•கட்சதீவை இந்தியா திரும்ப பெற முடியுமா?
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பெருவார் என்ற நிலப்பரப்பு சட்டப்படி செல்லாது என இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் வழியே இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவு ஒப்பந்தமும் செல்லாது என இந்திய உச்சநீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்க முடியும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை வழங்கப்பட்டது.
ஆனால் இலங்கை நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இலங்கை அரசு மீற முடியுமாயின் இந்திய அரசும் தனது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கச்சதீவு ஒப்பந்தத்தை மீற முடியும் என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்த வேண்டும்.
கச்சதீவை திரும்ப பெறாவிடினும் கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையையாவது இந்திய அரசு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
ஈழ தமிழ் மக்களுக்கு உரிமைகள் பெற்றுக்கொடுக்கும் நல்லெண்ண அடிப்படையில் கச்சதீவு வழங்கப்பட்டது என்று கூறுவது உண்மையாயின் அதனை உறுதிப்படுத்த இந்திய அரசு முயல வேண்டும்.
ஆனால் இந்திய அரசைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர் நலன் குறித்து மட்டுமல்ல தமிழக மக்களின் நலன் குறித்தும் அக்கறை இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.
அதனால்தான், இந்திய அரசு ஒப்பந்தம் மூலம் எற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இலங்கை அரசு பிரித்தது குறித்தும் அக்கறை கொள்ளவில்லை.
தமிழக மக்களுக்கு உரிமை உள்ள கச்சதீவை தரை வார்த்துக் கொடுத்தது குறித்தும் அக்கறை கொள்ளவில்லை.
தமிழ் இனம் என்றாலே இந்திய அரசு எப்போதும் அக்கறையற்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடந்து கொள்கிறது.
ஆனால் எம்மில் சிலர் அற்ப சலுகைகளுக்காக இந்தியா தமிழ் மக்களுக்கு உதவும் என்று இப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது தமிழ் இனம் இந்திய அரசை உணர்ந்து கொள்ளுமா?
No comments:
Post a Comment