Wednesday, May 16, 2018

•ஊழல் மற்றும் மோசடி செய்த அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

•ஊழல் மற்றும் மோசடி செய்த அமைச்சர்கள் மீது
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கடந்த வருடம் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்கள் மீது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உடன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
முதலமைச்சரின் இந் நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் ஆமோக ஆதரவை வழங்கியிருந்தனர்.
ஆனால் இம்முறை குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்கள் மீது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு ஆச்சரியத்தையும் விசனத்தையும் கொடுத்துள்ளது.
இதனால் அமைச்சர்களின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் உடந்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
அமைச்சர்கள் சர்வேஸ்வரன் மற்றும் ஆனந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த அறிக்கை ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
•இவ்விரு அமைசர்களும் தங்களுக்குரிய ஆளனியினருக்கு நியமித்தவர்களுடன் கூட்டு வங்கிக் கணக்கு வைத்து சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.
•இவர்களால் ஆளனியில் நியமிக்கப்பட்டவர்களில் சிலர் உரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை
•இவர்களால் ஆளனியில் நியமிக்கப்பட்ட சிலர் ஒருபோதும் அலுவலகத்திற்கு பணிக்கு வரவில்லை.
•பிக்கப் வாகனம் பயன்படுத்தாமலே அதற்குரிய எரிபொருள் கணக்காக மாதம் 75ஆயிரம் ரூபாவை பெற்று வந்துள்ளனர்.
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பல லட்சம்ரூபா பணத்தை இந்த இரு அமைச்சர்களும் சுருட்டி வந்துள்ளனர்.
படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றி அலைந்து திரிகின்றனர். ஆனால் இந்த அமைச்சர்கள் தங்களுக்குரிய ஆளனிகளை மோசடி செய்துள்ளனர்.
போராடிய போராளி புற்று நோய்க்கு சிகிச்சை பெற பணம் இன்றி மரணித்துள்ளான். ஆனால் இந்த அமைச்சர்கள் மக்கள் பணத்தை ஊழல் மூலம் ஒவ்வொரு மாதமும் சுருட்டுகின்றனர்.
சம்பந்தர் முதல் அனைத்து தலைவர்களும் இதனை அறிந்தும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்?

No comments:

Post a Comment