Wednesday, May 16, 2018

•அய்யர் சேகரை கைது செய்ய முடியவில்லையா?

· 
•அய்யர் சேகரை
கைது செய்ய முடியவில்லையா? அல்லது,
கைது செய்ய விருப்பமில்லையா?
திருமுருகன்காந்தி, வளர்மதி போன்றவாத்களை உடன் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு, அய்யர் சேகரை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?
உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னரும்கூட தமிழ அரசும் அதன் ஏவல் நாயான பொலிசும் இன்னும் அய்யர் சேகரை கைது செய்யவில்லை.
முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியைக்கூட நள்ளிரவில் அரைமணி நேரத்தில் கைது செய்த தமிழ்நாடு பொலிசாரால் நடிகர் சேகரை இரண்டு வாரகாலமாக கைது செய்ய முடியவில்லை என்பது பெரும் மர்மமாகவே இருக்கிறது.
சேகரின் தோளில் இருக்கும் பூணூலே அவர் இதுவரை கைது செய்யப்படாமைக்கு முக்கிய காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்.
தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் சேகரின் மனைவியின் சகோதரியான கிரிஜா வைத்தியநாதனே சேகரை கைது செய்யவிடாமல் பாதுகாப்பதாக வேறு சிலர் கூறுகின்றனர்.
எதுவாயினும் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிப்பதாக கூறும் அய்யர் சேகர் ஏன் ஒளித்து தலைமறைவாக இருக்கிறார்?
தொலைக்காட்சி விவாதங்களில்கூட தனது பூணூல் தெரிய விட்டு திமிராக பேசி வந்தவர் இப்போது ஏன் ஒளித்து இருக்கிறார்?
முதலில் அய்யர் சேகர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு மறுத்தது. இப்போது அவரை கைது செய்ய தயங்குகிறது?
இந்தியாவில் சட்டத்தைவிட , நீதிமன்றத்தைவிட அய்யர் சேகரின் செல்வாக்கு பெரியது என்று புரிகிறது.
இனி இந்தியாவில் “சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆனால் அய்யர் சேகரைத் தவிர” என்று கூறிக்கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment