•மக்கள் சக்தி மகத்தானது. அது அணுகுண்டைவிட வலிமையானது என்பது உண்மையானால்,
அது துருக்கி மக்களுக்கு மட்டுமல்ல காஸ்மீர் மக்களுக்கும் பொருத்தமானதே!
அது துருக்கி மக்களுக்கு மட்டுமல்ல காஸ்மீர் மக்களுக்கும் பொருத்தமானதே!
துருக்கியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோது அதனை மக்கள் ஒன்றுதிரண்டு முறியடித்துள்ளனர்.
ராணுவத்தின் துப்பாக்கிகளைவிட, பீரங்கிகளைவிட மக்கள் சக்தி மேலானது என்பதை மீண்டும் ஒரு முறை வரலாறு நிரூபித்துள்ளது.
துருக்கியின் அனுபவம் காஸ்மீர் மக்களுக்கும் பொருத்தமானதே. இந்திய ராணுவத்தை நிச்சயம் காஸ்மீர் மக்கள் விரட்டியடிப்பார்கள்.
இந்திய ராணுவத்தின் துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாவைவிட காஸ்மீர் சிறுவர்கள் எறியும் கல் சக்தி மிக்கது என்பதை எதிர்கால வரலாறு காட்டும்.
காஸ்மீர் மக்கள் முஸ்லிம்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்துக்களின் ஆதரவை இழக்க வேண்டாம் என்று தமிழர்களிடம் சொல்லிப் பார்த்தார்கள்.
அப்படியென்றால் ஈழத்தில் இந்து தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஏன் இந்திய இந்துக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தமிழ்மக்கள் கேட்கும் கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.
ஒன்றுதான் பத்தாகிறது. பத்துதான் நூறு , ஆயிரம் என்று ஆகிறது. ஆம் தமிழ் மக்கள் காஸ்மீர் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ் மக்களின் பெருகும் ஆதரவு கண்டு இந்திய அரசு திகைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்வதை எப்படி தடுப்பது என யோசிக்கிறது.
ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் ஒரு நிமிடம்கூட இந்திய ஆதிக்கம் நிலைக்காது என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment