•இதைத்தானே மகிந்த ராஜபக்சவும் கூறினார்!
•காஸ்மீரில் கொல்லப்படுகின்ற மக்கள் யாவரும் பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது.
இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் யாவரும் புலிப் பயங்கரவாதிகள் என்று மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.
•காஸ்மீர் சிறுவர்கள் ஏன் வீதிக்கு வந்தார்கள்? அவர்கள் வீட்டில் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என்று இந்திய ராணுவம் கூறுகிறது.
இதேபோலவே மக்கள் மத்தியில் புலிகள் இருந்தமையினாலே சிறுவர்கள் கொல்லப்பட நேர்ந்தது என்று இலங்கை ராணுவம் கூறுகிறது.
•காஸ்மீரில் அப்பாவி பெண்களை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அவர்களை பயங்கரவாதிகள் என்று இந்திய ராணுவம் கூறுகிறது.
இலங்கையில் அப்பாவி தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அவர்களை புலிப் பயங்கரவாதிகள் என்று இலங்கை ராணுவம் கூறுயது.
•காஸ்மீரில் சிறுவர்களை கொன்றுவிட்டு அவர்கள் பாகிஸ்தான் கொடியை வைத்திருந்ததாக இந்திய அரசு கூறுகிறது. பாகிஸ்தான் கொடியை வைத்திருந்தால் அதற்காக கொல்லத்தான் வேண்டுமா என்று யாரும் நியாயம் கேட்பதில்லை.
அதுபோல செ;ஞ்சோலை அனாதை சிறுவர்கள் மீது குண்டுவீசிக் கொன்றுவிட்டு அவர்கள் பயிற்சி எடுத்தக்கொண்டு இருந்ததாக இலங்கை அரசு பொய் கூறியது. அப்போது சொந்த மக்கள் மீது ஒரு அரசு குண்டு வீசலாமா என்று யாரும் நியாயம் கேட்க வில்லை.
(1)தமிழ் மக்களை அழித்த மகிந்த அரசு தமக்கு உதவும் என்று காஸ்மீர் மக்கள் மட்டுமல்ல உலகில் எந்த மக்களும் நம்புவதில்லை. ஆனால் காஸ்மீர் மக்களை அழிக்கும் இந்திய அரசு தமிழ்மக்களுக்கு உதவும் என்று சில தமிழர்கள் இன்னமும் நம்புகின்றனர்.
(2) இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது காஸ்மீர் மக்கள் அனுதாபம் தெரிவித்தார்கள். பந்த் அனுட்டித்தார்கள். ஆனால் இன்று காஸ்மீர் மக்கள் அழிக்கப்படும்போது தமிழ் மக்கள் மௌனமாக இருக்கின்றார்கள்.
(3) யாரும் பாலஸ்தீனக் கொடுமைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கலாம். சிரிய அகதிகளுக்கு ஆதரவாக அனுதாபம் தெரிவிக்கலாம். ஆனால் காஸ்மீரில் இந்திய கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களை துரோகி என்கிறார்கள்.
குறிப்பு- இலங்கையில் தமிழ் மக்கள் நடத்தியது போன்ற விடுதலைப் போராட்டத்தை தமிழக மக்கள் நடத்தியிருந்தால் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல காஸ்மீர் மக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை இனங்களும் விடுதலை பெற்றிருக்கும் என்று காஸ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின் மாலிக் கூறியுள்ளார்.
இப்போது புரிகிறதா? ஏன் இந்திய உளவுப்படையின் கைக்கூலிகள் பேக் ஜடி யில் இரவு பகலாக முகநூலில் களமாடுகிறார்கள் என்று?
No comments:
Post a Comment