இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கனடாவில் இருக்கும் புனிதகுமாரி பொன்னுத்துரை அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் அவர்கள் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” எனும் நூல் இந்தியாவின் கோரமுகத்தை, அரக்க குணத்தை அப்படியே வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இந்திய அரசு தனது நலனுக்காக தன் முதலீட்டிற்காக எந்த இயக்கத்தையும் அழிக்க தயங்கியதில்லை என்பதற்கு 1971 ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஜே வி பி கிளர்ச்சியின் போது இந்திய கொலைவெறி இராணுவம் ஆறாயிரம் சிங்கள இளைஞர்களை கொலை செய்தது என்ற உங்கள் பதிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான் சிறுமியாக இருந்த போது எனது தாயார் ஜே வி பி கிளர்ச்சியை இந்திய இராணுவம் முறியடித்ததாக கூறியிருந்தார். அப்போது எனக்கு அது புரியவில்லை சிறுமி தானே.
ஆனால் 1987 ஆம் ஆண்டு எமது மண்ணில் அமைதிப்படை என்ற பெயரில் வந்து எமக்கு தந்த அழிவையும் வலியையும் பார்த்த பின்னர்தான் எனக்கு புரிந்தது அன்று இந்த கொலைகார இந்திய இராணுவம் சிங்களவர்களுக்கும் இப்படியான கொலை வெறிச் செயலைத்தான் செய்துள்ளது என.
இந்திய அரசு தமிழீழ மக்களை மட்டும் கொலை செய்யவில்லை இந்தியாவில் காஸ்மீரிகள், சீக்கியர்கள் நாகர்கள், மணிப்பூரிகள், அசாமியர்கள் என இந்த இந்திய கொலை வெறி அரசின் பட்டியல் நீள்கின்றது என்பது உண்மை.
எமது மண்ணில் நடைபெற்ற யுத்தத்தில் பலனடைந்தது இந்தியா தான் என்பது மறக்க மறுக்க முடியாத உண்மை.
மேலும் ஒப்பந்தம் என்ற பெயரில் எமது தாயக மண்ணை கபளீகரம் செய்து இந்தியாவின் அறிவிக்கப்படாத மாநிலமாக மாற்றியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
எமது விடுதலைப்புலிகளின் ஆயுதம் மௌனிக்கும் வரை இந்தியாவால் எமது மண்ணில் காலூன்ற முடியவில்லை
எமது விடுதலைப்புலிகளின் ஆயுதம் மௌனிக்கும் வரை இந்தியாவால் எமது மண்ணில் காலூன்ற முடியவில்லை
இன்று கொலை வெறி இந்தியாவின் எண்ணம் அத்தனையும் நிறைவேறி விட்டது. இந்தியா எப்போதும் தமிழ் மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகின்றது, ராஜீவ் காந்தியைப் கொன்றதால்தான்; எமது போராட்டத்தை அழித்தார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
எப்படி பங்களாதேஸ் உருவாக பயிற்சி கொடுத்து வளர்த்த போராளிகளை இந்தியா அழித்தது? இத்தனை அழிவைத் தந்த இந்தியா தமிழ் மக்களுக்கு உதவும், தமிழ் மக்களை வாழ வைக்கும் என இன்னமும் கனவு காணும் மூடர்களை என்னவென்று சொல்வது?
தோழர் பாலன் அவர்;கள் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” எனும் நூலின் ஒவ்வொரு வரிகளும் நிதர்சனமான உண்மை.
உங்கள் நூல் வெளியீடு வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழர் பாலன் அவர்களே!
நன்றி
நன்றி
No comments:
Post a Comment