•பொலிஸ் அராஜகத்தின் உச்சம்!
13 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!!
13 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!!
தமிழக அரசு தமிழ் மக்களின் அரசா? அல்லது காப்ரேட் கம்பனிகளின் அரசா?
ஸ்டெர்லைட் கம்பனிக்காக 13 பேரை தமிழக பொலிஸ் சுட்டுக்கொன்றுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி கோரி தூத்துக்குடி மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டில் அறவழியில் போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை.
ஆனால் அந்த அரசோ அந்த அப்பாவி மக்கள் மீது பொலிஸ் வன்முறையை ஏவிவிட்டுள்ளது.
பொலிஸ் வன்முறையில் இதுவரையில் 13 மக்கள் பலியாகியுள்ளனர்.
மக்கள் மீது தப்பாக்கி சூடு நடத்துவது தவறு. அப்படி சுடுவதாக இருந்தாலும் வானில் சுட வேண்டும். இல்லையேல் காலில் சுட வேண்டும்.
ஆனால் பொலிஸ் ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் சுட்டுக் கொன்றுள்ளது. அதுவும் நெஞ்சில் சுட்டுக் கொன்றுள்ளது.
ஸ்டெர்லைட்; ஆலையை மூடு என்று கோஷம் போட்ட இளம் பெண் வாயுக்குள் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.
இதன் அர்த்தம் என்ன?
இனி காப்ரேட் கம்பனிகளுக்கு எதிராக மக்கள் யாரும் வீதியில் இறங்கி போராடக்கூடாது என்று மிரட்டுவதற்காகவே தமிழக அரசு இப்படி செய்துள்ளது.
ஆனால் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதே வன்முறை மூலம் பதில் அளிக்க தயங்கமாட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை தமிழக அரசு கவனிக்கத் தவறிவிட்டது.
வெகுவிரைவில் தமிழக அரசு மட்டுமல்ல இந்திய அரசும் உணர்ந்து கொள்ளும் வண்ணம் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
No comments:
Post a Comment