•காவல்துறை மக்கள் நண்பனா?
ஒரு காட்டில் யானை ஒன்று தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது. யானை ஒடுவதைப் பார்த்து அதிசயித்த அப்பாவி மாடு ஒன்று “ஏன் இப்படி அவசரமாய் ஓடுகின்றாய்?” எனக் கேட்டது. அதற்கு அந்த யானை “சுவாதி வழக்கிற்காக தமிழக பொலிஸ் பிலால் மாலிக்கை தேடி வருகிறார்கள்”என்று கூறியது. “நீதான் பிலால் மாலிக் இல்லையே. அப்பறம் ஏன் பயந்து ஓடுகிறாய” என்று இந்த மாடு அப்பாவியாய் கேட்டது. அதற்கு அந்த யானை “நான் பிலால் மாலிக் இல்லை. நான் ஒரு யானை என்பதை நிருபிக்க இந்திய நீதிமன்றத்தில் 25 ஆண்டுகள் தேவைப்படும்” என்றது. அப்போது யானையுடன் சேர்ந்து மாடும் ஓடியது.
இது ஒரு நகைச்சுவை ஜோக் என்றாலும் இதுதான் இன்றைய தமிழகத்தின் உண்மை நிலையாகும்.
1992ம் ஆண்டு இராமநாபுரம் முதன்மை நீதிமன்றத்தில் பாண்டியம்மாள் என்ற பெண்ணை கொன்றமைக்காக அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது பாண்டியம்மாள் நீதிமன்றத்தில் வந்து தான் உயிரோடு இருப்பதாகவும் தனது கணவனை விடுதலை செய்யும்படி கோரினார்.
இதையடுத்து அவ் நீதிபதி “பொலிஸ் சித்திரவதைக்குப் பயந்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள வைக்கிற சூழ்நிலை இருப்பதாக தெரிகிறது. திறமையான பொலிஸ் அதிகாரி ஒருவர் சொல்லிக் கொடுத்து நீதிமன்றம் நம்புகின்ற அளவிற்கு சாட்சியங்கள் பேசினால் அதை நம்பி செயல்பட வேண்டியிருக்கிறது. ஆக ஒருவர் தண்டிக்கப்படுவதும் விடுதலை செய்யப்படுவதும் ஒரு பொலிஸ் அதிகாரியை சார்ந்தே இருக்கிறது. அகவே இந்த வழக்கை ஒரு முன்மாதிரியாக கொண்டு நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் இதற்கு ஒரு பரிகாரம் தேடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
நீதிபதி ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்த பின்பும்கூட பொலிஸ் அதிகாரிகள் பொய் வழக்கு போடும் சூழ்நிலை மாற்றம் பெறவில்லை.
ராஜீவ் வழக்கிலும் ஒரு அதிகாரியின் தவறால் பேரறிவாளன் தண்டனை பெற்றதையும் அவ் அதிகாரியே பின்னர் அதனை ஒத்துக்கொண்டதையும் கண்டோம்.
அதே ராஜிவ் வழக்கில் கைது செய்யப்பட்ட கோடியாக்கரை சண்முகம் என்பவர் பொலிஸ் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டார்.
உலக வரலாற்றில் நிலத்தில் காலில் பட நின்று கொண்டு தற்கொலை செய்தது கோடியாக்கரை சண்முகம் ஒருவர் மட்டுமே. இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் தமிழக காவல் துறையினரே.
அண்மையில் கொடி எரித்ததாக கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் என்பவரின் கையை முறித்து அதனை போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்தவர்களும் தமிழக காவல்துறையினரே.
தமது சொந்த குடி மக்களையே இவ்வாறு செய்யும் தமிழக காவல்துறை ஈழ அகதிகளை விட்டுவைக்குமா என்ன?
1990ம் ஆண்டு வேலூர் சிறப்புமகாமில் அடைத்து வைக்கப்பட்ட அகதிகள் இருவரை சுட்டுக்கொன்றுவிட்டு பிரியாணி கேட்டு கலகம் செய்தார்கள் என்று அப்போதைய பொலிஸ் அதிகாரி தேவாரம் பேட்டி கொடுத்தார்.
அதன் பின் பல அகதிகள் கைது செய்யப்பட்டு பாம்பன் பாலத்திற்கு குண்டு வைக்க திட்டம் போட்டார்கள் என்று பல பொய் வழக்குகள் போடப்பட்டன.
மதுரையில் 7 பிள்ளைகளின் தந்தையான ஒரு அகதி வருவாய்துறை அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டார். அதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
கும்மிடிப்பூண்டி அகதிமுகாமில் இருந்த அகதி ஒரவர் விசாரணைக்கு என அழைத்தச் செல்லப்ட்டு கால் முறித்து அனுப்பட்டுள்ளார். அது குறித்து இதவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இத்தனைக்கும் பிறகு தமிழக காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்ல முடியுமா?
தமிழக காவல்துறை மக்களின் நண்பன் இல்லை. அது தமிழக அரசின் ஏவல் நாய்.
No comments:
Post a Comment