இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
லண்டனில் இருக்கும் நண்பர் நடராஜ் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இந்த புத்தகத்தில் பாலன் பல நல்ல விடயங்களை சொல்ல வருகிறார் அல்லது ஆதங்கப்படுகிறார். ஆயினும் அவரது ஆதங்கம் யாராவது இந்த விடயம் குறித்து ஒரு ஆராய்ட்சி (research) கட்டுரை போடமாட்டார்களா என்பது போல் தெரிகிறது.
அன்பரே! இந்தியா 2000 வருடத்திற்கு மேலே இலங்கையை ஆக்கிரமிக்கிறது. உண்மையில் நீர் கூறியது போல் சிஙஹலீஸ் ஸ்டே ஒப் இந்தியா தான் சொறிலங்கா மன்னிக்கவும் சிறிலங்கா என இந்தியா நம்புகிறது.
உண்மையில் இந்த இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சிங்களவர்கள் தனித்து நின்று போராட முடியாது. இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் முழு இலங்கையும் சேர்ந்தாலும் முடியாது. இந்தியா என்ற யந்திரம் உருள வெளிக்கிட்டு விட்டது. அது மிகப் பெரியது. அத்துடன் அது கரடு முரடானது. அதில் ஏற்கனவே பலர் முடிந்து போனார்கள் அதில் புலியும் ஒன்று.
தமிழர்கள் மட்டும் தான் இந்தியாவிற்கு எதிராக உண்மையில் சொறிலங்காவில் போராடியது என்றால் மிகையாகாது. சிங்களவர்கள் தமக்கு கண் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று கருதினார்கள். அதன் விளைவு தான் இன்று நீங்கள் பார்ப்பது.
இந்தியா இலங்கை தமிழர்களுக்கு செய்தது போல் உலகில் யாரும் ஒருவருக்கும் நம்பிக்கை துரோகம் செய்தது இல்லை என்று கூட கூறலாம்.
ஆனால் அவர்கள் தமது மக்களை நடத்தும் விதத்தில் ஒன்றும் எங்களை வித்தியாசமாக நடத்தவில்லை என்று தோன்றுகிறது.
இது இந்தியா மட்டுமல்ல சீனா, அமெரிக்கா, பிரிட்டன் ஆஸ்திரேலியா எல்லாரும் செய்கிறார்கள். அதனால் அது சரி என்பதற்கு இல்லை.
ஆயினும் இந்தியா, சீனா நிலச்சுவான்தார் சமுதாயம் (Feudal Society) அதனால் நான் சொன்னால் நீ கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் மக்கள் தங்களது அரசிலையையும் அவ்வாறே பார்ப்பார்கள். இது ஒரு முதலாளித்துவ நாடாக (Capital Society) இருந்திருந்தால் இவ்வளவு விளைவும் வேறு விதமாக இருக்கும்.
இதை தீர்ப்பதற்கு வழி நாங்கள் போராடுவது தான் என்றால் இறுதியில் தமிழர்களின் அழிவிற்கு மீண்டும் வழி கோலும்.
உண்மையில் சிங்களவர்கள் போராடினால் நாங்கள் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றில்லை. முதலில் அவர்கள் எங்களுக்கு சுய நிர்ணய உரிமையினை அங்கீகரிக்கட்டும்.
நடு நிலமையாக இருந்து எங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும். சிங்களவனும் இந்தியனும் எங்களை அழிப்பு தான் செய்வார்கள் என்றால் ஏன் நாங்கள் அவர்களுக்காக இயங்க வேண்டும்.
குறிப்பாக இந்தியாவின் பசப்பு வார்த்தைகளுக்கு எடுபட்டு இனியும் தமிழர்கள் உயிர் கொடுக்கக் கூடாது.
மன்னிக்கவும். இனி மறுபடியும் இந்த புத்தகத்தினை பற்றி கூறின், இது மக்களை நேசிக்காத ஆட்சியாளர்களை வடிவாக தெரியப்படுத்துகிறது.
ஆயினும் பாலன் சொல்லும் சீனா இந்தியா போல் இலங்கையில் செய்யவில்லை என்றதை அவர் தைவான் இடம் கேட்டுப் பார்க்க வேணும்.
இந்தியாவின் கொல்லையில் சொறிலங்கா உள்ளது ஆகவே செய்கிறார்கள். சீனாவின் கொல்லையில் தைவான் உள்ளது ஆகவே அங்கு அவர்கள் செய்கிறார்கள். எதுகும் சரியில்லை.
இதுவே எனது தாழ்மையான கருத்து
No comments:
Post a Comment