•இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக லண்டனிலும் ஒலித்த குரல்!
இந்தியாவின் அனல்மின் நிலைய திட்டத்திற்கு எதிராகவும் அதன் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் சம்பூரில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி பழங்குடிகளான வேடுவ இன மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர்.
இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒன்றுதிரண்டு எதிர்க்கும் திட்டம் ஒன்று இருக்குமாயின் அது இந்தியாவின் அனல் மின் திட்டமே.
நேற்றைய தினம் லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் புதியதிசைகள் அமைப்பின் சார்பில் இந்தியாவின் இவ் ஆக்கிரமிப்புக்கு எதிராக பலமான குரல் எழுப்பப்பட்டுள்ளது.
மின்பொறிக்குள் சம்பூர் என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அது இந்திய ஆக்கிரமிப்பின் கோர முகத்தை அம்பலப்படுத்தியது.
இதனையடுத்து இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடும் பல பிரமுகர்கள் ஸ்கைப் இணைய வழி மூலமாக தமது கருத்துகளை தெரிவித்தனர்.
அவர்கள் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில்களும் வழங்கினார்கள். தமது அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும் விளக்கினார்கள்.
அனல் மின் திட்டத்தை கைவிட்டாலும் தமிழ் மக்களின் 500 ஏக்கர் நிலத்தை கைவிட முடியாது என இந்தியா தெரிவிக்கின்றது.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தமிழ்தேசிய கூட்டமைப்போ இந்தியாவின் நலன்களுக்காக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது.
எனினும் மக்களின் போராட்டங்கள் நம்பிக்கையளிக்கின்றன.
குறிப்பாக லண்டனிலும் புதிய திசைகள் அமைப்பு மூலம் மக்கள் கவனத்திற்கு இவை கொண்டுவரப்பட்டிருப்பது இந்திய ஆக்கிரமிப்பை மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என்ற நம்பிக்கையை தோற்றுவிக்கிறது.
சம்பூர் மக்களுடன் ஒன்றிணைவோம்.!
இந்திய ஆக்கிரமிப்பை முறியடிப்போம் !!
இந்திய ஆக்கிரமிப்பை முறியடிப்போம் !!
No comments:
Post a Comment