•இது உண்மையா?
இந்திய உளவுப்படை இத்தனை கீழ்த்தரமாக நடந்து கொண்டதா?
இந்திய உளவுப்படை இத்தனை கீழ்த்தரமாக நடந்து கொண்டதா?
1983 நடைபெற்ற இனக்கலவரத்தினையடுத்து பல ஈழப் போராளி அமைப்புகளுக்கு இந்திய உளவு நிறுவனம் பயிற்சி, ஆயுதம் எல்லாம் வழங்கியது.
அதுமட்டுமல்ல அப்பாவி சிங்கள மக்களை கொல்லும்படியும் சிங்கள மக்கள் மத்தியில் குண்டு வைக்கும்படியும் இந்திய உளவு நிறுவனம் கட்டளையிட்டது.
அதன்படி பல அமைப்புகள் சிங்கள மக்களை சுட்டுக் கொன்றார்கள். குண்டு வைத்து அழித்தார்கள்.
இவையெல்லாம் பலருக்கும் தெரிந்த விடயம்தான். ஏற்கனவே பலர் இது குறித்து பேசியும் எழுதியும் உள்ளார்கள்.
ஆனால், இந்திய உளவு நிறுவனமானது எந்தவொரு அமைப்பையும் சாராத அகதியாக சென்ற அப்பாவி மக்களையும் பிடித்து பயிற்சி கொடுத்து சிங்கள பிரதேசங்களில் அழிவுகளை மேற்கொள்ளும்படி கேட்டிருக்கிறார்கள் என்ற செய்தி இதுவரை வெளியில் வராத விடயமாகும்.
இந்த விடயத்தை 02.07.16 யன்று ஈஸ்ட்காமில் “புதியதிசைகள்” அமைப்பினால் நடைபெற்ற சம்பூர் இந்திய அனல்மின் நிலையத்திற்கு எதிரான கூட்டமொன்றில் கலந்து கொண்ட சோதிலிங்கம் கூறியுள்ளார்.
சோதி என்று அழைக்கப்டும் சோதிலிங்கம் “டெலோ” இயக்கதின் சார்பில்இந்தியாவில் இருந்தவர். பின்னர் இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர். தற்பொது லண்டனில் இருக்கிறார்.
அவர் கூறுகிறார்,
“திருகோணமலையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்று அகதிமுகாம்களில் தங்கியிருந்தவர்களிலும், அகதிகளாக படகுகளில் போகும்போது வழியில் இந்திய கரையோரப் படைகளால் காப்பாற்றப்பட்டவர்களையும் இந்திய அதிகாரிகள் தெரிவு செய்து அவர்களுக்கு ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டு, தொடர்புசாதனங்கள், ஆயுதங்கள் வழங்கப்பட்டு மீண்டும் இலங்கைக்குள் இறக்கப்பட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை மற்ற அமைப்பு கைதிகளால் “றோ இயக்கம்” என்று அழைக்கப்பட்டார்கள்.”

இங்கு எழும் கேள்வி என்னவெனில்,
•இந்த விடயம் உண்மையா? இந்திய உளவுப்படை இத்தனை கீழ்தரமாக நடந்து கொண்டதா?
•தமிழ் மக்களின் நலனுக்காகவே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டது உண்மை எனில் அப்பாவி அகதிகளை பயிற்சி கொடுத்து சிங்கள பிரதேசங்களை அழிக்கும்படி கேட்டது ஏன்?
•பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பயிற்சி கொடுத்து இந்தியாவுக்கள் அனுப்புகிறது என்று கூறும் இந்தியா, அதேபோன்று அகதிகளுக்கு பயிற்சி கொடுத்து இலங்கைக்குள் அனுப்பியது என்ன நியாயம்?
•எல்லாவற்றுக்கும் மேலாக அகிம்சையை போதிக்கும் காந்தி நாடு என்று தன்னை பெருமை பீற்றிக் கொள்ளும் இந்தியா எப்படி அப்பாவி சிங்கள மக்களை கொல்லும்படி உத்தரவிட்டது?
குறிப்பு- இந்த குற்றச்சாட்டுக்களை கூறபவர்கள் சீனக் கம்யுனிஸ்டுகள் அல்ல. மாறாக இந்திய ஆதரவு கொண்ட டெலோ இயக்கத்தவரே. எனவே இனி இந்திய அரசு விசுவாசிகள் என்ன கூறப்போகிறார்கள்?
No comments:
Post a Comment