Monday, November 30, 2015

முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் தோழர் குமார் குணரட்ணம் கைது!

•முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் தோழர் குமார் குணரட்ணம் கைது!
மகிந்தவின் பாதையில் செல்ல முனையும் மைத்திரியின் "நல்லாட்சி" அரசு!!
முகம் மாற்றம் தேவையில்லை. அமைப்பு மாற்றமே தேவை என ஜனாதிபதி தேர்தலில் வலியுறுத்திய முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைவர் தோழர் குமார் குணரட்ணம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த ஆட்சிக் காலத்தில் தோழர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டு நாடு கடத்;தப்பட்டார். இன்று மைத்திரி ஆட்சியிலும் நாடு கடத்துவதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மகிந்தவின் பாதையிலே மைத்திரியும் செல்கிறார் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
ஒருபுறம் வெளிநாட்டிற்கு சென்ற இலங்கையர்களை திரும்பி வருமாறு அழைப்பு விட்டுக்கொண்டு மறுபறம் அவ்வாறு திரும்பிவந்த தோழர் குமார் குணரட்ணத்தை கைது செய்திருப்புது நல்லாட்சி அரசின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகின்றது.
பல்லாயிரம் தமிழ்மக்களை கொன்ற மகிந்த ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
வெள்ளைவான் புகழ் கோத்தபாயா ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
பலகோடி ருபாய்களை ஊழல் செய்த நாமல் ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
போலி கடவுச்சீட்டு விமல் வீரவம்ச உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார்.
ஆனால் மக்களுக்காக போராடும் தோழர் குமார் குணரட்ணம் தேடிக் கைது செய்யப்படுகிறார்.
தோழர் குமார் குணரட்ணம் ஒரு இலங்கையர். அவர் ஒரு கட்சியின் தலைவர். அவர் ஒரு அமைப்பு மாற்றத்தை எற்படுத்த விரும்புகிறார். எனவே மக்கள் நலனை முன்னிட்டு அவரை இலங்கையில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
முன்னிலை சோசலிசக்கட்சியும் அதன் சமவுரிமை இயக்கமும் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கிறது. மாணவர்களின் உரிமைக்காக போராடுகிறது. எனவேதான் அதன் தலைவர் தோழர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டு பழிவாங்கப்படுகிறார்.
தமிழ் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்த முன்னிலை சோசலிசக்கட்சியின் தோழர்கள் லலித் , குகன் ஆகியோர் கோத்தபாயாவின் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்கள்.
தமிழ் சிங்கள் உழைக்கும் மக்களின் ஜக்கியத்திற்காக உழைக்கும் முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைவர் தோழர் குமார் குணரட்ணம் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை தமிழ் சிங்கள மக்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும். அவரின் விடுதலைக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
• இலங்கை அரசே!
தோழர் குமார் குணரட்ணத்தை உடனே விடுதலை செய்!

தமிழின அழிப்பிற்கு துணைபோன அதிகாரி நாராயணுக்கு செருப்படி!

•தமிழின அழிப்பிற்கு துணைபோன
அதிகாரி நாராயணுக்கு செருப்படி!
பாலஸ்தீனத்தில் கல் எறியும் சிறுவர்களை ஆதரித்தவர்கள்,
காஸ்மீரில் கல் எறியும் மக்களை ஆதரித்தவர்கள்,
தமிழகத்தில் செருப்படி கொடுப்பவர்களை மட்டும் எதிர்ப்பது ஏன்?
தமிழின அழிப்பிற்கு துணை போனவர்கள்
தமிழகத்தில் சுதந்திரமாக நடமாட முடியாது என்பதை
இன்றைய செருப்படி உலகிற்கு காட்டியுள்ளது.
அதிகாரிகளின் விருப்படி அரசியல்வாதிகள் நடப்பதில்லை.மாறாக,
அரசியல்வாதிகளின் விருப்;பத்தையே அதிகாரிகள் நிறைவேற்றகிறார்கள்.
ராஜீவ் காந்தியை நாராயணன் தவறாக வழிநடத்தவில்லை. மாறாக,
ராஜீவ் காந்தியின் விருப்பத்தையே நாராயணன் நிறைவேற்றினார்.
தமிழின அழிவிற்கு துணை போவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும்.
இல்லையேல் இன்று செருப்பேந்திய கைகள் நாளை துப்பாக்கியை ஏந்தும்.

தோழர் குமார் குணரட்ணம் விடுதலை கோரி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

 தோழர் குமார் குணரட்ணம் விடுதலை கோரி
லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
இன்று (06.11.15) மதியம் 1.00 மணியளவில் லண்டனில் உள்ள இலங்கை தூதரலாயத்திற்கு முன்பாக தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னிலை சோசலிசக்கட்சியின் லண்டன் கிழையும் சமவுரிமை இயக்கமும் இவ் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
குறுகியகால அழைப்பு. மழை குளிர் வேறு. இருப்பினும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்துகொண்டு குரல் எழப்பினார்கள்.
தமிழ் சிங்கள இன மக்கள் ஒற்றுமையாக நின்று இலங்கை அரசுக்கு எதிராக குரல் எழுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முன்னிலை சோசலிசக் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தமைக்காக எற்கனவே லலித் குகன் என்ற இரு முன்னிலை சோசலிசக்கட்சி தோழர்கள் கோத்தபாயாவினால் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்கள்.
தற்போது அதன் தலைவர் தோழர் குமார் குணரட்ணம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி இலங்கையில் பல அமைப்புகள் கோரி வருகின்றன.
ஆனால் சம்பந்தர் அய்யா அவர்கள் தமிழ் இனம் சார்பாக கேட்காவிடினும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தோர் குணரட்ணத்தை விடுதலை செய்யும்படி இன்னும கோராதது ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் இருக்கிறது.

கண்ணன் வரமாட்டான் !

கண்ணன் வரமாட்டான் !
“அநியாயங்கள், அக்கிரமங்கள் பெருகும்போது கண்ணன் அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவான்” - இந்து மதம்
• முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டபோது காப்பாற்ற கண்ணன் வரவில்லை.
• சிறையில் அடைபட்டு இருக்கும் இளைஞர்களை விடுவிக்க இதுவரை கண்ணன் வரவில்லை
• தமிழக சிறப்புமுகாமில் அடைபட்டிருக்கும் அகதிகளை விடுவிக்ககூட கண்ணன் வரவில்லை
• தமிழ்பெண்களை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்யும்போது காப்பாற்ற கண்ணன் வரவில்லை
• வறுமையின் கொடுமையில் இருந்து சிறுவர்களைக் காப்பாற்ற கண்ணன் இன்னும் வரவில்லை
தீபாவளி கொண்டாடுவோரே கொஞ்சம் சிந்தியுங்கள்!
இதுவரை வராத கண்ணன் இனியும் வரமாட்டான்
இதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
பகுத்தறிவோடு சிந்தித்து செயற்படுங்கள்.
மக்களே!
“கண்ணன் வருவான” என காத்து இருக்காதீர்கள்.
அநியாயங்களுக்கு எதிராக
அக்கிரமங்களுக்கு எதிராக
ஆயுதம் ஏந்துங்கள்.
வதம் செய்யுங்கள்.
நீங்கள்தான் “கண்ணன்”

தமிழினம் தலை நிமிருமா?

தமிழினம் தலை நிமிருமா?
• சிறையில் தமிழ் கைதிகள் விடுதலைகோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் தமிழினமோ சுமந்திரன் கூட்டத்தைக் குழப்பியது காட்டுமிராண்டித்தனமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
• இந்தியா இலங்கைக்கு போர்க்கப்பலை வழங்கி பயிற்சியும் அளித்தக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைது செய்கிறது. ஆனால் தமிழினமோ நாராயணை செருப்பால் அடித்தது ஜனநாயக மறுப்பா என ஆராய்ந்துகொண்டு இருக்கிறது.
• வாக்குறுதியளித்தபடி 7ம் திகதி சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யாமல் இலங்கை அரசு ஏமாற்றிவிட்டது. ஆனால் தமிழினமோ வேதாளம் படத்திற்கு டிக்கட் கிடைக்குமா என ஏங்கிக்கொண்டிருக்கிறது.
• சிறையில் உள்ள தனது தந்தை எப்போது வருவார் என்று குழந்தை ஏங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழினமோ நடிகை இனியாவை அழைத்துவந்து யாழில் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
• தலை குனிந்து நிற்கும் தமிழினம் தலை நிமிருமா?

சோசலிசம்-2015 இலங்கைப் பிரச்சனை குறித்த அமர்வு

சோசலிசம்-2015
இலங்கைப் பிரச்சனை குறித்த அமர்வு
லண்டனில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் "சோசலிசம் - 2015" நிகழ்வு இடம்பெற்றது. பல்வேறு சோசலிச அமைப்புகள் மற்றும் அபிமானிகள் இதில் கலந்துகொண்டனர். வருடா வருடம் நடைபெற்றுவரும் ஒரு முக்கிய நிகழ்வு இது.
இதில் தமிழ் சொலிடாறிற்றி சார்பில் இலங்கைப் பிரச்சனை குறித்த அமர்வு 07.11.15 யன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது.
தோழர் கீhத்திகன் நிகழ்வை வழிநடத்தினார். தோழர் இசைப்பிரியா சிறப்புரையாற்றினார்.
தோழர் கஜன் அவர்களும் தோழர் பாரதி அவர்களும் தமிழ் சொலிடாறிற்றி பற்றியும் அதன் பணிகள் பற்றியும் விளக்கினார்கள்.
தமிழ் சொலிடாறிற்றியைச் சேர்ந்த ஜனகன் அவர்கள் பேசும்போது தான் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் தன் விடுதலைக்கு தமிழ்சொலிடாறிற்p ஆற்றிய பணியை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மதன் என்ற ஈழத் தமிழர் தற்போது கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்படவிருக்கிறார். அவருடைய விடுதலைக்காகவும் தமிழ்சொலிடாறிற்றி பங்காற்றுகிறது. அதன் இத்தகைய பணிகள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
இறுதியாக தோழர் சேனன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அவர் தனது உரையில் இலங்கைப்பிரச்சனையை மற்ற சமூகங்களின் மத்தியில் தமிழ் சொலிடாறிற்றி கொண்டு செல்வது பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
இன்னும் சில வருடங்களில் தமிழ் சொலிடாறிற்றியின் தாக்கத்தை தமிழ் சமூகம் நிச்சயம் உணர்ந்துகொள்ளும் என்பதை இவ் நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

"பயங்கரவாதம்" என்றால் என்ன?

• "பயங்கரவாதம்" என்றால் என்ன?
• அதனை தீர்மானிப்பவர்கள் யார்?
பிரான்ஸ் சிரியாவில் குண்டு போடலாம். அதில் பல ஆயிரம் அப்பாவிகள் சாகலாம். அது பயங்கரவாதம் இல்லை. ஆனால் அதற்கு பதிலடியாக யாராவது பிரான்சில் தாக்குதல் நடத்தி அதில் 150 பேர் இறந்தால் அது பயங்கரவாதம் என்கிறார்கள்.
இந்திய ராணுவம் இலங்கையில் பல்லாயிரம் தமிழர்களை கொல்லலாம். அது பயங்கரவாதம் இல்லை. ஆனால் அதற்கு தண்டனையாக ராஜீவ்காந்தியை யாராவது கொன்றால் அது கொடிய பயங்கரவாதம் என்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது பயங்கரவாதம் இல்லையாம். ஆனால் பிரான்சில் 150 பேர் கொல்லப்பட்டது கொடிய பயங்கரவாதம் என்று மகிந்த ராஜபக்ச வருத்தம் தெரிவிக்கின்றார்.
இந்தியாவில் பல முஸ்லிம்களை கொன்றது பயங்கரவாதம் இல்லை என்று கூறும் பிரதமர் மோடி பிரான்சில் 150 கொல்லப்பட்டது மன்னிக்கப்பட முடியாத பயங்கரவாதம் என கண்டிக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது குண்டுவீசி பல குழந்தைகளைக் கொன்ற அமெரிக்கா அதனை பயங்கரவாதம் என ஒத்தக் கொள்ளவில்லை. ஆனால் பிரான்சில் 150 பேர் கொல்லப்பட்டது கொடிய பயங்கரவாதம் என அது கூறுகிறது.
அரச பயங்கரவாதமே தனிநபர் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கின்றது. இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
அரச பயங்கரவாதமும் தனிநபர் பயங்கரவாதமும் ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று உதவி வருகிறது. இரண்டுமே மக்கள் நலனுக்கு எதிரானவை.
இன்னொரு இனத்தின் ஜனநாயகத்தை அங்கீகரிக்காத எந்த இனமும் தான் ஜனநாயத்தை அனுபவிக்க முடியாது.
இது சிங்கள இனத்திற்கு மட்டுமல்ல பிரான்ஸ் நாட்டிற்கும் பொருத்தமானதே!
சிரியாவில் கண்டு வீசும் பிரான்ஸ் தனது நாட்டில் குண்டு வெடிப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது.
சிரியாவின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பிரான்ஸ் தான் அமைதியாக ஒருபோதும் இருக்க முடியாது.
வினையை விதைத்தவர்கள் திணையை அறுவடை செய்ய விரும்ப முடியாது!

சிறப்புமுகாம் முற்றுகைப் போராட்டம்!

• சிறப்புமுகாம் முற்றுகைப் போராட்டம்!
எதிர்வரும் 27.11.15 யன்று திருச்சியில் அமைந்துள்ள சிறப்புமுகாமை மூடக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்தேசமக்கள் கட்சி இவ் முற்றுகைப் போராட்டத்தை நடத்தவுள்ளது.
தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் இவ் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
திருச்சி மற்றும் செய்யாறில் அமைந்தள்ள சிறப்புமுகாம்கள் மூடப்படவேண்டும். அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

• லண்டனில் நடைபெற்ற நினைவுப் பகிர்வு நிகழ்வு

• லண்டனில் நடைபெற்ற நினைவுப் பகிர்வு நிகழ்வு
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் 14.11.15 யன்று மாலை 4 மணியளவில் தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் நினைவுப்பகிர்வு நிகழ்வு நடைபெற்றது.
முதலாவது அமர்வாக காலம் சென்ற கவிஞர் திருமாவளவன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு இடம்பெற்றது.
மு.புஸ்பராஜன் அவர்கள் இவ் நிகழ்விற்கு தலைமையேற்று வழி நடத்தினார்.
திருமாவளவனின் படைப்புலகம் என்னும் தலைப்பில் ஏ.எம்.ரஸ்மி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கஜன் அவர்கள் திருமாளவனின் ஜந்து கவிதைகளை படித்துக்காட்டினார்.
இரண்டாவது அமர்வாக காலம் சென்ற டேவிட் அய்யா அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு இடம்பெற்றது.
டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் சகோதரர் கனகசுந்தரம் அவர்கள் நிகழ்விற்கு தலைமையேற்று வழி நடத்தினார்.
டேவிட் அய்யாவின் பங்களிப்பும் அவரது பாத்திரமும் என்னும் தலைப்பில் பி.ஏ.காதர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
வலி சுமந்த மனிதன்- சில குறிப்பகள் என்னும் தலைப்பில் நா.சபேசன் உரையாற்றினார்.
இறுதியாக எம்.பௌசர் நிகழ்வுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பலரும் டேவிட் அய்யாவுடான தமது அனுபவங்களை பகிர்ந்தார்கள்.
இந்த நிகழ்வில் டேவிட் அய்யா பற்றிய "அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்" , திருமாவளவனின் கவித்தொகையான "சிறு புள் மனம்"ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
குறிப்பு- காந்தியவாதியான டேவிட் அய்யா அவர்கள் புலிகள் மேற்கொண்ட அநுராதபுர படுகொலைகளை ஆதரித்தார் என்று நா.சபேசன் தனது உரையில் கூறினார். இது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

அடாது மழை பெய்தாலும் விடாது சூரன் போர் செய்யும் பக்தர்கள்!

•அடாது மழை பெய்தாலும் விடாது சூரன் போர் செய்யும் பக்தர்கள்!
அமெரிக்கன் செவ்வாய்க்கு ராக்கட் விடுகிறான். ஆனால் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி வெள்ளத்தில் சூரன் போர் செய்யுது. இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?
யாழ் மாவட்டத்தில் 53470 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் மழையால் முருகனுக்கு சூரன் போர் செய்ய முடியவில்லையே என சிலர் கவலைப்படுகிறார்கள். இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?
சிறையில் நம்மவர்கள் வாடுகிறார்கள். ஆனால் மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலில் பிக்கப்பில் சூரன் போர் செய்கிறார்கள். இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?
இந்த முட்டாள்களை திருத்த ஒரு பெரியார் நமது மண்ணில் தோன்றமாட்டாரா என ஏங்க வைக்கிறது!

• கலைஞரின் அறிக்கை பாராட்டுக்குரியது!

• கலைஞரின் அறிக்கை பாராட்டுக்குரியது!
இப்போது தமிழகத்தில் தேர்தல் காலம் இல்லை.
இப்போது கைதிகள் பற்றி பேசுவதால்
கலைஞருக்கு பெரிய பயன் கிடைக்கப்போவதில்லை.
இருப்பினும் கைதிகள் விடுதலைக்காக
கலைஞர் குரல் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
கைதிகள் உண்ணாவிரதம் இருந்தார்கள்
தமிழ் மக்கள் கதவடைப்பு செய்தார்கள்
ஆனால் தலைவர் சம்பந்தனோ நாட்டில் இல்லை.
சுமந்திரனோ பேச்சுவார்த்தை நாடகம் ஆடினார்.
நமது தலைவர்கள் கைவிட்ட நிலையில்
கலைஞர் அறிக்கை விட்டது பாராட்டுக்குரியதே

•நாபா விதைக்கப்படவில்லை. அவர் புதைக்கப்பட்டிருக்கிறார்.

•நாபா விதைக்கப்படவில்லை.
அவர் புதைக்கப்பட்டிருக்கிறார்.
நாபாவின் கட்சி யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகளைக் கடத்தியபோது இதே இந்திராகாந்திதான் சென்னையில் நாபாவை பிடித்து ஓட்டலில் வைத்து மிரட்டி அந்த தம்பதிகளை விடுவித்தவர் என்பதை இவர்கள் அறிவார்களா?
புரட்சியை முன்னெடுப்பதாக கூறிய நாபாவை புரட்சிக்கு எதிரான இந்திராகாந்தியுடன் ஒப்பிடுவது நாபாவை அசிங்கப்படுத்துவதாக இருக்காதா? இதைவிட நாபாவை அசிங்கப்படுத்த முடியுமா?
நாபா முன்வைத்த ஈழம் கைவிட்டாச்சு!
நாபா முன்வைத்த ஈழவிடுதலை கைவிட்டாச்சு!!
நாபா முன்வைத்த புரட்சியும் கைவிட்டாச்சு!!!
அப்புறம் "ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி" பெயர் மட்டும் எதற்கு?
அவரை நினைவு கூர என்ன இருக்கு??
அமைதிப்படை என்று வந்து பல்லாயிரம் தமிழர்களை அழித்தது இந்திய அரசு.
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் மக்களை அழிக்க உதவி புரிந்ததும் இந்திய அரசு.
இத்தகைய இந்திய அரசை தொடர்ந்தும் "நாபா" வழியில் ஆதரிக்கப் போகிறீர்களா?
நாபா விதைக்கப்படவில்லை. அவர் புதைக்கப்பட்டிருக்கிறார். அவரில் இருந்து இனி ஒருபோதும் புரட்சியாளர்கள் முளைக்கப்போவதில்லை.

இந்த குழந்தை பயங்கரவாதியா?

 இந்த குழந்தை பயங்கரவாதியா? அல்லது
இதன்மீது குண்டு வீசிய பிரஞ்சு அரசு பயங்கரவாதியா?
பிரான்சில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்த குழந்தைப் பயங்கரவாதியே காரணம் என்று சிரியாவில் இதன்மீது பிரெஞ்சு அரசு குண்டு வீசியுள்ளது.
நெல்லியடியில் விசர் பத்மநாதனை சுட்டுக்கொன்றுவிட்டு கொடிய புலிப் பயங்கரவாதியை கொன்றுள்ளோம் என இந்திய அமைதிப்படை கூறியது ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
இவர்கள் பயங்கரவாதிகளை அழிக்கிறார்களா? அல்லது உருவாக்குகிறார்களா?

• என்ன கொடுமை இது?

• என்ன கொடுமை இது?
இஸ்லாம் மதத்தை கைவிட்டார் என்பதற்காக மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது சவூதி அரோபிய நீதிமன்றம்.
சவூதி அரோபியாவில் வசித்து வரும் பாலஸ்தீன கவிஞர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இலங்கை பெண் ஒருவருக்கும் இன்னொரு இலங்கை நபருடன் உறவு கொண்டார் என்பதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மதத்தை பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பதும் அவரது தனிமனித சுதந்திரம். இதில் அரசு தலையிடக்கூடாது.
அதேபோல் 18 வயதிற்கு மேற்பட்ட இருவர் தமது விருப்பத்துடன்; உறவு கொள்வதையும் மரண தண்டனைக் குற்றமாக கருதுவது தவறாகும்.
சவூதியில் இருந்து வரும் பெற்றோலை வாங்குவதற்காகவும் தமது ஆயுதங்களை சவூதிக்கு விற்பதற்காகவும் வல்லரசு நாடுகள் சவூதியின் காட்டுமிராண்டித்தனமான இத்தகைய தீhப்புகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன.
சவூதியின் சர்வாதிகார மன்னராட்சி சவூதி மக்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கே ஆபத்தானதாக விளங்குகிறது.
மத பயங்கரவாதத்தை வளர்த்து வரும் சவூதி மன்னராட்சியை தூக்கியெறிந்து அங்கு மக்கள் ஆட்சி மலர சவூதி மக்களின் போராட்டத்திற்க உலக மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

கனடாவில் "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு

கனடாவில் "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நால் தமிழகத்தில் தமிழ்தேச மக்கள் கட்சியினரால்,
21.09.15 யன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
16.10.15 யன்று கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
25.10.15 யன்று செய்யாறில் அறிமுகம் செய்யப்பட்டது
05.11.15 யன்று திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
கனடாவில் எதிர்வரும் 29.11.15 யன்று இவ் நூல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. "Campaign to close special camp"அமைப்பினரால் இவ் நிகழ்வு நடத்தப்படுகிறது.
எதிர்வரும் 27.11.15 யன்று தமிழ்தேச மக்கள் கட்சியினர் சிறப்புமுகாம்களை மூடுமாறு கோரி திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளனர்.
சிறு பொறி பெரும் காட்டு தீயை மூட்டும் என்பது போல் எனது நூலானது மக்கள் மத்தியில் சிறப்புமுகாமிற்கு எதிரான விழிப்புணர்வை எற்படுத்தி வருவது மகிழ்சி அளிக்கிறது.
சிறப்புமுகாம்கள் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யப்படும்வரை தொடாந்து குரல் கொடுப்போம்.

வீர வணக்கங்கள்!

வீர வணக்கங்கள்!
நாம் உரிமைகளை இழந்தோம்
நாம் உடமைகளை இழந்தோம்
நாம் உயிர்களை இழந்தோம்- ஆனால்
நாம் உணர்வுகளை இழக்கவில்லை.
போராளிகள் புதைக்கப்படவில்லை.
அவர்கள் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்
ஆயிரமாயிரமாய் முளைத் தெழுவார்கள்!
துண்டு துண்டாய் வெட்டி எறிந்தாலும்
பொங்கும் கடல் அலைபோல்
மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்தெழுவோம்!
அடிமைத்தனத்திற்கு எதிராக
ஒடுக்குமுறைக்கு எதிராக
தமிழின விடுதலைக்காக
உயிர் துறந்த அனைவருக்கும்
வீர வணக்கங்கள்!

• கைதிகள் விடுதலைகோரி தற்கொலை செய்த மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

• கைதிகள் விடுதலைகோரி தற்கொலை செய்த மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
அன்று ராஜீவ் காந்தி வழக்கு கைதிகளை விடுதலை செய்யுமாறு செங்கொடி தன் உயிர் கொடுத்தாள்.
இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு செந்தூரன் தன் உயிரை கொடுத்துள்ளான்.
இந்திய அரசு எப்படி செங்கொடியின் மரணத்தை மதிக்கவில்லையோ அதுபோல் இலங்கை அரசும் செந்தூரனின் மரணத்தை மதிக்கப்போவதில்லை.
அகிம்சையை போதித்த காந்தியை "தேசபிதா" என்று சொல்லும் இந்தியாவில்தான் மணிப்பூர் இசோராம் சார்மிளா 15 வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்.
அன்பு வழியை போதித்த புத்தரின் வழியை பின்பற்றுவதாக கூறும் இலங்கையில்தான் தமிழ் அரசியல் கைதிகளின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்பட்டது.
புத்தரின் போதனையை பின்பற்றுவதாக கூறும் மகிந்த ஆட்சியில்தான் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அறவழியை இலங்கை இந்திய அரசுகள் மதிக்கப்போவதும் இல்லை. அதனால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதுமில்லை.
மாணவன் செந்தூரன் தற்கொலை செய்துள்ளான். அவனுக்காக மாணவர்கள் போராடுகின்றனர். ஆனால் மக்களின் வாக்கு பெற்ற தலைவர்கள் தங்களுக்கு சொகுசு வாகனம் கேட்டு போராடுகிறார்கள்.
தமிழகத்தில் முத்தக்குமாரின் மரணம் எப்படி ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்டதோ அவ்வாறே மாணவன் செந்தூரன் மரணம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களால் சீரழிக்கப்படும்.
அகிம்சை வழி போராட்டங்கள் தீர்வு பெற உதவாது என்பதை மாணவன் செந்தூரன் மரணம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

•தீ பரவட்டும்!

•தீ பரவட்டும்!
மக்கள் போராட்டம் வெடிக்கட்டும்!!
சிறப்புமுகாம்கள் மூடப்படட்டும்!!
அகதிகள் விடுதலை பெறட்டும்!!
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூலை தமிழ்தேச மக்கள் கட்சியினர் சென்னையில் வெளியிட்டார்கள்.
கோவையில் நூல் அறிமுகம் செய்தார்கள். செய்யாறில் நூல் அறிமுகம் செய்தார்கள். திருச்சியில் நூல் அறிமுகம் செய்தார்கள்.
27.11.15 யன்று திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை முற்றுகையிட்டு போராட்டம் செய்யவுள்ளார்கள்.
சிறு பொறி பெரும் காட்டு தீயை உருவாக்கும் என்பது போல் தமிழ்தேச மக்கள் கட்சியினரின் போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.
சிறப்புமுகாம்கள் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை பெற வேண்டும்.
தமிழக மக்களே அணி திரளுங்கள்.
சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை பெற வழிசெய்யுங்கள்.

•சிறு பொறி பெரும் காட்டு தீயை உருவாக்கிறது

•சிறு பொறி பெரும் காட்டு தீயை உருவாக்கிறது
சிறப்புமுகாம் கொடுமைக்கு எதிராக கனடாவிலும் போராட்டம் வெடிக்கிறது
தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாம்களை மூடக்கோரியும் அதில் அடைத்துவைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரியும் தமிழகத்தில் தமிழ்தேச மக்கள் கட்சியினர் தொடங்கியிருக்கும் போராட்டம் கனடாவிலும் தொடர்கிறது.
எதிர்வரும் 29.11.15 யன்று கனடாவில் நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் அறிமுகம் செய்யப்படுவதுடன் சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக கனடா வாழ் மக்களின் ஆதரவும் திரட்டப்படுகிறது.
மனிதாபிமான மிக்க மக்களின் ஒருமித்த குரல் மட்டுமே சிறப்புமுகாம்களை மூடவும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யவும் வழி வகுக்கும்.
எனவே அனைத்து மக்களும் ஒன்று திரண்டு குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சி சிறப்புமுகாம் முற்றுகை போராட்டம்!

• திருச்சி சிறப்புமுகாம் முற்றுகை போராட்டம்!
திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை முற்றுகையிட்டு தமிழ்தேச மக்கள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாம்களை மூடுமாறும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறும் அவர்கள் கோரினார்கள்.
முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழ்தேச மக்கள் கட்சியினர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டமை கண்டிக்கத்தக்கது.
தமிழ்தேச மக்கள் கட்சியினர் மற்றும் தமிழக மக்கள் சிறப்புமுகாம்களை மூடுமாறு குரல் எழுப்பி வருவது, சிறப்புமுகாம்கள் விரைவில் மூடப்படும் என்ற நம்பிக்கையை தோற்றுவிக்கிறது.
வெளியே தமது விடுதலைக்காக தமிழக மக்கள் குரல் எழுப்புவது உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு நிச்சயம் ஆறுதல் தரும் விடயம் ஆகும்.
சிறப்புமுகாமை மூடுமாறு குரல் எழுப்புவோரின் உணர்வுகள் உண்மையிலே பாராட்டப்படவேண்டியதாகும்.

•இலங்கை அரசே! தோழர் குணரட்ணத்தை உடனே விடுதலை செய்!

•இலங்கை அரசே!
தோழர் குணரட்ணத்தை உடனே விடுதலை செய்!
எதற்காக இவர் கைவிலங்கு இடப்பட வேண்டும்?
எதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும்?
இவர் செய்த கொடிய குற்றம்தான் என்ன?
இவர் ஒரு இலங்கையர். இவர் தன்னை இலங்கையில் தங்க அனுமதிக்கும்படி கோருவது குற்றமா?
இவர் ஒரு இலங்கையர். இவர் ஒரு கட்சிக்கு தலைமை தாங்கி மக்களுக்காக போராடுவது குற்றமா?
இவர் ஒரு இலங்கையர். இவர் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரியது குற்றமா?
இவர் ஒரு இலங்கையர். இவர் சகல இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கவேண்டும் என்று கோருவது குற்றமா?
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
வெள்ளைவானில் மக்களை கடத்தி கொலை செய்த கோத்பாயா இன்னும் கைது செய்யப்படவில்லை
பல கோடி மக்கள் பணத்தை ஊழல் செய்த பசில் ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடவுச்சீட்டு மோசடி செய்த விமல் வீரவம்சவுக்கு கைவிலங்கு போடப்படவில்லை.
ஆனால் தோழர் குமார் குணரட்ணம் கைவிலங்கு போடப்படுவது ஏன்?
தோழர் குமார் குணரட்ணத்திற்கு பிணையில் விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
தோழர் குமார் குணரட்ணம் இலங்கையில் தங்கி அரசியல் செய்ய அனுமதி மறுப்பது ஏன்?
இதுதான் நல்லாட்சியா?

Government of Sri Lanka! Immediately release Comrade Gunaratnam!

Government of Sri Lanka!
Immediately release Comrade Gunaratnam!
Why should he be put manacles?
Why should he be put in jail?
What a heinous crime?
He is a Sri Lankan. He demanded to be allowed to stay in Sri Lanka itself an offense?
He is a Sri Lankan. He led the people to fight for a party to the offense?
He is a Sri Lankan. He demanded the release of all political prisoners and crime?
He is a Sri Lankan. The equal right of all ethnic groups to demand that he give offense?
Mullivaykal killed 40 thousand people have been arrested to the president.
The kidnapping and murder of white people who have not been arrested yet Gothapaya
Basil Rajapaksa made corrupt payments of several million people, has been released on bail.
Vimal Veeravansa has not been done manacles to passport fraud.
But why to Comrade Kumar Gunaratnam manacles?
Why Comrade Kumar Gunaratnam refusal to release on bail?
Refusal of permission to stay in Sri Lanka politics teammate Kumar Gunaratnam?
Is Good Governance this?

"நல்லாட்சி" அரசின் காதுகளுக்கு இந்த அப்பாவிகளின் குரல் கேட்பதில்லையா?

•"நல்லாட்சி" அரசின் காதுகளுக்கு
இந்த அப்பாவிகளின் குரல் கேட்பதில்லையா?
கொட்டும் மழையிலும் நனைந்தபடி தமது உறவுகளை தேடும் இவர்கள் குரல் நல்லாட்சி அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்று ஒரு அப்பாவி மாணவன் தன் உயிரைக் கொடுத்து கேட்டானே. அது கூட இவர்களின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
சிறுவன் போராடினால் "குழந்தைப்போராளி" என்று ஒப்பாரி வைத்தவர்கள் இப்போது ஒரு சிறுவன் இறந்தபொது மௌனமாக இருக்கின்றார்களே! எங்கே போனது இவர்களது சிறுவர் மீதான அக்கறை?
ஆயுதம் ஏந்திப் போராடினால் பயங்கரவாதம் என்றீர்கள். இப்போது அமைதி வழியில் போராடினால் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே? மீண்டும் மக்களை ஆயதம் ஏந்த வைக்கப்போகிறீர்களா?
சம்பந்தர் அய்யா அவர்களே!
உறங்கியது போதும், விழித்தெழுங்கள்.
உங்களுக்கு வாக்கு போட்ட மக்கள் வீதியில் நிற்பதை கொஞ்சம் பாருங்கள்.
உங்களின் நல்லாட்சி அரசிடம் உரத்து கூறுங்கள் "கைதிகளை விடுதலை செய்யம்படி".

கனடாவில் இடம்பெற்ற நூல் வெளியீடு

• கனடாவில் இடம்பெற்ற நூல் வெளியீடும்,
சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டமும்
கனடாவில் நேற்றைய தினம் (29.11.15) எனது "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக கண்டனமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரு.ஜெயகரன் அவர்கள் இவ் நிகழ்விற்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்.
திரு.மார்க் அன்ரனி அவர்கள் முதலாவதாக உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மனிதவுரிமை செயற்பாட்டாளர் திருமதி.உஷா சிறிஸ்கந்தராசா அவர்கள் உரையாற்றினார். அதன்பின்பு சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த திரு.ஜோன் ஆர்கியூ அவர்கள் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சேரன் அவர்கள் உரையாற்றினார். அதன்பின்பு திரு.கணன் சுவாமி அவர்கள் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து திரு.அகிலன் அவர்கள் நூல் குறித்த ஆய்வுரையை வழங்கினார். திரு.ஈழவேந்தன் அய்யா அவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை தெரிவித்தார். இறுதியாக திருமதி. சிவவதனி பிரபாகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
பல்வேறு அரசியல் பின்னணியை கொண்ட உணர்வாளர்கள் ஒன்றாக நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக தமது குரலை வெளிப்படுத்தியிருப்பது நிச்சயம் அந்த அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
கனடாவின் இவ் நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது சிறப்புமுகாம்கள் விரைவில் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கம் அகதிகளுக்க விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை மேலும் வலுவூட்டுகிறது.
இந்த நிகழ்வில் பங்கு பற்றியவர்கள், பேசியவர்கள் எல்லாவற்றுக்கு மேலாக இதனை சிறப்பாக ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்கள் அனைவரின் உணர்வுகள் உண்மையிலே மிகவும் பாராட்டுக்குரியதாகும்.