இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
அனைவராலும் “மார்க் அய்யா” என அன்புடன் அழைக்கப்படும் தோழர் மார்க் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலனின் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்னும் நூலைப்படித்தேன்.
அதில் அவர் அரிய பல தகவல்களை புள்ளிவிபரங்களுடன் தந்திருக்கின்றார்.
குறிப்பாக வளர்ந்த பெரிய நாடுகள் வளர்கின்ற சிறியநாடுகளை பயன்படுத்தும் முறை இதைத்தான் நவகாலனித்துவ முறை என்கிறார்கள்.
இதே முறையைத்தான் தென்அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்கா பின்பற்றிவருகின்றது. கியுபாவைத்தவிர.
மத்திய கிழக்குநாடுகளிலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இதே கொள்கையைத்தான் கடைப்பிடித்து அந் நாடுகளுக்கு பாரிய சேதங்களையும் விரைவில் மீளமுடியாத ஏதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
சீனாவும் இப்படித்தான் செய்ய முனையும என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் அதன் அண்டை நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியாவிலிலும் ஏன் ஆபிரிக்காவிலும் நிலமை வேறாகவுள்ளது.
இந்நாடுகள் ஏற்கனவே அமெரிக்க ஜரோப்பிய நாடிகளின் பிடியில் சிக்குண்டு இருக்கின்றன.
சந்தைகளைப் பிடிக்கும் பிரச்சனைகளால்தான் இரண்டாவது மகாயுத்தமே தொடங்கப்பட்டது.
இந்தியா தன் நலனுக்காகவே தமிழரின் பிரச்சனைகளைப் பாவிக்குமே தவிர தமிழருக்கான உரிமைகளை பெற்றுத்தரப் போவதில்லை.
தமிழர் உரிமையோடு இலங்கையில் வாழவேண்டுமானால் அவர்களிடம் மனமாற்றம் ஏற்படவேண்டும்.
பிற்போக்கு முதலாளித்துவத் தலைமைகளை நிராகரித்து உழைக்கும் மக்களுடனும் நாட்டை நேசிக்கும் இனவாதமற்ற முற்போக்கு சக்திகளுடனும் சேரவேண்டும்.
ஓரு மூன்றாவது அணியைப்பலப்படுத்தி இனவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் ஏதிராகப் போராடி வெற்றி பெற வேண்டும்.
இப்போது இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, யுஎன்பி, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைத் தோற்கடித்து அவர்கள் பலத்தை பலவீனப்படுத்துவதன் மூலமே இலங்கைக்கும் தமிழர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்.
தோழர் பாலன் எழுதியுள்ள “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் அவ்வாறான ஒரு அணியின் அவசியத்தை எமக்கு உணர்த்துகிறது.
இப்பொது எம்முன் உள்ள பாரிய கேள்வி என்னவெனில் அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?
இலங்கையில் மக்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க வழி சமைக்கப் போகிறோமா? அல்லது தொடர்ந்து ஆக்கிரமிப்பிற்கு இடங்கொடுத்து அடிமையாக இருக்கப் போகிறோமா?
No comments:
Post a Comment