•பெண்கள் எழுத்துகளை முன்வைத்து
பெண்களால் நடத்தப்பட்ட உரையாடல் நிகழ்வு!
பெண்களால் நடத்தப்பட்ட உரையாடல் நிகழ்வு!
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் 09.07.16 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் தமிழ்மொழிசமூகங்களின் செயற்பாட்டகத்தின் ஏற்பாட்டில் பெண்கள் எழுத்துகளை முன்வைத்து பெண்களால் நடத்தப்பட்ட உரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கு நவரட்னராணி சிவலிங்கம் அவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார்.
முதலில், வெற்றிச்செல்வியின் “ஆறிப்போன காயங்களின் வலி” நூல் பற்றி சந்திரா ரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார்.
அதையடுத்து, “ஊதாநிறச் செம்பருத்தி” என்னும் நைஜீரிய மொழிபெயர்ப்பு நாவல் குறித்து கௌரி பரா அவர்கள் உரையாற்றினார்.
அடுத்து, சுகிர்தராணி அவர்களின் “இப்படிக்கு ஏவாள்” என்னும் கவிதை நூல் குறித்து நவஜோதி யோகரட்ணம் அவர்கள் உரையாற்றினார்.
அடுத்து, “எழுத்தும் வாசிப்பும் எனது அனுபவம்” என்னும் தலைப்பில் சமீலா யூசுப் அலி அவர்கள் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து கமலா தாஸ் அவர்களின் “என் கதை” நூல் குறித்து மீனா நித்தியானந்தன் உரையாற்றினார்.
இறுதியாக கலந்துகொண்ட பார்வையாளர்களின் கருத்து பரிமாறல்களுடன் நிகழ்வு முடிவு பெற்றது.
அவதானிப்பு-
(1)பெண்களின் எழுத்து குறித்து பெண்கள் நடத்திய இவ் உரையாடல் நிகழ்விற்கு ஒரேயொரு பெண் மட்டுமே பார்வையாளராக வந்திருந்தார்!
பெண்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?
(2) மீனா நித்தியானந்தன் அவர்கள் தனது உரையின் போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். அதற்கு சபையில் பலத்த கரகோசம் கிடைத்தது.
ஜெயமோகனுக்கு லண்டனில் இத்தனை எதிர்ப்பு இருக்கிறதா?
No comments:
Post a Comment