•புலிகளுக்கு ஆயுதம் வருவதைத் தடுத்தவர்களால்
உண்மையாகவே கஞ்சாக் கடத்தலை தடுக்க முடியாதா?
உண்மையாகவே கஞ்சாக் கடத்தலை தடுக்க முடியாதா?
கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் தினமும் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வருகிறது.
இப் போதைப் பொருட்களால் தமிழ் சமுதாயம் குறிப்பாக மாணவ சமுதாயம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் நலனுக்காக புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுத்ததாக கூறிய இலங்கை அரசும் அதற்கு உதவிய இந்திய அரசும் இன்று இந்த போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்காமல் இருப்பது ஏன்?
ஆயுதக் கடத்தலை முற்றாக தடுத்து நிறுத்திய இந்த அரசுகளால் உண்iமையில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுத்து நிறுத்த முடியாதா? அல்லது தமிழ் மக்கள் நலனில் அக்கறை இல்லையா?
யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் மோதலின் போது பாய்ந்து ஓடிவந்து பிணை எடுத்த தமிழ்தேசிய கூட்மைப்பு அதே பல்கலைக்கழகத்தை சுற்றி 3 சாராய கடைகள் இயங்குவது குறித்து ஏன் அக்கறை அற்று இருக்கின்றனர்?
இதே 3 சாராய கடைகளுக்கும் லைசென்ஸ் எடுத்துக் கொடுத்த இதே தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது உண்மையான அக்கறை உண்டு என்று எப்படி நம்புவது?
•6 லட்சம் மக்கள் உள்ள யாழ் குடாநாட்டில் கடந்த வருடம் மட்டும் 12லட்சம் லீட்டர் சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது
•கடந்த வருடம் சாராய விற்பனையில் வடமாகாணம் முதலாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இது குறித்து எமது கட்சிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொஞ்சம்கூட அக்கறை இல்லையா?
No comments:
Post a Comment