Tuesday, December 19, 2023
எப்படி கேப்பாபுலவில் குழந்தை
எப்படி கேப்பாபுலவில் குழந்தை ஒன்று தன் நிலத்திற்காக வீதியில் படுத்து போராடியபோது தலைவர் சம்பந்தர் ஐயா கொழும்பில் சொகுசு மாளிகையில் உறங்கிக் கொண்டிருந்தாரோ ,
அப்படித்தான் மலையக தமிழர் இந்தியாவில் அகதிமுகாமில் வாடும்போது அமைச்சர் தொண்டைமான் குடும்பம் சொகுசாக வாழ்ந்து வருகிறது.
அமைச்சர் தொண்டைமானுக்கு தமிழ்நாட்டில் வீடு சொத்து இருப்பது அனைவரும் அறிந்தவிடயம்தான். அங்கு அவர் பெரும் செலவில் காளை மாடு வளர்த்து வருகிறார்.
தமிழ்நாட்டில் இருக்கும் மலையக தமிழர் குடியுரிமை அற்று 40 வருடமாக அகதிமுகாமில் வாழும்போது அவர் தனது காளைமாட்டை குளிரூட்டப்பட்ட வண்டியில் கொண்டு சென்று ஜல்லிக்கட்டில் கலந்துகொள்கிறார்.
குளிரூட்டப்பட்ட வண்டி வைக்கும் அளவிற்கு தன் காளை மாட்டின் மீது அக்கறை கொண்ட இந்த அமைச்சர் தனது மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை.
மலையக தமிழருக்கு குடியுரிமை வழங்காமல் அவர்களை அகதியாக வைத்திருக்கின்றமையை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற அமைச்சர் அதன்படி அனைவருக்கும் குடியுரிமை வழங்குமாறு இந்திய அரசை கோரவில்லை.
மாறாக, இந்தியாவில் இருக்கும் மலையக தமிழரை திரும்பி வரும்படி கொஞ்சம்கூட பொறுப்பின்றி கூறுகின்றார்.
தமிழ்நாட்டில் மலையக தமிழர் குடியுரிமை இன்றி இருப்பதை நடிகர் சத்யராஜ் மட்டுமல்ல நம் ஈழத்து தலைவர்களும் கண்டிக்க தயங்குகின்றனா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment