இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு added 3 new photos.
இங்கிலாந்து பேர்மிங்காம் நகரில் இருக்கும் நண்பர் சாந்தன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் எழுதியுள்ள “இலங்கை மீதான் இந்திய ஆக்கிரமிப்பு” நூல் இன்றைய காலத்திற்கு தேவையான அனைவரும் படிக்க வேண்டிய ஒரு அத்தியாவசியமான நூலாகும்.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு குறித்து சுருக்கமான, அதேவேளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்த நூலில் தோழர் பாலன் குறிப்பிட்டிருக்கும் ஆசான்களான தோழர் சண்முகதாசன் மற்றும் தோழர் தமிழரசன் ஆகியோரிடம் நேரிடையாக பழகும் வாயப்பு எனக்கும் கிட்டியிருந்தது.
நான் யாழ்ப்பாணத்தில் நெல்லியடி என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பதால் சிறுவயது முதல் பல தடவை தோழர் சண்முகதாசன் கூட்டங்களையும் பேச்சுகளையும் பார்த்திருக்கிறேன்.
1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் பின்னர் தோழர் சண்முகதாசன் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை தமிழ்மக்கள்பாதுகாப்பு பேரவை தோழர்களுக்கு நெல்லியடி மற்றும் புலோலியில் அரசியல் வகுப்பகள் நடத்தியிருந்தார்.
அவ் வகுப்பில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அவ்வேளை தோழர் சண்மகதாசன் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை பெற்று தராது. அது போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது அதன் மூலம் இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதற்காகவே” என்பதை அழுத்தமாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார்.
அதேபோன்று தோழர் தமிழரசன் அவர்கள் தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவைத் தோழர்களுக்கு பெரம்பலூருக்கு அருகில் மலையாளப்பட்டடி என்னும் இடத்தில் அரசியல் வகுப்புகள் எடுத்தபோதும் நான் அதில் கலந்து கொண்டிருக்கிறேன்.
அப்போது தோழர் தமிழரசன் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை அங்கீகரிக்காது. மாறாக இலங்கை மீது அது ஆக்கிரமிப்பு செய்யவே விரும்புகிறது” என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.
தோழர் சண்முகதாசன் மற்றும் தோழர் தமிழரசன் ஆகியோர் அன்று கூறியவை உண்மைதான் என்பதை வரலாறு இன்று எமக்கு நன்கு எடுத்துகாட்டுகிறது.
சீனாவில் மாவோ சேதுங் மறைவிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த டெங்சியாபிங் கும்பல் “ பூனை கறுப்போ சிவப்போ என்பது முக்கியம் அல்ல. அது எலி பிடிக்கிறாதா என்பதே எமக்கு முக்கியம்” என்று கூறி அப்பட்டமாக மீண்டும் முதலாளித்துவ பாதைக்கு மாறியபோது அதனை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தியவர் தோழர் சண்முகதாசன்.
மாவோ சேதுங் உயிருடன் இருந்த காலத்திலேயே ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்குவதற்காக சீன அரசு இலங்கை அரசுக்கு ஆயத உதவி செய்தமையை முதன் முதலில் கண்டித்த கம்யுனிஸ்ட் தலைவர் தோழர் சண்முகதாசன்.
எனவே சீன ஆதரவுக்காகவே இந்திய ஆக்கிரமிப்பை கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர் என்பது வரலாறு தெரியாதவர்களின் சின்னப்பிள்ளைத்தனமான விமர்சனம் ஆகும்.
இலங்கையில் இந்தியா மட்டுமல்ல சீனா உட்பட எந்த நாடு ஆக்கிரமிப்பு செய்தாலும் அதனை தயங்காமல் உறுதியாக எதிர்த்து வருபவர்கள் மாக்சிச லெனிச மாவோயிச சிந்தனையை முன்னெடுக்கும் புரட்சியாளர்களே.
தோழர் பாலன் எழுதியுள்ள இந்த நூலானது இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை தெளிவாக எடுத்துக் கூறுவதுடன் அதற்கு எதிரான போராட்டத்திற்கும் வழி சமைக்கிறது. அதுவே இந் நூலின் சிறப்பு ஆகும்