ஏன் இந்திய அரசு இரக்கம் காட்டவில்லை என்பதற்கு பதில் தருவாரா?
எங்கு நல்ல புத்தகங்கள்
எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே
அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள்.
ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார்.
அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார்.
எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பயங்கரவாதம்தான் காரணம் என்று கூறுகிறார்களோ அதுபோல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் யாராவது ஒரு தமிழர்தான் காரணம் என்று இவர்கள் எதிர்காலத்தில் கூறுவார்கள்.
அல்லது, கிருசாந்திகளும் இசைப்பிரியாக்களும் தங்களைத் தாங்களே பாலியல் வல்லுறவு செய்து இறந்தார்களே அதே மாதிரி யாழ் நூலகமும் தனக்கு தானே தீ வைத்து எரிந்தது என்றும்கூட இவர்கள் கூறுவார்கள்.
அது உண்மைதான் என்று நம்புவதற்கும் அதனை பிரச்சாரம் செய்வதற்கும் நம் மத்தியிலும் நாலு பேர் இருப்பதுதான் எமது இனத்தின் சாபக்கேடு.
குறிப்பு - யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் 31.05.1981
Subscribe to:
Posts (Atom)