•இந்திய அரசு “பயங்கரவாதி” என்று கூறி சுட்டுக் கொல்கிறது.
ஆனால் காஸ்மீர் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ஆனால் காஸ்மீர் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று காஸ்மீர் விடுதலை அமைப்பு ஒன்றின் தலைவர் புர்ஹன் வானி என்பவர் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர் பயங்கரவாதி என்றும் அதனால் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய அரசு கூறுகிறது.
ஆனால் காஸ்மீர் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு அரச வன்முறைக்கு எதிராக போராடுகிறார்கள்.
அரசுக்கு எதிராக நீதி கோரி ஊர்வலம் போன மக்களில் இந்திய ராணுவம் சுட்டு 15 பேர் இறந்துள்ளனர்.
காஸ்மீர் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் காஸ்மீரில் ராணுவம் எப்படி பல்லாயிரம் மக்களை சுட்டு கொன்று வருகிறது?
தனது மக்களையே கொன்று குவிக்கும் இந்திய அரசு இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் என்று கூறுபவர்களை என்ன வென்று அழைப்பது?
No comments:
Post a Comment